அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தீபாவளி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
“NEVER LEAVE A TRUE RELATION FOR FEW FAULTS; NOBODY IS PERFECT; NOBODY IS CORRECT AT THE END; AFFECTION IS ALWAYS GREATER THAN PERFECTION.
******
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி மூன்று
சென்ற பகுதியில் மீனாட்சியம்மன் கோவில் உள்ளே பல சோதனைகளுக்குப் பின் சென்ற கதையைப் பற்றி பகிர்ந்து கொண்டிருப்பேன். வாங்களேன்! எங்களோடு நீங்களும் தரிசனம் செய்து கொள்ளலாம்.
மதுரையில் மீனாட்சி ராஜ்ஜியம் தானே! அதனால் முதலில் அம்பாளை தரிசனம் செய்து கொள்ளலாம் என்று செல்லத் துவங்கினோம். இலவச தரிசனத்தில் நல்ல கும்பல்! தரிசனம் செய்யக் குறைந்தது மூன்று மணிநேரமாவது ஆகும். காசு கொடுத்து சாமியைப் பார்ப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை தான். ஆனால் இருக்கும் நேரமோ குறைவு. காலையில் வேறு பயணம் செய்யணுமே!
50 ரூ கட்டண தரிசனமே போகலாம் என முடிவு செய்து என் மாமா சென்று டிக்கெட்டுகளை வாங்க, அந்த வரிசை எங்கேயுமே நிற்கவில்லை. பத்தே நிமிடத்தில் அம்பாளின் அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றது. அடுத்து சுந்தரேஸ்வரர், பின்பு மகாலஷ்மி, முக்குறுணி விநாயகர் என்று வரிசையாக இன்னும் பிற சன்னிதிகளுக்கும் சென்று வந்தோம்.
செல்லும் இடத்தில் எல்லாம் எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டேன். நோய்த்தொற்று முற்றிலும் நீங்கி எல்லோரும் நலமாக இருக்கணும்! முதலில் பொதுநலம்! அப்புறம் சுயநலம்...:)
கிழக்கு கோபுர வாயிலில் தான் எங்கள் உடமைகளை வைத்திருக்கிறோம் என்பதால் கிழக்கு கோபுரத்திற்குச் செல்லும் வழியை பார்த்து வெளியே வந்து கொண்டிருந்தோம். வழியில் சில கடைகள் இருந்தன. அதில் சுவாமிப்படங்கள், கொலு பொம்மைகள், மரச் சொப்பு சாமான்கள், தாழம்பூ குங்குமம், தாலிச்சரடு என்று இன்னும் பிறவும் இருந்தது. எங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு திரும்பினோம்.
கோவிலை விட்டு வெளியே வந்து காலணிகளை எடுக்கச் செல்கையில், 'அக்கா! காலையிலிருந்து சாப்பிடல! இந்த பின்(safety pins) வாங்கிக்கோக்கா!' என்று ஒரு சிறுவன் பின் தொடர்ந்தான். இருக்கு தம்பி! என்றேன். அவன் விட வில்லை! சரி! பணத்தை மட்டும் கொடுத்து விடலாம்! என்று பணத்தை நீட்டியதும் அதை வாங்கிக் கொண்டு, கையில் கொத்தாக பின்களை வைத்து அழுத்தி விட்டு சென்று விட்டான்.
காரில் ஏறி மண்டபத்துக்கும் வந்து விட்டோம். தியேட்டருக்குச் சென்ற கும்பல் வருவதற்கு நேரமாகும் என்பதால் நாங்கள் எல்லோரும் டின்னருக்குச் சென்றோம். சேமியா கிச்சடியுடன் சப்பாத்தி குருமாவும், தயிர்சாதமும் பரிமாறப்பட்டது. வேண்டியதை அளவுடன் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
படம் பார்த்து விட்டு வந்த மகளை சாப்பிடச் சொல்லி விட்டு அறைக்குத் திரும்பினேன். மறுநாள் மேற்கொள்ளப் போகும் பயணத்துக்கு ஏற்றாற் போல் பேக் செய்யணுமே! காலை 6:30 மணிக்கெல்லாம் எல்லோரும் தயாராகி வேனில் ஏற வேண்டுமாம்.
எங்கே செல்லப் போகிறோம்?? எதற்காக இந்தப் பயணம்? எப்படியிருந்தது அந்தப் பயணம்?? போன்ற கேள்விகளுக்கான விடையை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
உங்களோடு சேர்ந்து நாங்களும் மீனாட்சியை தரிசித்துக்கொண்டோம்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குபொற்றாமரைக் குளத்தை விட்டு எழுந்து வரவே மனமிருக்காது. ரொம்பப் பிடித்த இடம். எந்த ஹோட்டலில் சாப்பிட்டீர்கள்? எங்கு தங்கி இருந்தீர்கள்?
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதொடர்கிறேன்...
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குஅடுத்த பயணம் அறிய ஆவல் தொடர்ந்து வருகிறேன்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குசிறப்பு. தொடர்ந்து வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குமதுரை பயணம் மிகவும் அருமையாக அமைந்து விட்டது.
பதிலளிநீக்குமதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது .
மதுரை போனதிலிருந்து 100,50 ரூ கட்டண தரிசனமே செய்து இருக்கிறோம்.. 50 ரூபாய் கட்டணத்தில் சில நேரம் கூட்டம் இருக்கும் அப்போது 100 கட்டணத்தில் பார்த்து வருவோம்.
பயண அனுபவ பகிர்வு அருமை.
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்கு