தொகுப்புகள்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

கேதார் தால், உத்திராகண்ட் - நிழற்பட உலா - பகுதி ஒன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

UNEXPECTED RESULTS AND PROBLEMS ARE PART OF LIFE. NEVER LOSE HOPE IN ANY CONDITION; BECAUSE DARKNESS OF NIGHT ALWAYS ENDS WITH LIGHT OF THE DAY.

 

******

 

நேற்றைய காஃபி வித் கிட்டு பதிவில் அலுவலக நண்பர் திரு ப்ரேம் பிஷ்ட் அவர்கள் அவ்வப்போது மலையேற்றம் செய்வது குறித்து எழுதியதோடு அவர் எடுத்த படங்களையும் பகிர்ந்து கொள்ள சம்மதித்தது பற்றி எழுதி இருந்தேன்.  உத்திராகண்ட் மாநிலத்தின் பல மலைச் சிகரங்களுக்கு அவர் பயணித்து இருக்கிறார்.  ஒவ்வொரு பயணமும் சாகசப் பயணம் தான்.  நிறைய மலையேற்றங்கள் செய்தவர் என்பதால் அவருக்கு இந்த விஷயத்தில் அதிக அளவு அனுபவம் உண்டு என்பதோடு பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்களும் உண்டு.   அவர் 2015-ஆம் ஆண்டு செய்த ஒரு மலையேற்றப் பயணம் உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார் தால் (Kedar Tal) என்ற இடத்திற்கு!  கேதார் தால் குறித்த தகவல்கள் மற்றும் அனுபவங்கள் வரும் நாட்களில் பதிவாக தொடர்ந்து வரும் என்பதை இங்கே அறிவித்துக் கொள்கிறேன். அந்தப் பதிவுகளுக்கு முன்னோடியாக கேதார் தால் பகுதிக்குச் சென்ற போது எடுத்த சில நிழற்படங்கள் இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக உங்கள் பார்வைக்கு! 






















 

நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாமே... விரைவில் இந்த பதிவில் வெளியிட்ட இடங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

20 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது. மிக நேர்த்தியாக இருக்கிறது குறிப்பாக நீர்வீழ்ச்சி படங்கள் மிகவும் அழகு ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் நீங்களும் ரசிக்கும் விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. படங்களை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. வாவ்! ஹயோ வெங்கட்ஜி!!! பிரமித்து லயித்து அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ நானே ரசித்து ரசித்து ஆங்காங்கே நின்று நின்று ரசித்து செல்வது போலவும் கேமராவில் க்ளிக்கிக் கொண்டே செல்வது போலவும் கொஞ்சம் நேரம் கற்பனையில் மிதந்தேன். Spell bound! No words to express! இமாலயப் பகுதியில் ஒரு வருடமேனும் இருக்க வேண்டும் இப்படியான எல்லா இடங்களும் பார்த்து ரசித்து அனுபவிக்க வேண்டும் என்று ஷிம்லா மனாலி போன போதே தோன்றியது. உத்ராஞ்சலும் செமையான மாநிலம் என்று கூகுளில் படங்கள் பார்த்து ரசித்ததுண்டு. இங்கும் உங்கள் நண்பரின் படங்களைப்பார்த்து ரசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிமாச்சல பிரதேசம் போலவே உத்தராகண்ட் மாநிலத்திலும் மிக மிக அழகான பல இடங்கள் பார்க்க உண்டு. இந்தியாவில் இருக்கும் இடங்களை பார்ப்பதற்கு ஒரு பிறவி நமக்கு போதாது. படங்களை நீங்களும் ரசித்தமைக்கு நன்றி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. கடைசிப் படத்துக்கு முந்தைய படம் ஆஹா...என்ன அழகு. கொஞ்சம் ஹொக்கேனக்கல் போல இருக்கு!

    கங்கை நதிதான் இல்லையா? ஒரு படத்தில் நதியின் இடையில் மணல் திட்டு திட்டாய் என்ன அழகு டிசைன்!! கண்கொள்ளாக் காட்சி.

    குறுக்கே பாலம் உள்ள படம் பார்த்ததும் சிம்லா டு மனாலி போறப்ப வர இடம் டக்கென்று நினைவுக்கு வந்தது. சுந்தர் நகர்...

    மலைப்பகுதிகளுக்கே உரிய ஸ்டெப்/டெரஸ் ஃபார்மிங்க் படம் எல்லாமும் அழகோ அழகு! நான் ரசித்து முடியலை. ஆவலுடன் நண்பரின் ட்ரெக்கிங்க் அனுபவங்களையும் படங்களையும் எதிர்பார்க்கிறேன் ஜி.

    இமயம் இமயம் தான்! எத்தனை அழகை ரகசியமாக வைத்துக் கொண்டுள்ளது! நம்மூரில் வடக்குப் பிரதேசங்களை ஆராம்ஸே பார்க்கவே ஒரு வருடம் போதாது என்று தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி. கங்கையாக உரு எடுப்பதற்கு முன் பல்வேறு பெயர்களில் இந்த நதி அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் கேதார் கங்கா என்ற பெயர். படங்கள் குறித்த உங்கள் ரசனையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உள்ளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. படங்களை நீங்களும் ரசிப்பதில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. மிக அழகான படங்கள்.

    கடைசி படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. புகைப்படங்கள் அழகாக உள்ளன. நாமே அந்த இடங்களுக்கு சென்று விட்டாற் போன்று ஓர் உணர்வு. படத்தில் உள்ள ஆற்றின் பெயரையும் கூறி இருக்கலாம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் படித்ததில் மகிழ்ச்சி ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா. மேலும் ஒரு பின்னூட்டத்தில் ஆற்றின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறேன். இங்கே ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் - கடைசியில் கங்கையாக உருவெடுக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. அழகான காட்சிகள். அருமையான படங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் காட்சிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. மிகவும் அழகான படங்கள். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....