சனி, 6 நவம்பர், 2021

காஃபி வித் கிட்டு - 133 - கடந்து வந்த பாதை - இலவசம் - ரவுண்டு - தில்லி நகர் உலா - நத்தை சூரி செடி - பரதேசி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மதுரை பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


TALK TO SOMEONE WHO MAKES YOU HAPPY… BUT, NEVER MISS TO TALK WITH SOMEONE WHO FEELS HAPPY TO TALK TO YOU... 


******


இந்த வாரத்தின் மின்புத்தகம் - கடந்து வந்த பாதை - இலவச தரவிறக்கம் :
நண்பர் சுப்ரமணியன் அவர்கள் எனது தளத்தில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமேசான் தளத்தில் வெளியிட்ட மின்னூல் கடந்து வந்த பாதை.  இந்த மின்புத்தகத்தினை தற்போது (ஐந்து நாட்களுக்கு மட்டும்) இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ள முகவரி கீழே.


கடந்து வந்த பாதை (Tamil Edition) eBook : Subramanian, R, Nagaraj, Venkat: Amazon.in: Kindle Store


******


பழைய நினைப்புடா பேராண்டி: எப்பவாவது ஒரு ரவுண்டு……


2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - எப்பவாவது ஒரு ரவுண்டு……


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 


திருச்சி வந்திருக்கும் இச்சமயத்தில் மீண்டும் கல்கி வார இதழ் படிக்க ஒரு வாய்ப்பு. ஞாயிறன்று திருப்பராய்த்துறை போக வேண்டியிருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்தில் கல்கி இதழ் வாங்கி திருப்பராய்த்துறை போகுமுன் பெரும்பாலான பகுதிகளை படித்து முடிக்க முடிந்தது. ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருள் வாக்கு பகுதியில் ஆரம்பித்து சுகி சிவம் அவர்களின் கடைசிப்பக்கத்தில் முடிந்தது கல்கி.


சுகி சிவம் அவர்கள் எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்களின் துல்லியமான பார்வையைப் பற்றிச் சொன்னார் என்றால், ”தலைமுறைகளைத் தாண்டி” எனும் தொடரில் “பிரியாணிக்கும் தலப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சொல்கிறார் ரமணன். பொன்மூர்த்தி என்பவர் “எங்கள் குரல் அரசின் செவிகளில் விழுவதேயில்லை!” என்ற தலைப்பில் “யாரோ கழித்த மலத்தைத் தம் கைகளால் அள்ளும் அவலம் இன்றளவும் தொடர்ந்து வரும் அவலத்தினைப்” பற்றி எழுதி மனதினைப் பிசைந்தெடுக்கிறார்.


எங்க ஊர்க்காரரான இயக்குனர் சாலமன் பிரபு [மைனா, கும்கி படங்களின் மூலம் பிரபலமான] “வானத்தில் போட்ட ஏணி” எனும் தலைப்பில் அவரது வெற்றிப் பாதையைத் தொடராக எழுதிக் கொண்டிருக்கிறார். “எங்க ஊர் கலைஞன்” என்ற தலைப்பில் கட்டைக்கால் மீது ஏறி நின்று கொண்டு தவில் வாசிக்கும் மாரிமுத்து பற்றிய ஒரு கட்டுரை அவரது விடா முயற்சியைப் பற்றி நமக்குத் தெரிவிக்கிறது.


******


இந்த வாரத்தின் காணொளி - தில்லி நகர் உலா :


அவ்வப்போது எனது யூட்யூப் பக்கத்தில், தொடர்ந்து காணோளிகளை பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், அவ்வப்போது ஏதாவது காணொளி பகிர்ந்து கொள்வதுண்டு.  அப்படி, சமீபத்தில் பகிர்ந்த காணொளி ஒன்று உங்கள் பார்வைக்கு!  தலைநகர் தில்லியின் பாஹட்(D) (G)கஞ்ச் பகுதியில் நடந்தும், ஈ-ரிக்‌ஷா (பேட்டரி ரிக்‌ஷா)வில் அமர்ந்தும் எடுத்த காணொளிகளின் தொகுப்பு இது.  காணொளியைப் பார்க்க கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


Walk/Ride through busy streets of Paharganj, Delhi - YouTube


******


இந்த வாரத்தின் தகவல் - நத்தை சூரி செடி:
எங்கள் கல்லூரியில் எங்களுக்கு தமிழ் பேராசியராக இருந்தவர் - திரு ச. தியாகராஜன் அவர்கள். தற்போது ஒரு கல்லூரியின் முதல்வர்.  முகநூலில் தொடர்ந்து எழுதி வருகிறார்.  அவர் செடிகள், இலைகள் என பல விஷயங்கள் குறித்து நிறைய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.  அப்படி எழுதிய ஒரு பகிர்வு - நத்தை சூரி செடி குறித்தது - அந்த தகவல் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கலாம்.  அது இங்கே - ஒரு தகவலாக - எங்கள் பேராசியருக்கு நன்றியுடன்…


நத்தைச்சூரி செடி.(Spermacoce articularis) வயல்வெளிகள், வாய்க்கால் ஓரங்கள், ஈரப்பதமான இடங்களில் தானாக வளர்ந்திருக்கும் பூண்டு வகைத்தாவரம் நீ!குழி மீட்டான், தாருணி, நத்தைச் சுண்டி, தொல்லியாக் கரம்பை,நத்தை வராளி எனப் பல்வேறு பெயர்களில் விளங்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ! சித்தர்கள் போற்றும் மஹா மூலிகை நீ! உன் காற்று மற்றும் சாறு பட்டால் நத்தையின் ஓடுவெடிக்கும்;இறக்கும் என்பது சித்தர் வாக்கு!.உடல் சூடு, உடல் பருமன் குறைப்பு, தாய்ப்பால் அதிகரிப்பு, ஆண்மை பலம் அதிகரிப்பு, நரம்பு பாதிப்பு, சிறுநீரகக் கற்கள், கண் எரிச்சல், முடி உதிர்தல்,  இரத்த சுத்தி,  புற்றுநோய்,  உடல் பருமன்,  மாதவிடாய்க்கோளாறு,  ஊளைச்சதை, சளி, இருமல், மூலநோய், உடல் சூடு, எலும்பு வலிமைஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ! விதை, வேர், தண்டு, இலை, மலர், காய்கள் என எல்லாம் பயன்படும் நல்ல செடியே! சித்து வேலைகளுக்குப் பயன்படும் சின்னச் செடியே!உடலுக்கு வலுவைத் தரும் கற்பக மூலிகையே! சிறிய இலைகளை உடைய சின்னச் செடியே! பறவைகளுக்கு விதை உணவு தரும் விந்தைச் செடியே!ரேகைகள்இல்லாஇலை செடியே! நீல நிறப் பூப்பூக்கும் ஞானச்செடியே நிறையவிலைபோகும் வேர் செடியே! நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!நலநாள் வணக்கம்.


பேரா. முனைவர் ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல் - ஏக் பரதேசி மேரா தில் :


ஹிந்தி பாடல்களில் சில என்றைக்கும் ரசிக்கக் கூடியவை.  அந்த வகையில் கீழேயுள்ள பாடல் பலமுறை கேட்டு ரசித்தது. சமீபத்திலும் இந்தப் பாடலை கேட்டு/பார்த்து ரசித்தேன்.  அப்படியான பாடலை நீங்களும் கேட்டு ரசிக்கலாமே!


மேலே உள்ள காணொளி வழி பார்க்க/கேட்க இயலவில்லை எனில் கீழேயுள்ள சுட்டி வழி நேரடியாக யூட்யூப் தளத்தில் பார்க்க/கேட்கலாம்!


ek pardesi mera dil le gaya..Phagun 1958_Madhubala_Mohd.Rafi_Asha Bhosle_Qamar J_OP Nayyar_a tribute - YouTube


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


20 கருத்துகள்:

 1. கடந்து வந்த பாதை மின்புத்தகத்துக்கு வாழ்த்துகள்.

  எப்பவாவது ஒரு ரவுண்டு - சுவாரஸ்யம்.

  காணொளி ஏற்கெனவே பார்த்து விட்டேன்.

  நத்தை சூரி பற்றி இன்றுதான் அறிகிறேன்.

  இந்தப் பாடல் அடிக்கடி முன்பு கேட்டு ரசித்த பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த கருத்துகள் கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நூலுக்காக உங்களுக்கு வாழ்த்துகள்.
  நத்தைச்சூரி செடி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூல் - வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நத்தைச்சூரி - தகவல் உங்களுக்கும் புதிதாக இருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வாசகம் உட்பட அணைத்து பகுதிகளும் அருமை சார்.
  நூலை தரவிறக்கம் செய்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நத்தைச்சூரி செடி பற்றிய தகவல்கள் அறிந்தேன்... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நத்தைச் சூரி செடி குறித்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. சுவாரஸ்யமான தகவல்கள் ஜி நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வாசகம் அருமை.
  மகிழ்ச்சியை தரட்டும் அனைவருக்கும்.
  பதிவில் உள்ள அனைத்தும் அருமை. பாடல் கேட்டேன்.
  நத்தை சூரி பூ அறிந்து கொண்டேன்.
  வெள்ளையாக நாலுஇதழுடன் புற்களுக்கு மத்தியில் இருக்கே! என்று படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
  மகள் வீட்டுத்தோட்டத்தில் இருக்கிறது. இலை இது போல் இருக்கா என்று பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவின் மற்ற பகுதிகளுக்கும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   உங்கள் படமும் முடிந்தால் பதிவில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. கடந்து வந்த பாதையின் சில பகுதிகளை உங்கள் பதிவில் படித்திருக்கிறேன்.
  நத்தை சூரி செடி தகவல்கள் மிகவும் பயனுள்ள அரிய செய்திகள்.
  ஆட்டோவின் குலுங்கலோடு எடுக்கப்பட்டிருந்தாலும், படம் துல்லியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. ஏக் பர்தேசி பாடல் மிக அருமை. மதுபாலா முகமும், ரஃபியின் குரலும்
  சேர்ந்து மிகப் பிரபலம். நன்றி வெங்கட்.

  முகப்பு வாசகம் மிக அருமை.
  உண்மையானதும் கூட,.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏக் பர்தேசி பாடல் மிகவும் ரசித்த பாடல். உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   வாசகம் உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. நத்தை சூரிப் பூ தி.ஜானகிராமனின் நாவல்களில் அடிக்கடி வரும்.
  சிறிதாகப் பூத்து மக்களை கவரும் பூக்களுக்கு இத்தனை
  நோய் போக்கும் சக்தி இருப்பது புதிய செய்தி.

  வரப்புப் பூண்டு நீலம் போல சில மனிதர்கள்
  நம் வாழ்வில் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நத்தை சூரிப்பூ தி.ஜா. நாவல்களில் வரும் - அவரது சில நாவல்கள் படித்திருந்தாலும் இந்தத் தகவல் புதிது வல்லிம்மா.

   வரப்புப்பூண்டு மனிதர்கள் - உண்மை தான் மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....