அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தலைநகரிலிருந்து பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
“NEVER LEAVE A TRUE RELATION FOR FEW FAULTS; NOBODY IS PERFECT; NOBODY IS CORRECT AT THE END; AFFECTION IS ALWAYS GREATER THAN PERFECTION.
******
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு
சென்ற பகுதியில் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்ல கிழக்கு கோபுர வாயிலை நாங்கள் தேர்ந்தெடுத்தது பற்றியும், கையில் வைத்திருந்த Handbagஆல் சிக்கல் வந்தது எனவும் சொல்லியிருந்தேன் என்பது நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
காலணிகளுக்கு ஒரு கவுண்ட்டர், செல்ஃபோனை வைக்க குட்டி குட்டியாக லாக்கர், இனி என்ன! நேரே நாம் உள்ளே சென்று விடலாம் என்று நினைத்துக் கொண்டு தான் வரிசையில் நின்றோம். சிறிது தொலைவில் லேடி போலீஸ் ஒருவர், ஒவ்வொருவராக சோதித்துக் கொண்டிருக்க, Handbagலாம் எடுத்துட்டு போகக்கூடாதும்மா! என்று அதட்டிக் கொண்டே இருந்தார்.
நாங்க வெளியூர்ம்மா! இத எங்க வைக்கறது! இதுல பெரிசா ஒண்ணும் இல்ல! செல்ஃபோனெல்லாம் லாக்கர்ல வெச்சிட்டோம்! என்று எவ்வளவோ சொல்லியும், திறந்து பார்த்து விட்டு, சார்ஜர் இருக்கு! Headset இருக்கு! இது ஏன் இருக்கு! அது ஏன் இருக்கு! என்று வரிசையாக கேட்ட படி, பர்ஸைக் காட்டுங்க! என்றார்.
பர்ஸில் கொஞ்சம் பணமும், டெபிட் கார்டும் இருந்ததைப் பார்த்து விட்டு, இத மட்டும் வேணா உள்ளே எடுத்துட்டு போலாம்! Bagஐ கொண்டு போய் வெச்சிட்டு வாம்மா! என்று விரட்டி விட்டார்..!! நாங்கள் நின்ற வரிசையிலிருந்து வெளியே வந்து, பைகளை வைப்பதற்கென இருந்த கவுண்ட்டரில் டோக்கன் போட்டு வைத்து விட்டோம். இங்கு லாக்கர் எல்லாம் ஒன்றும் இல்லை! பொதுவில் மாட்டி வைத்து விடுகிறார்கள் அவ்வளவு தான்!!
சரி! டோக்கனை காண்பித்து விட்டு சென்று விடலாம் என்று நினைத்தோம்..:) ஆனால்! நம் மக்கள் எல்லா இடங்களிலுமே செய்வது தான்! ஐந்தே நிமிடங்கள் முன்னே பின்னே தான் என்றாலும் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்..:) அதில் அவர்களுக்கு ஒரு பெருமிதமும், வெற்றிக் களிப்பும் உண்டாகும்..:) இப்போதும் எங்களை யாரும் உள்ளே அனுமதிப்பதாக இல்லை..:) பரவாயில்லை! என மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று வரிசையில் சென்றோம். அதே லேடி போலீஸ் தான் இப்போதும் சோதனை செய்து கொண்டிருந்தார்.
கையில் வைத்திருந்த பர்ஸை மீண்டும் திறந்து காண்பிக்கச் சொன்னார். இப்போ தானே பார்த்தீங்க! என்றேன். எத்தன தடவை வேணாலும் காட்டச் சொல்வோம்! காட்டணும்! என்று அதிகாரத் தொனியில் சொல்ல, திறந்து காண்பித்தேன். சரி! போலாம்! என்று நகரச் சொன்னார்.
ஒருவழியாக இந்த சோதனைகள் எல்லாம் முடிந்தாயிற்று. இனி உள்ளே போகலாம் என்று நினைத்த வேளையில் இன்று வெள்ளிக்கிழமையாச்சே! முகூர்த்த நாள் வேற! கும்பல் எவ்வளவு இருக்கும் என்று தெரியலையே! என்று பேசிக் கொண்டவாறே தான் அம்பாள் சன்னிதி நோக்கி நடந்தோம்.
பொற்றாமரைக் குளத்தை பார்த்ததும் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்ற நக்கீரர் தான் நினைவுக்கு வந்தார். அங்கேயிருந்து பார்த்த பிரம்மாண்ட கோபுர தரிசனம்! அடேயப்பா! எத்தனை எத்தனை சிற்பங்கள்!! சே! கையில் ஃபோன் இல்லையே! அழகா ஒரு ஃபோட்டோ எடுத்திருக்கலாம்!
ஃபோட்டோ என்றதும் எனக்கு யார் நினைவுக்கு வருவார் என்று உங்களுக்கு தெரியாததா..:) இப்போ அவர் கூட இருந்தா நல்லா இருந்திருக்கும் என்று தான் தோன்றியது..:)
சரி! அம்பாள் தரிசனம் எளிதில் கிடைத்ததா! கும்பல் எப்படியிருந்தது என்றெல்லாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்..
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
இப்படிதான் கும்பிட வேண்டும் என்று பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் குவிந்து விட்டன. கேட்டால், கோவிலைப் பாதுகாக்கிறார்களாம். காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்று பாடவேண்டும் போல தோன்றுகிறது!
பதிலளிநீக்குவாஸ்தவம் தான் சார். நாம் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும்.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவாசகமும் பதிவும் நன்றாக உள்ளது. ஹேண்ட்பாக், பர்ஸ் எல்லாமா திறந்து சோதனை இடுவார்கள். திறக்காமல் சோதனையிட அதற்கென ஒரு மின்சார யந்திரம் உண்டே.. அது எல்லா இடத்திலும் இப்போது உள்ளதே.. அதை பயன்படுத்த கூடாதா?
கோவிலின் உள்ளே சென்றதும் உங்களுக்கு நக்கீரர் நினைவுக்கு வந்த மாதிரி, "இது என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை" என்ற பாலையா வசனம் எனக்கும் நினைவுக்கு வருகிறது:))))
/ஃபோட்டோ என்றதும் எனக்கு யார் நினைவுக்கு வருவார் என்று உங்களுக்கு தெரியாததா..:) இப்போ அவர் கூட இருந்தா நல்லா இருந்திருக்கும் என்று தான் தோன்றியது..:) /
அவர் நினைவு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா? கும்பல் இல்லாமல் மீனாட்சியை பார்த்தீர்களா? மதுரை பயணப் பதிவை ரசித்தேன் சகோதரி. தொடர்ந்து நானும் பயணிக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பேக் வைக்கும் இடத்தில் தான் ஸ்கேனர் இருந்தது. அதில் போட்ட பின் தான் வைக்க முடியும். ஆனாலும் கையில் வைத்திருக்கும் பர்ஸை லேடி போலீஸ் சோதனை செய்து தான் அனுப்பினார்.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க கமலாஜி.
மூன்று மாதம் முன் சென்றபோது எங்களுக்கும் இதே அணுபவம் மேடம்.
பதிலளிநீக்குஇப்போது கெடுபிடிகள் மிக அதிகம்.
பணத்திற்கு மதிப்பு என்பது புதிது இல்லை.
மனித சமூகத்தை ஒன்றினைப்பதில் ஆரம்பகட்டத்தில் மதம், பின்னர் பணத்த்ின் உருவாக்கம், அரசாங்கங்கள், நிறுவனங்கள், இப்போது தறவு "data analises" இவற்றின் பங்கு குறித்து விளக்கும் "Sappiens" நூலை குறித்து எழுதும்போது இவற்றின் பலம் குறித்து விரிவாக பேசலாம்.
தங்களுக்கும் இதே அனுபவங்கள் தான் கிடைத்ததா!
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அரவிந்த் சார்.
அம்பாள் தரிசனம் பற்றிய விபரங்கள் அறிய ஆவல்.
பதிலளிநீக்குஅடுத்த பகுதியில் தெரிந்து விடும்.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க கில்லர்ஜி சார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இப்போது கெடுபிடி அதிகம்தான்.
பதிலளிநீக்குஆமாம் அம்மா.உண்மை தான்.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.
வெங்கட், ஆதி வெங்கட் குடும்பத்தினருக்கு எங்களின் தீபாவளி நல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள் நெல்லை சார்.
நீக்குஇனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீராம் சார்.
நீக்குஅன்பின் ஆதி,
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
வெங்கட் டை நீங்க மிஸ் பண்ணித்தான் இருப்பீர்கள்.
இப்படியா சோதிக்கிறார்கள். செம கடுப்பா இருக்கே.:(
அதையும் மீறி நீங்கள் அம்மனை தரிசித்தது அவள் அருள்.
இனிமேல் கைப்பையை விட்டு விட்டுச் செல்ல வேண்டும் போல இருக்கிறது.
சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.
பகிர்வுக்கு மிக நன்றி மா.
ஆமாம் அம்மா. கெடுபிடிகள் மிக அதிகம் தான்.கைப்பையை விட்டுவிட்டு செல்வது தான் நல்லது.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நாஞ்சில் சிவா சார்.
நீக்குதீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு