திங்கள், 2 டிசம்பர், 2019

முகம் காட்டச் சொல்லாதீர் – கவிதைத் தொகுப்பு


அன்பின் நண்பர்களுக்கு….

வணக்கம்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றைய தினம் எனது வலைப்பூவில் வெளியிட்ட வந்துட்டேன்னு சொல்லு - சற்றே இடைவெளிக்குப் பிறகு… பதிவினை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். படிக்காதவர்கள் சுட்டியின் மூலம் படிக்கலாமே!
இடைவெளியில் வெளிவந்த ஒரு மின்னூல் பற்றிய தகவலுடன் இன்றைக்கு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். ”முகம் காட்டச் சொல்லாதீர்” என்ற தலைப்பில் WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் வெளிவந்த ஒரு மின்னூல் பற்றி தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம்!

பயணங்கள் செல்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனதுசந்தித்ததும் சிந்தித்ததும்வலைப்பூவினை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு எனது பயணங்களும், பயணங்கள் பற்றி நான் எழுதிய பயணக்கட்டுரைகளும் பிடித்தமான விஷயம் [அப்படித்தானே?].  அப்படி வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து சில மின்னூல்களும் வெளி வந்திருக்கின்றன.  பயணங்களில் என் கூடவே வருவது எனது டிஜிட்டல் காமெரா – Canon DSLR. பயணக் குறிப்புகள் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாது நிறைய நிழற்படங்களும் எடுத்து கட்டுரைகளில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அப்படி எடுத்த சில நிழற்படங்கள் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். நிழற்படங்களுக்குப் பொருத்தமான கவிதை வரிகளை எழுதினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற யோசனை வரும்! கட்டுரைகள் எழுதும் அளவிற்கு கவிதைகள் எழுதுவது எனக்கு வராது! இதுவரை முயற்சித்ததும் இல்லை!  கல்லூரி சமயத்தில் வாக்கியங்களை மடக்கி எழுதி, “கவிதைஎன்று நினைத்துக் கொண்டதுண்டு! அவற்றையும் என்னுடைய நண்பர்களுக்குக் கூட காண்பித்தது இல்லை!  மற்றவர்கள் எழுதும் கவிதைகளை ரசிப்பதும், அவற்றை சேகரிப்பதும் ஒரு பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. 

வலையுலகில் எழுத ஆரம்பித்த பிறகு நான் எடுத்த சில நிழற்படங்களை எனது பக்கத்தில் பகிர்ந்து அவற்றுக்கு கவிதை எழுதச் சொல்லி, வலையுலக நண்பர்கள் எழுதிய கவிதைகள் எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன். எனது வலைப்பூவில் அப்படி வெளிவந்த கவிதைகள் நிறையவே இருக்கிறது.  அப்படி வந்த கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து ஒரு மின்னூலாக வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  அந்த எண்ணத்திற்குக் கொடுத்த செயல்வடிவமே இப்போது மின்னூலாக வெளிவந்திருக்கிறது.  வெளியிடப்பட்டு ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இதுவரை 550 நபர்கள் தரவிறக்கம் செய்து இருக்கிறார்கள்.  இந்த மின்னூல் வெளியிடப்பட்ட தகவலைக் கூட இங்கே பகிர்ந்து கொள்ள இயலவில்லை! இருப்பினும் இதுவரை தரவிறக்கம் செய்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.  இந்த மின்னூலில் இருக்கும் கவிதைகளை எழுதிய பல நண்பர்கள் இங்கே பதிவுலகில் இருப்பவர்கள் தான். சிலர் மட்டும் பதிவுலகில் இல்லை என்றாலும் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தவர்கள்.  அனைவருக்கும் மீண்டும் எனது நன்றி!

இப்புத்தகத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம், அவை எடுக்கப்பட்ட இடம், நிழற்படம் பற்றிய எனது கருத்துகளைத் தொடர்ந்து நண்பர்கள் எழுதிய கவிதைகளும் இருக்கின்றன.  இதோ புகைப்படங்களும், கவிதைகளும் உங்கள் ரசனைக்காக  புகைப்படத்திற்குத் தகுந்த கவிதைகளை எழுதி அனுப்பி, வெளியிட அனுமதித்த நண்பர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.  பாராட்டுகள் அனைத்தும் கவிதை எழுதிய நண்பர்களுக்கே.  மின் புத்தகத்தில் குறைகள் இருப்பின் அதற்கான காரணம் - அவர்கள் அல்ல! நான் மட்டுமே! மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள நினைப்பவர்கள் கீழே உள்ள சுட்டி மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!


கவிதைகள் பற்றிய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. புத்தத்தைத் தரவிறக்கிக் கொள்கிறேன்.   பின்னர்தான் வாசிக்கவேண்டும்.   நன்றி வெங்கட், பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட். எனக்கும் இது போல புத்தகங்களை ஆன்லைன்ல் கொடுக்க ஆசை. எப்படி செய்யப் போகிறேன் என்றுதான் கீதாவிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
   தரவிறக்கம் செய்து படிக்கிறேன் மா வெங்கட்.

   நீக்கு
  2. முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் ஸ்ரீராம். உங்களது சிறு கவிதை கூட புத்தகத்தில் உண்டு என்பதையும் சொல்லிக் கொண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. உங்கள் பதிவுகளையும் மின்புத்தகமாக வெளியிடலாம் வல்லிம்மா... எந்தப் பதிவுகள் என்று முடிவு செய்யுங்கள். கூடவே இலவசமாக தரவிறக்கம் செய்யும்படிச் செய்ய வேண்டுமா இல்லை அமேசான் போன்ற தளங்கள் வழி விலை கொடுத்து தரவிறக்கம் செய்யும் புத்தகமாக வெளியிட வேண்டுமா என்று முடிவு செய்தால் மின்னஞ்சல் வழி சொல்லுங்கள். செய்து விடலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. புத்தகம் தரவிறக்கிப் படித்ததும் சொல்றேன் வெங்கட், வல்லியிடம் உங்களைத் தான் கேட்கச் சொன்னேன். புஸ்தகா.காம் பற்றிச் சொல்வதற்கு. க்ரியேட்டிவ் காமன்ஸ் என்றால் எனக்கும் ஸ்ரீநிவாசன் நண்பரே! என்னுடையது சுமார் பத்துப் புத்தகங்கள் க்ரியேடிவ் காமன்ஸ் மூலம் வந்திருக்கின்றன. அவரிடமும் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாம்மா... புஸ்தகா.காம் சரியாக இயங்குவதில்லை - மின்னஞ்சல் அனுப்பினால் பதில் கூட அனுப்புவதில்லை. ஸ்ரீநிவாசன் மூலமோ அல்லது அமேசான் மூலமோ வெளியிடலாம் என்று வல்லிம்மாவிற்கு மேலே பதில் சொல்லி இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்.
  தரவிறக்கிப் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தரவிறக்கம் செய்து கொள்வது அறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா... முடிந்த போது படித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நேரம் கிடைக்கும் போது தரவிருக்கம் செய்து படிக்கிறேன். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கக்ள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது தரவிறக்கம் செய்து படியுங்கள் மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. தரவிருக்கம் செய்து படிக்க ஆவலாக இருக்கிறேன் வெங்கட் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது தரவிறக்கம் செய்து படியுங்கள் இராமசாமி ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. மிக மகிழ்ச்சி ....வாழ்த்துக்களும் .,..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி!

   நீக்கு
 7. 500 பேர்களுக்கு மேல் தரவிறக்கம் செய்து உள்ளனர். பெரிய சாதனை. வாழ்த்துகள். தொடர்ந்து இது போன்று ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்தவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பிற்கும் உற்சாகம் தரும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  அத்தனையும் படித்தேன். தலைப்பு நன்றாக உள்ளது. நல்லதொரு பகிர்வு. புத்தகம் தொகுத்து வெளிட்டமைக்கு வாழ்த்துக்கள். நானும் கண்டிப்பாக படிக்கிறேன். மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தகம் பற்றிய உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாழ் பாவண்ணன்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. இத்தனை பேர்வாசித்திருக்கிறார்கள் இத்தனைபேர் தரவிறக்கம் செய்துள்ளார்கள் என்று அறிவது எப்படி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தகம் தரவிறக்கம் செய்யும் பக்கத்திலேயே இந்த தகவல்கள் உண்டு ஜி.எம்.பி. ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. கேட்டுக் கொண்டாலும்முகம் காட்ட விரும்பாதவர்களே பதிவுலகில் அதிகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகம் காட்ட விரும்பாதவர்களே பதிவுலகில் அதிகம்... :) ம்... என்ன சொல்ல ஜி.எம்.பி. ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. வாழ்த்துகள். தரவிறக்கம் செய்துவிட்டேன். படிக்க இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் வே. நடனசபாபதி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொண்டேன். நல்லதோர் வாய்ப்பினை அளித்து, அதை புத்தகமாகவும் வெளியிட்டு பெருமையளித்த தங்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தபோது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் தமிழ்முகில் ப்ரகாசம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 17. இப்போது தான் பார்த்துத் தரவிறக்கம் செய்திருக்கிறேன்.. வாழ்த்துகள் அண்ணா .வித்தியாசமான அருமையான முயற்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தரவிறக்கம் செய்து கொண்டதில் மகிழ்ச்சி. முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள் கிரேஸ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....