எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, April 30, 2012

"என் செல்ல செல்வங்கள்"- வாசிப்பனுபவம்


ச்சிண்டு, டைகர், ஜிம்மி, தத்தி, நூரி, வெள்ளைச்சி, லலிதா பவார், வெள்ளையப்பா, ச்செல்ல மியாவ், கறுப்பு துரை, சோஃபியா, சடைச்சு, நொண்டி, ப்ரவுணு, ஸ்கேம்பி, ஜிஞ்சர், குரங்கணா, கற்பகம் [எ] கப்பு, சதாம், மணி, வரது, ஷிவா, கோபால கிருஷ்ணன் [எ] ஜிகே 009! 

”என்னய்யா இதெல்லாம்?” என்று கேட்பவர்களுக்கு – இவையெல்லாம், தான் வளர்த்த நாய், பூனை செல்லங்களுக்கு புத்தக ஆசிரியர் வைத்த பெயர்கள் தான். சரி செல்லங்களுக்குத் தான் இப்படி பெயர் வைக்கிறாங்கன்னு பார்த்தா பழகிய சில மனிதர்களுக்கும் பெயர் வைத்திருக்கிறார்கள் இப்படி - இந்திரா காந்தி [தான் சொல்றது தான் சரி என்று சொல்லும் ஒரு பெண்ணுக்கு], குல்மால்! [எதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தும் ஒரு ஆணுக்கு!].

ஆரம்பத்திலேயே உங்களை உள்ளே அழைப்பது ஜிகே 009. எப்படி தெரியுமா?

”கிருஷ்ணன்…  கோபால கிருஷ்ணன் 009.
 
கை நீட்டுனா ஏன் யாருமே கை குலுக்க மாட்டேங்கறீங்க?
  
அதெல்லாம் நகத்தை உள்ளே இழுத்துக்குவேன். கவலையே படாதீங்க. ஒரு வேளைக் கடிச்சுருவேனோன்னு பயமா? அதுக்கும் வழி இல்லை. பல்லெல்லாம் கொட்டிப் போச்சு. உடம்பு பூராவும் சர்க்கரை இருக்காம். இப்போப் புரியுதா ஏன் இவ்வளவு இனிப்பாப் பேசறேன்னு?

உள்ளே வாங்களேன்…. உட்கார்ந்து பேசலாம்!”


ஹௌ ஸ்வீட்!... எவ்வளவு பாசமா கூப்பிடறான் பாருங்க! உள்ளே போனீங்கன்னா நிச்சயம் சந்தோஷமா இருப்பீங்க. அதுக்கு நான் உத்திரவாதம். அது சரி எங்கே போகங்கறீங்களா? அட... நம்ம துளசி கோபால் டீச்சர் எழுதிய “என் செல்ல செல்வங்கள்” புத்தகத்துக்கு உள்ளேதாங்க!

அப்படிப் போனா, நாய், பூனை போன்ற பிராணிகள் மேல் அவர் வைத்திருக்கும் பாசம், அவை காட்டும் அன்பு, வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள், வெளிநாடுகளில் இது போன்ற செல்லப் பிராணிகளுக்குக் கிடைக்கும் விதவிதமான உணவு வகைகள், கிடைக்கும் உபகரணங்கள், பூனையை “ஃபிக்ஸ்” செய்வது, செல்லங்களுக்கு உடம்பு சரியில்லையெனில் அவற்றை மிருக வைத்தியரிடம் கூட்டிச் செல்ல என்ன செய்ய வேண்டும், என பல விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு செல்லப் பிராணியை வளர்த்து விட்டு அதனிடமிருந்து பிரிவது என்பது எவ்வளவு துயரமானது! அதுவும் உடல் வேதனையோடு அப்பிராணி துடிக்கும்போது கருணையோடு அதனை ஊசி போட்டு அமைதிப்படுத்த முடிவு எடுப்பது அதைவிடத்  துயரமானது. இந்தத் துயரையும் இவர் அனுபவித்திருக்கிறார். கப்புவும், ஜிகேவும் அடைந்த முடிவு, படிக்கும் போது நிச்சயம் நம் மனதை பாதிக்கும்.

புத்தகத்தினை எடுத்ததிலிருந்து கீழே வைக்க மனசில்லாது ஒரே நாளில் படித்து முடித்தேன். சாதாரணமாக மிருகங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களுக்குக் கூட இந்தப் புத்தகத்தினைப் படித்தால் வீட்டில் ஒரு செல்லப் பிராணி வளர்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்து விடும்! அது தானே புத்தகத்தினை எழுதியவருக்கு வெற்றி!

நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்வதுண்டு. அவர் வீட்டில் நிறைய பூனைகள் சுதந்திரமாய்ச் சுற்றிக்கொண்டிருக்கும். நண்பரும் அவரது தாயும் அவற்றைக் கையில் எடுத்துக் கொஞ்சுவார்கள். எல்லாப் பூனைகளுக்கும் பெயர் வைத்துவிடுவார் அவரது அம்மா! ஒரு பூனைக் குட்டியின் பெயர் ”திரிப்பு!” – மைக்கேல் மதன காம ராஜன் வெளி வந்த நேரத்தில் பிறந்த பூனை – அதனால் திரிபுரசுந்தரி என்று பெயரிட்டு, செல்லமாய் ‘திரிப்பு!’ என்று கூப்பிடுவார்கள். என் செல்ல செல்வங்கள் படித்தபோது ’திரிப்பு’-வும், சக்குபாயும், ஷாலினியும் நினைவுக்கு வந்தனர்.

கூடவே பிராணிகளுக்கு மனிதர்கள் மேல் இருக்கும் பாசம் அளவிடமுடியாதது. என் பெரியப்பா வீட்டில் [திருப்பராய்த்துறை] தினந்தினம் இரவில் உணவு உண்ண வருவான் கருப்பன். பெரியப்பா இறந்த போது வெளியில் நின்று கண்ணீர் வடித்தான். காவேரி ஆற்றங்கரையோரம் சிதையூட்ட எடுத்துச் சென்றபோது கூடவே வந்து நின்று கொண்டிருந்துவிட்டு, காவேரியில் நீராடிய பின் தான் சென்றான் கருப்பன்! இதையெல்லாம் அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்!”நீங்கள் பிராணிகளை நேசிப்பவர்களா?”, அப்படியெனில் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடிக்கும். இது வரை பிராணிகளை நேசிக்காதவர் எனில் இப்புத்தகத்தினைப் படித்தால் கண்டிப்பாய் நேசிக்கத் தொடங்குவீர்கள்! புத்தகத்தினை சந்தியா பதிப்பகத்தார் அழகாய் வெளியிட்டு இருக்கிறார்கள். விலை ரூபாய் 80 மட்டுமே!

முகவரி: 

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53 - வது தெரு
9 - வது அவென்யூ
அகோக் நகர்,
சென்னை – 600083
தொலைபேசி – 044 24896979
மின்னஞ்சல்: sandhyapublications@yahoo.com
இணைய முகவரி: www.sandhyapublications.com

மீண்டும் சந்திப்போம்,

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.
40 comments:

 1. “என் செல்ல செல்வங்கள்”

  அருமையான வாசிப்பனுபவத்தை
  அளித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

   Delete
 2. மனம் நிறைந்த நன்றிகள்.

  வேறொன்னும் சொல்லத் தெரியலை!!!!

  பசங்க, பரிசுத்த ஆத்மாக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இப்படி நல்லதொரு புத்தகத்தை எழுதிய உங்களுக்கு நாங்கள் தான் நன்றி சொல்லணும் துளசி டீச்சர்.

   மிகவும் ரசித்தேன்.

   Delete
 3. ஜிகெ க்கு அம்மா எவ்வளவு செல்லமோ அவ்வளவு செல்லம் அவன் எல்லா பதிவர்களுக்கும். துளசியின் கோபால் வெளிநாடு செல்லும்போதெல்லாம் அவந்தான் இன்சார்ஜ். பெற்ற குழந்தைக்கும் மேலாகப் பாசம் வைத்திருந்தவன்.இதோ மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.

  மீண்டும் அந்த வருடங்களை நினைவில் இருத்திவிட்டீர்கள் வெங்கட். இதைவிட அழகாக யாரும் சொல்லி இருக்க முடியாது .மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. //பெற்ற குழந்தைக்கும் மேலாகப் பாசம் வைத்திருந்தவன்// ஆமாம். அவனைப் பற்றிப் பேசுவதே ஒரு சுகானுபவம் அவர்களுக்கு....

   தங்களது வருக்கைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 4. புத்தக விமர்சனம் அருமை. எங்கள் வீட்டில் நாங்கள் வளர்க்கமலேயே ஒரு பூனை வளர்ந்து வருகிறது, படிக்கும் பொழுது அதன் நியாபகம் தான் வருகிறது. அவசியம் படிக்க வேண்டிய தமிழ்ப் புத்தகம். ஏன் என்றால் செல்லப் பிராணி வளர்ப்பதற்காக இப்போது தமிழில் ஒரு புத்தகத்தைப் பார்கிறேன். நன்றி இணைந்திருப்போம்.

  நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்
  http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_30.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சீனு. தங்களது பக்கத்திற்கும் மாலை வருகிறேன்.

   Delete
  2. நல்லதொரு வாசிப்பு அனுபவமும், புத்தக அறிமுகமும் அருமை.
   பாராட்டுக்கள்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete
 5. நானும் வாசித்து விட்டேன். விமர்சனம் இன்னும் எழுதலை

  //”நீங்கள் பிராணிகளை நேசிப்பவர்களா?”, அப்படியெனில் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடிக்கும். இது வரை பிராணிகளை நேசிக்காதவர் எனில் இப்புத்தகத்தினைப் படித்தால் கண்டிப்பாய் நேசிக்கத் தொடங்குவீர்கள்! //

  உண்மை !

  டீச்சர் இந்த பதிவை வாசித்தால் மிக மகிழ்வார்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாணியில் விமர்சனம் படிக்கக் காத்திருக்கிறேன் மோகன்.

   டீச்சரிடம் தான் முதலில் சொன்னேன்... அவருக்கும் மகிழ்ச்சி தான்.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 6. செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் படிக்க வேண்டிய நல்லஒரு புத்தகம்.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 7. துளசி கோபாலின் என் செல்ல செல்வங்களைபற்றி படிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.

  கருப்பனின் பாசம் நெகிழ வைத்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் படிங்க கோமதிம்மா.. நல்ல புத்தகம்.

   கருப்பனின் பாசம் நிச்சயம் நெகிழவைத்த ஒரு அனுபவம்தான்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 8. Dear
  Good comments / observations about the book. Thank you. Pl keep it up.
  vijay

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.

   Delete
 9. அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  எனக்கும் மறக்க முடியாத வாசிப்பனுபவத்தைத் தந்த நூல்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விமர்சனமும் படித்தேன் ராமலக்ஷ்மி. மிக அருமையாக எழுதி இருந்தீர்கள்.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 10. மிகவும் அருமையான புத்தக அறிமுகம் வெங்கட்.

  //இது வரை பிராணிகளை நேசிக்காதவர் எனில் இப்புத்தகத்தினைப் படித்தால் கண்டிப்பாய் நேசிக்கத் தொடங்குவீர்கள்! //

  சிறப்பு. இதற்காகவே வாசிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி. நிச்சயம் படியுங்கள்.

   Delete
 11. //”நீங்கள் பிராணிகளை நேசிப்பவர்களா?”, அப்படியெனில் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடிக்கும். இது வரை பிராணிகளை நேசிக்காதவர் எனில் இப்புத்தகத்தினைப் படித்தால் கண்டிப்பாய் நேசிக்கத் தொடங்குவீர்கள்! //

  நல்லதொரு வாசிப்பும்...அறிமுகமும் வெங்கட்...

  Pets பிடிக்கும்...Unfortunately I am allergic to Cats & Dogs...

  தூரத்தில் இருந்து ரசிப்பதோடு சரி...

  ReplyDelete
  Replies
  1. //தூரத்தில் இருந்து ரசிப்பதோடு சரி...// :)))

   தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 12. பெரியப்பா இறந்த போது வெளியில் நின்று கண்ணீர் வடித்தான். காவேரி ஆற்றங்கரையோரம் சிதையூட்ட எடுத்துச் சென்றபோது கூடவே வந்து நின்று கொண்டிருந்துவிட்டு, காவேரியில் நீராடிய பின் தான் சென்றான் கருப்பன்! இதையெல்லாம் அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்!
  Touching.

  ReplyDelete
 13. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

  ReplyDelete
 14. நானும் பிராணி நேசன் தான்
  நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 15. Replies
  1. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 16. நாங்க வீட்ல ஏற்கனவே ஒரு செல்லப் பிராணி வளர்க்கறோம். நிரஞ்சனான்னு பேரு. ஹி... ஹி... (உங்க ப்ளாக் பக்கம் அவ வர்றதில்லைதானே...) புத்தகத்தைப் பத்தி அருமையா விமர்சனம் பண்ணியிருககீங்க- உடனே படிக்கத் தூண்டும் வகையில்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. //நாங்க வீட்ல ஏற்கனவே ஒரு செல்லப் பிராணி வளர்க்கறோம். நிரஞ்சனான்னு பேரு. ஹி... ஹி... (உங்க ப்ளாக் பக்கம் அவ வர்றதில்லைதானே...)//

   வரதில்லை! ப்ரொஃபைல் போட்டாவை பார்த்து பயந்து இருக்காங்க போல! ஏன்னா என் இடுகைகளுக்கு இதுவரை நிரஞ்சனாவோட ஒரு கமெண்ட் கூட வந்ததில்லை!

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 17. அருமையான வாசிப்பனுபவத்தை
  அளித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 18. அறிமுகமும், வாசித்தவற்றைப் பகிர்ந்த விதமும் மிகவும் அருமை! நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சேஷ்....

   Delete
 19. நான் ஒரு நாய் நேசன். எனக்கு அந்தப் புத்தகம் பிடிக்கும். பார்க்கிறேன். அன்போடு வளர்த்தவைகளைப் பிரியும் தருணம் உண்மையிலேயே மிகக் கொடுமையான விஷயம். அந்த அனுபவம் நேர்ந்தால் மறுபடி வளர்க்கத் தோன்றாது.

  ReplyDelete
  Replies
  1. ஓ... உங்களுக்கு நாய் என்றால் ப்ரியமா? நல்லது.

   நிச்சயம் உங்களுக்கு இந்தப் புத்தகம் பிடிக்குமென நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 20. பிரிவுகள் பகுதியில் "சமூகம்"/" சமுதாயம்" என்று ஓன்று ஆரம்பிக்கலாம் .
  பிச்சைக்காரர்கள் மாதிரியான பதிவுகளை அந்த லிங்க் இன் கீழே வரிசைப்படுத்தலாம் nagaraj
  zelvakumar@yahoo.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செல்வகுமார். கூகிள் ஐ.டி என்னவாயிற்று?

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....