ஞாயிறு, 1 டிசம்பர், 2019

வந்துட்டேன்னு சொல்லு - சற்றே இடைவெளிக்குப் பிறகு…


அன்பின் நண்பர்களுக்கு…..



சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இந்த வலைப்பதிவு வழி சந்திப்பதில் மகிழ்ச்சி. கடைசியாக 12 அக்டோபர் 2019 அன்று ஒரு பதிவு வெளியிட்டதோடு சரி! கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்க வருகிறேன். இந்த இடைவெளியில் சில நாட்கள் தொடரும் நண்பர்களின் ஒன்றிரண்டு பதிவுகள் படிக்க முடிந்தது என்றாலும் பல நண்பர்களுடைய பதிவுகளை படிக்கவோ, கருத்திடவோ முடியவில்லை. என் பக்கத்தில் தான் எழுதுவதில்லை என்றாலும், அடுத்தவர்கள் எழுதும் பதிவுகளையும் படிக்க முடியவில்லையே என்று தான் எனக்கு அதிக வருத்தம்! அலுவலகத்தில் பணிச்சுமை, மடிக்கணினியில் பிரச்சனை, எழுதவோ, படிக்கவோ ஆர்வம் இல்லாதது என பல காரணிகள் ஒன்றாய்ச் சேர்ந்து கொள்ள இந்த ஐம்பது நாட்களில் பதிவுலகம் பக்கமே வராமல் இருந்திருக்கிறேன். 2009-ல் எழுத ஆரம்பித்த பிறகு நான் எடுத்துக்கொண்ட நீண்ட இடைவெளி இதுவாகத் தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.




இந்த நாட்களில் நிறைய நிகழ்வுகள், எழுத வேண்டிய – ஆனால் எழுதாமல் விட்ட விஷயங்கள், ஒரு ஆர்வம் தந்த பயணம் – அதுவும் 18 பேர் கொண்ட குழுவினருடன் உல்லாசப் பயணம், என பல விஷயங்கள் நடந்து முடிந்தன. படிக்க வேண்டிய பதிவுகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது! முதலில் அவற்றை எல்லாம் படித்து விட்டு தான் பதிவுகள் பக்கம் வரலாம் என்று தோன்றினாலும், நடுநடுவே எனது பதிவுகளையும் எழுத வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வந்து ஒட்டிக் கொள்கிறது! காணாமல் போயிருந்த இந்த நாட்களில் பதிவுகளே வருவதில்லையே என்று பின்னூட்ட வழி விசாரித்த நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி. வாட்ஸப் வழி விசாரித்த கீதா அவர்களுக்கும், ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றிகள்! மற்றவர்களும் விசாரிக்கவில்லை என்றாலும், மனதிற்குள் காணவில்லையே என்ற எண்ணம் வந்திருக்கும் என்ற நம்பிக்கை உண்டு! இத்தனை நாட்கள் எழுதியதில் என்னை நினைத்துப் பார்க்கும் அளவுக்காவது நட்புகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது! பதிவுலகம் வந்ததில் கிடைத்த பல நட்புகள் இன்றைக்கும் தொடர்கிறது என்பது ஒரு சந்தோஷம் தரும் விஷயம் தானே!

இதோ இன்றைக்கு ஒரு பதிவுடன் பதிவுலகம் திரும்பி இருக்கிறேன். முன்பு போல தினம் ஒரு பதிவு எழுத சில நாட்கள் ஆகலாம்! ஆனாலும் அவ்வப்போது பதிவுகள் வெளியிடுவேன் என்று நம்பிக்கை உண்டு. விடுபட்ட பதிவுகளையும் ஒவ்வொன்றாக படித்து முடிக்க வேண்டும்! தொடர்ந்து பதிவுலகம் வழி சந்திப்போம் நண்பர்களே! மேலே கொடுத்துள்ள படங்கள், சமீபத்திய பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்! எந்த இடம் என்று யாரேனும் சொல்ல முடிந்தால் சொல்லலாம்!

வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


46 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி
    மேலேயுள்ள படத்தின் இடம் கோவா என்று நினைக்கிறேன்.

    நண்பர் டி.டி.யிடம் உங்களை காணவில்லையை என்று மூன்று தினங்கள் முன்பு பேசிக்கொண்டோம்.

    //வந்துட்டேன்னு சொல்லு//

    யாரிடம் சொல்ல ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கில்லர்ஜி.... நலம் தானே...

      இடம் கோவா அல்ல!

      டி.டி.யும் நீங்களும் என்னைக் காணவில்லை என்று பேசிக் கொண்டது அறிந்து மகிழ்ச்சி.

      யாரிடம் சொல்ல! ஹாஹா... :) பொதுவாக சொல்லிக் கொள்ள வேண்டியது தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி. உங்கள் பதிவுகளை - நான் படிக்க விடுபட்டுப் போன பதிவுகளை விரைவில் படித்து விடுவேன்!

      நீக்கு
  2. ஏதாச்சும் தீவா..
    நீங்களே சொல்லிடுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீவு தான் ரிஷபன் ஜி.... :))) பார்க்கலாம் வேறு யாராவது சொல்கிறார்களா என....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வருக... வருக....

    கலை வண்ணமாக
    நிழற் படங்களைக் காண ஆவல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலை வண்ணமாக நிழற்படங்கள் - விரைவில் வெளியிடுவேன் துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நானும் நினைத்தேன். தினம் ஒரு பதிவு என்று இடுபவராயிற்றே ஒரு பதிவையும் காணோமே என்று இன்றும் நினைத்தேன். வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜோசப் ஐயா. தினம் ஒரு பதிவு - பார்க்கலாம் எவ்வளவு சீக்கிரம் தினம் ஒரு பதிவு வெளியிடமுடிகிறது என!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாங்க வாங்க... பயணத்தை ரசிக்க ஆவலாய் உள்ளேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தினை ரசிக்க ஆவலுடன் நீங்களும்! நன்றி தனபாலன். விரைவில் வெளியிடலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மிக மகிழ்ச்சி ////

    என்னடா காணமே ன்னு நானும் நினைத்தது உண்டு ..இங்கு கருத்திடலாம் என எண்ணும் போது வழமை போல போடவில்லை ...


    நீண்ட இடைவெளி ஆனாலும் புத்துணர்வுடன் மீண்டும் பதிவுகளை காண காத்திருக்கிறோம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... நீங்களும் என்னைக் காணவில்லை என்று நினைத்தது அறிந்து மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி. சில சமயங்களில் இப்படித்தான் - நீண்ட இடைவெளி வந்து விடுகிறது - எழுதுவதில் சுணக்கமும்!

      தொடர்ந்து எழுதுவோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஆஹா மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. செஷல்ஸ் அல்லது மாலத்தீவு அல்லது அந்தமான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... இந்த மூன்றில் ஒன்று தான் Bபந்து ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள் வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  11. மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டு! :) வார்த்தை விளையாட்டு நன்று ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. 24 ரூபாய் தீவு! :) அது என்ன தீவு?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. ஹாஹா... தீவோ என்று தான் படித்தேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    நலமா? தங்களை காணவில்லையே என நினைத்துக் கொண்டேயிருந்தேன். வேலைச் சுமைகளில் பதிவு எழுதுவதில்லையோ எனவும், வேறு சுற்றுலா தலங்களுக்கு தீடிரென செல்லும் சந்தர்ப்பங்கள் வந்து விட்டதோ எனவும் நினைத்தேன்.அப்படி சுற்றுலாவுக்கு சென்றால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கமுடையவர் நீங்கள்.. எனவே என்ன காரணம் எனத் தெரியாமல் உங்கள் பதிவுகளை மட்டும் எதிர்பார்த்து காத்திருந்தேன். இன்று வந்த உங்கள் பதிவு மகிழ்வை தருகிறது. அடுத்தது சென்று வந்த பயணத்தின் விரிவை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே கமலா ஹரிஹரன் ஜி. பணிச்சுமை, கணினி பிரச்சனை என இணையம் பக்கம் வர இயலவில்லை. என்னைக் காணவில்லை என்று நீங்களும் நினைத்துக் கொண்டிருந்தது அறிந்து மகிழ்ச்சி. முடிந்தவரை நீண்ட இடைவெளி இல்லாமல் பதிவு எழுத நினைத்திருக்கிறேன். தங்களது அன்பிற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. ஆஹா... புதுப் புது அடைமொழிகளை வைத்துக் கொள்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே! மகிழ்ச்சி. உங்கள் வருகை மகிழ்ச்சி தந்தது அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. உண்மையில் ஸ்ரீராமிடமாவது கேட்கணும். இல்லாவிடில் ஆதியிடம் கேட்கணும் எனு நினைத்துக் கொண்டிருந்தேன் வெங்கட்.
    உங்க பதிவுப்பக்கம் அடிக்கடி சென்று பார்ப்பேன்.
    எபியில் அப்டேட் ஆகவில்லைன்னால்,என்ன ஆச்சுன்னு
    ரொம்ப யோசனை.
    நீங்கள் நலமாக இருப்பது குறித்து அறிய நன்றி.

    எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்கள் அன்பிற்கு நன்றி வல்லிம்மா...

      சில சமயங்களில் இப்படி இடைவெளி வந்து விடுகிறது. இம்முறை நீண்ட இடைவெளி தான். இனிமேல் இப்படி இடைவெளி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. வரலைனு நினைச்சுப்பேன். ஆனால் புது அலுவலகம், பணிச்சுமை என்று புரிந்தது. ஆகையால் யாரிடமும் விசாரிக்கவில்லை. வாட்சப் எண் உங்களோடது என்னிடம் 2 இருப்பதால் எதுனும் தெரியலை! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலைன்னு நினைச்சுப்பேன்! மகிழ்ச்சி கீதாம்மா. இரண்டு வாட்சப் எண் - ஹாஹா... முதலில் இருந்ததை மாற்றியது குறித்து அதிலேயே தகவல் வரும்படி செய்திருந்தேன். இப்போது உங்களுக்குத் தெரிவித்து விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. அதே அதே... அந்தமான் தான் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. Welcome back! நானும் உங்களைப் பற்றி எ.பி.யில் விசாரித்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா எ.பி. விசாரித்தது அறிந்து மகிழ்ச்சி பானும்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தொடர்வதில் மகிழ்ச்சி யாழ்பாவண்ணன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. அதிகம் பயணிப்பவருக்கு எழுத விஷயங்கள் இல்லாமல் இருக்காது தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத விஷயம் இல்லாமல் இல்லை! ஆனாலும் எழுதுவதில் சுணக்கம் வந்து விட்டால் எங்கே எழுதுவது ஜி.எம்.பி. ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. வருக வருக என வரவேற்கிறேன். தாங்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அந்தமானில் எடுக்கப்பட்டது என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நடனசபாபதி ஐயா. அந்தமானில் எடுக்கப்பட்ட படம் தான் இப்பதிவில் வெளியிட்டு இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. எங்கே பதிவுகளை காணவில்லையே மிகுந்த பிஸி என எண்ணினேன். ஆகா! அந்தமான் பயணம் தொடர்கிறது.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணவில்லை என நீங்களும் நினைத்தது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....