தொகுப்புகள்

புதன், 4 பிப்ரவரி, 2015

அக்கா – துளசி கோபால்




தலைவர் ரஜினி நடித்த[?] சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவாங்க பழகலாம்என்று சொன்னது போல சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கும்அக்காபுத்தகத்தின் முதல் பக்கத்திலேயே இப்படி ஒரு அழைப்பு:



அக்காக்கள் அற்புத ஜீவன்கள். அப்படி ஒரு அக்காவோடு பழகலாம் வாங்க!”



வீதியோரங்களில் நடந்து போகும் சமயம் சின்னதா ஒரு மூணு நாலு வயசுக் குழந்தை, தன்னை விட இன்னும் சின்னஞ்சிறுசான குழந்தையொன்னை தூக்கமுடியாமல் இடுப்பில் சுமப்பதைப் பார்க்கும்போதெல்லாம் மனசு தவிச்சுப் போகும். ஆனால் சுமக்கும் குழந்தையின் முகத்தில் சோர்வோடுகூடவே ஒரு பெருமிதமும் இருப்பதைக் கவனிச்சு இருக்கீங்களா? இது ஏன்? ஏன்னா….  அது ஒரு அக்கா!





இப்படி முதல் பக்கத்திலேயே ஒரு அற்புதமான அழைப்பு வந்த பிறகு புத்தகத்திற்குள் செல்லாமல் இருக்க முடியுமா? வாங்க புத்தகத்திற்குள் நுழைந்து பழகலாம்!



அக்காவின் கல்யாணத்தில் தான் ஆரம்பிக்கிறது கதை.  “மாப்பிள்ளை பொண்ணு ஊர்வலத்தில் குனிஞ்ச தலை நிமிராம நடந்து வந்த அக்கா, மாப்பிள்ளை வீட்டைத் தலைநிமிர்ந்து பார்த்துச்சு. கண்ணுலே குத்தாலம்…..” பெண் பார்க்க வந்த அன்று அப்போதைய சிறுமி, இன்றைய துளசி டீச்சர் எட்டுரூக்கு கேட்கும்படி கேட்ட கேள்வி – ”யாரு மாப்பிள்ளை? பெரிய பெரிய பல்லுவச்சிக்கிட்டு இருக்காரே? அவரா?”



பள்ளி காலத்தில் சக மாணவ/மாணவிகளை அடித்து விட்டு சுவற்றில் இருக்கும் ஓட்டை வழியே ஓடி வருவது, இரண்டாவது அக்காவுடன் பூவுக்குச் சண்டை போடுவது, புத்தக ஆசிரியர் செய்த குறும்புகள் என சந்தோஷமாகச் சென்றாலும், புத்தகம் ஆரம்பிக்கும்போது சொன்ன மாதிரி பல வித சோகங்களைச் சொல்லிப் போகிறாள்அக்கா.



என்னதான் சிறு வயதில் அக்கா, தம்பி, தங்கை என்ற பாசமும், அதை வெளிக்காட்டுவதும் இருந்தாலும், வளர்ந்த பிறகு பாசம் எல்லாம் அவரவர் குடும்பத்திலும், குழந்தைகள் மீதும் மாறி விடுகிறது. அதே தான் இப்புத்தகத்திலும். அத்தனை ஆசையாக இருந்த அக்கா, தனது குடும்பச் சூழலில் மூழ்கிவிட, அக்காவினை விட்டு விலகிச் சென்றுவிட்ட உணர்வு ஆசிரியைக்கும் படிக்கும் நமக்கும் வருகிறது.



தொடர்ந்து குழந்தைகளை பெற்று கஷ்டப்படும் அக்கா, இரண்டாவது அக்காவின் கல்யாணம், குழந்தைகளை தனியாக வளர்த்த அம்மா, பல வருடங்கள் கழித்து சந்தித்த அப்பா, வீட்டினரை எதிர்த்து அப்பாவை அவர் தங்கியிருந்த வெளியூரிலிருந்து அழைத்து வந்து வீட்டினரின் அதிருப்திக்கு ஆளானது, விலக்கி வைக்கப்பட்ட சித்தப்பா சித்தி உறவு என பல இடங்களில் சோகம்.



கதையின் பெரும்பாலான இடங்களில் நாமும் கூடவே இருப்பது போல ஒரு உணர்வுவத்தலகுண்டு வீட்டிற்கு நாமும் சென்று விட்ட உணர்வு நமக்கு வந்துவிடும்இப்படிப் பட்ட ஒரு புத்தகத்தினைப் படிக்கும் போது நம்மையும் அந்த உணர்வுகளை புரிந்து கொள்ள வைப்பது ஆசிரியரின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.



புத்தகத்தினை படிக்கும் போது நமக்கும் அக்காவுடன் இருந்த நாட்கள் மனதில் வந்து போகும்நான் முதன் முதலாக நெய்வேலி பள்ளியில் சேர்ந்தபோது பாதி நேரம் என் வகுப்பினை விட்டு அக்காவின் வகுப்பில் தான் உட்கார்ந்திருப்பேனாம்இத்தனைக்கும் எனக்கு வந்த ஆசிரியரான காலஞ்சென்ற திருமதி நாமகிரி அவர்கள் அத்தனை அற்புதமான, ஆசையான ஆசிரியர்அக்காவின் கைகளைப் பிடித்தபடியே பள்ளிக்குச் சென்று வந்ததை இன்றைக்கும் சொல்வார்கள்.



வலைப்பூவில் வெளியிட்டு பிறகு புத்தகமாக வந்திருப்பது புத்தகத்தில் நிறைய இடங்களில் தெரிகிறது. உதாரணத்திற்கு ஒன்று – “கல்யாணப் பொண்ணுக்குப் புடவை, வழக்கமான காஞ்சீபுரம் பட்டுப் புடவையா எடுக்காம, பனாரஸ் பட்டுன்னு வெலவெலன்னு ஒன்னை வாங்கியிருந்தார். [அதை பிற்காலத்தில் நாந்தான் கட்டிக் கிழிச்சேன். அதைப் பத்தி அப்புறம் சொல்றேன்]”  - புத்தகத்தில் இது பற்றி சொல்லாத போது அப்புறம் சொல்றேன்னு சொல்லி இருப்பதை எடுத்து இருக்கலாம்! இம்மாதிரி இரண்டொரு இடங்கள்இதை ஒரு குறை என்று சொல்லவில்லை. தவிர்த்திருக்கலாம் என்று தான் சொல்கிறேன்!



அக்காவின் கல்யாணத்தில் ஆரம்பித்த புத்தகம் அப்பாவின் இறப்பில் முடிகிறதுஅதுவும் அந்த முடிவு – ‘மெட்ராஸுக்கு ரயில் புடிக்க ஸ்டேஷனுக்குள்ளே போனப்பவும் அண்ணன் டிக்கெட்டு கவுண்டர்கிட்டே நின்னுக்கிட்டு இருந்தார். அதே ரயிலுக்குத்தானே நானும் போகணும். அவர் நகர்ந்து போகட்டுமுன்னு இருந்துட்டு நானும் போய் டிக்கெட்டு வாங்கிக்கிட்டு வண்டி வந்ததும் லேடீஸ் பெட்டியில் ஏறிட்டேன். அதுக்குப் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை!” அப்பாடி என்னவொரு முடிவு



உண்மைக்கதைகளை எழுதும்போது மகிழ்ச்சியான முடிவுகள் பெரும்பாலும் வர்றதில்லைஎன்று சொல்லி ஒரு கற்பனையான மகிழ்ச்சியான முடிவையும் சொல்லி இருந்தாலும், எனக்கென்னவோ இந்த உண்மையான முடிவுதான் சரியாக இருப்பதாகத் தோன்றுகிறது.



நீங்களும் உங்கள் அக்காவினை நினைத்துக்கொள்ள புத்தகத்தினை படிக்கலாமே…..  புத்தகம் பற்றிய விவரங்கள் கீழே.



புத்தகத்தின் தலைப்பு:       அக்கா

பதிப்பகம்           :    சந்தியா பதிப்பகம்.

பதிப்பக முகவரி      :    புதிய எண் 77, 53வது தெரு,

9வது அவென்யூ, அசோக் நகர்,

சென்னை -600083.

தொலைபேசி எண்     :     044-24896979.

புத்தகத்தின் விலை   :     ரூபாய் 100/-

பக்கங்கள் எண்ணிக்கை     :     136.



மீண்டும் வேறொரு வாசிப்பனுவபத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை…..



நட்புடன்



வெங்கட்

புது தில்லி.


டிஸ்கி:  ஆசிரியரின் பிற நூல்கள் - ஃபிஜித்தீவு, என் செல்லச் செல்வங்கள், மற்றும் நியூசிலாந்து.

இப்புத்தகத்திற்கான மற்றுமொரு வாசிப்பனுபவம் அக்கா - என் பார்வையில்....! [சும்மா ஒரு விளம்பரம் தான்!]

48 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

      நீக்கு
  2. நல்ல பகிர்வு. புத்தகக் காட்சியில் கண்ணில் பட்டிருந்தால் வாங்கியிருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகக் காட்சியில் சந்தியா பதிப்பகத்தில் கிடைத்தது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. புத்தகம் வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது உங்கள் பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி அவர்களே.

      நீக்கு
  4. //‘மெட்ராஸுக்கு ரயில் புடிக்க ஸ்டேஷனுக்குள்ளே போனப்பவும் அண்ணன் டிக்கெட்டு கவுண்டர்கிட்டே நின்னுக்கிட்டு இருந்தார். அதே ரயிலுக்குத்தானே நானும் போகணும். அவர் நகர்ந்து போகட்டுமுன்னு இருந்துட்டு நானும் போய் டிக்கெட்டு வாங்கிக்கிட்டு வண்டி வந்ததும் லேடீஸ் பெட்டியில் ஏறிட்டேன். அதுக்குப் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை!”//

    இதில் உள்ள எழுத்துக்களில் உயிரோட்டமும் யதார்த்தமும் உள்ளன என்பது இந்த வரிகளிலேயே நன்கு உணர முடிகிறது.

    தங்களின் விமர்சனம் மிக அருமை. பாராட்டுக்கள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  5. அழகின உணர்வு... படிக்கும் ஆர்வத்தை அதிகரித்து விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. ரா. ஈ. பத்மநாபன்4 பிப்ரவரி, 2015 அன்று 10:09 AM

    உடனே படிக்கத் தூண்டும் புத்தக அறிமுகம். சந்தியா பதிப்பகம் தில்லி புத்தக விழாவுக்கு வந்தால் சற்றும் சிந்திக்காமல் 'அக்கா' புத்தகத்தை வாங்கி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்பநாபன் அண்ணாச்சி.

      தில்லி புத்தக காட்சி இந்த மாதம் 14-ஆம் தேதியிலிருந்து அண்ணாச்சி. போவோமா?

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராம்வி.

      நீக்கு
  8. திருமதி துளசி கோபாலின் பதிவு ஒன்றில் புத்தக வெளியீடு பற்றி பதிப்பகத்தில் விசாரித்ததாகப் படித்த நினைவு. புத்தகம் வந்து விட்டது தெரிந்து மகிழ்ச்சி. படிக்க வேண்டும். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் வெளி வந்து சில மாதங்கள் ஆகிவிட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  9. அழகான நூல் திறனாய்வு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  10. அருமையான விமர்சனம்...வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக படிக்கிறேன் சகோ

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படியுங்கள் சகோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  11. சிறந்த முறையில் விமர்சித்து இருக்கிறீர்கள் வாங்க வேண்டுமென்ற ஆவல் மேலிடுகிறது
    எனது பதிவு அரபிக்.

    தமிழ் மணம் - ஐந்தருவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      முடிந்த போது படியுங்கள்.

      நீக்கு

  12. விமரிசனம் இப்படித்தான் இருக்க வேண்டும் நாகராஜ். இயல்பாய் எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் ஜி!

      நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  13. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
    நன்றி
    தம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாங்கிப் படியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. நல்ல விமர்சனம். படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது. கிடைக்கும்போது கட்டாயம் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது கிடைகும் போது படியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  15. அக்காவுக்கு அழகான விமர்சனம்... வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை. சே குமார்.

      நீக்கு
  16. புத்தகத்தை வாங்கிப்படிக்க வேண்டும் என்று தூண்டுகிற மாதிரி விமர்சனம் எழுதியிருப்பது அருமை. ஆனால் கதையின் முடிவைச் சொல்கிற மாதிரி விமர்சனம் அமையக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து. ஏனெனில் புத்தகம் வாங்கிப் படிப்பவர்களுக்கு முடிவு தெரிந்து விட்டால் பாதியிலேயே சுவாரசியம் குறைந்து விடும். புத்தக வாசிப்பைத் தூண்டும் நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலையரசி ஜி!

      நீக்கு
  17. பதில்கள்
    1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கலையரசி ஜி!

      நீக்கு
  18. துள்சிக்காவின் வலைப்பூவில் வாசித்ததை இப்பொழுது புத்தக வடிவிலும் வாசிக்க முடிவது மகிழ்ச்சி. வாசித்து முடிக்கையில் அவரது அக்காக்களோடு நாமும் பழகிய உணர்வு வருவது நிஜம். அதிலும் பெரியக்கா வீட்டில் சாணம் மொழுகி கோலமிடும் காட்சியை விவரித்திருப்பார் பாருங்கள்.. அற்புதமான எழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாசிப்பனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!.

      நீக்கு
  19. மிகவும் சிறப்பான விமர்சனம்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  20. அருமையான விமர்சனம். படிக்க வேண்டும். வலைத்தளத்தில் எழுதி இருக்கும் போது படித்து இருக்கிறாள் என் மகள், நன்றாக எழுதி இருப்பார்கள் துளசி என்று சொல்வாள்.நீங்களும், ஆதியும் எழுதிய விமர்சனம் படித்தவுடன் படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  21. ஒரு நல்ல நூலைப் பற்றிய நல்ல விமர்சனம். விமர்சிக்கும் முறையிலேயே ஒரு நூலின் அருமை பெருமை உயர்வதைக் காணமுடியும். ஈடுபாட்டுடனான உங்களது எழுத்து அந்நூலினைப் படிக்கத் தூண்டிவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  22. அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    நேற்றே வெங்கட் சொன்னதும் வந்து பார்த்தேன் என்றாலும் பதில் ஒன்னும்சொல்லாமல் தலையை நீட்டிக்கிட்டு உக்கார்ந்திருந்தேன்...குட்டு வாங்க ரெடியா.

    அடடா.... புத்தகத்திலும் அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்டேனே..... அடுத்த பதிப்பில் திருத்திடலாம் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆச்சி.

      நீக்கு
  24. நல்லதொரு நூல் அறிமுகம்..துளசிமேடத்தின் எழுத்து இயல்பாக இருக்கும் ..அவர்தம் பிறந்த நாள்பரிசாக இதனை அளித்தமைக்கு நன்றி உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....