புதன், 2 மே, 2012

தேனிலவை விட்டு ஓடிய தம்பதி...ஃபிப்ரவரி மாதம் தில்லியில் நடந்த உலக புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலுக்கு சென்ற போது, “புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு இல்லை, பதிவு செய்து பணம் செலுத்தினால் உங்களுக்கு புத்தகங்களை தபாலில் அனுப்பி வைக்கிறோம்” என்றார்கள். அப்போதே வாங்கி, வரும்போதே படித்துக் கொண்டே வருவது எனக்குப் பிடித்தது – அதுவும் வாத்தியார் சுஜாதா புத்தகம் என்றால் கையிலெடுத்ததிலிருந்து படித்து முடிக்கும் வரை கீழே வைக்காத வகை நான்! அதனால் பதிவு செய்யாமல் வேறு புத்தகங்களை வாங்கிக் கொண்டு திரும்பினேன். [பட உதவி: கூகிள்]


இரண்டாம் முறையாக நான் போன போது, கொண்டு வந்ததை எல்லாம் திருப்பி எடுத்து போக வேண்டாம் என்று விற்கத் தொடங்கியிருந்தார்கள். வாத்தியார் எழுதிய புத்தகங்களில் “ஓடாதே” மட்டும் தான் கடையை விட்டு வாசகரோடு ஓடாமல் இருந்தது. உடனே வாங்கி விட்டேன்.  தலைப்பு மட்டும் தான் ”ஓடாதே” ஆனால் கதை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் – ஒரு தம்பதியர் தேனிலவைக் கூட விட்டு விட்டு…

இது ஒரு க்ரைம் நாவல். படிக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே வைக்க மனம் வரவில்லை. அவ்வளவு சுவாரசியம். கதையின் நாயகன் – நாயகி, புதுமணத் தம்பதியினர். அவர்கள் தேனிலவு செல்ல, ஒரு கும்பல் துரத்துகிறது அவர்களை. எதற்கு? அது நாயகன் – நாயகி, மற்றும் படிக்கும் நமக்கும் புரியவில்லை. படிக்கப் படிக்கத் தான் தெரிகிறது. துரத்திக்கொண்டு இருக்கும் நபர்கள் திடீரென துரத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். 

ஓடிக் கொண்டே இருக்கும் இவர்களை ஒரு கட்டத்தில் கணேஷ் – வஸந்த் காப்பாற்றுகிறார்கள். அத்துடன் நில்லாது எதற்காக துரத்துகிறார்கள் என்பதையும் ஆராய்ச்சி செய்வது தான் இந்த விறுவிறுப்பான கதை. நடுநடுவே சுஜாதாவின் அடையாளச் சின்னங்கள் வரும்போது தன்னையறியாமல் சிரிக்க வைக்கிறது. பெண் பார்க்கச் சென்ற நாயகன், நாயகியைப் பார்த்து “ஒரு நிமிஷம் பேசலாமா?” எனப் பேசியது கீழே!

“மீராவை ‘தனியாக’ பால்கனிக்கு அழைத்துச் சென்றபோது, அவள் தம்பி தங்கைகள் அடைகாக்க, ஜன்னல் வழியாக மீராவின் பாட்டி பார்த்துக் கொண்டிருக்க, தமாஷாக நிகழ்ந்தது அந்த உரையாடல்.
  உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா… ரொம்ப… இந்த வருஷம் வெயிலா?.... இல்லை. நீங்க எந்த காலேஜ்? நான் லயோலா, அப்புறம் விவேகானந்தா….
  இவ்வாறு பற்பல கேள்விகளுக்குப் பின் மீரா இறுத்த ஒரே பதில் – ‘உங்க காலர்ல கட்டெறும்பு ஊர்றது.’”

முன்னுரையில் சுஜாதா அவர்கள் இந்த கதையை பற்றி சொல்லும்போது, ”நாம் எதற்காக ஓடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம். நின்று எதற்காக ஓடுகிறோம் என்று யோசித்தால் காரணம் தெரியாது. துரத்தியவரைக் கேட்டால், “எனக்குத் தெரியாது. நீ ஓடுகிறாய், நான் துரத்துகிறேன்” என்பார். இந்த வெட்டி ஓட்டத்தை த்ரில்லர் முறையில் சொல்ல முயன்றேன்” என்கிறார். மேலும் சினிமாவாக வராமல் தப்பித்த கதை என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.  

சினிமா டைரக்டர்கள் செண்டிமெண்ட்டுக்காக தலைப்பை மட்டும் மாற்றி விட்டால் இதை சினிமாவாக எடுக்கலாம் என்றார்களாம். 'ஓடாதே' என்ற தலைப்பில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை இழக்க மனம் வராததால் ஒத்துக் கொள்ளவில்லையாம்.

குங்குமம் இதழில் முன்பு தொடர்கதையாக வந்த இந்த கதையை கிழக்கு பதிப்பகத்தினர் வெளியிட்டு இருக்கிறார்கள். புத்தகத்தின் விலை ரூபாய் 100/-. 

முகவரி:-

கிழக்கு பதிப்பகம்
எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு
ஆழ்வார்பேட்டை
சென்னை – 600018.
தொலைபேசி எண் – 044 42009601

எனக்குப் பிடித்தது. சுஜாதா ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.  

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்,

வெங்கட்
புது தில்லி.46 கருத்துகள்:

 1. டியர் வெங்கட், இந்தப புத்தகத்தை வடிவமைத்தது நான்தான். அப்போது கிழக்கு லே அவுட் பிரிவில் இருந்தேன். இந்தக் கதை மிகமிக ரசிக்கும்படி இருக்கும். சுஜாதா ஸ்பெஷல் ‘டச்’கள் அருமையாக இருக்கும். நீங்கள் ரசித்து எழுதியிருப்பது அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கணேஷ், நான் ரசித்துப் படித்த இந்தப் புத்தகத்தினை வடிவமைத்தது நீங்கள் தான் எனத் தெரிந்து மேலும் மகிழ்ச்சி.

   உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ். வலைச்சரத்தில் தொடர்ந்து அசத்த வாழ்த்துகள்.

   நீக்கு
 2. சுஜாதாவின் கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா...

   நீக்கு
 3. சுஜாதாவின் கதைகள் காலத்தை வென்றவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 4. முன்னுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து யோசிக்கவைக்கிறது. கதையைப் பற்றியப் பரிந்துரைக்கு நன்றி வெங்கட். கிடைக்கும்போது வாசிக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 5. வாங்கப்போகும் புத்தக லிஸ்ட்டில் சேர்த்தாச்சு!

  நம்ம கணேஷுக்கு இனிய பாராட்டுகள்.

  ஒரு பழைய சினிமாவில் (பெயர் நினைவில் இல்லை. ஹிந்தி) நாயகன் நாயகி இருவரும் ஐவிட்னஸா ஒரு கேஸில் இருப்பதால் சொந்த அடையாளங்களை மாத்திக்கிட்டே ஊர் ஊரா ஓடுவாங்க! ராஜ்பப்பரும் ஸ்மீதா பாட்டீலும் நடிச்சாங்கன்னு நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா லிஸ்டில் சேர்த்தாச்சா? குட்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
  2. மகிழ்வுடன் கூடிய நன்றி டீச்சர் உங்கள் பாராட்டிற்கும் அதைவிட ‘நம்ம கணேஷ்’ என்ற வார்த்தையைச் சொல்லி என்னை உங்களைச் சேர்ந்தவனாக்கி மகிழ்ந்ததற்கும்!

   நீக்கு
  3. ”நம்ம கணேஷ்” அதானே.... சரியாத் தான் சொல்லி இருக்காங்க துளசி டீச்சர்.

   தங்களது இரண்டாம் வருகைக்கு நன்றி கணேஷ்.

   நீக்கு
 6. சுஜாதாவின் இந்தக் கதையைப் படித்ததில்லை]
  தங்கள் அறிமுகம் படிக்கத் தூண்டிப்போகிறது
  நிச்சயம் படித்துவிடுவேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தமிழ்மணத்தில் மூன்றாம் வாக்கிட்ட உங்களுக்கு, நானும் சொல்கிறேன் - எனது மூன்றெழுத்து “நன்றி”.

   நீக்கு
 8. //படித்து முடிக்கும் வரை கீழே வைக்காத வகை நான்! // நாமெல்லாம் ஒரே இனம் சார்.

  இநதக் கதையை நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது படித்தேன். அப்போது இந்தக் நாவல் பாதி வரை எனக்குப் புரியவே இல்லை. மீண்டும் முதலில் இருந்து படித்தேன், ஓரளவு புரிந்து கொண்டேன். ஆனால் பதிக்கு மேல் செல்லச் செல்ல அருமையாக இருந்த்தது....

  இன்றும் அதில் வரும் காட்சிகள், திறந்த வெளிகளில் நடக்கும் ஓட்டங்கள் தலைமறைவுகள் என்று பசுமையாக நினைவிருக்கிறது. இந்தப் பதிவை படித்தவுடன் மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் போல் உள்ளது. அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் ஒரு கதை....

   உங்களை மீண்டும் படிக்கத் தூண்டியதில் எனக்கு மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 9. சினிமா டைரக்டர்கள் செண்டிமெண்ட்டுக்காக தலைப்பை மட்டும் மாற்றி விட்டால் இதை சினிமாவாக எடுக்கலாம் என்றார்களாம். 'ஓடாதே' என்ற தலைப்பில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை இழக்க மனம் வராததால் ஒத்துக் கொள்ளவில்லையாம்.//

  புதிய தகவல்..

  நாயகன், நாயகி பேசியதை பகிர்ந்து கொண்டது ரசிக்கும் படி இருந்தது.
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 10. Have read it earlier. Forgot completely. Need to read again.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன். மீண்டும் படியுங்களேன்.

   நீக்கு
 11. நல்ல விமரிசனம் சுவையான தகவல்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

   நீக்கு
 12. சுஜாதாவின் கதை யாருக்கு பிடிக்காமல் போகும்.. இது வரை இந்த கதையை படிக்கவில்லை.. நிச்சயம் படிக்குறேன்.. உங்கள் விமர்சனம் ரசிக்கும் படி இருந்தது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி சவிதா. முடியும்போது நிச்சயம் படியுங்கள்.

   நீக்கு
 13. //இவ்வாறு பற்பல கேள்விகளுக்குப் பின் மீரா இறுத்த ஒரே பதில் – ‘உங்க காலர்ல கட்டெறும்பு ஊர்றது.’”//

  அது தான் சுஜாதா! ;)))))

  அருமையானதோர் புத்தக விமர்சனத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே தான்.... சுஜாதா!

   தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   நீக்கு
 14. முன்பே படித்து இருக்கேன்.இன்னொரு முறை படிக்க தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.. முன்பே படித்து இருக்கீங்களா? இன்னுமொரு முறை முடியும்போது படியுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 15. கணேஷ், வசந்த் காம்பினேசன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் இருக்கும் ஒரு நாவலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த நாவலில் அவர்கள் கடைசியில் தான் வருவார்கள். இருந்தாலும் நன்றாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 16. பெயரில்லா2 மே, 2012 அன்று PM 7:43

  படித்ததில்லை வெங்கட்...அடிக்கடி அறிமுகப்படுத்துங்க...நானும் ரெண்டு புத்தகங்கள் படித்து கொண்டிருக்கிறேன்..படிப்பதில் உள்ள சுகமே தனி தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”படிப்பதில் உள்ள சுகமே தனி தான்....”

   அதே அதே சபாபதே! :)

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   நீக்கு
 17. வாத்தியாரின் ஓடாதே கதைக்கு அழகாக ஒரு மேலோட்டம் கொடுத்துள்ளீர்கள்.. முதலில் படித்தது..நீங்கள் குறிப்பிட்ட வாத்தியாரின் நுணுக்கங்கள் உடனடியாக படிக்க கதையை தேடுகிறது.... நன்றி..

  கிழக்கில் வாத்தியார் கதை புத்தகங்களை நன்றாக வடிவமைக்கிறார்கள்.. இப்புத்தகத்தின் அட்டையலங்காரம் செய்த கணேஷ் அவர்களுக்கு சிறப்பு பாராட்டு........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் பக்கத்தில் உங்கள் வருகை பத்துஜி! வாத்தியார் உங்களை இழுத்து வந்து விட்டார்.... :)

   ஒரு புத்தகத்தின் வடிவமைப்பும் வாசிப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் இருந்தால் தான் நல்லது. இந்த புத்தகமும் அப்படித்தான். நண்பர் கணேஷ் அவர்களுக்கு உங்களுடன் சேர்ந்து எனது பாராட்டுகளும்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்துஜி.

   நீக்கு
 18. படித்த நினைவில்லை வெங்கட். எடுத்துச் சொன்னதற்கு மிகவும் நன்றி. எறும்பு ஊறுகிறது:)
  அச்சு சுஜாதா:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சு சுஜாதா! :) ஆமாம்....

   தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 19. oodaathe!

  padamaa edukkaatha kaaranam-
  sonnathu!

  puthusaakavum!
  sinthikkavum vaiththathu!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 20. ஆ....சுஜாதா, கணேஷ்-வசந்த்....எதையும் ஒருமுறை என்று வாசிக்க வைப்பவை அவர் எழுத்துகள். பிரிவோம் சிந்திப்போம் என்று அடிக்கடி அவர் எழுத்து என்னும் கனவுத் தொழிற்சாலைக்குள் இழுத்து இழுத்துப் படிக்க வைக்கும். அவற்றைப் படிப்பதால் கற்றதும் பெற்றதும் ஏராளம். விபரீத கோட்பாடுகளையும் விருப்பமில்லாத திருப்பங்களையும் இந்த மணமகனைப் படிக்கத் தூண்டும் கவர்ச்சி எழுத்தாளர்.வானமெனும் வீதியிலே அவர் பயணித்து நம்மிடமிருந்து மறைந்து போனாலும் ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் கேள்விகள் கேட்டும் கேட்காமலும் அவர் படிப்புகளை படிப்பேன்! :))

  கணேஷ்... ஓடாதே புத்தகத்துக்கு வடிவமைப்பு உங்கள் கைவண்ணமா ... பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைவரின் வார்த்தைகளிலேயே கருத்துரைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 21. நீங்கள் படித்த புத்தகத்தை சிறப்பாக எங்களுக்கும் அறிமுகம் செய்திருக்கீங்க.நன்றி.

  //அதுவும் வாத்தியார் சுஜாதா புத்தகம் என்றால் கையிலெடுத்ததிலிருந்து படித்து முடிக்கும் வரை கீழே வைக்காத வகை நான்!//

  ஆம் வெங்கட், அவருடைய புத்தகங்களை பார்த்தவுடன் படித்துவிட வேண்டும் அப்பொழுதான் நிம்மதியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமாரவி.

   நீக்கு
 22. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....