வெள்ளி, 19 நவம்பர், 2021

மதுரைக்கு ஒரு பயணம் - ஆதி வெங்கட் - பகுதி பத்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காதலித்துப் பார் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்… சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள். பலர் அதையும் கேட்பதில்லை.


******


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி மூன்று


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி நான்கு


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஐந்து


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஆறு


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஏழு


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி எட்டு


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்பது



சென்ற பகுதியில் சிவகங்கையில் என் மாமா வீட்டில் மாலை வரை இருந்ததைப் பற்றி எழுதியிருந்தேன். மாலை 5 மணி ரயிலுக்கு மாமா ஒரு வண்டியிலும், மாமா மகன் ஒரு வண்டியிலுமாக எங்களை ஏற்றிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து ரயிலேற்றி விட்டார்கள். மாமா வீட்டிலிருந்து ஸ்டேஷன் ஐந்து நிமிடங்கள் தான்!


மதுரைக்குச் செல்லும் போது ரம்மியமாக இருந்த ரயில் பயணம் இப்போது ஸ்வாரஸ்யம் ஏதும் இல்லாமல் வெறுமையாக இருந்தது என்று சொல்வேன். அப்போது எல்லோரையும் காணப் போகும் ஆவல்! இப்போது எல்லோரையும் விட்டு பிரிந்து வந்த வெறுமை! இனி இது போன்ற சந்தர்ப்பம் எப்போது அமையுமோ!


மாலை 5 மணிக்கு சிவகங்கையிலிருந்து புறப்பட்ட நாங்கள் 8 மணிக்கு திருச்சி ஜங்ஷனை வந்தடைந்தோம். அங்கிருந்து வெளியே வந்து ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்தைப் பிடித்தோம். பேருந்தில் வழியெங்கும் கேட்டுக் கொண்டே வந்த இசைஞானியின் இதமான பாடல்கள் மனதுக்கு ஒரு மாற்றத்தைத் தந்தது. 


சத்திரம் பேருந்து நிலையத்தை கடக்கும் போது நல்ல மழை! மழையோடு ஸ்ரீரங்கத்தை எட்டியதும் ஒரு ஆட்டோவை பிடித்து 9 மணியளவில் தான் வீட்டை அடைந்தோம்.  வீட்டிற்கு வந்ததும் முதலில் செய்த வேலை அடுப்பங்கரைக்குச் சென்று தோசைக்கல்லை அடுப்பில் வைத்தது தான்...:) இனி என்ன! அன்றாட வாழ்வோடு ஒன்றி விடுவது தான்..:)


இந்தப் பயணத்தில் உறவுகள் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்ததில் மனதுக்கு மகிழ்ச்சி! மகளுக்கும் எல்லோரையும் காண்பிக்க முடிந்தது! எப்போதும் எங்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்ட மாமாக்களும், மாமிக்களும்! அக்கா! அக்கா! என பிரியத்துடன் வளைய வந்த மாமா மகன்களும், மாமா மகள்களும்! மற்ற பிற சொந்தங்களும்! இவர்களிடையே இருந்த மூன்று நாட்களும் 'அம்மா'வின் அருகாமையை என்னால் உணர முடிந்தது!


அடுப்பங்கரையே கைலாசம்! ஆம்படையானே குலதெய்வம்! என்ற வழக்கு சொல்லுக்கு ஏற்றாற் போல வீட்டைத் தவிர சிந்தனைகள் ஏதுமின்றி இயந்திரத்தனமாக அன்றாட வாழ்க்கையை கடத்திக் கொண்டிருந்த எனக்கு, இந்த மூன்று நாட்களை சொந்த பந்தங்களோடு செலவிட முடிந்ததில்  மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்வைத் தந்தது என்று சொல்லலாம்.


என்னைப் போன்ற 'வீட்ல சும்மா தானே இருக்க' என்று பேர் பெற்ற இல்லத்தரசிகளுக்கு சந்தோஷம் தருவது எது என்று கேட்டால் 'தானே சமைத்து சாப்பிடுவதை விட என்றாவது ஒருநாள் இன்னொருவரின் கைப்பக்குவத்தில் அமர்ந்து சாப்பிடுவது' என்று சொல்லலாம். அப்படி இந்தப் பயணம் முழுவதுமே எந்த வேலையும் இல்லாமல், வேளாவேளைக்கு நிதானமாக ரசித்து சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற வாய்ப்புகள் எனக்கு எப்போதாவது அமைவது தான்..:) 


இந்த பயணத்தொடரில் என்னுடன் பயணித்து இதுவரை தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


14 கருத்துகள்:

  1. பயணம் மிகச் சிறப்பு.

    பெண்களுக்கு வாரத்தில் ஒரு நாளாவது ரெகுலர் ரொட்டீனிலிருந்து ஓய்வு கிடைப்பது நல்லது. எப்போதும் ஒரே மாதிரி வேலை போரடித்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரத்தில் ஒரு நாளாவது ரெகுலர் ரொட்டீனிலிருந்து ஓய்வு கிடைப்பது நல்லது - சரி தான் நெல்லைத் தமிழன். மிகவும் அவசியமும் கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அன்றாட நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி மூன்று நாள் வித்தியாசமான அனுபவங்களில், உறவுகளின் சந்திப்புகளிலும் கழித்த நினைவுகளோடேயே மறுபடியும் திரும்பிய வழக்கமான சொர்க்கத்தில் நாட்களை கழிக்கலாம் - அடுத்த வெளியூர்ப் பயணம் அமையும்வரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான அனுபவங்கள் தான் ஸ்ரீராம். அவ்வப்போது இப்படியான சந்திப்புகள் மிகவும் அவசியம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. மகிழ்ச்சி அளித்த பயணமும் கூட தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. என்னைப் போன்ற 'வீட்ல சும்மா தானே இருக்க' என்று பேர் பெற்ற இல்லத்தரசிகளுக்கு சந்தோஷம் தருவது எது என்று கேட்டால் 'தானே சமைத்து சாப்பிடுவதை விட என்றாவது ஒருநாள் இன்னொருவரின் கைப்பக்குவத்தில் அமர்ந்து சாப்பிடுவது' என்று சொல்லலாம்.//

    உண்மை உண்மை ஆதி. அதுவும் வீட்டில சும்மாதானே இருக்க என்று கேட்டாலே எனக்குச் சில சமயம் கோபம் வரும்.

    நிச்சயமாகப் பயணம் என்பது அதுவும் நம் உறவுகளைப் பார்த்து பேசி மகிழ்ந்து வருவது ஒரு உற்சாக டானிக். இது கொஞ்சம் நாள் நம்மை ஓட்டும்.. நல்ல பயணம். மீண்டும் பேக் டு ஸ்கொயர் ஒன்!!!! ரொட்டீன்.

    இடையிடையே கொஞ்சம் ஒரு நாளேனும் மகளுடன் வெளியே சென்று வாருங்கள் ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்ல சும்மா தான இருக்க - கோபம் வரவைக்கும் கேள்வி தான் கீதாஜி. பலரும் இந்த அவஸ்தையை அடைவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மனம் மகிழ்ச்சி நிறைந்த பயணம் இல்லையா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் மகிழ்ச்சி நிறைந்த பயணம் தான் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    தொடர் பயணம் குறித்து இதுவரை அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    /என்னைப் போன்ற 'வீட்ல சும்மா தானே இருக்க' என்று பேர் பெற்ற இல்லத்தரசிகளுக்கு சந்தோஷம் தருவது எது என்று கேட்டால் 'தானே சமைத்து சாப்பிடுவதை விட என்றாவது ஒருநாள் இன்னொருவரின் கைப்பக்குவத்தில் அமர்ந்து சாப்பிடுவது' என்று சொல்லலாம். அப்படி இந்தப் பயணம் முழுவதுமே எந்த வேலையும் இல்லாமல், வேளாவேளைக்கு நிதானமாக ரசித்து சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற வாய்ப்புகள் எனக்கு எப்போதாவது அமைவது தான்..:)/

    உண்மைதான்.. நானும் இப்படித்தான் முன்பெல்லாம் பயணத்திற்காக காத்திருந்து சென்றிருக்கிறேன். ஆனால் வீடு வந்ததும் வேலைகள் காத்திருந்து பிடித்துக் கொள்ளும்.

    நல்ல இனிமையான பயணமாக உங்களுக்கு கழிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பயணம் குறித்த பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நீண்ட நாட்களுக்குப்பிறகு உறவுகளை சந்தித்து அவர்களோடு மகிழ்ச்சியாக இருந்து விட்டு வருவதில் அலாதி சந்தோஷம். அதன்பிறகு இருக்கவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடைவெளிக்குப் பிறகு உறவுகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி தான் பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....