தொகுப்புகள்

செவ்வாய், 31 டிசம்பர், 2019

கதம்பம் – பதிவர் சந்திப்பு – பக்தி வெள்ளம் – கோலம் – ஜெஜெ - ஹீரோ

நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

படைப்பாற்றல் என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்வது ஸ்காட் ஆடம்ஸ். (Dilbert Cartoons உங்களுக்குத் தெரிந்தால் இவரைத் தெரிந்திருக்கும் – ஆம் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆன ஸ்காட் ஆடம்ஸ் சொன்னது தான் இன்றைய வாசகம்!]

திங்கள், 30 டிசம்பர், 2019

ஆர்கனைசர் - உபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்

அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் ஒரு நல்வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை.

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி இரண்டு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ்மனது தான். அது என்ன நினைக்கிறதோ அதற்காக முயற்சி செய்ய வைத்து அதை நோக்கியே உன் வாழ்க்கைப் பயணத்தை அமைக்கிறது.

சனி, 28 டிசம்பர், 2019

காஃபி வித் கிட்டு – பண்பு – ஆரஞ்சு அலர்ட் – இடைவெளி – கேள்விக்கென்ன பதில் – பெண் குழந்தை

காஃபி வித் கிட்டு – பகுதி 51

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டுமே அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப் பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம்எலன் மஸ்க் (தென் ஆப்பிரிக்காவினைச் சேர்ந்த தொழிலதிபர் – என்னை விட ஒரே ஒரு நாள் சிறியவர் இவர்.  இவரது இன்றைய சொத்து மதிப்பு பல பில்லியன் டாலர்கள்!)  

வெள்ளி, 27 டிசம்பர், 2019

மார்கழி கோலங்கள் – முதல் பத்து

நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கடந்த காலத்தின் மீது மரியாதை இல்லாமலும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வோமேயானால் தோல்வி, அதிருப்தி தவிர வேறென்ன நமக்குக் கிடைக்கும்அப்துல் கலாம்.

செவ்வாய், 24 டிசம்பர், 2019

கதம்பம் – கண்ணும் காதும் – விடுமுறை – செல்லமுடியா விழாக்கள் – பீங்கான் ஜாடி

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கண்ணாடி பார்த்து புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதைச் செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்யோகோ ஓனோ.

செவ்வாய், 17 டிசம்பர், 2019

கதம்பம் – தமிழ்நாடு தினம் – கொண்டக்கடலை பிரியாணி – வெங்கலப் பானை – விருந்தாளி - ஆரஞ்சு தேநீர்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

கதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இன்றைய வாசகம்:

அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் இல்லாது போனால் வேறு இடத்திற்குச் சென்றுவிடும். அது போல மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள் – சாணக்கியர்.

திங்கள், 9 டிசம்பர், 2019

சிங்காரம் சரக்கு நல்ல சரக்கு…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். வாரத்தின் முதல் நாளாம் இந்த திங்கள் கிழமையை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

ஒரு மென்மையான வார்த்தை; ஒரு கனிவான பார்வை; ஒரு அன்பான புன்னகை; ஆகியவற்றால் அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்ட முடியும்...

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி ஒன்று

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த ஞாயிறை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உங்கள் எதிரிகளை கவனியுங்கள். அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.

சனி, 7 டிசம்பர், 2019

காஃபி வித் கிட்டு – ஐம்பது – உழைப்பு – கண்களாவது வாழட்டும் – என்கவுண்டர் – கல்லானாலும்…

காஃபி வித் கிட்டு – பகுதி 50

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். காஃபி வித் கிட்டு தொடரின் ஐம்பதாவது பகுதி! விளையாட்டாக ஆரம்பித்தது இன்றைக்கு ஐம்பதாவது பகுதி வரை தொட்டிருக்கிறது! தொடர்ந்து வாசித்து கருத்துகளைப் பகிர்ந்து வரும் நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. சரி, இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நாம் செய்யும் ஒரு விஷயத்தினைச் சிறந்ததாக்க, நம்மால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும், “முடிந்த அளவு”, அதைக் கடைசி வரை கொடுக்க வேண்டும் – ஆப்ரகாம் லிங்கன்.

செவ்வாய், 3 டிசம்பர், 2019

கதம்பம் – சமயபுரம் – திருவானைக்கா – பூரி லாடு – உணவு தினம் – மணி ஆர்டர் - ஓவியம்

சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த முறை கதம்பம் பதிவு வெளி வந்தது அக்டோபர் ஏழாம் தேதி! இன்றைக்கு டிசம்பர் மூன்று – நீண்ட இடைவெளி தான்! முகநூலில் எழுதியவற்றின் தொகுப்பு – இங்கேயும் ஒரு சேமிப்பாக!

திங்கள், 2 டிசம்பர், 2019

முகம் காட்டச் சொல்லாதீர் – கவிதைத் தொகுப்பு

அன்பின் நண்பர்களுக்கு….

வணக்கம்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றைய தினம் எனது வலைப்பூவில் வெளியிட்ட வந்துட்டேன்னு சொல்லு - சற்றே இடைவெளிக்குப் பிறகு… பதிவினை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். படிக்காதவர்கள் சுட்டியின் மூலம் படிக்கலாமே!

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

வந்துட்டேன்னு சொல்லு - சற்றே இடைவெளிக்குப் பிறகு…

அன்பின் நண்பர்களுக்கு…..

சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இந்த வலைப்பதிவு வழி சந்திப்பதில் மகிழ்ச்சி. கடைசியாக 12 அக்டோபர் 2019 அன்று ஒரு பதிவு வெளியிட்டதோடு சரி! கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்க வருகிறேன். இந்த இடைவெளியில் சில நாட்கள் தொடரும் நண்பர்களின் ஒன்றிரண்டு பதிவுகள் படிக்க முடிந்தது என்றாலும் பல நண்பர்களுடைய பதிவுகளை படிக்கவோ, கருத்திடவோ முடியவில்லை. என் பக்கத்தில் தான் எழுதுவதில்லை என்றாலும், அடுத்தவர்கள் எழுதும் பதிவுகளையும் படிக்க முடியவில்லையே என்று தான் எனக்கு அதிக வருத்தம்! அலுவலகத்தில் பணிச்சுமை, மடிக்கணினியில் பிரச்சனை, எழுதவோ, படிக்கவோ ஆர்வம் இல்லாதது என பல காரணிகள் ஒன்றாய்ச் சேர்ந்து கொள்ள இந்த ஐம்பது நாட்களில் பதிவுலகம் பக்கமே வராமல் இருந்திருக்கிறேன். 2009-ல் எழுத ஆரம்பித்த பிறகு நான் எடுத்துக்கொண்ட நீண்ட இடைவெளி இதுவாகத் தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.

சனி, 12 அக்டோபர், 2019

காஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை

காஃபி வித் கிட்டு – பகுதி – 49

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது.

புதன், 9 அக்டோபர், 2019

தமிழகப் பயணம் - அழகுப் புனைவிடம் கூப்பிட்டுப் போங்களேன்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, சமீபத்தில் படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – பயணத்தின் முடிவு

அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்…

முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

திங்கள், 7 அக்டோபர், 2019

கதம்பம் – செல்வம் – கணேஷா – கொலு – நம்ம வீட்டு பிள்ளை – நெய் தோசை

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

மன நிறைவு என்பது நம்மிடம் இயற்கையாக உள்ள செல்வம்.  ஆடம்பரம் என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை.

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

பூக்களின் சமவெளி….

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம் வாருங்கள்…

வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே! செடியில் இலைகள் அதிகம் என்றாலும், அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்…

சனி, 5 அக்டோபர், 2019

காஃபி வித் கிட்டு – காணாமல் போன லக்ஷ்மி – நம்பிக்கை - மனோ - மாத்தியோசி

 காஃபி வித் கிட்டு – பகுதி – 48

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ’ஒரு வேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்குக் கேட்கும் குரலே நம்பிக்கை.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – கோட்டையிலிருந்து குபா கிராமத்திற்கு…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, சமீபத்தில் படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வியாழன், 3 அக்டோபர், 2019

வெட்கமா இருக்காதோ…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்…

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும், முட்கள் அல்ல.

புதன், 2 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – காம்ரூ கோட்டை – குல்லா – காமாக்யா தேவி

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

என்னை யார் தோற்கடித்தது என, கோபத்துடன் பார்த்தேன். வேறு யாரும் இல்லை. கோபம் தான் என்னைத் தோற்கடித்தது – ஹிட்லர்.

செவ்வாய், 1 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – சாங்க்ளா – கோட்டையும் கோவிலும்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே, இந்த உலகத்தையே சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் – விவேகானந்தர்.

திங்கள், 30 செப்டம்பர், 2019

பத்தோடு பதினொண்ணு - வலைப்பயணம்…

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவக்கலாமா?

எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை. எண்ணங்கள் தான் முடிவு செய்யும். எண்ணம் போல வாழ்க்கை!

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

மாட்டிர் புத்லா – குர்னியின் களிமண் பொம்மைகள் – நிழற்பட உலா

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…

அன்புக்கு விலையில்லை! அதைத் தருவது தான் பெறுவதற்கு வழி! தந்தவருக்கும் லாபம்! பெற்றவருக்குக் லாபம்! – புத்தர்.

சனி, 28 செப்டம்பர், 2019

காஃபி வித் கிட்டு – பேனர் – கனவுக் கன்னி – ஆமை வாழ்வு - ஏலம்

காஃபி வித் கிட்டு – பகுதி – 47

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

பேசித் தீருங்கள்; பேசியே வளர்க்காதீர்கள். நடப்பதை பாருங்கள்; நடந்ததை கிளறாதீர்கள். உரியவர்களிடம் சொல்லுங்கள்; ஊரெல்லாம் சொல்லாதீர்கள். உறுதி காட்டுங்கள்; பிடிவாதம் பிடிக்காதீர்கள். விவரங்கள் சொல்லுங்கள்; வீண்வார்த்தை சொல்லாதீர்கள். தீர்வை விரும்புங்கள்; தர்க்கம் விரும்பாதீர்கள். – புத்தர்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – ராஜ்மா சாவல்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு, வெளியே தள்ளும் வார்த்தைகளில் மட்டும் எதையும் நினைப்பதில்லை!

வியாழன், 26 செப்டம்பர், 2019

கல்யாணக் கனவுகள்…

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை திருமணம் பற்றிய ஒரு பொன்மொழியுடன் துவக்கலாமா?

திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப் பிடிப்பதல்ல. கடைசி வரை சரியான துணையாக இருப்பதே.

புதன், 25 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – ஆற்றங்கரை ஓரத்தில்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எல்லா ஆறுகளும் தண்ணீரை மட்டுமே தன்னோடு அழைத்து வருவதில்லை. கூடவே பல மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் சுமந்து வருகிறது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

உதிரம்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்.

ஒரு சொட்டு கூட ரத்தம் வராமல் ஒருவரைக் கொன்றுவிடும் ஆற்றல் மிக்க கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு தான் புத்தர்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – மூதாட்டி தந்த கனி

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இங்கே வாழ்வது உங்கள் வாழ்க்கையைத் தவிர ஒவ்வொருவரும் உங்களை புரிந்து கொள்வதற்காக அல்ல - புத்தர்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

ஹிமாச்சலப் பிரதேசம் – பூக்கள் – நிழற்பட உலா

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…

தோட்டத்தில் உள்ள மலர்களை எண்ணுங்கள்; பழுத்து விழுந்து விட்ட சருகுகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். நட்சத்திரங்களைப் பார்த்து மகிழுங்கள்; இருளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் – விவேகானந்தர்.

சனி, 21 செப்டம்பர், 2019

காஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – தமிழகம் நோக்கி – முத்தம் – மூதாட்டி – பிண்ட் எனும் கிராமம்

காஃபி வித் கிட்டு – பகுதி – 46

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வயது செல்லச் செல்ல தோல் சுருங்குகிறது. ஆனால் மகிழ்ச்சியை விட்டு விட்டால் வாழ்வே சுருங்கி விடுகிறது – சாமுவேல் ஸ்மைல்ஸ்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – தில்லிவாசிகள் திருடர்கள் – நீங்க எந்த ஊர்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன - நபிகள் நாயகம்.

வியாழன், 19 செப்டம்பர், 2019

இதை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை சமீபத்தில் படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

”என்னை ஏன்னு கேட்க ஆளே இல்லை”! – இந்த வாக்கியம் வயதுக்கு ஏற்ப மாறும்… இளமையில் கர்வமாக! முதுமையில் பரிதாபமாக!

புதன், 18 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – சித்குல் கிராம உலா – சித்குல் மாதா

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வழிபாடு என்பது வெறும் சொற்களால் ஆனது அல்ல! அது இதயத்திலிருந்து புறப்பட்டு இதயத்திற்குள்ளேயே கலந்து விட வேண்டும் – ரமண மகரிஷி.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை – புத்தர்.

திங்கள், 16 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – கடைசி கிராமத்தில் ஓர் இரவு – இரவு உணவு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நீங்கள் தினமும் காலையில் எழும்போது அன்று இரவு தன்னிறைவோடு உறங்க வேண்டும் என்ற உறுதியோடு எழ வேண்டும் – ஜார்ஜ் லோரிமர்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

ஹிமாச்சலப் பிரதேசம் – மரத்தில் சிற்பங்கள் – நிழற்பட உலா

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…

மனசாட்சிக்கு மறுபெயர் தான் கடவுள். உனக்குள் இருக்கும் இந்தக் கடவுளை நீ வணங்கினால் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.

சனி, 14 செப்டம்பர், 2019

காஃபி வித் கிட்டு – பிரியாணி – தொப்பை – முக்தி – வாழை இலை

 காஃபி வித் கிட்டு – பகுதி – 45

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

இன்றைய தினம் உங்களுடையது. நீங்கள் ஏறவேண்டிய சிகரம் காத்துக் கொண்டிருக்கின்றது… உடனே உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்! – டாக்டர் சீயஸ்

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – திபெத் எல்லை – நடை – விசில் அடிக்கத் தெரியுமா

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது. மற்றவர் தோட்டத்தில் அதைத் தேட வேண்டியதில்லை.

வியாழன், 12 செப்டம்பர், 2019

ஒல்லிக்குச்சி பீமன்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் பதிவு! சற்றே இடைவெளிக்குப் பிறகு அவருடைய பதிவு! பதிவுக்குப் போகும் முன்னர், கண்ணதாசன் அவர்களின் பொன்மொழிகளில் ஒன்றைப் படிக்கலாமா – வெங்கட், புது தில்லி.

”அழும் போது தனிமையில் அழு. சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள். தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!” – கண்ணதாசன்.

புதன், 11 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – இந்தியாவின் கடைசி டாபா – உணவகம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை. ஒருவருக்குக் கொடு. எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம் – அன்னை தெரசா.

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

கதம்பம் – பதவிக்காக – பன்னீர் பூ – ஓவியம் – எதுவும் குப்பையல்ல – ஆசிரியர் தினம் – பிறந்த நாள்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வளைந்து கொடுத்துப் போவதால் ஒருவர் அடி பணிந்து போய்விட்டதாய் நினைத்துக் கொண்டால் அது அறியாமை. வில் வளைகிறது என்றால் அம்பின் வேகம் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.

திங்கள், 9 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – பழங்களே உணவாக – பேருந்து ஸ்னேகம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உண்மையான நட்பை அடைவது கடினம். ஏனெனில் நிபந்தனைகள் அற்ற அன்பை கொண்டது தான் நட்பு.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

ஹிமாச்சலப் பிரதேசம் – இயற்கை – நிழற்பட உலா

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…

இயற்கையால் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், பேராசையை ஒரு போதும் பூர்த்தி செய்ய முடியாது – மகாத்மா காந்தி.

சனி, 7 செப்டம்பர், 2019

காஃபி வித் கிட்டு – இணையத் தமிழ் பயிற்சி – வாழ்க்கை – வீட்டுச் சாப்பாடு – பதிவர் சந்திப்பு

காஃபி வித் கிட்டு – பகுதி – 44

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டும்… ஒன்று முயற்சி; இரண்டாவது பயிற்சி!

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரோகி – கிராமமும் கோவிலும்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது. நம் இதயத்துடிப்பை அளவிடும் கருவிகூட ஒரே நேர்க்கோட்டைக் காட்டினால் நாம் உயிரோடு இல்லை என்று அர்த்தம்ரத்தன் டாடா.

வியாழன், 5 செப்டம்பர், 2019

ஜெயகாந்தனும் ஜோதிஜியும் – கிண்டில் வாசிப்பு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேர புத்தக வாசிப்பு என்பது தீர்த்து வைக்காத பிரச்சனைகளே இல்லைசார்லஸ் டிக்கன்ஸ்.

புதன், 4 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரோகி – மலைப்பாதையில் நடைப்பயணம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடை போடுவார்கள்ரபீந்த்ரநாத் தாகூர்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கதம்பம் – மசால் தோசை – கிருஷ்ணா – பல்பு – லட்டு – பிறந்த நாள்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும், அது உண்மை. அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியாது. யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதில் தான் இருக்கிறது சூட்சுமம்.

திங்கள், 2 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – கின்னர் கைலாஷ் – யாத்திரை தகவல்கள்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்லவன்புத்தர்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

ஹிமாச்சலப் பிரதேசம் – முகங்கள் – நிழற்பட உலா

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டியிருக்கிறது - யாரோ

சனி, 31 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – சச்சரவு – தோசை – அத்தி வரதர் – ஊர் சுற்றல்

காஃபி வித் கிட்டு – பகுதி – 43

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

இதயபூர்வமாய் வெற்றி பெறவே பிறந்தவர்கள் என நம்புகிறவர்கள், மிக எளிதாக உச்சிக்குச் சென்று விடுகிறார்கள். அதிர்ஷ்டமில்லாதவர்கள் என்று இதயபூர்வமாக நம்புகிறவர்கள் அப்படியே தோற்றுப்போய் விடுகிறார்கள்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கவலைகளின் அளவு கையளவாக இருக்கும் வரைதான் கண்ணீருக்கும் வேலை. அது மலையளவு ஆகும்போது மனமும் மரத்துப் போகும்கவிஞர் கண்ணதாசன்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

கடன் அன்பை முறிக்கும் – சோமு அண்ணா

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்.

நீ எதைச் செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், ஆன்மா, முழுவதையும் அர்ப்பணித்து விடுஸ்வாமி விவேகாநந்தர்.

புதன், 28 ஆகஸ்ட், 2019

ஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒரு பயணம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு சிறப்பான வாழ்க்கைத் தத்துவத்துடன் ஆரம்பிக்கலாம்.

காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படிச் சிரிக்கப் பழகிக் கொண்டால் எந்தக் காயமும் அவ்வளவு பெரிதல்ல…!

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கதம்பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணிகா – ஹெல்தி கேக்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக் கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்அரிஸ்டாட்டில்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

எங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசனின் இனிமையான வரிகளுடன் ஆரம்பிக்கலாம்.

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்…

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

அழகை ரசிப்போம் வாங்க – நிழற்பட உலா – பகுதி ஒன்று

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…

குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லைமகாத்மா காந்தி

சனி, 24 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – ஓயோ விளம்பரம் – ராஜா காது – கவிதை – வானவில் – காஃபி ஓவியம்

காஃபி வித் கிட்டு – பகுதி – 42

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்: