எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 8, 2012

ஞாழல் மலர் – காதலியுடன் நீண்ட பயணம்


[பட உதவி: கூகிள்]

பயணம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும் என என்னுடைய முந்தைய பதிவு ஒன்றில் எழுதியிருந்தேன். அதுவே அந்த பயணம் மனதுக்குகந்த காதலியுடன் என்றால் இன்னும் ரம்யமாய் இருக்கும் அல்லவா! அந்த அனுபவம் நிச்சயம் சுகமாய்த் தான் இருக்கும்!

பத்துப்பாட்டு எனச் சொல்லப்படும் பாடல்களில் குறிஞ்சிப் பாட்டு என்ற ஒன்றும் உண்டு. இந்த குறிஞ்சிப் பாட்டு பற்றி திரு என். சொக்கன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து சில வரிகளை உங்களுக்குத் தருகிறேன்.
குறிஞ்சிப் பாட்டு 'காதலன், காதலியின் நீண்ட பயணம் ஒன்றைச் சொல்வது. எழுதியவர் கபிலர். இதில் 61 - வது வரியில் தொடங்கி, 95 - வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது:
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,வடவனம், வாகை, வான்பூங்குடகம்,எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,பயினி, வானி, பல்இனர்க் குரவம்,பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,தில்லை, பாலை, கல்இவர் முல்லை,குல்லை, பிடவம், சிறுமாரோடம்,வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,தாழை, தளவம், முள்தாட் தாமரை,ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,சேடல், செம்மல், சிறுசெங்குழலி,கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,நந்தி, நறவம், நறும் புன்னாகம்,பாரம், பீரம், பைங்குருங்கத்தி,ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ....

இத்தனை பூக்களையும் பார்த்து மயங்கி, அவற்றை ஆசையாகப் பறித்து, மழை கழுவித் தூய்மையாக்கிய பாறையில் குவிப்பதாகக் காட்சி. கபிலரின் இந்தப் பாட்டைப் படித்துவிட்டு, இத்தனை பூக்களையும் எனக்குப் பறித்துத் தந்தால்தான் ஆச்சு என்று அந்தக் காலத்துக் காதலியர், தங்கள் காதலர்களைப் பாடாகப் படுத்தியிருப்பார்களோ, என்னவோ! பாவம்!

காதலிகள் காதலர்களைப் பாடாய் படுத்துவார்களா என்ன? அப்படிப் படுத்தினாலும் அதை ரசிப்பார்களே காதலர்கள்! ”என்ன அனுபவமா?” என்று கேட்டு விடாதீர்கள்! எனக்கு அந்த ராசி இல்லை! அதற்காகத் தான் கல்யாணம் ஆன பிறகு காதலிக்கத் தொடங்கினேன் – [யாருப்பா அதுக்குள்ள போட்டுக் கொடுக்கப் பார்க்கிறது?] நான் காதலிக்கத் தொடங்கினேன் எனச் சொன்னது என் மனைவியைத் தான்!

சரி விஷயத்துக்கு வருகிறேன், வலைச்சரத்தில் ஆசிரியர் பணி தொடங்கி இன்றோடு ஏழு நாள் முடிகிறது. இன்றைய எனது பதிவாக, வலைச்சரத்தில் ”ஞாழல் பூ –அனுபவச் சரம்” தொடுத்திருக்கிறேன். அனைவரும் வலைச்சரத்திற்கும் வந்து படித்து கருத்துரைக்க வேண்டுகிறேன்.

இந்த வாரம் முழுவதும் எனது பக்கத்திற்கும், வலைச்சரத்திற்கும் வந்து நான் தொடுத்த மலர்ச் சரங்களைப் படித்து எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நாளை முதல் வழக்கம் போல, அவ்வப்போது சில பதிவுகள் எனது வலைப்பக்கத்தில் வெளிவரும்.

மீண்டும் நன்றிகூறி நட்புடன் விடைபெறுவது….

வெங்கட்
புது தில்லி.

32 comments:

 1. வலைச்சரத்தில் இன்று பூத்த அனுபவச் சரம் முந்தைய பதிவுகளுக்குச் சிகரம் வைத்தாற்போல உயர்ந்து நின்றது. கூடவே ஞாழல் பூ பற்றி நான் அறிந்து கொண்டேன். இன்றைய சரத்தில் என் பதிவு ஒன்றையும் கண்டதில் பெருமகிழ்வு கொண்டேன். நிறைவு தந்த வலைச்சர வாரம் முடிய, நம் தளங்களில் நட்பு தொடரட்டும்!

  ReplyDelete
 2. @ கணேஷ்: உங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி. இந்த வாரம் முழுவதும் எனது பக்கத்திலும், வலைச்சரத்திலும் தொடர்ந்து வந்து கருத்துரையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 3. இத்தனை பூக்களையும் பார்த்து மயங்கி, அவற்றை ஆசையாகப் பறித்து, மழை கழுவித் தூய்மையாக்கிய பாறையில் குவிப்பதாகக் காட்சி.

  அழகான பதிவு மலர்களைக் குவித்து மலர்க்காட்சி அளித்த இனிய பகிர்வுகள் அனைத்திற்கும் நிறைவான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. தொடர்ந்து வலைச்சரத்தில் சிறப்பாக எழுத வாழ்த்துகள்

  இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்

  ReplyDelete
 5. // நான் காதலிக்கத் தொடங்கினேன் எனச் சொன்னது என் மனைவியைத்தான்//
  அப்ப அதுக்கப்பறம் ஆதி, “இத்தனை பூக்களையும் பறித்துத் தந்தால்தான் ஆச்சுன்னு” சொல்லிட்டாங்களா? அடடா!ரொம்ப பாவம் சார் நீங்க :-((

  //நாளை முதல் வழக்கம் போல அவ்வப்போது சில பதிவுகள் எனது வலைப்பக்கத்தில் வெளி வரும்//

  தினமும் எழுதற அளவு நிறைய தகவல்கள் சுவாரசியமா உங்க கிட்ட கைவசம் இருக்கே :-))

  ReplyDelete
 6. //நான் காதலிக்கத் தொடங்கினேன் எனச் சொன்னது என் மனைவியைத் தான்!//

  ஆஹா! அதானே பார்த்தேன்.

  பாராட்டுக்கள். இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. பூப் பூவாப் பூத்திருக்கு உங்கள் வலைப்பூவில் எத்தனை பூ. பூக்களைதே தேடித்தேடித் தந்திருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 8. VALAI SARATHTHIL UNGKA PATHIVUKALAI PAARPPATHAAL INGKA VARA MARANTHEN SRY.

  ReplyDelete
 9. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 11. @ வைரை சதீஷ்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  தங்களது பக்கமும் வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 12. @ ராஜி: ////நாளை முதல் வழக்கம் போல அவ்வப்போது சில பதிவுகள் எனது வலைப்பக்கத்தில் வெளி வரும்//

  தினமும் எழுதற அளவு நிறைய தகவல்கள் சுவாரசியமா உங்க கிட்ட கைவசம் இருக்கே :-))//

  உங்களது பாராட்டிற்கு நன்றி. வலைச்சர வாரம் என்பதால் தினம் தினம் ஒரு பதிவு வந்தது. இப்படித் தொடர்ந்து எழுதினால் எனக்கே போரடித்து விடும்!

  அதனால் தான் அவ்வப்போது பதிவுகள் வரும் எனச் சொன்னது!

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜி!

  ReplyDelete
 13. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 14. @ ஷாஜஹான்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 15. @ லக்ஷ்மி: சாரி எல்லாம் எதற்கும்மா?

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 16. @ ரத்னவேல் நடராஜன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 17. அதற்குள் ந்ந்ழு நாட்கள் பறந்து விட்டது.அருமையான வாரம்.

  ReplyDelete
 18. @ ஆசியா உமர்: ஆமாம் சகோ.. அதற்குள் ஏழு நாட்கள் பறந்து விட்டது!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. குறிஞ்சி பாட்டு பகிர்வுக்கு நன்றி.

  மலர்ச்சரங்கள் எல்லாம் வலைச்சரத்தில் அருமை.
  வலைச்சர பொறுப்பை சிறப்பாய் முடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. @ கோமதி அரசு: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 21. குறிஞ்சி பாட்டு-மலர்களின் பட்டியல் அருமை!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 22. இந்த வாரம் முழுவதும் மனம் நிறைக்கும் மணம் நிறைக்கும் மலர்களால் அலங்கரித்தத் தங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் வெங்கட்.

  ReplyDelete
 23. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. @ கீதமஞ்சரி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

  ReplyDelete
 25. பத்துப்பாட்டான குறிஞ்சிப் பாட்டில் கபிலர் அறிமுகப்படுத்துவது எத்தனை மலர்களை! ஆஹா! ஆஹா! மணமும் குணமும் படிக்கும்போதே கண்ணில் விரிகிறது.

  (இப்போது குத்துப்பாட்டில் கழிஞர்கள் நமக்கு அறிமுகப்படுத்தியது குஷ்பூவைத்தான்.)

  ReplyDelete
 26. @ ஈஸ்வரன்: ஆஹா இத்தனைப் பூக்களுடன் நீங்கள் குஷ்பூ-வையும் சேர்த்து விட்டீர்களா! பொல்லாத ஆளய்யா நீர்!

  தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

  ReplyDelete
 27. மலர் சரங்கள் வலைச்சரத்தில் அருமை வெங்கட்....வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 28. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரெவெரி!

  ReplyDelete
 29. சிறப்பாகவும் வித்தியாசமாகவும் இருந்தது வலைச்சர வாரம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  ReplyDelete
 30. @ ராமலக்ஷ்மி: வலைச்சரத்திலும், எனது பக்கத்திலும், சென்ற வார பதிவுகளைப் படித்து கருத்துரைத்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 31. அன்பு நண்பருக்கு
  தங்களின் காதலியுடன் நீண்ட பயணம் அருமை. அதை விட அருமை குறிஞ்சி பாட்டு. அந்த பாடலை நெட்டுரு பண்ண முடியுமா ??? யோசிக்கிறேன் !!!!!!!!

  வாழ்த்துக்கள்.
  விஜயராகவன்

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு, ஆஹா நெட்டுரு பண்ணப் போறீங்களா? அடுத்த சந்திப்பின்போது கேட்டுடறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....