தொகுப்புகள்

ஞாயிறு, 20 மார்ச், 2022

கேதார் தால், உத்திராகண்ட் - நிழற்பட உலா - பகுதி நான்கு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

 

சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும், சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும் நீ அறிந்து கொள்! சில சோகங்களை நேசிக்கப் பழகு; சில சோகங்களை மறக்கப் பழகு; வாழ்க்கை யதார்த்தமானது.

 

******

 

கேதார் தால் பகுதியில் அலுவலக நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் எடுத்த நிழற்படங்களை சென்ற சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  அந்தப் பயணம் குறித்த பயணக் கட்டுரை தொடரும் இங்கே வெளி வந்து கொண்டிருக்கிறது. நிழற்படங்களின் வரிசையில் இந்த வாரமும் கண்ணுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் சில படங்கள் இந்த ஞாயிறிலும் தொடர்கிறது.  கேதார் தால் - நிழற்பட உலா - முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! மூன்றாம் பகுதி இங்கே! வாருங்கள் இந்த வாரம் இன்னும் சில படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.






















 

நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே... விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

16 கருத்துகள்:

  1. இயற்கை(யைக்) கொஞ்சும் படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நலமா? இன்றைய வாசகம் நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் கண் நிறைந்த காட்சிகள். இயற்கையன்னை நமக்களித்த பொக்கிஷங்கள். ஒவ்வொன்றையும் பெரிதாக்கி பார்த்து ரசிக்க வேண்டும். மற்றும் தங்களின் பல பதிவுகளை என் உடல் நலக்குறைவாலும்,வலைத்தளம் வர நேரமின்மையினாலும், தவற விட்டு விட்டேன். மன்னிக்கவும். அனைத்தையும் நிதானமாக பின்னர் படிக்கிறேன். இன்றைய அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      உங்கள் உடல் நலனைக் கவனித்துக் கொள்ளவும். பதிவுகள் எங்கேயும் சென்றுவிடப் போவதில்லை. முடிந்த போது படியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இடங்கள் அழகாக இருப்பது இறைவனின் கொடை.

    அதை அழகாக படமெடுத்து காட்டுவது மனிதனின் கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அமானுஷ்யமான அமைதியுடன் கூடிய படங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஹையோ அழகுஅழகு அழகு! கம்பீரமான, மனதிற்குள் ஒரு மகிழ்ச்சியுடனான அமைதியைத் தோற்றுவிக்கும் அற்புதமான இடம். தியானத்திற்கும் அமைதி தேடியும் - மனதிற்குள்ளேதான் இருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் என்று சொன்னாலும் - ஏன் இமயமலை செல்கிறார்கள், என்பது புரிகிறது. புற உலகின் எந்த ஒரு சத்தமும், கலப்பும் இல்லாமல் இருக்கும் இடத்திற்குக் கண்டிப்பாக சக்தி மிகுதிதான் என்று தோன்றுகிறது. அங்கு யுனிவெர்சல் எனர்ஜி லெவல் கண்டிப்பாகக் கூடுதலாகத்தான் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. அமைதியான சூழல் என்றைக்கும் பிடித்தமானது தான் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மனாலி சென்றிருந்த போது ஜோகினி அருவிக்குக் கொஞ்ச தூரம் ட்ரெக்ட் செய்து தான் போக முடியும். பொதுவாக நான் ஒரு இடம் செல்லும் போது ஆட்கள் அதிகம் போகாத இடமாகச் செல்ல நினைத்துத் தேடி எடுப்பதுண்டு. அப்படி ஜோகினி அருவிக்கு அப்போது அத்தனை மக்கள் இல்லாத சமயம். கொஞ்சம் உட்பகுதி. என்ன ஒரு அமைதி! அருவியின் சத்தம் மட்டுமே. அப்போது, மேலே சொன்ன கருத்தின் அந்த ஃபீல் கிடைத்த போது தோன்றிய எண்ணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப் பிரதேசங்களில் இருக்கும் அமைதி என்றைக்கும் பிடித்தமானது. சில சமயங்கள் அந்த இடங்களில் எவ்வித தடங்கலும் இன்றி மூச்சுப் பயிற்சிகள் செய்ய முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. படத்தில் உள்ள கோயில் கங்கா தேதி கோயில் நாங்களும் போனோம்.
    கங்கோத்திரி மலைகளும் நாங்கள் படம் எடுத்தோம்.

    வாசகமும், பதிவில் படங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் மற்றும் பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அற்புதமான காட்சிகள். அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் காட்சிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....