வியாழன், 4 நவம்பர், 2021

தீபாவளி - வாழ்த்துகள் - விளம்பரம் - காணொளி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மதுரைக்கு ஒரு பயணம் பதிவையும் தீபாவளி எங்கள் வீட்டு இனிப்பும் காரமும் பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“NEVER LEAVE A TRUE RELATION FOR FEW FAULTS; NOBODY IS PERFECT; NOBODY IS CORRECT AT THE END; AFFECTION IS ALWAYS GREATER THAN PERFECTION.


******


தீபாவளி - இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தீபாவளி பண்டிகை - தீநுண்மி இன்னமும் தனது கோர முகத்தினை அவ்வப்போது தூக்கிக் காண்பித்துக் கொண்டிருக்கிறது - உலகமெங்கும் இதன் தாக்கம் இருந்தாலும், இந்தியாவில் இரண்டாம் அலை என்று சொல்லப்பட்ட சமயங்களில் இழப்புகள் ஏராளம்.  இந்த தொல்லைகளிலிருந்து விடுபட அனைவருக்கும் ஆசை தான்.  ஆனாலும் தகுந்த பாதுகாப்பை தொடர வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.  இந்த வருடம் தீபாவளி சமயத்தில் தமிழகத்திற்கு வர இயலாத சூழல் - அதனால் தனி ஆவர்த்தனம் தான்! (வழக்கம் போல என்றும் தோன்றுகிறது!) தீபாவளி கொண்டாட்டங்கள் முன்பு போல பெரிதாக ஏதும் இருப்பதில்லை - குறிப்பாக எனக்கு!  அதுவும் தலைநகரில் தனியாக இருக்கும்போது கொண்டாட்டங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  இந்த வருடமும் இதுவரை எந்த வித திட்டமும் இல்லை. தீபாவளி அனைவருக்கும் நல்லதையே கொடுக்கட்டும்.  


தீபாவளி சமயத்தில் பண்டிகை குறித்த நிறைய விளம்பரங்கள் வந்தாலும் எல்லாம் சிறப்பாக இருப்பதில்லை. ஆனால் சில விளம்பரங்கள் மனதைத் தொடும்படி அமைந்து விடும். அப்படி இரண்டு விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு.  முதலில் HP Printers விளம்பரம்!

மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்க முடியும். 


HP ad on Diwali | Patel Juice Corner | Diye se diya jalao | Viral Diwali Ads 2021 - YouTube


******


இரண்டாவது விளம்பரமும் நல்ல விளம்பரமே - இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிவந்ததாக இருந்தாலும்! பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்க முடியும். 


Dhanteras | Potters ki Diwali | The India Thing | Shubham| Resham |Vishal Chaturvedi - YouTube


******


அனைத்து நண்பர்களுக்கும், எங்கள் குடும்பத்தினரின் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள். நல்லதே நடக்கட்டும்.

பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


18 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் அன்புடன் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வெங்கட்,
  தீபாவளித் திருனாளை சீரங்கம் போகும் போது
  கொன்டாடுங்கள்.
  சென்னையில் மழையைத் தவிர வேறெதும் வெடியோ ,
  போக்குவரத்தோ காணோம்.
  தில்லியில் பட்டாசு மாசு அதிகரித்திருக்கு என்று
  சொன்னார்கள்,.

  காணொளிகளைப் பிறகு பார்க்கிறேன்.
  இப்போது தீபாவளி மும்முரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.

   நீக்கு
 3. //முதலில் HP Printers விளம்பரம்!//
  மிக அருமை. கண்ணில் நீர் துளிர்த்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

   நீக்கு
 4. அடுத்த காணொளியும் நெகிழ்வு. ஏழையின் பரிசும், சிரிப்பும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

   நீக்கு
 5. தீபாவளி நல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

   நீக்கு
 6. விளம்பரங்கள் அழாகாகக் கருத்துடன் எடுக்கிறார்கள் இப்போதெல்லாம். குறும்படம் போலவே...

  முதல் காணொளி ரொம்பவே ஈரம் வரவழைத்துவிட்டது. இரண்டாவதும் நெகிழ்ச்சி...

  வாழ்த்துகள் உங்கள் எல்லோருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. நெகிழ வைக்கும் விளம்பரங்கள். நல்ல பகிர்வு.

  அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....