வியாழன், 26 ஏப்ரல், 2012

அடர் பனியும் அதன் விளைவுகளும்[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 1]


சில மாதங்களுக்கு முன் ”மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தலைப்பில் நான் அங்கு உள்ள குவாலியர், ஷிவ்புரி, ஓர்ச்சா மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஜான்சி போன்ற இடங்களுக்குச் சென்று வந்ததைப் பற்றிய பயணக் குறிப்புகளை 27 பகுதிகளாக எழுதியது எனது வலைப்பூவினைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். 

அதை முடிக்கும் போது சீக்கிரமே இன்னுமொரு பயணத் தொடரினை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.  இந்தத் தொடரிலிருந்து உங்களை மீண்டும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்.  கூடவே வருவீர்கள் தானே?

இம் முறை நான் சென்றது ஜபல்பூர் மற்றும் பா[B]ந்தவ்கர் என்ற இரண்டு இடங்களுக்கு. அலுவலகப் பணிகளுக்கென ஒரு மாதம் பயிற்சி வகுப்புகள் இருந்தது. அதன் நடுவில் நான்கு நாட்கள் நேரடியாக சில கிராமங்களுக்குச் சென்று நலத்திட்டங்கள் எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவும், இந்திய தேசத்தின் இயற்கை மற்றும் வனங்களின் வளத்தை பார்க்கவும் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

11-ஆம் தேதி [ஜனவரி] அன்று மாலை 04.00 மணிக்கு தில்லியின் ‘ஹஸ்ரத் நிசாமுதீன்” ரயில் நிலையத்திலிருந்து ஜபல்பூர் வரை செல்லும் ‘மஹா கௌஷல்’ விரைவு வண்டியில் நாங்கள் அனைவரும் [மொத்தம் 35 பேர்] செல்ல முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ரயில் நிலையம் செல்வதற்கு முன் மதியம் சுமார் 02.30 மணிக்கு தொலைபேசியில் ரயில் சரியான நேரத்திற்குக் கிளம்புகிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள அழைத்தபோது இரவு 09.00 மணிக்குத் தான் கிளம்பும் என்றார்கள். [கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னைப் பயணத்தின் போதும் இப்படித்தான் நீண்ட நேரம் கழித்தே கிளம்பியது…  நமக்கு அப்படி ஒரு ராசி!] அதன் பிறகு அப்படியே தள்ளிப் போடப்பட்டு 11.00 மணிக்குத்தான் கிளம்பும் எனத் தெரிந்தது.

தில்லி மற்றும் வட இந்திய நகரங்களில் பெரும்பாலும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இருக்கும் அடர்பனியும், பனிமூட்டமும் விமான, ரயில் போக்குவரத்தினை ரொம்பவே பாதிக்கும். எத்தனை விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டாலும்  இயற்கையின் முன் நாம் எல்லோரும் தோற்றே விடுகிறோமோ என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். அது உண்மைதான் என்று நினைக்கும்படி செய்தது அன்றைய நிகழ்வு.

மாற்றப்பட்ட பயண நேரம் நிறைய விஷயங்களை மாற்றியது. வகுப்பிலிருந்தே நேராக ரயில் நிலையம் செல்ல வேண்டுமென காலையிலேயே பெட்டியுடன் எல்லோரும் வகுப்புக்குச் சென்றோம். நேரம் மாறியதால் திரும்பவும் வீட்டிற்கு வந்து இரவு மீண்டும் கிளம்பி ரயில் நிலையம் சென்றேன். சற்றேறக் குறைய எட்டு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியதால் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு நல்ல விஷயமும் இருந்தது. 

அது என்ன நல்ல விஷயம் என்று கடைசியில் சொல்கிறேன்…  :) இந்தப் பயணத்தின் போது நான் எடுத்த சில புகைப்படங்களை கீழே கொடுத்துள்ளேன் ஒரு முன்னோட்டமாக…
என்ன புகைப்படங்களைப் பார்த்து ரசித்தீர்களா? நன்றி. அதெல்லாம் சரி அந்த நல்ல விஷயம் என்ன என்பதை மேலும் காலம் தாழ்த்தாது சொல்லி விடுகிறேன். எங்கள் அனைவருக்குமே 3-AC-இல் தான் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். நேரம் கடந்து வண்டி புறப்பட்டதாலோ என்னவோ, முன்பதிவு செய்த நிறைய பேர் தங்களது பயணத்தினை இரத்து செய்துவிட்டதால் என்னுடைய பயணச்சீட்டினைச் சேர்த்து 8 பேர்களுடைய பயணச்சீட்டு 2-AC – க்கு மேம்படுத்தப்பட்டது.

பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது “Do you want to be upgraded?” என்று கேட்டு ஒரு வரி இருக்கும். ஒவ்வொரு முறையும் அதை TICK செய்தாலும் இதுவரை நடந்ததே இல்லை…  :( 

ஆனால் இம் முறை மேம்படுத்தப்பட்டதால், 2-AC-இல் நானும் மற்ற 7 நபர்களும் பயணம் செய்தோம். சுகமான பயணம்.  மத்தியப் பிரதேச சுற்றுலா துறையினர் தான் இந்தப் பயணத்தினை ஏற்பாடு செய்தார்கள். சென்ற பயணத்தின் போது எங்களுடன் வந்த திரு ரோஹித் பட்நாகர் அவர்களே இந்த முறையும் வந்தார். பயணத்தின் போது வேளாவேளைக்கு தேவையான உணவு, தண்ணீர், தேநீர் என எல்லாவற்றிற்கும் முன்னேற்பாடு செய்திருந்தார். நல்ல படியாக பயணம் முடிந்து 12-ஆம் தேதி மாலை 07.00 மணி அளவில் ஜபல்பூர் சென்றடைந்தோம். 2-AC-இல் பயணம் செய்தாலும் பயண முடிவில் ஒரு விஷயம் நடந்தது! அது...

அடுத்த பகுதியில்...

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


பின்குறிப்பு-1: 20.04.2012 வெள்ளி அன்று வல்லமையில் வெளிவந்தது.


பின்குறிப்பு-2இது எனது 250-வது பதிவு. இத்தனை பதிவுகளுக்கும் வருகை புரிந்து, கருத்தளித்து, என்னை தொடர்ந்து ஆதரிக்கும் வலையுலக நட்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!36 கருத்துகள்:

 1. 250-வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   நீக்கு
 2. பயனம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் தற்போது வயதின் காரணமாக இயலவில்லை.எனவே
  தொடர்வேன்.
  தங்கள் 250-தாவுது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம் பெரும்பாலானவர்களுக்குப் பிடித்த விஷயம். பயணத்தில் என்னுடன் நீங்கள் தொடர்ந்து வரப்போவது படித்து மகிழ்ச்சி புலவர் ஐயா.

   வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.

   நீக்கு
 3. அடுத்த பயணத்தொடரா? நாங்களும் பயணிக்கக் காத்திருக்கிறோம்.

  250-வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. 250-வது பதிவுக்கு வாழ்த்துகள். நாங்களும் ஜபல்பூரில் கொஞ்ச நாள் இருந்ததால் பேடா காட் எல்லம் பௌர்ணமி இரவில் கண்டு களித்திருக்கோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜபல்பூர் சென்றபோதே உங்களைப் பற்றித் தான் நினைத்தேன். நீங்கள் இருந்த இடம் என்று.

   உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   நீக்கு
 5. இப்ப தொடங்கின மாதிரி இருக்கு, 250 க்கு வந்துட்டீங்கன்னா அந்த வேகத்துக்கு தனியே ஒரு சபாஷ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேகத்திற்கு உங்கள் போன்றவர்களின் தொடர்ந்த ஆதரவுதான் காரணம் KBJ சார்.

   நீக்கு
 6. நன்றி நண்பரே
  இந்திய இயற்கை வனப்புக்களை உங்கள் பதிவிலிருந்து படிப்பதில் மகிழ்ச்சி இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்கிறேன் நானும் ஒரு பயணப் பிரியன்
  அன்புடன் ரூமில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர் alkan. என்னால் முடிந்தவரை சென்ற எல்லா இடங்களையும் பகிர முயல்கிறேன்.

   நீக்கு
 7. கிராமங்களுக்குச் சென்று நலத்திட்டங்கள் எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவும், இந்திய தேசத்தின் இயற்கை மற்றும் வனங்களின் வளத்தை பார்க்கவும் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.//

  ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல் நலத்திட்டத்தை பார்வை இட்டது மாதிரியும் ஆச்சு, இயற்கையை ரசிக்கவும் செய்தாச்சு.

  எங்களுக்கு நல்ல பயணக்கட்டுரை கிடைக்கிறது.
  உங்கள் படங்கள் மூலம் இயற்கை வளத்தை பார்க்க முடிகிறது.
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிம்மா.. ஒவ்வொரு பயணத்தின் போதும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிவதில் ஒரு ஆனந்தம்.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

   நீக்கு
 8. அழகிய படங்களுடன் கூடிய இனிய பயணக்கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.

  250 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   நீக்கு
 9. படங்கள் அழகு அருமை . பயணம் எனக்கும் பிடித்த ஒன்று . தங்கள் 250 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் படங்களையும் பதிவினையும் ரசித்து வாழ்ட்திய உங்களது அன்பிற்கு மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 10. azhakAana padangal!

  iraivan evvalavu-
  azhakaana padaippaalan!

  ezhuthungal-
  naan padikka kaaththu irukkiren!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சீனி. இறைவன் தானே முன்னணி படைப்பாளன்!

   நீக்கு
 11. 250க்கு வாழ்த்துக்கள்

  வல்லமையில் படிதேன் படங்கள் இங்கு தான் பார்க்கிறேன் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 12. 250 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் வெங்கட்...தொடர்ந்து அடித்து ஆடுங்கள்...லாராவைத்தாண்ட வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து அடித்து ஆடிடுவோம்.... உங்கள் போன்ற நண்பர்களின் ஆதரவு இருந்தால் நிச்சயம் ஆடிடலாம்...

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   நீக்கு
 13. photos ரொம்ப நல்லா இருக்கு.. சஸ்பென்ஸ் வச்சிட்டீங்களா ..தொடர்ன்னா அப்படித்தானே..:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவினை ரசித்து, கருத்திட்டமைக்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   நீக்கு
 14. இந்த முறை லேட்டா வந்திருக்கேன். மத்தியப் பிரதேசத்துக்கு மீண்டும் உங்களுடன் பயணம் கிளம்புவதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. அப்புறம்... 250க்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பா! (100 எட்டறதுக்குள்ளயே எனக்கு மூச்சு வாங்குது!) ‌போட்டோ எடுக்கற விஷயத்துல நான் 0. நீங்க நல்லாவே எடுத்திருக்கீங்க வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த முறை லேட்டா வந்திருக்கேன். // ஆமா.... நானே எதிர்பார்த்திருந்தேன்.... :)

   சீக்கிரமாகவே நீங்க என்னை விட அதிக பதிவுகள் போடுவீங்க! புகைப்படங்களையும் பதிவினையும் ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 15. இடுகை வளரும்போது உண்டாகும் சுவாரஸ்யங்களுக்காய்க் காத்திருக்கிறேன் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி!

   நீக்கு
 16. நான் புதிய வாசகன்! பழைய பயணக் கட்டுரை படித்ததில்லை. (அப்புறம் நேரமிருக்கும்போது வாசித்து விடுவேன்) இந்தக் கட்டுரையைத் தொடர்கிறேன். மரங்கள் சூழ்ந்த சாலை உள்ள புகைப்படம் கவர்ந்தது. 250 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. தங்களது வருகைக்கும் முந்தைய பயணக் கட்டுரையை நேரமிருக்கும்போது வாசிக்கிறேன் எனச் சொல்லி மகிழ்வித்ததற்கும் முதலில் ஒரு நன்றி.

  நீங்கள் ரசித்த அந்தப் புகைப்படம் பாந்தவ்கர் காடுகளுக்குள் எடுத்த புகைப்படம்.

  ரசிப்பிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 18. //கூடவே வருவீர்கள் தானே?
  // இரண்டாம் பகுதியில் இருந்து முதல் பகுதிக்கு ஓடி வந்துவிட்டேன் என்னைப் பார்த்து இப்படி கேட்டுவிட்டீர்களே (ஹா ஹா ஹா).

  மிக்க மகிழ்ச்சி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இல்லை இல்லை கிடைத்த நேரத்தில் எல்லாம் உங்கள் கட்டுரைகளைப் படிக்கிறேன்.

  250-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....