எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 30, 2013

அலட்சியம்…..


சாலைக் காட்சிகள்பகுதி 3

கிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே

இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே.

தில்லிக் காரர்கள் அதுவும் வட இந்தியர்களுக்கு எதிலும் ஒரு அலட்சியம். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டதுகடையில் ஏதாவது வாங்கிவிட்டு அதற்கான பணத்தினைக் கூட அலட்சியமாக மேஜை மீது தூக்கி தான் போடுவார்கள். கடைக்காரரும் மீதப் பணத்தினை மேஜை மேலே தூக்கிதான் போடுவார். சிறுவர்களிடம் கூட பணம் தாராளமாகப் புழங்கும்நேற்று கூட மதர் டைரி பால் கடையில் ஆயிரம் ரூபாய் நோட்டினை அநாயாசமாக போட்டு, ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு போன ஒரு சிறுவனைக் காண முடிந்ததுமிஞ்சி மிஞ்சி போனால் எட்டு வயது இருக்கலாம்…..

காய்கறிக் கடையில், பலசரக்குக் கடையில் என எங்கே சென்றாலும், விற்பவரும், வாங்குபவரும் இப்படி பணத்தினை தூக்கி எறிவது பார்க்கும்போது சில சமயங்களில் தோன்றும் – “ஒருவேளை இந்த உலகத்திலிருந்து செல்லும்போது பணம் நம் கூட வரப்போவதில்லை என்ற எண்ணத்தினால் தான் இப்படி செய்கிறார்களோ என! ஆனாலும் பணத்தின் பின்னால் அலைந்து கொண்டே தானே இருக்கிறார்கள் என நினைக்கும்போது இதில் உண்மை இருக்காது – இதற்குக் காரணம் அலட்சியம் மட்டும் தான் என நினைத்துக் கொள்வேன்.

நேற்று காலை சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாராசமாக ஒரு சத்தம்தகரத்தினை மொறமொறப்பான பகுதியில் வைத்து தேய்ப்பது போல ஒரு சத்தம்ஒரு சில நொடிகள் வந்தால் பரவாயில்லை. சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே சுற்று முற்றும் பார்த்தேன். பார்த்த போது மனதில் அப்படி ஒரு கோபம்.

மூன்றரை அடியில் ஒரு எவர்சில்வர் ட்ரம். குப்பைக் கூடையாக பயன்படுத்தப்படும் அதிலிருந்த குப்பைகளை கொட்டுவதற்காக அந்த எவர்சில்வர் ட்ரம்மை 22-24 வயது மதிக்கத்தக்க கட்டான இளைஞர் தார் சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். கூடவே அதே அளவு பிளாஸ்டிக் ட்ரம்மை இழுத்துக் கொண்டு இன்னொரு இளைஞர். முழுதும் குப்பையால் நிறைந்திருக்கும்போது அதிக எடையிருப்பதால் அப்படி இழுத்துக் கொண்டு சென்றார்களோ என நினைத்தால், குப்பையைக் கொட்டி விட்டு காலியான பின்னரும் அந்த இளைஞர்கள் சாலையில் தரதரவென இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

சத்தம் தாங்காத என்னைப் போன்ற இன்னொரு நபர்ஒரு தில்லி போலீஸ் காவலாளி - அந்த இளைஞரைப் பார்த்துஏனப்பா, இப்படி அந்தப் பாத்திரத்தினை வீணடிக்கிறாய்?” எனக் கேட்க, முறைத்துப் பார்த்துஉனக்கென்ன அக்கறை?, உன் வேலை இது இல்லை, எவனாவது திருடுவான், இல்லை குண்டு வைப்பான்அதைக் கண்டுபிடி அதை விட்டு என்னைக் கேட்க வந்துட்ட, உன் வேலையைப் பார்த்துட்டு போய்யாஎன கொஞ்சம் தகாத வார்த்தைகளையும் சொல்லி விடவே, அவரும் தனியாக இருந்தமையாலோ என்னவோ, வாயை மூடிக்கொண்டு நகர்ந்தார். அவர் திட்டு வாங்கியதைக் கேட்ட பிறகு யாருக்கும் அந்த இளைஞர்களை கேள்வி கேட்கத் தோன்றவில்லை. ”இவனிடம் திட்டு வாங்க நமக்கு என்ன தலையெழுத்தா,” என்ற எண்ணத்தோடு அங்கிருந்து நகர்ந்தோம்.

அலட்சியம்….  எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம்….. 

மீண்டும் வேறொரு சாலைக் காட்சி பற்றிய பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை……

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. 1000 ரூபாய்க்கு அவ்வளவு தான் மதிப்பு போல...

  என்ன வெறுப்போ...? அலட்சியம் ஆகி விட்டது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. அலட்சியம் பின்னால் பெரும் ஆபத்து என்பதை உணரமறுக்கின்றனர் அனைவரும்....நல்ல பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை நேரம்.

   Delete
 3. நல்ல பதிவு!
  என் தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1 போட்டு விட்டேன்.
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி.

   Delete
 4. அலட்சியம் ஆபத்தானது

  Typed with Panini Keypad

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   Delete
 5. நம்ம ஊர்ப் பக்கம் இப்படி செய்தால்
  அவ்வளவுதான்..
  அப்படிச் செய்யவும் நமக்கு மனம் வராது...
  இங்கே அமீரகத்திலும் இப்படியான
  செயல்கள் தான்..
  காணும் போது.. மனம் வெறுப்பாக இருக்கும்.
  பணத்துக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை
  இவ்வளவுதானா என்று..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 6. அலட்சியமாக கட்ந்து போகமுடியாத அவலங்கள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. எங்க தலைமுறைக்கு காசுன்னா மகாலக்ஷ்மி!! .கஷ்டப்பட்டு,சம்பாரிக்க வேண்டிய சமாச்சாரம். இப்போதைய தலைமுறைக்கு அது ஜஸ்ட் பண்டமாற்றுப்பொருள். அதான் அவ்ளோஅலட்சியம்:(

  ReplyDelete
  Replies
  1. ஜஸ்ட் பண்ட மாற்றுப் பொருள்! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 8. Bagawanjee KA has left a new comment on your post "அலட்சியம்…..":

  வரும் காசுக்கு கற்பூர ஆரத்தி எடுக்கணும் ,போகும் காசை அலட்சியப் படுத்தணும்..நல்ல பாலிசிதானே?
  த.ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. முத்துலெட்சுமி/muthuletchumi has left a new comment on your post "அலட்சியம்…..":

  “ஒருவேளை இந்த உலகத்திலிருந்து செல்லும்போது பணம் நம் கூட வரப்போவதில்லை” என்ற எண்ணத்தினால் தான் இப்படி செய்கிறார்களோ என!// இவ்ளோ எல்லாம் யோசிப்பாங்களா என்ன.. உக்காந்து யோசிப்பது நம்மளுக்குத்தான் ..:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 10. கீத மஞ்சரி has left a new comment on your post "அலட்சியம்…..":

  சமுதாயப் பொறுப்பற்ற இளைஞர்கள்! வேறென்ன சொல்வது?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 11. ஸ்ரீராம். has left a new comment on your post "அலட்சியம்…..":

  என்னவோ போங்க வெங்கட்.... இதுதான் நாம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. இளமதி has left a new comment on your post "அலட்சியம்…..":

  ஏன்? எதற்கு... இப்படி
  மனத்தில் தோன்றும் கேள்விகளுக்கு விடை தெரிவதில்லை...
  ஆயினும் கேள்விகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 13. MANO நாஞ்சில் மனோ has left a new comment on your post "அலட்சியம்…..":

  எரிச்சல் கலந்த அலட்சியமா இருக்குமோ ? மும்பையிலும் இப்படி காசை தூக்கிப் போடுகிறவர்கள் இருக்கிறார்கள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 14. வல்லிசிம்ஹன் has left a new comment on your post "அலட்சியம்…..":

  அவ்வளவு உடம்பில் கொழுப்பு ஏறி இருக்கிறது என்று பொருள் கொள்ளவேண்டியதுதான்.
  நஷ்டம் என்பது சொல்லிக் கொண்டு வராது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 15. இவற்றை அலட்சியமாகக் கருதி விடமுடியாமல், யோசிக்கத்தான் வைக்கிறது இந்தப்பதிவு.
  பகிர்வுக்கு நன்றி, ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 16. வருத்தம் தரும் நிகழ்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 17. அவலம். சிந்திக்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 18. அந்தக் காலத்தில் வண்டிச் சத்தம் (charges ) எவ்வளவு என்று கேட்பார்கள். அது ஞாபகம் வருது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 19. எதுவுமே அதிகமாகிப் போனால் அதன் மீது
  அலட்சியம் வந்துவிடும் தோனோ என்னவோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 20. அந்த ஆளை நாலு சாத்து சாத்தி பப்ளிக் நியுசென்ஸ் கேஸ் போட்டு உள்ளே தள்ளியிருக்க வேண்டும்..... த.ம.11

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   Delete
 21. Nam Kan Munne endha thavaru nadandhalum ik kaalaththil nammal thatti ketka mudiyadhu.Poruththu kondu poga vendum.Ethilum ellorkkum ore alatchiyam.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 22. இங்கியும் முந்தா நேத்து கரகரன்னு காதைக்கிழிக்கிற மாதிரி ஒரு சத்தம். அதுவும் ராத்திரி பத்து மணிக்கு மேல. என்னன்னு எட்டிப்பார்த்தா ஒரு இரும்பு பீரோவைத் தரதரன்னு தள்ளிட்டுப்போறார் இளைஞர் ஒருத்தர். என்னன்னு சொல்றது.

  காசை அலட்சியமாக் கையாளற ஆட்களை எங்க பக்கத்துல 'துட்டுக் கொழுத்துப்போச்சு'ன்னு சொல்லுவாங்க.:-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் கருத்துரை.... மகிழ்ச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....