தொகுப்புகள்

சனி, 1 பிப்ரவரி, 2014

அப்பள வியாபாரி! (சாலைக்காட்சிகள் – பகுதி 9)


[G]குட்கா மூதாட்டி – சாலைக்காட்சிகள் பகுதி 8 - இங்கே
(G)குட்கா மூதாட்டி! - சாலைக்காட்சிகள் பகுதி 8 இங்கே
சிகரெட்டா சாப்பாடா? – சாலைக்காட்சிகள் பகுதி 7 - இங்கே
தலைநோக்குப் பார்வை – சாலைக்காட்சிகள் பகுதி 6 - இங்கே
Bloody Indian - சாலைக் காட்சிகள் – பகுதி 5 - இங்கே
வெங்கலக் கடைக்குள் யானைசாலைக் காட்சிகள்பகுதி 4 - இங்கே
அலட்சியம் – சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே
கிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே
இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே

இந்தியா கேட் பகுதியில் மாலை வேளைகள் மட்டுமல்லாது முழு நாளுமே மக்கள் வந்த வண்ணமும் போன வண்ணமுமாக இருப்பார்கள்.  அங்கே சுற்றுலா பயணிகளும் அதிகம் வருவதால், சின்னச் சின்னதாய் வியாபாரிகளும் அங்கே வந்து தங்கள் வியாபாரத்தினை கவனிப்பார்கள்.  ஐஸ்க்ரீம் வண்டிகள், பாப்கார்ன் பாக்கெட்டுகளில் விற்பவர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் என பலர் அங்கே செய்யும் வியாபாரத்தில் தங்களது வாழ்க்கையை நடத்துபவர்கள்.

இந்த வியாபாரிகளில் இன்னும் சில பொருட்களை விற்பவர்களும் உண்டு. அவர்களில் ஒருவரை இன்று சந்திக்கப் போகிறோம். அவர் அப்பள வியாபாரி. பொரித்த அப்பளம் கூட விற்பார்களா? பெரும்பாலும் திருவிழாக்கள் சமயத்தில், கண்காட்சிகள் சமயத்தில் நமது ஊரில் பாம்பே அப்பளம் என பெரியதாய் அப்பளம் விற்பவர்களை பார்த்திருப்போம். இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாய், வீட்டில்/தொழிற்சாலையில் தயாரித்து ஒரு பெரிய கூடையில் எடுத்து வந்து விற்பார்கள். 


சிலர் தாங்களே தயாரிப்பவர்கள், வேறு சிலர் தொழிற்சாலைகளில் வாங்கி வந்து விற்பவர்கள். தில்லியில் இருக்கும் மாதிபூர் எனும் இடத்தில் தான் இவர்களில் பலர் இருக்கிறார்களாம். மூன்று அப்பளங்கள் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்.  ஒன்று வாங்கினால், நான்கு ரூபாய். இரண்டெனில் ஏழு ரூபாய்.  தில்லியின் வழக்கமான மசாலா தெளிப்பு இதிலும் உண்டு!  அப்பளத்தின் மேல் தாராளமாக மசாலா பொடி தூவி கொடுக்க அப்படியே கடித்து ருசித்தபடிச் செல்லும் பலரை இந்தியா கேட் பகுதியில் உங்களால் காண முடியும்.


பெரும்பாலான அப்பள வியாபாரிகள் பீஹார் அல்லது உத்திரப் பிரதேச மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள்.  நாள் ஒன்றுக்கு ஒரு கூடை நிறைய விற்பனை செய்தால் கொஞ்சம் லாபம் கிடைக்கும் என நினைக்கிறேன். இவர்களிடம் ஓசியில் அப்பளம் வாங்கி உண்ணும் சில காவல் துறையினரையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது – கிடைத்த வரை லாபம் எனும் நோக்கு!


இவர்களும் வாழத்தான் செய்கிறார்கள்..... வாழ வேண்டும் என்ற எண்ணமும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வாழ முடியும் என்பதை இந்த வியாபாரிகள் உணர்த்துகிறார்கள்.....

     
மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 கருத்துகள்:

  1. பொரித்த அப்பளமும் அதற்கான
    வித்தியாசமான அப்பளக் கூடையும்
    இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்
    படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  3. செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவர்கள், திருப்தியாக வாழ்வார்கள் - இவர்களைப் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. வாழ்வதற்கு ஆயிரம் வழிகள். வழியா இல்லை பூமியில்... எளிமையான வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. / வாழ வேண்டும் என்ற எண்ணமும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வாழ முடியும்/ உண்மைதான். இதுபோலக் கூடையில் சுமந்து பொரித்த அப்பளங்கள் விற்பார்கள் என்பது உங்கள் பகிர்வின் மூலமே அறிய வந்தேன்.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  6. தலைநகர் தில்லியில் சில தினங்கள் தங்கியிருந்த போது இந்த அப்பளம் வாங்கித் தின்றது நினைவுக்கு வருகின்றது. அந்த அப்பளத்தைப் போலவே பதிவும் சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  7. கிடைக்கும் லாபமே போதுமென்று பெரிய மனதுடன் வாழும் சிறிய அப்பள வியாபாரிகளை வாழ்த்துவோம் !
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  8. அப்பள வியாபாரிகள் படங்கள் அருமை.
    அவர்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் தெரிந்து கொண்டேன்.
    வாழ்க்கையை நடத்தி செல்ல உழைப்பும் மன உறுதியும், தளரா மனமும் இருந்தால் போதும்.
    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  9. இவர்களும் வாழத்தான் செய்கிறார்கள்..... :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  10. “வாழ வேண்டும் என்ற எண்ணமும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வாழ முடியும்.”
    உண்மைதான். ஆனால் நம்மில் பலருக்கு அந்த எண்ணம் இல்லையே நிபக்டுதான் வேதனை. அப்பள வியாபாரிகள் பற்றிய பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  11. //இவர்களும் வாழத்தான் செய்கிறார்கள்..... வாழ வேண்டும் என்ற எண்ணமும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வாழ முடியும் என்பதை இந்த வியாபாரிகள் உணர்த்துகிறார்கள்..../

    கடைசி பஞ்ச் அருமை! உண்மையும் கூட!

    பகிர்வுக்கு நன்றி!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  12. எல்லோருக்கும் இரண்டு கண் என்றால் உங்களுக்கு மூன்று கண்கள் கேமரா கண்ணை சேர்த்துதான். உங்கள் எண்ணமும் எழுத்தும் கேமராவும் சேர்ந்து இங்கு பதிவுகளாக கலக்கி கொண்டிருக்கின்றன. பாராட்டுகள்...பாராட்டு என்று பேருக்கு பாராட்டவில்லை உண்மையில் மனம் திறந்து பாராட்டுகிறேன் உங்கள் திறமையை வியந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் படங்கள் நான் எடுத்தவை அல்ல.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  14. டெல்லி அப்பளம்ன்னு பொருட்காட்சிகளில் வாங்கி ருசித்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  15. எங்கள் வீட்டின் முன் புறம்கடை விரித்து வியாபாரம் செய்யும் பலரைக் காண்கிறேன். அவர்களிடம் பேசி அவ்ர்கள் வாழ்க்கையையும் வியாபாரத்தையும்பதிவிட எண்ணிக் கொண்டிருக்கிறேன். உங்கள் இந்தப் பதிவு ஊக்கம் அளிக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார். நீங்களும் எழுதுங்கள் ஐயா. நாம் பார்க்கும் பலரிடமும் இது போல எழுதுவதற்கான விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன...

      நீக்கு

  16. இவர்களிடம் ஓசியில் அப்பளம் வாங்கி உண்ணும் சில காவல் துறையினரையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது

    அப்பளம் விற்கும் அடியவா் தாம்வருந்தக்
    கப்பம் பெறுவதோ காப்பு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் பாரதிதாசன் ஐயா.

      நீக்கு
  17. வித்தியாசமான தொழில்தான்..உழைப்புதானே உன்னதம்.. ஆனால் சாலைகளில் செல்லும்போது குப்பை மண்டிவிடாதா அப்பளங்களின் மேல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      அதற்குத் தான் கூடையினுள் ஒரு பெரிய பாலிதீன் பையை வைத்து அதனுள் இந்த அப்பளங்களை வைக்கிறார்கள்.

      நீக்கு
  18. பாவம் தான், இந்த அப்பளம் விக்கிறதிலே என்ன கிடைக்கும்! :( இப்படியும் பரிதாபமான ஜீவன்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  19. பொரித்த அப்பளம் கூட விற்பார்களா? ஆச்சரியம்தான்..
    நமுத்துப்போனால் பேப்பர் மாதிரி கிழித்துத்தான் சாப்பிடவேண்டியிருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நமுத்துப் போகாமல் இருக்கும்... விரைவில் விற்று விடுவதும் காரணமாக இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  20. உழைத்து பிழைக்கும் அவர்களிடமும் கையூட்டு கேட்கும் காவலர்களை நினைத்தால் வெறுப்புத்தான் வருகிறது! நல்ல பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  21. வணக்கம்
    ஐயா.
    நீங்கள் இறுதியில் சொல்லிய கருத்து அருமை... ஐயா.இந்த எண்ணம் ஒவ்வொருவரிடமும் வந்தால் நல்லது...
    வாழ வேண்டும் என்ற எண்ணமும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வாழ முடியும் என்பதை இந்த வியாபாரிகள் உணர்த்துகிறார்கள்.....
    வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  22. அப்பளம் விற்பதை இந்த பதிவின் மூலம்தான் முதன் முதல் அறிகிறேன், மும்பையிலும் மீன் வியாபாரம் முதற்கொண்டு சில்லறை வியாபாரிகள் எல்லாமே பீகார், உ பி"யை சேர்ந்தவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  23. வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில். டெல்லி வீதியில் பொரித்த அப்பளம். நன்றாகவே படங்களுடன் பொரித்து இருக்கிறீர்கள். எனக்கு இந்த தகவல் புதிது. பரிமாறியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  24. உழைப்பவர்கள் நன்றாக வாழ வேண்டும்.

    ரோட்டோரத்தில் இளநீர் விற்பவர்களை விரட்டுவதுபோல் பூச்சாண்டிகாட்டி, அவர்களிடமிருந்து ஓஸியில் இளநீர் வாங்கி குடிக்கும் நீக்க சொல்லியுள்ள ஆட்களை நிறைய பார்த்த‌துண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  25. "//இவர்களிடம் ஓசியில் அப்பளம் வாங்கி உண்ணும் சில காவல் துறையினரையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது//' - முதலில் இந்த கலாச்சாரத்தை இந்திய அரசாங்கம் எப்பொழுது தான் துடைத்தெறியுமோ?
    நம் போலீஸ்காரர்களுக்கு இந்த மாதிரி ரோட்டோரோ வியாபாரிகளின் மீது அதிக கரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  26. இந்த அப்பளத்தை நீங்கள் சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா? நம்மூர் அப்பளத்தின் ருசி இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிரு முறை சாப்பிட்டதுண்டு. அரிசி அப்பளம். நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  27. பெரிய அப்பளம் கண்காட்சிகளில் கண்டதுண்டு .விற்பனை பொருள் மட்டுமே மாற்றம் பஞ்சுமிட்டாய் வியாபாரி போல.படம் அருமை .காவலர்களின் செய்கை போற்றுதலுக்கு உரியது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

      நீக்கு
  28. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  29. செய்யும் தொழிலே தெய்வம். வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....