திங்கள், 7 அக்டோபர், 2019

கதம்பம் – செல்வம் – கணேஷா – கொலு – நம்ம வீட்டு பிள்ளை – நெய் தோசை


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

மன நிறைவு என்பது நம்மிடம் இயற்கையாக உள்ள செல்வம்.  ஆடம்பரம் என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை.

கணேஷா – 24 செப்டம்பர் 2019


என் கணவர் தன் அலுவலகத்தில் பணிபுரியும் பெங்காலி நண்பர் ஒருவரை எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்திருந்தார். எனக்குத் தெரிந்த ஹிந்தியில் அவரை வரவேற்று உபசரித்தேன்.

நுரையோடு சூடான காஃபியை கொடுத்ததும் சுவைத்து ரசித்தார். சிறிது நேர உரையாடலுக்குப் பின் அடை வார்த்துக் கொடுத்தேன். அட!!! என்று வியந்து ருசித்தார்.

என்னவர் அவரை வயலூர் முருகன் கோவிலுக்கும், மலைக்கோட்டைக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்து வரலாற்றை சொல்லி பன்னீர் சோடாவும், ஜிகிர்தண்டாவும் சுவைக்கச் செய்திருக்கிறார்.

திருச்சியின் மாபெரும் பாத்திரக்கடலான மங்கள் & மங்கள் சென்று வந்திருக்கிறார்கள். அனைத்து தளங்களையும் சுற்றி வந்த அவருக்கு வியப்பு!! வீட்டுக்குத் தேவையான அனைத்துமே இங்கு கிடைக்கிறதே என்பது தான். காஃபியின் சுவைக்கு அடிமையாகி காஃபி ஃபில்டர் வாங்கிக் கொண்டுள்ளார்.

மகளுக்கு ஓவியம் வரையத் தேவையான பொருட்களை வாங்கி பரிசளித்தவர், Bபாபிஜிக்கு ( அண்ணி ) இதைக் கொடுங்கள் என்று எனக்காக இந்தப் பிள்ளையாரை வாங்கி கொடுத்தனுப்பியிருந்தார். அழகாக இருக்கிறாரா கணேஷா??

கொலு பொம்மை – 26 செப்டம்பர் 2019

நவராத்திரி!!



சூப்பர் மார்கெட் ஒன்றில் வைத்திருந்த கொலு பொம்மைகள்! பத்து சதவீதம் தள்ளுபடியில்.

Kitchen Makeover!!

அடுக்களையில் கொஞ்சம் வசதிக்காக சில வேலைகள் நடைபெறுகிறது. அதனால் அடுக்களையே காலி செய்யப்பட்டு களேபரமாக ஹாலில் இருக்கிறது. எல்லாம் ஒழுங்கு செய்து சகஜ நிலைக்கு வர சில நாட்கள் ஆகுமென நினைக்கிறேன்.

இதுவும் ஒரு வித அனுபவம் தான் இல்லையா!!!

கொலு பொம்மை – புது வரவு - 4 அக்டோபர் 2019:

புதுவரவு!!




பால ஹனுமானும், காமதேனுவும். அழகா இருக்கா ஃப்ரெண்ட்ஸ்?

நம்ம வீட்டு பிள்ளை – 4 அக்டோபர் 2019


மகள் சிவகார்த்திகேயனின் விசிறி என்பதால் இந்தப் படம் வெளியானது முதல் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள். இப்போதெல்லாம் Teaser, Trailer, First look, Audio release என்று வரிசையாக வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி விடுகிறார்கள்.

Book my show மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொண்டு திருச்சியில் பிரபலமான திரையரங்குகளில் ஒன்றான ரம்பாவில் குடும்பத்துடன் சென்று பார்த்து வந்தோம்.

குடும்பப் பின்னணி கொண்ட திரைப்படம். அண்ணன் தங்கை உறவு, உறவுகளிடம் உள்ள நிதர்சனம், விட்டுக் கொடுத்தல் என்று செல்லும் கதை. வசனங்கள் நன்றாக இருந்தன.

சித்த வைத்தியரும் ஹீரோவின் தாத்தாவுமாக இயக்குனர் பாரதிராஜா. அம்மாவாக 'வீடு' அர்ச்சனா. தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெரும் நடிகர் பட்டாளம் இங்கு சங்கமித்து நல்லதொரு திரைப்படத்தை தந்துள்ளனர்.

காமெடி கலாட்டாவுடன் மனதை உருக்கும் காட்சிகளும் இந்த திரைப்படத்தில் உள்ளன. ஹீரோயினுக்கு இங்கு வேலையே இல்லாதது போல் தோன்றியது.

ரசிகர்களின் விசிலுடன் திரையரங்கில் பார்ப்பது தனி ரகம் தான். எல்லோரும் பார்க்க வேண்டிய படம் தான். முடிந்தவர்கள் திரையரங்கில் சென்று பார்த்து வாருங்கள்.

சமயபுரத்தாளும், அகிலாண்டேஸ்வரியும் - 4 அக்டோபர் 2019


நெடுநாட்களாகவே சமயபுரம் மாரியம்மனை கண்டு வர வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருந்தேன். கண்மலரை சேர்ப்பிக்க வேண்டும். வெள்ளியில் கண்மலரும் வாங்கி என் பர்ஸில் வைத்துக் கொண்டு நாளாயிற்று. டெல்லிக்கு ரயிலில் போகும் போதோ, வரும் போதோ பர்ஸிலிருந்து விழுந்து என் கண்ணுக்கே தட்டுபட்டு விட்டது.

பொதுவாகவே இங்கு எப்போதும் கும்பல் தான். செவ்வாய், வெள்ளியில் கேட்கவே வேண்டாம். இப்போது நவராத்திரி வேறு. ஆனாலும் செவ்வாயன்று காலையிலேயே கிளம்பி சமயபுரம் சென்றோம். அம்பாளுக்கு சாற்ற மலர்கள், அர்ச்சனைக்கு குங்குமம், உப்பு மிளகு எல்லாம் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். அருமையான தரிசனம். கண்மலரை உண்டியலில் சேர்ப்பித்தேன். எல்லோருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டேன். அங்கிருந்து பேருந்தில் திருவானைக்காவல் வந்து அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் தரிசித்து அருள் பெற்றோம். அங்கு கோவிலில் வைத்திருந்த ஒன்பது படி கொலுவை கண்டுகளித்தோம். புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன்.

கோவில் யானை 'அகிலா' பாகனின் 'பதுக்க நடக்கு' (மலையாளத்தில்) என்ற சொல் கேட்டு பூஜைக்காக அம்பாள் சன்னிதி நோக்கி மெதுவாகச் சென்றது.

நாங்களும் வெளியே வந்தோம். அடுத்து என்ன??? காலையிலேயே கிளம்பி இரண்டு கோவில்களுக்கு போயாச்சு. பசி வயிற்றைக் கிள்ள, ஒரு இடத்துக்குச் சென்றோம். அந்த இடம் வேறேங்கே உணவகம் தான்!

பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை – 4 அக்டோபர் 2019




சமஸ் அவர்கள் எழுதிய சாப்பாட்டுப் புராணம் புத்தகத்தில் படித்ததிலிருந்தே இங்கு சென்று சுவைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். இந்த வாரத்தில் தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அகிலாண்டேஸ்வரியின் திவ்யமான தரிசனத்திற்குப் பின்னர் செல்போனின் GPS வழியாகத் தேடி 'மேல விபூதி பிரகாரம்' சென்றோம். அங்கு பார்த்தசாரதி விலாஸ் என்ற பதாகை கண்ணில் பட்டது. 1943 ல் துவங்கப்பட்ட ஹோட்டல். அக்காலம் போலவே இன்றும் தோன்றும் அமைப்பு.

கச்சேரிக்காரர்களும், நாடகக்காரர்களும் வந்து விரும்பிச் சுவைத்த உணவகம். ஒரு ஜோடி நெய்தோசை தான் இங்கு பிரபலம். இப்போது அது தனித்து போய்விட்டது.

நாங்களும் சுருள் காகிதம் போல் முறுகலாக தந்த நெய்தோசையும், ரவா ரோஸ்ட்டும் சுவைத்தோம். தொட்டுக்கையாக தேங்காய் சட்னியும், கார சட்னியும், வெங்காய சாம்பாரும்! சாப்பிட்ட பின்னர் நாமே இலையை எடுத்து குப்பையில் சேர்த்து விட வேண்டும். கைகளைக் கழுவிய பின்னரும் ஒட்டிக் கொண்டிருந்த நெய்யின் பிசுபிசுப்பும், வயிற்றுக்கு கெடுதல் செய்யாத பக்குவமும் தான் இத்தனை வருடங்களைக் கடந்தும் நிலைத்து நிற்பதற்கான ரகசியமாக இருக்கும்.

திருவானைக்கா வந்தால் இங்கு சுவைத்திட மறவாதீர்கள்.

நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

48 கருத்துகள்:

  1. உண்மை சொல்லும் பொன்மொழி!    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பொன்மொழியோடு கதம்பமாய் செய்திகள் நன்று சகோ.

    பாரதிராஜாவின் நிலைமை இப்படிப்போச்சே பாவம்.

    எத்தனைபேரை ஆட்டி வச்சவன், நடிப்பு வராதவர்களை கோபம் வந்து திட்டியவன், அடித்தவன் இன்று சிவகார்த்திகேயனை எல்லாம் அனுசரித்து போகவேண்டிய நிலை பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதிராஜா - இப்போதைக்கு அவரால் முடிந்தது நடிப்பு தான். இயக்க முடிவதில்லை. அவரது இயக்குனர் நாட்கள் முடிந்து விட்டது என்றே தோன்றுகிறது கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கணேசர் எப்பவுமே அழகு.   மாடுலர் கிச்சன் போடறீங்களா என்ன?   சிகா படம் பிரைமில் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணேசர் எப்பவுமே அழகு... அதே அதே ஸ்ரீராம்.

      மாடுலர் - அப்படியும் சொல்லலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பார்த்தசாரதி விலாஸ் இழுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... படம் பார்க்கும் போது சாப்பிடத் தோன்றலாம் ஸ்ரீராம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இனியகாலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!!

    வாசகம் அருமை உண்மை!

    முதல் படம் பிள்ளையார் செம க்யூட்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பிள்ளையார் எப்பவும் க்யூட் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கிச்சன் மேம்படுத்தல்...மாடுலர் கிச்சனா ஆதி?

    புதுவரவு பொம்மைகள் அழகு! அந்தக் கொலுவும் ஈர்க்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் மாடுலர் கீதாஜி. புதுவரவு பொம்மைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அந்த நண்பர் ஃபில்டர் வாங்கினார் சரி நீங்க எப்படிக் காபி போடணும்னு சொல்லிக் கொடுத்தீங்கதானே ஆதி!!! ஹா ஹா ஹா

    பாரதிவிலார் தோசை வாவ்!!! செமையா கட்டி இழுக்குது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தசாரதி விலாஸ் என்பதற்குப் பதிலா பாரதிவிலார் நு அதுவும் ஸ் போய் ர் நு வந்திருச்சு....

      கீதா

      நீக்கு
    2. காஃபி எப்படிப் போடுவது என நான் சொல்லிக் கொடுத்தேன் கீதாஜி.

      பார்த்தசாரதி விலாஸ் தோசை - ஈர்ப்பு அதிகம் தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. பாரதிவிலார். :) சில சமயத்தில் இப்படித்தான் ஆகிவிடும் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சமயபுரம் சென்றதில்லை. கொலு அழகு...

    எல்லாமே அருமை ஆனாலும் பாருங்க முதல்ல சாப்பாடுதான் ஈர்க்குது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயபுரம் மாரியம்மன் ரொம்பவும் அழகான கோவில். அடுத்த முறை திருச்சி வந்தால் சென்று வாருங்கள் கீதாஜி.

      சாப்பாடு ஈர்ப்பது உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  9. தோசை தோசை தோசை எனக்கும் வேண்டும் தோசை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... தோசை தானே கொடுத்து விடலாம். வாங்க மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. சரியான நேரத்தில் மிகச் சரியாக மிகச் சரியானதைத்தான் சொல்லி இருக்கிறீங்க
      இந்த ஆஹா என்ற வார்த்தையோட பார்க்கும் போது உண்மையிலே தோசயைத்தான் தருவீங்களா இல்லை எங்க வீட்டம்மா மாதிரி நீங்களும் பூசைத்தான் தருவிங்களா? ஹும்ம்ம்ம்

      நீக்கு
    3. தோசை தான். பூசை கொடுக்க உங்கள் வீட்டம்மாவுக்கு மட்டுமே உரிமை மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இன்றைய வாசகம் அருமை.

    மனநிறைவு கொள்வோர் பேறுபெற்றோர் என்கிறது பைபிள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைபிள் வாசகம் சிறப்பு ஜோசப் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. திருஆனைக்காவல் கோவிலின் உச்சிகால பூஜையைத் தவற விட்டீர்களா? அது மிகவும் விசேடம். அர்ச்சகர் பெண் வேடம் புனைந்து மேளதாளத்துடன் சுவாமி சன்னதிக்கு சென்று பூஜை செய்வார். தற்போது ஜம்புகேஸ்வரர் சந்நிதியில் நீர் தேங்குகிறதா? காவிரியில் தண்ணீர் வந்தால் சந்நிதியில் ஊற்று பெருக்கெடுக்கும். ஜம்புகேஸ்வரை ஜன்னல் வழியாகவா அல்லது கருவறை சென்று வழிப்பட்டீர்களா? 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உச்சிகால பூஜை - ஆனைக்காவில் பலமுறை பார்த்து இருக்கிறேன் ஜெயக்குமார் ஐயா. கருவறை வரை இம்முறை செல்லவில்லை. இப்பொழுது தண்ணீர் சுரப்பது இல்லை. காவிரி ஆற்றின் வெள்ளம் பொருத்தே அங்கே தண்ணீர் சுரக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. இந்த வருடம் ஜம்புகேஸ்வரர் சந்நிதியில் தண்ணீர் வந்திருப்பதாக வாட்சப்பில் செய்திகள் வந்தன! அப்போ அது உண்மை இல்லையா?

      நீக்கு
    3. வாட்சப் செய்தி உண்மையா பொய்யா என்பது தெரியாது - நாங்கள் சென்ற அன்று தண்ணீர் இல்லை கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. திருவானைக்கா ஓட்டலில் தோசை சாப்பிட்ட அனுபவம் உண்டு ஒரு காலத்தில் பத்திரிகைகள் மூலம்பிரசித்தி அடைந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நிறைய பத்திரிக்கைகளில் வந்தது உண்டு ஜி.எம்.பி. ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நாங்களும் அங்கு சாப்பிட்டிருக்கோம். எங்க எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாக இருந்தது.

    சமயபுரத்தாளை முன்பு சேவித்திருப்பேன்னு நினைக்கிறேன். எப்போ என்னைக் கூப்பிடப்போறாளோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது பலமுறை ஏமாற்றம் தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. திருவானைக்கா தொட்டடுத்து இருக்கும் புகழ்வாய்ந்த கோவில் உங்களுக்கு. அதுக்குச் செல்ல இவ்வள்வு நாட்களாகிவிட்டதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனைக்கா பலமுறை சென்ற கோவில் நெல்லைத் தமிழன். சமயபுரம் செல்ல இயலாமல் இருந்தது. இம்முறை வாய்த்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. 'ரசித்த வாசகம்' மிக அருமை!பால ஹனுமான் படம் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்த வாசகம் மற்றும் பால ஹனுமான் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. பார்த்தசாரதி ஓட்டல் நெய்தோசை 2,3 முறை சாப்பிட்டாச்சு. வீட்டில் செய்வது அதைவிட நன்றாக இருக்குனு என்னோட கருத்து. பொதுவாகவே ஸ்ரீரங்கம் ஓட்டல்கள்/திருவானைக்கா ஓட்டல்கள் டிஃபன் தரம் சுமார் தான். பானுமதி தெற்கு கோபுரத்துக்கு வலப்பக்கம் இருக்கும் மணீஸ் கஃபே அல்லது மணி விலாஸ் பற்றிச் சொல்லி இருக்காங்க. சாப்பிட்டுப் பார்த்தது இல்லை. ஒரு முறை பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் செய்வது போல நீங்கள் உணவகங்களில் எதிர்பார்த்தால் நிச்சயம் பிடிக்காது. ஒவ்வொன்றும் வேறு சுவை தான் கீதாம்மா... மணீஸ் கஃபே, பார்த்தசாரதி விலாஸ் இரண்டிலும் சாப்பிட்ட உணவு வகைகள் எங்களுக்குப் பிடித்திருந்தது. வீட்டில் செய்வது போல இருக்க வேண்டும் என்றால் வீட்டிலே மட்டும் தான் சாப்பிட வேண்டும்... ஹாஹா... வெளியூர் பயணங்களில் சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு நம் ஊர் உணவகங்கள் சில மட்டும் பிடித்தே இருக்கிறது. ஒரு முறை தஞ்சையில் சாப்பிட்ட மதிய உணவு மஹா மோசம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. நாச்சிமுத்து கடைக்கு எதிரே இருக்கும் வெங்கடேசா பவன்/விலாஸும் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. அதோட குறிப்பிட்ட நேரம் தான் கிடைக்கும் என்பார்கள். அதுவும் சொதப்பல் ரகம் தான்! ஒரு வேளை நெல்லையார் மாதிரி நாங்களும் அதிகம் எதிர்பார்ப்போடு போவதாலோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாச்சிமுத்து எதிரே வெங்கடேசா பவன்/விலாஸ் - இது வரை சாப்பிட்டதாகத் தோன்றவில்லை கீதாம்மா.

      அதிக எதிர்பார்ப்புடன் போவதாலோ? ஹாஹா இருக்கலாம்! நாங்கள் இம்முறை மணீஸ் கஃபே சென்றபோது ஒரு விஷயம் காதில் விழுந்தது - அதை என் பதிவில் எழுதலாம் என்று இப்போது சொல்லவில்லை! சஸ்பென்ஸ்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. திருவானைக்கா இருதடவை சென்றிருக்கிறேன்.சமயபுரம் செல்ல கிடைக்கவில்லை.

    கணேசர் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயபுரம் செல்லும் வாய்ப்பு உங்களுக்கு விரைவில் கிடைக்கட்டும் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. உங்கள் முந்தைய பதிவுகள், பூக்களின் சமவெளி, க்டைசி கிராமம் முடிவு எல்லாமே வாசித்துவிட்டேன் ஜி. கடைசி கிராமம் பதிவுகள் மிக அருமை. எனக்கு அது போன்ற வாய்ப்புகள் அமைவது மிகவும் சிரமம். உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    தமிழகம் வந்து மீண்டும் தில்லி சென்றுவிட்டது தெரிந்து கொள்ள முடிந்தது.

    சகோதரி ஆதி உங்கள் பதிவும் அருமை. நாங்களும் எங்கள் வீட்டில் சமீபத்தில் அடுக்களையைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டோம் எங்கள் வீடுகளில் விறகு அடுப்பும் இப்போதும் உண்டு. அது தனி சமையலறை என்றால் அதைத் தொட்டடுத்து மற்றொரு சமையலறை கேஸ் அடுப்புடன் உண்டு. ஷெல்ஃப் எல்லாம் மாற்றிக் கொண்டோம் கொஞ்சம். சிறிய அளவிலான மாடுலர் கிச்சனாக.

    கோயில் பயணங்கள் எல்லாமே அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் பயணம் செய்யும் வாய்ப்புகள் அமையட்டும் துளசிதரன் ஜி.

      உங்கள் வீட்டிலும் சமையலறையில் மாற்றங்கள் செய்தது அறிந்து மகிழ்ச்சி. விறகு அடுப்பு - அதில் சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவை கேஸ் அடுப்புகளில் கிடையாது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. பால ஹனுமானும், காமதேனுவும், பிள்ளையார் . ..அனைவரும் மிக அழகு



    இந்த முறை செல்லும் போது சமயபுரம் செல்லும் எண்ணம் இருந்தது ஆனால் முடியவில்லை ...உத்தமர் கோவில் மட்டும் தரிசித்தோம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உத்தமர் கோவில் எனக்கும் பிடித்த கோவில் அனுப்ரேம் ஜி. சில தமிழகப் பயணங்களில் அங்கே சென்று வந்தது உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....