சாலைக் காட்சிகள் – பகுதி 5
வெங்கலக் கடைக்குள் யானை- சாலைக் காட்சிகள்–பகுதி 4 - இங்கே
அலட்சியம் – சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே
கிச்சு
கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே
இளம்
யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே
என்னடா இது தலைப்பே இப்படி
இந்தியனை திட்டும்படியாக இருக்கிறதே? நீயும் ஒரு இந்தியனா? என என்னைத் திட்ட
நினைக்கும் நண்பர்களுக்கு...... இவை என்னுடைய வார்த்தைகளல்ல! மேலே
படியுங்கள் ப்ளீஸ்!
சென்ற வாரத்தில் ஒரு நாள்
காலை 08.45 மணி இருக்கும். வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல பேருந்தில் ஏறினேன்.
காலை நேரம் ஆக இருந்தும் பேருந்தில் அவ்வளவு கூட்டம் இல்லை. வசதியாக காலியாக
இருந்த இரட்டை இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டு சாலைப் போக்குவரத்தினை
கவனித்தபடியே இருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கையின் முன் இருக்கையில் ஒரு
இளம் ஜோடி.....
ஆணின் கையில் ஒரு குழந்தை –
ஒரு மாதம் அல்லது இரண்டு மாதக் குழந்தையாக இருக்கலாம். பக்கத்திலேயே குழந்தையின்
தாய். குழந்தை அவ்வப்போது சிணுங்க, தாய் பையிலிருந்து பால் புட்டியை எடுத்துக்
கொடுக்க, தந்தை குழந்தைக்குப் புட்டிப் பால் கொடுத்தார். குழந்தையும் பால்
குடித்து சிணுங்கலை நிறுத்தியது! பால் உள்ளே போனதால் வயிறு அதிகமாகவே நிறைந்தது போலும்!
உடனே மலம் கழித்துவிட, அந்த
அப்பா, எல்லா அப்பாக்களைப் போலவே, குழந்தையை உடனே பேருந்தில் ஜன்னலோரத்தில்
அமர்ந்திருந்த மனைவியிடம் கொடுத்தார். குழந்தையை வாங்கிக் கொண்ட அம்மா செய்த
அடுத்த காரியம் தான் பேருந்தில் இருந்தவர்கள் முகத்தினைச் சுருங்கச் செய்தது!
குழந்தைக்கு அணிவித்திருந்த
துணியை எடுத்தவர், குழந்தைகளின் கழிவுகளோடு இருந்த துணியை அப்படியே ஜன்னல் வழி
வெளியே காண்பித்து உதருகிறார்! பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளின்
முகத்தில் குழந்தையின் கழிவுகள் விழுந்தால் அவர்கள் அதிர்ச்சியில் வண்டியை சாலை நடுவே
இருக்கும் தடுப்பிலோ, அல்லது மற்ற வாகனத்திலோ மோதி விபத்து நடந்திருக்கும்! நல்ல
வேளை அந்த சாலையில் அவ்வளவு வாகன நெருக்கடி அப்போது இல்லை!
இந்தக் காட்சியிலிருந்து
விடுபடாது என்னுடைய நிறுத்தத்தில் இறங்கினேன்! ஏதோ இந்த நாள் எனக்கு இனிமையானதாக
இருக்கப் போவதில்லை என மனதில் தோன்றியது. அதை அடுத்த சாலைக் காட்சி நிரூபித்தது!
இராஜ பாட்டை – இரு புறங்களிலும்
இந்தியாவின் தலையெழுத்தினை நிர்ணயிக்கும் அலுவலகங்கள். அங்கே இரு புறங்களிலும் செயற்கை
நீருற்றுகள். அந்த இடங்களில் எப்போதும் தில்லி வரும் சுற்றுலா பயணிகள் புகைபடங்கள்
எடுத்துக் கொண்டிருப்பார்கள் – இந்தியர்கள் மட்டுமல்லாது வெளி நாட்டவர்களும்.
அப்படி ஒரு வெளி நாட்டுப் பெண்மணி புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது அங்கே
ஒரு இந்தியர் தனது குடும்பத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தார்!
அவர் செய்த விஷயம் அந்த வெளி
நாட்டுப் பெண்மணியை அதிர்ச்சி செய்ய வைத்தது.
நீரூற்றுனைப் பார்த்த உடனே அவர் செய்தது – அந்த நீரூற்றில் காரி துப்பினார்!
பொது இடங்களில் சிறுநீர் கழிக்க அசிங்கப் படாதவர்கள் இதையா அசிங்கமாக நினைக்கப்
போகிறார் எனத் தோன்றியது எனக்கு.
இதைப் பார்த்த உடனே அந்த
வெளி நாட்டுப் பெண்மணி ”BLOODY INDIAN” என முணுமுணுக்கவும் நான் அவரைக் கடக்கவும் சரியாக இருந்தது! உடனே
அவரைப் பார்க்க, அவருடன் வந்திருந்த மற்றொருவரிடம் சொன்னது – Why is he spitting in this fountain? Can’t anyone stop these things in this country?”
அந்த கேள்விகளைக்
கேட்ட எனக்கு எந்த விதத்திலும் ஒரு திருப்தியான பதிலைத்
தந்திருக்க முடியும் எனத் தோன்றவில்லை. இதைப் படிக்கும் உங்களில் யாராவது இந்த
கேள்விக்குப் பதில் சொல்லி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. சொல்லுங்களேன்!
ஒவ்வொரு
சனிக்கிழமையும் இப்பக்கத்தில் சாலைக் காட்சிகளைத் தொடர எண்ணம் இருக்கிறது –
உங்களுக்குப் பிடித்திருந்தால்.....
தொடரவா வேண்டாமா எனச் சொல்லுங்களேன் பின்னூட்டத்தில்.....
மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
எனது நேற்றைய பகிர்வு: ஃப்ரூட் சாலட் – 67 – சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் – அம்மா – காதல் மயக்கம்!
புது தில்லி.
எனது நேற்றைய பகிர்வு: ஃப்ரூட் சாலட் – 67 – சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் – அம்மா – காதல் மயக்கம்!
தாங்கள் கண்ட சாலைக் காட்சிகள், படிக்கும்போதே தலைகுணிய வைக்கின்றன. எச்சில் துப்புவதைப் பார்த்திருக்கின்றேன். பேரூந்த பயணிக்கும்போதே எச்சில் துப்புவர்களைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் குழந்தையின் ....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குதனிமனித ஒழுக்கம் இருந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை நேரம் ஜீவா.
நீக்குஇதென்ன கேள்வி? கண்டிப்பாக தொடருங்கள்.....
பதிலளிநீக்குஇப்படியும் பல Bloody Indian இருப்பதால் உலக நாடுகளில் நம் இந்தியா கேவலமாக பார்க்கப்படுகிறது. நன்றாக படித்து சம்பாதித்தால் மட்டும் போதாது நல்ல பழக்க வழக்கங்களை பின் பற்ற வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குவெட்கப்பட வேண்டிய விசயம்தான்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குசாலைக் காட்சிகளை நொந்துபோக வைக்கின்றன,,!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குவருத்தப் பட வைக்கும் சம்பவம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமேலே மண்டையில் வளர்ச்சி இருக்கோ இல்லையோ ,கீழே வயிறு வளர்ந்து பிள்ளையும் பிறந்து விடுகிறது !
பதிலளிநீக்குபயணம் தொடரட்டும் !
த.ம 4
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குதேவையான பகிர்வு தான்.ஆதங்கப் படத்தான் முடிகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்....
நீக்குகுழந்தையின் கழிவை இப்படி எடுப்பதை நான் பலமுறை பார்த்துக் கண்டித்ததோடு அல்லாமல் பேருந்துப் பயணத்தில் அதுவும் நீண்ட பயணத்தில் காற்றில் முகத்தில் வந்து விழுந்து,.....அப்படியும் மன்னிப்பு என எதுவும் கேட்காமல், "நீ எல்லாம் பிள்ளை, குட்டியே பெற்றிருக்கமாடாய்!" என்ற வசைச்சொல்லையும் வாங்கிக் கொண்டு!....... போதும்டா சாமி! அதுக்கப்புறமா நீண்ட பயணம் என்றாலே டிரைவர் பக்கத்து சீட் அல்லது டிரைவருக்குப் பின்னால் இருக்கும் முதல் சீட் எனக் கேட்டு வாங்கிக் கொண்டுவிடுவோம். முன்பதிவு செய்யும்போதும் அப்படியே செய்துவிடுவோம். இப்போல்லாம் பேருந்துப் பயணத்தைக் குறைச்சாச்சு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
நீக்குவெளிநாட்டுக்காரங்க சொல்வதில் என்ன தப்பு! எதுவும் தப்பே இல்லை. :((((
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குபொது இடங்கள் தூய்மை காக்க கடுமையான சட்டம்னா ஒண்ணு இருக்கனும்... இல்ல தனிமனித ஒழுக்கமாவது இருக்கனும்... இரண்டும் இல்ல... சுதந்திரமா எல்லாத்தையும் செஞ்சுட்டு போய்கிட்டே இருக்காங்க... யாருமே ரோட்ல எச்சில் துப்புறது என் கண்ணில படலைன்னா.. அந்த நாள்தான் எனக்கு அதிசயமா இருக்கும்... அப்படி ஒரு அதிசயத்தை இன்னும் பார்க்கலை... தமிழ் நாட்டில் பஸ்-ஸ்டாண்டுகளில் மழை நாளில் போய் காலை வைத்து விடுங்களேன் பார்க்கலாம்...
பதிலளிநீக்குஇன்னும் சொல்ல போனால் ரோட்டோரங்களில் எச்சில்,சிறு நீர் மட்டுமல்ல மலங்கழிப்பவர்களும் கூட இருக்கிறார்கள். ஒரு நாள் நேரமாவிட்டது என ஷார்ட்-கட் ஆக ஒரு குறுக்கு சந்தில் நுழைந்து வேகமாய் போக அங்கே சாலை இரு ஓரமும் இந்த உவ்வே.... காட்சிகள்...! மூக்கை பொத்திக்கொண்டு ஓட... எதிரில் வருபவன் ... " அதுக்கு அந்த பக்கமா போக வேண்டியதுதானே...?" என்று அந்த குறுக்கு சந்திற்கு வக்காலத்து வேறு! கடுமையான சட்டம் போட்டால் ஒழிய சுற்று புறத்தை தூய்மையா பார்க்க முடியாது.அதே சமயம் ஒவ்வொருத்தரையும் சட்டம் கண்காணிச்சிகிட்டு இருக்கவும் இங்க சாத்தியமில்ல... ! நூறு சதவீத கல்வியறிவும், ஆசிரியர்களின் வழி நடத்தலில் நல்ல சமுதாயத்தையும் உருவாக்குவதன் மூலம் வருங்காலத்தில் மாற்றங்கள் நிகழ்த்தலாம்.
//நூறு சதவீத கல்வியறிவும், ஆசிரியர்களின் வழி நடத்தலில் நல்ல சமுதாயத்தையும் உருவாக்குவதன் மூலம் வருங்காலத்தில் மாற்றங்கள் நிகழ்த்தலாம்.//
நீக்குஇது மட்டும் நடந்து விட்டால்!.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா அன்பரசு ஜி!
சாலையில் வண்டியில் வருபவர்களை விடுங்கள். பின்சீட்டுக்காரர்களின் நிலை என்ன? பஸ்ஸிலிருந்தும், சாலைகளிலும் காறித் துப்பும் மக்கள், புகையிலை போட்டு ஊரையே நாசம் செய்வோர், கண்ட இடத்தில் சிறுநீர் கழிப்போர், குழந்தையையும் அவ்வாறு செய்யச் செய்து பழக்குவோர், போக்குவரத்து விதிகளை மதிக்காதோர்...இம்மாதிரி மக்கள் நிறைய இருக்கிறார்கள், நம் நாட்டில்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇதற்கு படிப்பின்மைதான் காரணம் என்று கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் படித்தவர்களும் வாகனங்களில் செல்லும்போதே காரி உமிழ்வதைக் கண்டிருக்கிறேன். இதற்கு சிவிக் சென்ஸ் இல்லாததே காரணம். இதை சிறுவயது முதலே கற்பிக்க வேண்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!
நீக்குதொடருங்கள்.....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.
நீக்குஇப்படிப்பட்ட மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிரவிக்காணப்படுகிறார்கள்....
பதிலளிநீக்குநம் நாடு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அடுத்தவர் முகம் சுழிப்பது போல் நடக்கூடாது என்றும் எப்போது கற்பார்களோ?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்.
நீக்குஇவற்றையெல்லாம் படிக்கவே மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. மக்கள் அனைவருக்கும் படிப்பறிவும், சமூக சிந்தனையும் ஏற்பட வேண்டும். அவரவர்களாகத் திருந்தி பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவினால் மட்டுமே, நம் நாட்டுக்கு நல்ல பெயர் கிடைக்கும்..
பதிலளிநீக்குஇல்லாவிட்டால் இதுபோன்ற அசிங்கங்கள் + குமட்டல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
நாமும் ஓர் இந்தியன் என்று சில சமயங்களில் நாம் பெருமைப்பட்டுக்கொண்டாலும், இவற்றையெல்லாம் பார்க்கவும் கேட்கவும் சகிக்கத்தான் முடியவில்லை. ;(
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஎன்ன சொல்ல? பல மனிதர்கள் இப்படிதான் நடந்து கொள்கிறார்கள்.
பதிலளிநீக்குசாலைக் காட்சிகள் தொடரட்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குமிகவும் வருத்தப்பட வைக்கும் சம்பவங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குSaalai kaatchigalai avasiyam thodaravum
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குவெட்கப்பட வேண்டிய ஒன்று! சாலைக்காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன! தொடருங்கள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
நீக்குஎன்னத்தை சொல்லுறது....
பதிலளிநீக்குதொடருங்கள் நாகராஜ் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....
நீக்குஎன்ன மோசமான எண்ணங்கள். இவர்களை எல்லாம் என்ன செய்வது. அன்பால் திருத்தமுடியாது இவர்களை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குஇவ்வாறு நடந்து கொள்பவர்கள் பொது இடத்தில மட்டும் தான் இப்படி நடந்து கொள்கிறார்களா அல்லது அவர்கள் வீட்டினுள்ளும் இப்படி தான் நடந்து கொள்வார்களா ?? என தெரியவில்லை... வேதனையான விஷயம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா....
நீக்குசரியான தலைப்புதான்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்...
நீக்கு