எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, May 24, 2012

சௌசட் யோகினி மந்திர்


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 5]


பகுதி-4 பகுதி-3 பகுதி-2 பகுதி-1“[B]பேடா [G]காட்” –லிருந்து நீர்விழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஒரு சிறு குன்றின் மேலுள்ளது “சௌசட் யோகினி மந்திர்”.  பாறையில் அமைத்திருக்கும் படிகள் வழியே சென்றால் நமக்குக் காணக் கிடைப்பது பத்தாம் நூற்றாண்டில் துர்கா தேவிக்கென அமைக்கப்பட்ட ஒரு அழகிய கோவில். 

கோவிலின் மேலே செல்ல கல்லாலான படிக்கட்டுகள் இருக்கின்றன. மலையிலிருந்து கீழே நோக்கினால் பாறைகளுக்கு நடுவே அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நர்மதை ”என்னையும் கொஞ்சம் பாரேன்” என காதலோடு நம்மை அழைக்கிறாள். 

ஹிந்தியில் ”சௌசட்” என்றால் அறுபத்தி நான்கு. அறுபத்தி நான்கு யோகினிகள் பற்றி நிறைய கதைகள் சொல்கிறார்கள். அவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதற்கு இன்று நமக்கு விடையில்லை. அங்கிருக்கும் பல சிலைகளின் கீழே பெயர்கள் இருந்தாலும் சிலவற்றில் இல்லை. நிறைய சிலைகள் ஏதாவது ஓரிடத்தில் சிதிலம் அடைந்திருக்கிறது. 

கல்சூரி ராஜாக்களால் 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் பல அற்புதமான சிற்பங்கள் இருக்கின்றன. பல சிதிலப்பட்டுப் போனாலும் இருக்கும் சில சிற்பங்களின் அழகைப் பார்க்கும்போது சிதிலப்பட்டவை எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என நம்மை கற்பனை செய்யத் தூண்டுகிறது. அறுபத்தி நான்கு யோகினிகள், துர்க்கா தேவியின் உடனிருப்பவர்கள் என சொல்லப்பட்டாலும், இந்த கோவில் அவர்கள் பெயராலேயே அழைக்கப்பட்டாலும், இங்கே நடுநாயகமாக சிவனுக்கென தனி சன்னிதியும் இருக்கிறது. வட்ட வடிவமான வெளியிடத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து இளைப்பாற மேடைகள் இருக்கின்றன.

கோவில் இருக்கும் சிறிய மலையிலிருந்து நாம் காணும் ஜபல்பூர் நகரக் காட்சி ஆஹா எத்தனை அழகு. பறவைகள் எல்லாம் உயரத்தில் பறக்கும்போது பூமியைப் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது…

ஒவ்வொரு யோகினியின் பெயரும் தெரிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஸ்ரீ நந்தினி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ மண்டோதரி, ஸ்ரீ கேமுகி, ஸ்ரீ ஜாம்பவி, ஸ்ரீ யமுனா, ஸ்ரீ ஷண்டினி, ஸ்ரீ பிங்களா, ஸ்ரீ ஐங்கிணி, ஸ்ரீ ப்ரம்ஹணி, ஸ்ரீ தபனி, ஸ்ரீ ஹன்சினி எனப் பல்வேறு யோஹினிகளின் பெயர்கள் கீழே எழுதப்பட்டு இருக்கிறது. 

ஒரு நாள் முழுதும் பயணத்தில் வீணாகிப் போனதால் இன்னும் அதிக நேரம் இருந்து குறிப்புகள் எடுக்க முடியவில்லை. முழுக் கோவிலையும் ஆற அமர இருந்து பார்க்கவேண்டுமெனில் நிறைய நேரம் தேவை. இல்லாததால் மனசில்லாமலே கீழே இறங்கி வந்தேன். தனியாக இன்னுமொரு முறை சென்று பார்க்க எப்பொழுது நேரம் வாய்க்குமோ? அந்த யோகினிகளுக்கே வெளிச்சம்…

அடுத்து நாங்கள் சென்ற இடம் எதுவாக இருக்கும்? யோசித்துக் கொண்டிருங்கள்... அதற்குள் நான் அங்கு சென்று விடுகிறேன். அப்போது தானே அதைப் பற்றி உங்களுக்குச் சொல்ல முடியும்?

என்ன கற்பனைக் குதிரையின் மேலே ஏறி உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சீட்டிங்களா? நல்லது…  ரொம்ப தூரம் போயிடாதீங்க… சீக்கிரமே வந்துடறேன்…  சரியா?...

மீண்டும் சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


பின்குறிப்பு: 18.05.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.


40 comments:

 1. சௌசட் யோகினி மந்திர் பற்றியதகவல்கள் இண்ட்ரெஸ்டிங்க்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 2. ஒவ்வொரு யோகினியின் பெயரும் தெரிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஸ்ரீ நந்தினி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ மண்டோதரி, ஸ்ரீ கேமுகி, ஸ்ரீ ஜாம்பவி, ஸ்ரீ யமுனா, ஸ்ரீ ஷண்டினி, ஸ்ரீ பிங்களா, ஸ்ரீ ஐங்கிணி, ஸ்ரீ ப்ரம்ஹணி, ஸ்ரீ தபனி, ஸ்ரீ ஹன்சினி எனப் பல்வேறு யோஹினிகளின் பெயர்கள் கீழே எழுதப்பட்டு இருக்கிறது.

  அருமையாய் யோகினிகளின் பெயர்களை அறியத்த்ந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 3. அழகான படங்களுடன் கூடிய அருமையான பயணக் கட்டுரை. தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete
 4. வெங்கட், அர்களம் என்ற ஸ்லோகத்தில் இந்த 64 யோகிநிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றிய என் பதிவு இங்கே http://kaialavuman.blogspot.in/2011/09/2.html

  [பயணமும் அதைத் தொடர்ந்த அலுவலக பளுவின் காரணமாகவும் பதிவுகளைப் படித்தாலும் உடனடியாக கருத்துகளை பதிய முடியவில்லை]

  ReplyDelete
  Replies
  1. அர்களம் ஸ்லோகம் பற்றிய உனது பதிவு படித்தேன். ஏனோ இந்தப் பதிவு எழுதும் போது அந்த பதிவு நினைவுக்கு வரவில்லை! :))))

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 5. கோவில் கம்பீரமாக இருக்கிறது. சிலைகளும் அழகாக...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

   Delete
 6. தகவல்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. ரொம்பவும் அழகான கோவில்! அபூர்வமான தகவல்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.

   Delete
 8. இரசித்தேன்! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 9. அருமையான கட்டுரை...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பகிர்வினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 10. அருமையானதொரு கோவிலை
  அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்
  பல நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பர் மகேந்திரன்.

   Delete
 11. ஆலயமும் நீங்கள் எடுத்த சிற்பங்களின் படங்களும் மிகவும் ரசிக்க வைத்தன. என் கற்பனைக் குதிரைய கண்ட்ரோல் பண்றது ரொம்பக் கஷ்டம் வெங்கட்! அடக்கி வெக்கறேன். அது பறக்கறதுக்குள்ள சீக்கிரம் அடுத்த போஸ்ட்டோட வந்துடுங்க!

  ReplyDelete
  Replies
  1. //என் கற்பனைக் குதிரைய கண்ட்ரோல் பண்றது ரொம்பக் கஷ்டம் வெங்கட்! அடக்கி வெக்கறேன். அது பறக்கறதுக்குள்ள சீக்கிரம் அடுத்த போஸ்ட்டோட வந்துடுங்க!// வந்துடுவோம். நாளைக்கு அடுத்த பகுதி வெளிவரும்.....

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 12. அட... வீட்ல அடம் பிடிக்கிறப்ப எங்கம்மா என்னை ‘சண்டி’ன்னு செல்லமாத் திட்டுவாங்க. ஷண்டினிங்கறது யோகினியோட பேரா? புதுத் தகவல்தான். நீங்க வெச்சிருக்கற ஃபோட்டோஸ் எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு (நிஜம்மா சொல்றேன்).

  ReplyDelete
  Replies
  1. //நீங்க வெச்சிருக்கற ஃபோட்டோஸ் எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு (நிஜம்மா சொல்றேன்).//

   அடடா... ரொம்பவே மகிழ்ச்சி. நானும் நிஜமாத்தான் சொல்றேன்... :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிரஞ்சனா.

   Delete
 13. யோசிககிறதுக்கு வேண்டிய சாதனம் எனக்குக் கொஞ்சம் கம்மி ஸார். அதனால அடுத்த பதிவுல பாத்தே, நீங்க எங்க போனீங்கன்னு தெரிஞ்சுக்கறேன். ஸீயு...

  ReplyDelete
  Replies
  1. //யோசிககிறதுக்கு வேண்டிய சாதனம் எனக்குக் கொஞ்சம் கம்மி ஸார். // என்னதோர் தன்னடக்கம்.... :) அதெல்லாம் உங்ககிட்ட நிறையவே இருக்கு.... :)))

   தங்களது இரண்டாவது வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நிரஞ்சனா.

   Delete
 14. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி வலைஞன்.

   Delete
 15. என்ன அழகிய மந்திர்...
  யோகினியின் பெயரில் ஒன்றாக வரும் ஸ்ரீ ஹன்சினி என்ற பெயர் கிஷோரின் பாடல் ஒன்றை நினைவுபடுத்தி விட்டது! "ஓ ஹன்சினி....மேரி ஹன்சினி....கஹாங் உடுச்சலி ..."

  ReplyDelete
  Replies
  1. நல்ல பாடல்.... எனக்கும் பிடிக்கும்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. நாங்கள் போகாத ஊருக்கும் எங்களை அழைத்துச் செல்கிறது உங்கள் பயணக் கட்டுரை படங்கள் சிறப்பு .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ சசிகலா. நீங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய வாரத்தில் எனது பகிர்வினையும் அறிமுகம் செய்தமைக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றி.

   Delete
 17. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 18. அழகான வர்ணனைகளுடன் கூடிய விளக்கங்கள். கொஞ்சம் நிறைவாக உள்ளீர்கள். எனக்கு கடு மலை நதி கோவில் சுற்ற ரொம்ப பிடிக்கும். உங்கள் எழுத்துகள் மூலம் வடிகால் தேட வேண்டி இருக்கிறது. நல்ல பதிவு

  ReplyDelete
 19. பயணம் எனக்கும் மிகவும் பிடித்தமானது தான். அவ்வப்போது சென்றால் ஒரு புத்துணர்வு.....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

  ReplyDelete
 20. கோவில் இருக்கும் சிறிய மலையிலிருந்து நாம் காணும் ஜபல்பூர் நகரக் காட்சி ஆஹா எத்தனை அழகு. பறவைகள் எல்லாம் உயரத்தில் பறக்கும்போது பூமியைப் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது//

  கற்பனை செய்து பார்த்தேன் அற்புதம்.

  பார்க்க ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....