எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 20, 2013

கேட்பாரற்று – குறும்படம்சென்ற புதன் அன்று க்ளீன் [B]போல்ட்[d]! – குறும்படம் இனிமேல் ஒவ்வொரு புதன் கிழமையும் நான் ரசித்த ஒரு குறும்படத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதாக எழுதியிருந்தேன். சொன்ன முதல் வாரமே குறும்படம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்றல்லவே!  இந்த வாரத்தின் குறும்படமாக கேட்பாரற்று எனும் குறும்படம். படம்: கூகிள்.


திரு சௌ. விஜய் குமார் என்பவர் எடுத்திருக்கும் இக்குறும்படம் சொல்ல வரும் விஷயம் முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு நபர் பற்றியது. குறும்படம் ஒரு முதியோர் இல்லத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது – ஒரு இளைஞர் தனது பிறந்த நாளைக் கொண்டாட அங்கிருக்கும் முதியோர்களுக்கு உணவளிக்க, அனைவரும் உணவு உண்டாலும் ஒருவர் மட்டும் உணவு சாப்பிடவில்லை. அந்தப் பெரியவர் பக்கத்தில் இருக்கும் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று இளைஞர் அவர் சாப்பிடாததன் காரணத்தினைக் கேட்க, அவர் சொல்லும் பதில் “இன்று என் மகன் வெற்றிக்குப் பிறந்த நாள்! அதனால் நான் சாப்பிடமாட்டேன்..


தனது மகனைப் பற்றிச் சொல்லும்போது அவர் முகத்தில் தெரியும் சந்தோஷம்.....  மகனின் வளர்ச்சியில் மொத்தமாய் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், இப்படி மகனிடம் அதீத பாசம் வைத்திருந்தவர் தனது மகனிடமிருந்து ஏன் முதியோர் இல்லத்திற்கு வந்தார் என்பதைப் பார்க்கும்போது கோபம் தான் மனதில். முழுதாகப் பாருங்களேன் குறும்படத்தினை! உங்களுக்கும் நிச்சயம் கோபம் வரும்!உங்கள் ரசனைக்கு இதோ அந்த குறும்படம் – கேட்பாரற்று.... 

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

24 comments:

 1. குறும்படப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. kalathhin kolam. Indru perumbalana kudumbangalil ippadithhan nadakkiradhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி....

   Delete
 4. ச்சே.. செம்ம கிளைமாக்ஸ்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.....

   Delete
 5. குறும்படப்பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி,,,,

   Delete
 6. மனதை நெகிழ வைத்த குறும்படத்தைத் தந்ததற்கு இனிய நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.....

   Delete
 7. குறும்படப் பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா....

   Delete
 8. பகிர்வுக்கு நன்றி! பிறகு பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்....

   Delete
 9. நானும் எனக்கு பிடித்த குறும்படங்களை அப்‌டெட் செய்யலாம் என்று பார்த்தால் அதற்கு அவ்ளோ நேரம் ஆகுது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கரகட்டி.....

   சில சமயங்களில் நேரம் எடுப்பது உண்மை தான்....

   Delete
 10. குறும்படத்தைப் பற்றிய விளக்கத்திற்கும், குறும்பத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 11. குறும்படப் பகிர்வுக்கு நன்றி அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்....

   Delete
 12. இந்த மாச மங்கையர் மலரிலும் இதே கருத்தில் ஒரு கதை படித்த நினைவு. என்ன, அது வெளிநாடு எனச் சொல்லி இருந்தாங்க. இதிலே முடிவு கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தாலும் கருத்துக்காக ஓகே சொல்லலாம். :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....