எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, November 30, 2013

சிகரெட்டா சாப்பாடா?


சாலைக்காட்சிகள் – பகுதி 7
 
தலைநோக்குப் பார்வை – சாலைக்காட்சிகள் பகுதி 6 - இங்கே
Bloody Indian - சாலைக் காட்சிகள்பகுதி 5 - இங்கே
வெங்கலக் கடைக்குள் யானை- சாலைக் காட்சிகள்பகுதி 4 - இங்கே
அலட்சியம்சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே
கிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே
இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே


தில்லி என்றதும் நினைவுக்கு வருவது கன்னாட் ப்ளேஸ் அல்லது கன்னாட் சர்கிள் [Inner and Outer Circle] என அழைக்கப்படும் இடம். அரசியல் காரணமாக இந்த இடங்களில் Inner Circle ராஜீவ் சௌக்எனவும் Outer Circle  இந்திரா சௌக்எனவும் பெயர் மாற்றப்பட்டாலும் பலரது பேச்சில் இந்த இடம் பற்றி சொல்லும்போது கன்னாட் ப்ளேஸ் எனும் பெயர் தான் வரும்!

1929 ஆம் வருடம் ஆரம்பித்து 1933-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்ட இந்த இடம் தில்லியில் மிகவும் பிரபலம். உலகில் இருக்கும் அதிக விலைமதிக்கக் கூடிய இடங்களில் ஐந்தாவது இடத்தினைப் பெற்ற இடம். மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் இங்கெ நிறைய மக்களை கூட்டமாக காண முடியும். இந்தியர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான வெளிநாட்டவர்களும் இங்கே வந்து போவதால், பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடியும் இடம்!

பாராளுமன்ற சாலை வழியே வந்து சிவாஜி ஸ்டேடியம் பகுதிக்கு வருவதற்கு சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு 09.30 மணிக்கு மேல் நடந்து வந்து கொண்டிருந்தேன். அந்த மூலையில் ஒரு உணவு விடுதி உண்டு. பெயர் “[P]பிண்ட் [B]பலூச்சி!பஞ்சாபி மொழியில் பிண்ட் என்றால் கிராமம். உணவு மட்டுமல்லாது மதுபானமும் அங்கே கிடைக்கும்....  சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை இங்கே சென்றிருக்கிறேன்.வாசலிலே ஒரு காவல்காரர்! பஞ்சாபி உடையணிந்து, கையில் ஒரு பெரிய குச்சியும் முகம் கொள்ளா மீசையும் உடைய இவரைப் பார்த்தாலே உள்ளே போகவா வேண்டாமா என ஒரு பயம் தோன்றும்!

அவரைத் தாண்டி நடக்கும்போது உங்கள் மீது மற்றவர்களோ, அல்லது நீங்கள் மற்றவர்கள் மீதோ இடித்துக் கொள்ளாமல் போக பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். இருக்கும் அந்த நடைபாதையில் பலவித நடைபாதைக் கடைகள் வேறு.  அவர்கள் குரல் கொடுத்து விற்கும் பொருட்கள் பலவகையனவை – வெறும் குரல் மட்டும் வரும் – “சோ கா [CH]சார்![நூறு ரூபாய்க்கு நாலு!] என்ன விற்கிறார் என்பதை நாம் தான் கவனிக்க வேண்டும்!

விதவிதமான உடைகளில் மங்கைகளைக் காண முடியும். கூடவே அவர்களை அழைத்து வரும் ஆண் சிங்கங்களையும் தான்.... பல பெண்கள் அவர்களது தோழிகளோடு வருவதும் உண்டு.  அப்படியே ஆண்களும். வழியில் விற்கும் பொருட்களை வாங்குவதும் நடைபாதை வியாபாரிகளுடன் பேரம் பேசுவதும், ஐந்து ரூபாய்க்கு விற்கும் “Softy” ஐஸ்க்ரீமை ஒன்று வாங்கி ஜோடியாக இரண்டு பேர் சாப்பிடுவதையும் காணலாம்!

சென்ற வாரம் வந்து கொண்டிருந்த அந்த இரவிலும் இந்தக் காட்சிகளை ரசித்தபடியே வந்து கொண்டிருந்தேன். என்னை இடித்துக் கொண்டே முன்னேற யாரோ முயற்சி செய்ய, திரும்பினேன். அவர்களது பேச்சு ஸ்வாரசியத்தில் இடிக்கிறோம் என்பது கூட தெரியாது அல்லது கண்டுகொள்ளாது சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பேசியது!

முதலாமவர்: “ரொம்ப பசிக்குது. முதல்ல சாப்பிடணும்.” 

இரண்டாமவர்: சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு தம் அடிக்கணும்! அப்புறம் தான் சாப்பாடு!” 

முதலாமவர்: சரி வா, முதல்ல சிகரெட், அப்புறம் சாப்பாடு!

கையைப் பிடித்து அழைத்துச் சென்ற பக்கத்தில் இருந்த கடையில் ஒரு கிங்ஸ் வாங்கி பற்ற வைத்து “சார்மினார்சிகரெட்டுக்கு வரும் விளம்பரத்தில் சொல்வது போல “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரைஎன்பதாக ஒரு நீண்ட இழுப்பு! பிறகு ஒரு மந்தகாச புன்னகை....  ஆஹா ஆனந்தம்!அதற்குள் முதலாமவர் கை நீட்ட அவரும் ஒரு முறை ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்றார்!

அட சொல்ல மறந்துட்டேனே! அந்த இரண்டு பேரும் பெண்கள் – மிஞ்சிப் போனால் 18 வயது இருக்கலாம்! தில்லியில் பல ஆண்களும், வயதான கிராமத்துப் பெண்கள் பலர் பீடி புகைக்கும் போது, இவர்கள் சிகரெட் குடிக்கக்கூடாதா என்ன! இன்னும் இரண்டு இழு இழுத்தப்படியே அவர்கள் அருகில் உள்ள உணவகத்துக்குள் செல்ல, நான் அவர்களைத் தாண்டி சிந்தனையொடு நகர்ந்தேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


38 comments:

 1. காலம் கெட்டுப்போய் ரொம்ப நாளாச்சுங்க...!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தாங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. வணக்கம்
  ஐயா
  “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என்பதாக ஒரு நீண்ட இழுப்பு! பிறகு ஒரு மந்தகாச புன்னகை.... ஆஹா ...ஆபத்தான விளம்பரத்தையும் பார்த்து புகைக்கும் மனிர்கள் மனிதனா....?
  அருமையான விளக்கம்..... பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. ஆணுக்கிங்கே பெண்ணும் இளைப்பில்லை காணென்று தம்மு அடி
  சாலைக்காட்சிகள் சிந்திக்க வைக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. ம்... இது எவ்வளவோ பரவாயில்லை...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. வெளி நாட்டு விமான நிலையத்தில் புகைப்பவர்களுக்கு கண்ணாடி தடுப்பிட்டு தனி அறை இருப்பதைப் பார்த்தேன் ..!

  அதற்குள் தாயார் அவசரம் அவசரமாக புகைப்பிடிக்க வெளியில் கண்ணாடிக்கதவினைப்பிடித்து நிற்க முயற்சித்துக்கொண்டு தாயைப்பார்த்து அழ ஆரம்பிக்கும் பாவனையில் குழந்தையைப்பார்த்து பரிதாபம் கொண்டேன் ..!

  ReplyDelete
  Replies
  1. சில கர்ப்பிணிப் பெண்கள் புகைப்பதைப் பார்க்கும் போது இன்னும் வெளிஉலகம் கண்டிராத சிசுவையும் புகைக்க வைக்கிறார்களே என மனது பதைபதைக்கும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. வெளிநாடுகளில் வீடுகளில் ஸ்மோக்கிங் அலாரம் இருப்பதால் வீட்டுக்குள் குழந்தையை கண்ணாடிக்கதவின் உள்ளே வைத்து மூடிவிட்டு - அது ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்க -
  அம்மா வீட்டின் வெளியில் இருந்து சுவாரஸ்யமாக புகைபிடித்துக்கொண்டிருந்த காட்சி அதிர்ச்சியளித்தது ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கர கட்டி.

   Delete
 8. கன்னாட் பிளேஸ் உலகில் ஐந்தாவது இடம் ,நமது கன்னிகள் நாகரீகத்தில் முதல் இடம் !
  த.ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. நான் முன்னமே கொஞ்சம் யூகித்திருந்தேன் .. இறுதியில் நினைத்தது சரியானது ....

  இதெல்லாம் சகஜம் சார் .. ஆண் புகைப்பதை சாதாரணமாக கடந்து செல்லும் நமக்கு பெண்கள் பண்ணுகையில் மட்டும் வேறுபட்டு தெரிகிறது .. சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பார்த்து வியந்து நின்றேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்.

   Delete
 10. ஆந்திராவுக்கு ரயிலில் பயணம் போகும் போது காலை வேளையில் தண்டவாளங்களுக்கு அப்பால் பெண்கள் சுருட்டுப் புகைத்துக் கொண்டு காலைக் கடன்களைக் கழிக்கும் காடசி பார்த்திருக்கிறீர்களா?பதிவு ரசிக்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தண்டவாளம் அருகே இல்லை - விஜயவாடாவில் நான் ஒவ்வொரு வருடாந்திர விடுமுறைக்கும் செல்வேன். எங்கள் வீட்டின் அருகே பல குடிசைகள் [ரெயில்வே ஸ்டேஷன் எல்லைச் சுவரை ஒட்டி] இருக்கும். அங்கே மரத்தினால் செய்யப்படும் கொண்டப்பள்ளி பொம்மைகள் செய்யும் குடும்பம் ஒன்று இருந்தது. வயதான ஒரு பெரியவரும் அவரது மனைவியும். மனைவி இரண்டு சுருட்டு வாயில் வைத்து பற்ற வைத்த ஒன்றை தனது கணவருக்குக் கொடுத்து தான் மற்றொன்றை புகைப்பார்! :) சிறு வயதிலேயே பார்த்ததுண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 11. //அட சொல்ல மறந்துட்டேனே! அந்த இரண்டு பேரும் பெண்கள் – மிஞ்சிப் போனால் 18 வயது இருக்கலாம்! //

  பெண்கள் புகாத துறையே கிடையாது. ;(((((

  அவர்களின் குழந்தைகளை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. நியூயார்க் நகரில் டைம்ஸ்கொயரில் ஆண்கள், பெண்கள் எல்லோரும் புகைபிடிக்கிறார்கள். எங்கும் புகை மண்டலம். நம் மேல் எல்லாம் வாடை அடிக்கும்.
  கிராமத்தில் பெண்கள் காலையில் சுருட்டு பிடிக்கும் வயது முதிர்ந்த பெண்மணிகள் உண்டு.
  இப்போது எல்லா நகரங்களிலும் நாகரீக பெண்கள் புகைபிடிக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 13. naasamaa pochi...


  pakirvukku nantri!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி....

   Delete
 14. டில்லியில் மட்டுமல்ல சென்னையிலும் இது சகஜம் ஆகிவிட்டது! கிராமத்தில் மூதாட்டிகள் சுருட்டு பீடி புகைப்பதை பார்த்து இருக்கிறேன்! பகிர்வுக்குநன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 15. எல்லாம் காலத்தின் கோலம் தான். வேறென்ன சொல்வது?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 16. சாலைக் காட்சிகள் சொல்லும் கதைகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 17. Indhamadhiri vizhayangalil mattum India velinadugalukku inayaga ulladhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 18. யுரூப்பில் உள்ள பல காட்சிகள். நாம் எங்கோ போய்விட்டோம், மார்பில் தட்டலாம்.
  கான்சரே வந்துவிட்டது காச்சலுக்குக் கவலைப்படுகிறீர்கள்.
  பெண்கள் புகைபிடிக்கக் கூடாதென சட்டம் இல்லைத் தானே! அதனால் அவர்கள் 18ஒ அல்லது 81 ஒ அவர்கள் விருப்பம்.
  நீயா நானாவில் வரும் பல பெண்களிடம் இதைக் கேட்டால் நல்ல பதில் தருவார்கள். கோபிநாத்தை ஒரு நிகழ்ச்சி நடத்தும்படி கேட்கவும்.
  சமீபத்தில் திரைக்கு வந்த "ராஜா ராணி" - நாயகி பியர் போத்திலுடன் தகப்பனுடன் கார்க் கூரையில் காட்சிப்படித்தப்பட்டுள்ளது. அத்திரைப்படம் சென்னை உயர்குடி, கணணித்துறையைக்
  கருத்தில் வைத்து எடுக்கப்பட்டது.
  காட்சிகள் யாவும் அல்லது ஒரு பகுதியாவது கணணித்துறை சார்ந்ததானால் , அவை யாவும் சரியா?
  சமூகத்துக்கு கான்சர் பிடித்து வெகுகாலம். பார்த்துக் கொண்டே போகவேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.....

   Delete
 19. படிக்கும் பொழுது இந்த சீன் நியாபகத்திற்கு வந்தது :)

  http://www.youtube.com/watch?v=kpH86-XrjMg


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....