திங்கள், 23 ஏப்ரல், 2012

விகடன் வலையோசையில் - என் வலைப்பூ

அன்புள்ள வலையுலக நண்பர்களுக்கு,

எனது வலைப்பூவினை சென்ற வார [18.04.2012] ஆனந்த விகடன் - “என் விகடன்” [புதுச்சேரி] புத்தகத்தில் வலையோசை பகுதியில் அறிமுகம் செய்து எனது வலைப்பூவிலிருந்து இரண்டு இடுகைகளையும் பிரசுரித்திருக்கிறார்கள்.


உங்களுடன் இந்த இனிய செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி.

கீழே அந்த பக்கத்தினை போட்டு இருக்கிறேன்.


மீண்டும் சந்திப்போம்...நட்புடன்வெங்கட்.
புது தில்லி.

சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?

       கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது ஒருமுறை தேவி ரத்னா திரை அரங்கில் ஒரு புதிய திரைப்படம் திரையிடப் போவதாக நெய்வேலி நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அந்தப் படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது என்று முடிவு செய்தோம். பிறகு ரசிகர் மன்றத்தில் சொல்லி 10 டிக்கெட்டுகளுக்கு ஏற்பாடும் செய்துவிட்டோம். புதுப் பட ரிலீஸ் நாளும் வந்தது. காலை 10 மணிக்கு முதல் ஷோ. எல்லா நண்பர்களும் திரை அரங்கின் வெளியில் சந்திப்பதாக ஏற்பாடு. ஒவ்வொருவராக ஒன்பது பேர் வந்துவிட்டோம். 10-வது நண்பர் வரவில்லை. இப்போது இருப்பதுபோல அலைபேசி வசதியெல்லாம் அப்போது இல்லை. ஆகையால் ஷோ ஆரம்பிக்க ஐந்து நிமிடம் இருக்கும்போது, ''சரி நாம் எல்லோரும் உள்ளே சென்றுவிடலாம். ஒரு டிக்கெட் வீணாகப் போனால் பரவாயில்லை' என நான் சொன்னேன். அப்போது நண்பன் ஒருவன், 'எதுக்குடா வேஸ்ட் பண்ணணும்? இந்த டிக்கெட்டை ப்ளாக்கில் விற்று காசு பண்ணிவிடலாம்'' என்று சொன்னான்.என் கையில் இருந்த ஒரு டிக்கெட்டை அந்த நண்பன் அவசரமாக வாங்கிக்கொண்டு, வெளியே போய் 'ஒரு டிக்கெட் வேணுமா? ஐம்பது ரூபாய்' என்று கையை உயர்த்தி சத்தமாகக் கூவி விற்க, அடுத்த விநாடி அவன் மேல் ஒரு கும்பல் பாய்ந்தது. குறைந்தது 20 பேராவது அந்தக் கும்பலில் இருந்திருப்பார்கள். இரண்டு மூன்று நிமிடத்துக்கு ஒரே கூச்சல் குழப்பம். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதன் பின்னர் தலைமுடி எல்லாம் கலைந்து, சின்னாபின்னமாகி சோகமாக வெளியே வந்த அந்த நண்பன் போட்டிருந்த சட்டையில் ஒரு பட்டன்கூட இல்லை. கையில் டிக்கெட்டும் இல்லை, காசும் போச்சு.

'சரி, எப்படியும் டிக்கெட் எடுத்தவர் எங்கள் அருகில்தானே இருப்பார், பார்க்கலாம்எனத் திரை அரங்கினுள் புகுந்தோம். ஐந்து நிமிடம் விளம்பரங்கள் ஓடி இருக்கும். இன்னமும் அந்த சீட் காலி. படம் ஆரம்பித்தது. பார்த்தால் திடீரென ஒரு அழகான இளம் பெண் வந்து அந்த சீட்டில் உட்கார... எங்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. நிச்சயமாக அந்தப் பெண் எங்கள் நண்பரிடம் இருந்து டிக்கெட்டைப் பறித்துக்கொண்டு போனவராக இருக்க முடியாது என்றே எங்களுக்குத் தோன்றியது. சரி எதற்கும் விசாரிக்கலாம் என, 'மேடம் இந்த சீட்டை எங்கள் நண்பருக்காக ரிசர்வ் செய்திருந்தோம், உங்களுக்கு எப்படி இது கிடைத்தது?' என்று கேட்டதற்கு அவர் நூறு ரூபாய் கொடுத்து ப்ளாக்கில் வாங்கியதாக, கூலாகச் சொல்லிவிட்டு சினிமாவைப் பார்ப்பதில் மும்முரமாகிவிட்டார். நாங்கள் ஒருவர் மூஞ்சியை ஒருவர் சோகத்துடன் பார்த்துக்கொண்டோம். வேறு வழி? டிக்கெட்டும் போச்சு பணமும் போச்சு. இது தவிர நண்பருக்கு வீட்டில் வேறு தனியாக அர்ச்சனை. சட்டையைக் கிழித்துக்கொண்டு வந்ததற்காக!
 கனவில் வந்த மும்தாஜ்!

திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே நான் டெல்லியில் இருப்பதால் குடும்ப நண்பர்களோ உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ இங்கு சுற்றுலாவாக வரும்போது, 'எங்களுக்கு ஹிந்தி தெரியாது, கஷ்டப்படுவோம் அதனால எங்ககூட நீங்களும் வாங்க!' என்று அழைப்பார்கள். நானும் ஐயோ பாவம்னு ஒவ்வொரு முறையும் சென்றுவருவேன். இப்படி கடந்த 20 வருட டெல்லி வாழ்க்கையில் நான் சுமார் 30 முறையாவது ஆக்ராவுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறேன். எல்லோர் கண்களுக்கும் அழகாக, உலக அதிசயமாகத் தெரியும் தாஜ்மஹாலை இப்போது என்னால் பார்க்கவோ, ரசிக்கவோ அவ்வளவாகப்  பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.
இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்னர் சிலரை அழைத்துக்கொண்டு ஆக்ரா சென்றுவந்த பிறகு, ஒருநாள் தூக்கத்தில் திடீரென அலறி எழுந்து, பேந்தப் பேந்த விழித்திருக்கிறேன். கனவில் மும்தாஜ் (உங்க கற்பனையைக் கன்னாபின்னானு ஓட விட வேண்டாம், சத்தியமா சினிமா நடிகை மும்தாஜ் இல்லீங்க, ஷாஜஹான் மனைவி மும்தாஜ் தாங்க!)  வந்து, ''ஷாஜஹான் கூட இவ்வளவு முறை என்னைப் பார்க்க வந்திருப்பாரானு தெரியலை. உங்களுக்குத்தான்  என் மேல் எவ்வளவு ஆசை!' என்று காதலுடன்  என்னைப் பார்த்துக் கூறுவதுபோல இருந்தது. அந்த அதிர்ச்சியில் எழுந்த என்னைப் பார்த்து அறை நண்பர்கள், ''என்னடா  ஏதாவது ஆயிடுச்சா... ஆக்ராவுக்கு அழைச்சுட்டுப் போகணுமா?' என்று கேட்டனர்.
  
தமிழகத்தில் மன நிலை சரி இல்லையெனில் கீழ்ப்பாக்கத்துக்கு அழைத்துச் செல்வார்கள் அல்லவா, அது போன்ற மருத்துவமனை ஒன்று, வட இந்தியாவில் அதுவும் ஆக்ராவில் இருக்கிறது. அதற்குத்தான் அவர்கள் என்னை ஆக்ராவுக்கு அழைக்க, நான் இன்னும் அதிகமாக அலறினேன்!
86 கருத்துகள்:

 1. மகிழ்ச்சி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 2. வாழ்த்துக்கள் நண்பரே!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   நீக்கு
 4. நானும் நிறைய முறை தாஜ் மஹால் பார்த்து பயண அசதியாலும் , தாங்கமுடியாத வெய்யிலாலும் , என் குழந்தைகளின் தொந்தரவாலும்
  தாஜ் மஹால் , சுற்றுப்பயணம் என்றால் அலறிவிடுகிறேன்..

  மனம் நல மருத்துவமனை ஆக்ராவிலா..
  ரொம்ப பொருத்தமான இடம் தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அதுவும் மே-ஜூன் மாத ஆக்ரா பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு சூடு அங்கே.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தருமி அவர்களே.

   நீக்கு
 6. நண்பரின் பதிவு விகடனில் வந்தது அறிந்து மிக மகிழ்ச்சி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்ததுகள் நண்பரே! பல சாதனைகள் மேலும் படைக்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி சுரேஸ்குமார்.

   நீக்கு
 8. மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   நீக்கு
 9. சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

  ஜூன்ல அங்கே வருவதாக இருக்கிறோம், தாஜ்மகால் பார்க்க உங்களைத்தான் அழைத்து போகணும்னு இந்த பதிவை படிச்சதும் முடிவு பண்ணிட்டேன்...! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கௌசல்யா.

   ஓ ஜூனில் வருகிறீர்களா! நிச்சயம் வாருங்கள். சந்திப்போம்!

   நீக்கு
 10. செய்தி கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள், வெங்கட். ;)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வை. கோ. சார்.

   நீக்கு
 11. வாழ்த்துக்கள் வெங்கட்.

  பகிர்வும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், பகிர்வினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா!

   நீக்கு
 12. வெங்கட் விகடன் அங்கீகாரம் என்பது மிகப்பெரிய சந்தோஷம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்மா விகடன் அங்கீகாரம் பெரிய சந்தோஷம் தான். தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   நீக்கு
 13. வலையோசையில் பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது- நம்மூர் ஆளோடது என்ற நினைப்புடன்.

  வாழ்த்துக்கள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நம்மூர் ஆளோடது என்ற நினைப்புடன்.// அந்த உணர்வு எனக்கும் உண்டு ஜி!

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி!

   நீக்கு
 14. அன்பு நண்பரே

  தங்களின் வலைப்பூ விகடன் முதல் விண் வரை எட்ட நல் வாழ்த்துகள்.

  விஜய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.....

   நீக்கு
 15. பளிச்சென்று நல்ல வந்திருக்கிறது என் விகடனில் உங்கள் வலையோசை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி.ஜே சார்.

   நீக்கு
 16. வாழ்த்துக்கள் நண்பரே ..! தொடர்ந்து தங்கள் எழுத்து பயணம் பல்வேறு படிநிலைகளை எட்ட வாழ்த்துக்கள் ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே [வரலாற்று சுவடுகள்].

   நீக்கு
 17. புதுச்சேரியில் மட்டுமா வந்தது. என்றாலும் வாழ்த்துகள் வெங்கட்.
  சந்தோஷமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்மா. சென்னை, புதுச்சேரி, மதுரை, திருச்சி எனத் தனித் தனி என்விகடன், ஆனந்தவிகடனுடன் வருகிறது. அதில் புதுச்சேரி பகுதியில் வந்திருந்தது.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 18. மிக்க மகிழ்ச்சி வெங்கட். மனமார்ந்த வாழ்த்துகள்..!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சந்திரமோகன்.

   நீக்கு
 19. வாழ்த்துக்கள்...நாகராஜ் சார்....பாரதி கூறியது போல்...எட்டு திசையிலும்...பரவட்டும்...தங்களது வலைத்தளம்...!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி அப்பாஜி.

   தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 20. வாழ்த்துக்கள் சார்.
  ஒரு முறை ஆக்ராவிற்கு சென்றிருக்கிறேன்.
  அங்கு மனநல மருத்துவமனை இருப்பது எனக்குத் தெரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆக்ராவில் மனநல மருத்துவமனை இருப்பது தெரியாததே நல்லது....

   வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜிஜி.

   நீக்கு
 21. இங்கு டெல்லியில் சென்னை என் விகடன் தான் கிடைக்கிறது.
  அதனால் உங்களது பக்கத்தை படிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இங்கு டெல்லியில் சென்னை என் விகடன் தான் கிடைக்கிறது.//

   ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு என் விகடன் வருகிறது. அதனால் தான் என் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டேன்.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜிஜி.

   நீக்கு
 22. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  உங்கள் பதிவுகளும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், பதிவுகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி Manazeer Masoon.

   நீக்கு
 23. ரொம்ப லேட்டா இப்பத்தான் கவனிக்கிறேன் வெங்கட். இருந்தாலும் லேட்டஸ்டா என்னோட இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிச்‌சுக்கறேன். நீங்கள் இன்னும் பல சிகரங்களைத் தொட என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் இனிய கருத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 24. வாழ்த்துகள் :) வெங்கட்..
  விகடன் லயும் உங்க தாஜ்மகாலை சுத்திக்காண்பிச்சிட்டாங்களா.. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி. ஆமாம் அங்கேயும் தாஜ்மஹால் தான்!

   நீக்கு
 25. பாராட்டுகளும் வாழ்த்துகளும் வெங்கட்...Wishing you many more laurels....

  பதிலளிநீக்கு
 26. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 27. விகடனில் வெங்கட்.... நல் வாழ்த்துக்கள்... பரவட்டும் பல பத்திரிக்கைகளிலும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்துஜி!

   நீக்கு
 28. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சிவகுமார்.

   நீக்கு
 29. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சரவணன் [கலாநேசன்].

   நீக்கு
 30. அன்பு நண்பர் வெங்கட் நாகராஜ்,

  வணக்கம். என்விகடனில் தங்களின் வலைப்பூ பற்றியும் தங்களைப் பற்றியும் வெளியாகியிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.தாங்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  அன்புடன்,

  ருக்மணி சேஷசாயி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னஞ்சல் மூலம் அனுப்பிய தங்களது கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா.

   நீக்கு
 31. பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 32. உங்களுடையதைப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கும் வெங்கட். நான் எனது பதிவின் இறுக்கங்களுக்கிடையே இளைப்பாறுவது உங்கள் பதிவின் பாடல்களில்தான். எனவே ஆனந்தவிகடனுக்குப் பிடிக்காதா? வாழ்த்துக்கள். நான் ஏற்கெனவே படித்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி ஹரணி சார். இங்கே எழுதுவது போலவே நடுநடுவே நானும் ஆதியும் ரசித்தபாடலில் பாடல்களைப் பகிர்வதும் இளைப்பாறவே. உங்கள் தொடர் ரசிப்பிற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 33. வாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் உங்கள் படைப்புலகச் சாதனைகள்
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 34. வாழ்த்துக்கள். நீங்களும் விகடன் தாத்தாவின் ஒரு பேரன் ஆகிட்டீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....