வியாழன், 10 மே, 2012

ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 3]
சென்ற பகுதியில் சொன்னது போல, இப்போது உங்களை ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்கிறேன். இத் தொழிற்சாலை 1969-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நமது ராணுவம் மற்றும் இதர பாதுகாப்பு படைகளுக்குத் தேவையான வாகனங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இங்கு நான்கு தொகுதிகள் இருக்கின்றன. நாங்கள் சென்றபோது முதலில் தொழிற்சாலையின் பிரதிநிதி ஒருவர் தயாராகும் வாகனங்கள் மற்றும் இதர விவரங்கள் பற்றிய விளக்கங்களை அளித்தார். பிறகு உள்ளே சென்று வாகனங்களின் பகுதிகள் தயாராகும் முறை, ஒவ்வொரு பகுதியும் என்னென்ன சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன, எப்படி உதிரி பாகங்கள் இணைக்கப்பட்டு முழு வாகனமாக உருவாகிறது என்பதை எல்லாம் பார்த்தோம். இங்கே  5/7.5 டன் Stallion Mk-III BS-II, 2.5 டன் LPTA 713/32 TC BS-II, 2 கிலோ லிட்டர் கொள்ளவு உள்ள Water Bowser, 5 கிலோ லிட்டர் கொள்ளவு உள்ள Water Bowser, கண்ணி வெடிகளில் இருந்து பாதுகாக்கும் வண்டிகள், குண்டு துளைக்காத வண்டிகள் என்று பல ரகங்களில் வாகனங்கள் தயாராகிறது.

ராணுவத்திற்கு மிக முக்கியத் தேவை வாகனங்கள். நாட்டின் எல்லைகளில் ரோந்து சுற்றி வரவும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் செல்லும்படியான வாகனங்கள் இருந்தால் தானே அவர்களால் நமது நாட்டினை அன்னியர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும்? 

தொழிற்சாலையை முழுவதுமாக சுற்றிப் பார்த்து விட்டு பின் அங்கு பணிபுரிபவர்களிடம் நன்றி கூறி திரும்பும் போது நேரம் மதியத்தை தொட்டிருந்தது. மதிய உணவுக்குப் பின் நாங்கள் சென்ற இடம் நர்மதை நதியில் இருக்கும் மார்பிள் ராக்ஸ். அதன் எழிலைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

மீண்டும் சந்திப்போம்...

நட்புடன்
வெங்கட்.


பின்குறிப்பு: 04.05.2012 அன்று வல்லமையில் வெளியான பகிர்வு.

36 கருத்துகள்:

 1. ரொம்பவும் ரகசியமான தொழிற்சாலை போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 2. நம்முடைய நாடிக் காக்கும் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நீங்கள் சென்று வந்திருப்பதை நினைக்கும் பொழுது பெருமையாய் இருக்கிறது. ராணுவ வீரர்கள் மதிக்கப் படவேண்டியவர்கள்.

  நர்மதை பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் வார்த்தைகளிலிருந்து தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ராணுவ வீரர்கள் மதிக்கப் படவேண்டியவர்கள்.// உண்மை. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக உழைக்கும் வீரர்கள் நிச்சயம் மதிக்கப்பட வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 3. வெளியூரில் இருக்கும் போதும் கடமை தவறாமல் பதிவு போட்டமைக்கு நன்றி. :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வெளியூரில் இருக்கும் போதும் கடமை தவறாமல் பதிவு போட்டமைக்கு நன்றி. :))// ஆஹா... என்ன ஒரு கடமை உணர்வு. நீங்கள்தான் மெச்சிக்கொள்ள வேணும்! :)

   வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 4. வெகிகில் ஃபேக்டரி பக்கத்ல ஆர்டினன்ஸ் ஃபேக்டரிலதான் என் வீட்டுக்காரர் வேலை பார்த்தார். அந்த இடம் பேரு கமேரியான்னு சொல்லுவங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். இந்த கமேரியா ஏரியாவில் தான் அரை நாள் இருந்து பார்த்தோம். உங்கள் பழைய நினைவுகளை தூண்டிவிட்டது போலும் எனது பகிர்வு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா..

   நீக்கு
 5. ஓஹோ, ராணுவத்திற்காக தனி வாகனம் தொழிற்சாலையா ஆச்சர்யமா இருக்கே....!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆச்சரியம்தான் மனோ.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. நல்ல பகிர்வு.

  / நர்மதை நதியில் இருக்கும் மார்பிள் ராக்ஸ்./

  காணக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 7. மிகவும் வித்தியாசமான அனுபவம். நமக்குத் தெரியாத விபரங்கள். அனைத்தையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் தங்களின் பதிவு அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது பக்கத்திற்கு வந்து, பதிவினைப் படித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி மனோ மேடம்.

   நீக்கு
 8. ஜபல்பூர் வாகன தொழிற்சாலைப் பற்றி அருமையான தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி ப்கிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 11. இந்தத் தகவலகள் எல்லாமே எனக்குப் புதுசுதான். ஜபல்பூர்ல தனியா வாகனத் தொழிற்சாலை இருக்குன்றதே இப்பத்தான் தெரியும். ‌தொடரட்டும் பயணம் இனிமையாக. தொடர்கிறோம் நாங்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கணேஷ். சென்னையில் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 12. 1969லருந்தே ராணுவத்துக்கான வாகனத் தொழிற்சாலை இயங்கிட்டிருககா..? ஆச்சரியம்தான்! அதுசரி... மார்பிள் ராக்ஸ்ன்னா இன்னா? அது ஒரு சுற்றுலாத் தலமா, இல்லை... மார்பிள் கற்கள் தயாரிக்கிற ஃபேக்டரியா ஸார்? தெர்ஞ்சுக்க அடுத்த தபாவும் தவறாம விஸிட் அட்ச்சுடறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிரஞ்சனாவின் முதல் வருகை? மிக்க மகிழ்ச்சி நிரு....

   தொடர்ந்து வந்து கருத்துரைத்தால் மகிழ்வேன்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 14. மார்பில் ராக்ஸ் எழிலைப் பார்க்க, படிக்க வெய்ட்டிங்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 15. வாகனங்கள் தயாரிக்குமிடம் என்றாலே மிலிட்டரி வாசனை அதிகம் இருந்திருக்கும். பார்க்கக் கம்பீரமாகவும் பெருமையாகவும் இருக்கின்றன. அருமையான் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா. ஆமாம் கொஞ்சம் மிலிட்டரி வாசம் தூக்கலாகத் தான் இருந்தது.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....