இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 9
மாதா குணால் [P]பத்ரி கோவில் - வெளிப்புறத் தோற்றம்
தேயிலைத்
தோட்டங்கள், இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்த பிறகு கொஞ்சம் தேநீர் குடித்தால்
நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அந்தப் பகுதியில் தேநீர் குடிக்க எந்த வசதியும்
இல்லை! எங்கே சுற்றிப் பார்த்தாலும் தேயிலை, ஆனால் தேநீர் குடிக்க வசதி இல்லை! ”Water,
water everywhere! But not a drop to drink!!” கதை தான். சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம்
என அடுத்த இலக்கை நோக்கி பயணித்தோம். தேயிலைத் தோட்டங்களுக்கு வெகு அருகிலேயே ஒரு சக்தி
ஸ்தலம் இருக்கிறது அதற்குப் போகலாம் என்று சொன்னார் எங்கள் வாகன ஓட்டி.
கபாலேஷ்வரி தேவி - வற்றாத பாறை...
படம்: இணையத்திலிருந்து...
ஹிமாச்சலப்
பிரதேசம் தேவி பூமி! இங்கே, காங்க்ரா தேவி, சின்னமஸ்திகா தேவி, ஜ்வாலமுகி, என பல சக்தி
ஸ்தலங்கள் இருக்கின்றன. எனது முந்தைய பயணத்தொடரில்
இந்த சக்தி ஸ்தலங்கள் சிலவற்றைப் பற்றி எழுதி இருக்கிறேன். வலைப்பூவின் வலப்பக்கத்தில்
”தேவ்பூமி – ஹிமாச்சல் பயணக் கட்டுரைகள்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது.
அதில் எல்லா கட்டுரைகளும் படிக்கலாம். இப்போது நாம் பார்க்கப் போகும் கோவிலும் சக்தி
ஸ்தலம் தான் பெயர் மாதா குணால் [P]பத்ரி மந்திர்!
மாதா குணால் [P]பத்ரி கோவில் - நுழைவாயில்....
படம்: இணையத்திலிருந்து...
குணால் [P]பத்ரி கோவிலில் என்ன விசேஷம்? சதி தேவியின் உடலை வைத்துக் கொண்டு சிவபெருமான் ருத்ர
தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, சகல உலகமும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஈரேழு உலகங்களையும்
காக்க ஒரே வழி விஷ்ணுபகவான் தான்! அவரை அனைவரும் அணுக, அவர் தனது சக்ராயுதத்தால், சதி
தேவியின் உடலை துண்டு துண்டாக ஆக்குகிறார். சதி தேவியின் உடல் பாகங்கள் பல பகுதிகளில்
சிதறி விழுகின்றன. அப்படி விழுந்த இடங்களில்
எல்லாம் தேவியின் கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவை சக்தி ஸ்தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அப்படி சதி தேவியின் உடல் பகுதிகளில் ஒன்று இந்த
இடத்திலும் விழுந்ததாக நம்பிக்கை. எந்தப் பகுதி
என்றால் – தேவியின் கபாலம்! அதனால் தான் இந்தக் கோவிலில் குடி கொண்டிருக்கும் தேவியின்
பெயர் கபாலேஷ்வரி!
மாதா குணால் [P]பத்ரி கோவில் - வெளிப்புறம் நாங்கள்!
படம்: நண்பர் பிரமோத்!
கோவில்
வளாகத்தில் இருக்கும் ஒரு பாறையும் மிகவும் பிரசித்தி பெற்ற விஷயம். எப்போதுமே இந்தப் பாறையில் ஈரப்பதம் இருந்து கொண்டே
இருக்கும். மேலே தண்ணீரும் இருந்து கொண்டே இருக்கிறது. காயாமல் இருக்கும் இந்தத் தண்ணீர்
வற்றும் நிலை வந்தால், உடனே அந்தப் பகுதியில் மழை பெய்து விடும் என்கிறார்கள். கோவில்
வளாகத்தில் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்றாலும் மற்றவர்கள் எடுத்த படம்
இணையத்தில் உண்டு. அவற்றில் ஒரு படம் மேலே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். கோவிலுக்குள்
நாங்களும் சென்று கபாலேஷ்வரி தேவியின் தரிசனம் கண்டோம். மற்ற சக்தி பீடங்கள் போல இங்கே
அத்தனை கும்பல் இல்லை. சிலரே அங்கே இருந்தார்கள் – பக்திப் பரவசத்தில் சிலர் பாடிக்
கொண்டிருக்க, அதைக் கேட்க எங்களுக்கு தைரியமில்லை! எங்கள் காதுகளும், ப்ளீஸ் கொஞ்சம்
எங்கள் மேல் கருணை காட்டுங்களேன் எனக் கெஞ்சும் அளவில் அவர்கள் பாடல் இருந்தது!
மாதா குணால் [P]பத்ரி கோவிலிலிருந்து இயற்கைக் காட்சிகள்....
கோவில்
கட்டமைப்பு பார்த்த போது மிகச் சமீபத்தில் கட்டப்பட்ட கோவில் போலவே தோன்றியது. பழமையான
கோவிலாக இருக்க முடியாது என்று நினைத்த போது சில வருடங்கள் முன்னர் வந்த பூகம்பத்தில்
கோவில் இடிந்து விட்டதாகவும் அதன் பிறகு அதே இடத்தில் மீண்டும் புதியதாக கோவில் கட்டப்பட்டதாகவும்
விவரங்கள் கிடைத்தன. நாங்கள் பார்த்தபோது கட்டிடம் முழுமையாக இல்லை. மேலே கம்பிகள்
நீட்டிக் கொண்டிருக்க, இன்னும் கட்டிடங்கள் கட்டுவார்கள் எனத் தோன்றியது. பழமையான பல கோவில்கள் இடிபாடுகளுடன் இருப்பது பெரிய
கொடுமை. சரியான பராமரிப்பு இல்லாமல் அழகிய சிற்பங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. அப்படி
இக்கோவிலிலும் நிறைய சிற்பங்கள் இருந்திருக்கலாம் – பூமிக்குள் புதைந்து போயிருக்கவும்
வாய்ப்புண்டு.
மாதா குணால் [P]பத்ரி கோவிலிலிருந்து இயற்கைக் காட்சிகள்....
தேயிலைத்
தோட்டங்களுக்கு வெகு அருகிலே அமைதியான சூழலில் அமைந்திருக்கும் கோவிலிலிருந்தும் தௌலாதார்
மலைத்தொடரை பார்த்து ரசிக்க முடியும். கோவிலில்
சில நிமிடங்கள் இருந்து பக்தியில் திளைத்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அங்கிருந்து
சென்ற இடம் என்ன? அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அப்படிச்
சொல்வதற்குள் நீங்கள் எல்லோரும் கொஞ்சம் Warm up செய்து கொள்ளுங்கள்! வேலை இருக்கிறது!
தொடர்ந்து
பயணிப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
இதோ வார்ம் அப்
பதிலளிநீக்குசெய்யத் தொடங்கிவிட்டேன் ஐயா
தம+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅமானுஷ் படத்தில் ஒரு பாட்டு உண்டு. கடல் என் அருகில் எவ்வளவு பக்கமாக இருக்கிறது? ஆனாலும் என் இதயத்தில் தாகம் தீர வழியில்லை என்று அழகான வரிகள். தேயிலைத் தோட்டத்தில் தேநீர் தேடிய அனுபவம் அதை நினைவு படுத்துகிறது!
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
உத்தம் குமார் மற்றும் ஷர்மிளா டாகூர் - Dhil aisaa kisine mera thoda பாடல்... படகில் செல்லும்போது வரும்.... எனக்கும் பிடித்த பாடல்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எனக்கு இன்று ஒரு வுனோதமான பிரச்னை. கணினி கீ போர்டில் ஆங்கில எழுத்து a திடீரென வேலை செய்யவில்லை. எனவே கணினியில் தம வாக்களித்து, அங்கு படித்தபின் மொபைலில் பின்னூட்டம் இடுகிறேன்!
பதிலளிநீக்குஆஹா ஸ்ரீராம் உங்களுக்கும் கணினி பிரச்சனையா....எனக்கும் இன்னும் தொடர்கதையாகத்தான் இருக்கு. டாக்டர் தான் வந்து பார்க்கிறேன் வேறு எங்கும் கொடுக்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டதால்...மெதுவாகத்தான் தளம் வந்து பதில் கொடுக்க முடிகிறது.
நீக்குகீதா
வினோதமான பிரச்சனை தான். Keyboard-ல் dust இருந்தாலும் இப்படி சில மட்டும் வேலை செய்யாது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கணினியில் பிரச்சனை வந்தால் நமக்கெல்லாம் கஷ்டம் தான். எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இது மட்டும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
சக்திபீட கபாலேஷ்வரி தரிசனம் கிடைத்தது, நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குதுளசி: அது சரி தேயிலைத் தோட்டம் இருந்தாலும் தேநீர் கிடைக்கவில்லை ஆம் வாட்டர்..வாட்டர் நீங்கள் சொல்லியிருப்பது போல். கோயில் பற்றியும் அறிந்தோம். தொடர்கிறோம்.
பதிலளிநீக்குகீதா: அருமையான சக்தி கோயில்! இடமும் அழகு! அது சரி இணையத்தில் வேறு நபர்கள் எடுத்த படம் இருக்கிறது என்றால் ஏன் வளாகத்தில் அனுமதியில்லை? ஒரு வேளை அவர்கள் தெரியாமல் எடுத்துப் பகிர்ந்திருப்பார்களோ?!! தேவி கோயில் அப்போது போகவில்லை ஜி...ஆனால் ஹிமாச்சலில் நீங்கள் சொல்லியிருப்பது போல் நிறைய தேவி கோயில்கள்...தொடர்கிறோம் ஜி..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குசக்தி பீட நாயகி ஸ்ரீகபாலேஸ்வரி தரிசனம் தங்களால் கிடைத்தது..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஅடுத்து சென்ற இடம் பற்றி அறிய காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குMataji dharisanam thanks.
பதிலளிநீக்குதங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீகாந்த்.....
பாருங்கள் இந்த மாதிரி கொட்டி கிடக்கும் தேயிலைகள் ஆனால் குடிப்பதற்க்கு ஒரு டீக்கு வழியில்லை இறைவியை தரிசித்தேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.
நீக்குஅறுபது ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கூனூரில் வசித்த இடமே அடையாளம் தெரியாமல் போய் இருக்கும் போது நினைத்துப்பார்க்க முடியாத ஆண்டுகளுக்கு முன் வீழ்ந்ததாகச் சொல்லப்படும்தேவியின் கபால பாகமிருக்கும் கோவில் மட்டும் இன்னும் இருக்கும் என்பது நம்பமுடிகிறதா கேட்டால் நம்பிக்கையே வாழ்க்கை என்பார்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குகபாலேஷ்வரி ! முதல்முதலா கேள்விப்படறேன்!
பதிலளிநீக்குநானும் அங்கே சென்றபோது தான் கேள்விப்பட்டேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.