ஞாயிறு, 21 நவம்பர், 2021

வாசிப்பனுபவம் - அனலும் நீ புனலும் நீ - அன்னபூர்ணி தண்டபாணி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழ பழகிவிட்டால்…  மகிழ்ச்சியை நாம் தேடிச்செல்ல வேண்டியதில்லை; மகிழ்ச்சி நம்மை தேடி வரும்.”


******




சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் அன்னபூர்ணி தண்டபாணி அவர்கள் எழுதிய “அனலும் நீ புனலும் நீ” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 100

விலை: ரூபாய் 85/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


அனலும் நீ! புனலும் நீ!: #pentopublish4 (Tamil Edition) eBook : Dhandapani, Annapurani


******* 


அனலும் நீ புனலும் நீ - நல்லதொரு தலைப்பு.   புத்தகத் தலைப்பிற்கு ஏற்றவாறே அட்டைப்படமும் அமைத்திருப்பது சிறப்பு. நூலாசிரியர் அன்னபூர்ணி தண்டபாணி அவர்களுக்கு முதலில் இதற்கான வாழ்த்துகள்!  ஒரு மின்னூலுக்கு அட்டையும் தலைப்பும் மட்டும் அமைந்து விட்டால் போதுமா என்ன? மின்னூல் சிறப்பாக அமைய அந்த நூலின் கருவும் நன்றாக இருக்க வேண்டும்.  அனலும் நீ புனலும் நீ என்ற இந்த கதை, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை என்று இதன் அறிமுகத்தில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.  நன்றாகவே புனையப்பட்ட கதை.  கதைக் கருவினை மிகச் சரியாக வாசிப்பவருக்குக் கடத்தி விடுவது எல்லா நூலாசிரியர்களுக்கும் வந்து விடுவதில்லை.  இந்த நூலின் ஆசிரியருக்கு அந்தத் திறமை அமைந்திருக்கிறது! வாழ்த்துகளும் பாராட்டுகளும்.  


கதை எதைச் சொல்கிறது?  தன் வாழ்க்கையில் எப்போதும் போராட்டமாகவே இருக்கிற ஒரு பெண் - பெற்ற தந்தையும், பாட்டியும் தேன்மொழி என்கிற இந்த நூலின் பிரதான கதாபாத்திரத்தினை எப்படியெல்லாம் திட்டித் தீர்க்கிறார்கள் - இத்தனைக்கும் தேன்மொழியின் தவறு எதுவுமே இல்லை - குறைகளுடன் பிறப்பது அவளின் குற்றமா என்ன?  நல்ல படிப்பு, வளமான குரல் - இந்த இரண்டு மட்டுமே நல்லதாக அமைந்திருக்கிறது தேன்மொழிக்கு!  கூடவே சிறப்பான நட்பும்.  குறைகளுடன் பிறந்த தன்னையும் திருமணம் செய்து கொள்ள ஒருவன் வர, தன் வாழ்க்கையில் வசந்தம் வீசப் போகிறது என தேன்மொழி நினைத்திருக்க, அப்படி வந்தவன் ஏமாற்றுக்காரன் எனத் தெரிகிறது.  இருந்தும், தனது வீட்டினரின் வசவுகளிலிருந்தாவது தப்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் அவனுக்கு கழுத்தை நீட்ட தயாராகிறாள்.  ஆனால் மணமேடையில் அமர்ந்த பிறகு அத் திருமணம் நின்று போகிறது.  


அதே மேடையில் அம்மா வழி தாத்தாவின் முயற்சியால் அவளுக்கு திருமணம் நடக்கிறது!  இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்றாலும் பிணக்கு.  திருமணம் நடந்தாலும் ஒருவருக்கொருவர் முரண்டு பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.  அவர்களுக்குள் என்ன பிரச்சனை, என்னென்ன பிரச்சனைகளை தேன்மொழி சந்திக்கிறாள், கடைசியில் பிரச்சனைகளிலிருந்து விட்டு விலகி சுபம் போடுவாரா மாட்டாரா? என்ற கேள்விகள் உங்களுக்குள் இருக்கலாம்.  கதை பற்றி நிறைய இங்கே நான் சொல்ல விரும்பவில்லை.  கதை நன்றாக இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்.  நல்லதொரு கதை படித்த உணர்வு உங்களுக்கு வர வேண்டும் என்றால், நிச்சயம் இந்த மின்னூலை நீங்கள் வாசிக்கலாம்.  எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு, சமாளிக்க வேண்டும் என்பதைச் சொல்லும் இந்த நூலை எழுதிய நூலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். 



******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


******


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


14 கருத்துகள்:

  1. எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சம் எனில் அவசியம் வாசிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசித்துப் பாருங்கள் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஆவலைத் தூண்டுகிறது தங்களது விமர்சனம் பாராட்டுக்கள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை.
    எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு, சமாளிக்க வேண்டும் என்பதைச் சொல்லும் இந்த நூல்.இதுதான் இந்த கால கட்டத்திற்கு எல்லோருக்கும் வேண்டும்.அருமையான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பல்வேறு பணிகளுக்கு இடையிலும், இடைவிடாத தங்களின் வாசிப்பு வியக்க வைக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசிக்கிறேன் கரந்தை ஜெயக்குமார் ஐயா. சமீப மாதங்களில் படிக்க முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நல்லதொரு, வாசிக்கத் தூண்டும் விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆவலைத் தூண்டும் விமர்சனம் சார்.
    விரைவில் நூலை வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசித்துப் பாருங்கள் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இதைப் பற்றி சஹானாவில் பார்க்கவில்லையே! கின்டில் எனில் என்னால் வாசிக்க இயலாது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் எழுதியது கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....