அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்
வாருங்கள்…
வாழ்வில்
தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே! செடியில் இலைகள் அதிகம் என்றாலும், அதில்
பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்…
”கடைசி கிராமம்” பயணத்தொடர் எழுதிக் கொண்டு வருவதை நீங்கள்
படித்திருக்கலாம். ஹிமாச்சலப் பிரதேசத்தின் chசித்குல் செல்ல முடிவு செய்வதற்கு முன்னர்
உத்திராகண்ட் மாநிலத்தின் Valley of Flowers செல்லலாம் என்று தான் நினைத்திருந்தோம்.
மிகவும் அழகான சமவெளிப்பகுதி அது. வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே அங்கே அழகிய பூக்கள்
பூத்துக் குலுங்கும் – பெரும்பாலும் பனிப்பொழிவால் மூடியிருக்கும் அந்தச் சமவெளியில்
ஜூன் மாதம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை தான் சுற்றுலாவாசிகள் செல்ல முடியும். அதிக
பூக்களைக் காண வேண்டுமென்றால், ஜூலை இரண்டாம் வாரத்திலிருந்து ஆகஸ்ட் இரண்டாம் வாரம்
வரை செல்வது தான் நல்லது – அந்தச் சமயத்தில் தான் அதிக அளவில் பூக்கள் இருக்கும். ஆனால் அதே நாட்களில் தான் அங்கே மழைப்பொழிவும் இருக்கும்
என்பதால் பாதையும் மோசமாக இருப்பதோடு, மலைச்சரிவுகளும் அவ்வப்போது இருக்கும். அழகை ரசிக்க வேண்டுமென்றால் இப்படிச் சில ஆபத்துகளையும்
சந்திக்க வேண்டியிருக்கும்.
கூடவே இந்தப் பயணத்தில் நீண்ட தூரம் நடக்க வேண்டும் – முன்னரே
முடிவு செய்திருந்தால் இந்தப் பயணத்தினை ஏற்பாடு செய்யும் குழுவினரோடு சென்று இருக்கலாம்!
கடைசி நேரத்தில் முடிவு செய்ததால் அங்கே செல்ல முடியவில்லை. அப்படி என்ன அந்த இடத்தில் அழகு என்று நீங்கள் கேட்கலாம்!
உங்களுக்காகவே, இந்த ஞாயிறில் உத்திராகண்ட் மாநிலத்தின் Valley of Flowers பூக்கள்
பூத்திருக்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட சில படங்களை, இணையத்தில் இருக்கும் படங்களை,
நான் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அடுத்த வருடம் இங்கே சென்று
வரும் திட்டம் உண்டு! அப்படிச் சென்று வரும் பட்சத்தில் நானும் நிழற்படங்கள் எடுத்து
உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன். இப்போதைக்கு, அடுத்தவர்கள் அந்த Valley of
Flowers பகுதியில் எடுத்த படங்களை இங்கே பகிர்ந்து இருக்கிறேன். இந்தப் படங்களை எடுத்த பயணிகளுக்கு நன்றியுடன்…
மேலதிகத் தகவல்கள் வேண்டுபவர்கள் இங்கே ஆங்கிலத்தில் படிக்கலாம்.
இன்றைய பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாகவும், பிடித்ததாகவும்
இருந்திருக்கும் என நம்புகிறேன். பதிவு பற்றிய
உங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும் பின்னூட்டம் வழியே சொல்லுங்கள். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குவாசகம் நன்றாக இருக்கிறது! அருமையான உத்வேகம் அளிக்கும் வாசகம்!
ஆனால் நடைமுறையில் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
கீதா
இனிய மதிய நேர வணக்கம் கீதாஜி.
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்களைப் பார்த்ததும் வெங்கட்ஜியின் படங்களா இவை என்று தோன்றியது!!!!!
பதிலளிநீக்குஉத்ராகண்ட் பூக்கள் சமவெளி பற்றி முன்னாடி சொல்லிய நினைவு இருக்கு நீங்கள் போகாமல் விட்டதையும்.
படங்கள் அத்தனையும் ஒன்றுகொன்று போட்டி போட்டுக் கொள்கிறது ஒவ்வொன்றும் அத்தனை அழகு! மலர்கள் கண்ணுக்கும் மனதிற்கும் குளுமைதான்.
அனைத்தும் ரசித்தேன் ஜி!
கீதா
//படங்களைப் பார்த்ததும் வெங்கட்ஜியின் படங்களா இவை என்று தோன்றியது!// ஹாஹா... இந்த அளவுக்கு அழகாக எடுப்பதும், அதை சரியாக எடிட் செய்வதும் எனக்கு வராத விஷயம்...
நீக்குஆமாம் கீதாஜி. ஹிமாச்சலப் பிரதேசம் செல்வதற்கு முன்னர் இந்த பூக்களின் சமவெளிக்குச் செல்லலாம் எனத் திட்டமிட்டு இருந்தோம்.
படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பொன்மொழி நன்று! குட்மார்னிங்.
பதிலளிநீக்குபகிர்ந்த படங்கள் யாவும் நன்று.
மதிய நேர வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்களின் அழகு பிரமிப்பூட்டுகிறது ஜி.
பதிலளிநீக்குஅடுத்த வருடம் நேரில் சென்று வர வாழ்த்துகள்.
படங்களின் அழகு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. எல்லாம் சரியாக அமைந்தால் அடுத்த வருடம் இங்கே சென்று வர வேண்டும். பார்க்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் உண்மையை உரைத்தாலும் கொஞ்சம் தோல்வியின் நிழல் தெரிந்தாலும் மனம் பதைக்கத் தான் செய்கிறது. இன்னும் மன முதிர்ச்சி இல்லையேனும் தோணும். ஆனாலும்! :(
பதிலளிநீக்குமனம் பதைக்கத் தான் செய்கிறது - உண்மை கீதாம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பூக்களின் சமவெளி அழகோ அழகு. முதல் படம் திருக்கயிலையை நினைவூட்டுகிறது. ஆனால் அங்கே ஏரிகள் வித விதமான நிறங்களில் காண முடியும். ஓர் இடத்தில் இருந்து பார்த்தால் சிந்து நதியின் ஆரம்பமும், இன்னொரு இடத்தில் பிரம்மபுத்ரா ஆரம்பமும் காட்டுவார்கள். கங்கையின் ஆரம்பமும் அங்கே தான் என்றும் சொன்னாலும் அதிகம் உத்தராகண்ட் மாநிலத்திலேயே இருக்குனு என் எண்ணம்.
பதிலளிநீக்குபூக்களின் சமவெளி அழகான இடம் தான் கீதாம்மா... திருக்கயிலை - இது வரை அங்கே செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல பொன்மொழி.
பதிலளிநீக்குபடங்களின் பகிர்வு அருமை. விரைவில் அங்கு சென்று படமாக்கும் வாய்ப்பு கிட்டட்டுமாக.
பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குஅடுத்த வருடம் வாய்ப்பு கிடைத்தால் அங்கே சென்று வர வேண்டும் - பார்க்கலாம் என்ன நடக்கும் என யார் அறிவார்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பூக்களின் சமவெளி அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை. படங்களில் இவ்வளவு அழகு நேரில் கண்டு மகிழ வாழ்துகள்.
பதிலளிநீக்குபூக்களின் அழகைச் சொல்ல வார்த்தைகள் குறைவு தான் மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. மிகவும் ரசித்தேன்.
படங்களில் பூக்களின் அழகு கண்களை மிகவும் கவர்கிறது. ஒவ்வொரு பூவும் என்ன ஒரு கலர். மலர்களுக்கு இயற்கை தந்த அதிசயம். வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம். இதை நேரடியாக கண்டு ரசிக்க தங்களுக்கும் ஒரு வரமாக நேரம் அமைய வாழ்த்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குமலர்களுக்கு இயற்கை தந்த வரப் பிரசாதம் என்பது உண்மை தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பொன்மொழி அருமை.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு.
பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Valley of Flowers...வாவ் எத்துனை அழகான இடம் ..
பதிலளிநீக்குஅடுத்த வருடம் உங்கள் பார்வையின் வழி படங்கள் வரட்டும் ..
அழகான இடம் தான் அனுப்ரேம் ஜி. அடுத்த வருடம் அங்கே சென்றால் படம் எடுத்தால், பகிர்ந்து கொள்ள வேண்டும். பார்க்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.