எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 18, 2013

கட்டங்காப்பியும் காய்ந்து போன தோசையும்[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 9]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 8]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 7]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

மனதுக்குள் பூரண நிம்மதியுடன் அலுவலகத்திற்குத் திரும்பி வந்து அந்த அலுவலருக்கும், நண்பரின் நண்பருக்கும் நன்றியைத் தெரிவித்த பின் இரவு அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்த அறைக்குச் சென்றோம். அங்கே எங்களது ஜோல்னா பையையும், காமிராவினையும் வைத்துவிட்டு இரவு உணவு உண்ண கீழே சென்றோம். அங்கே என்ன சாப்பிட்டோம், என்ன கிடைத்தது என்பதை அடுத்த பதிவில் சொல்றேனே! :)

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

மனது முழுக்க சபரிகிரிவாசனை தரிசித்த அமைதி தழுவியிருந்தது. உணவு உண்ண வேண்டுமே, இரவு எட்டரை மணிக்கு மேல் ஆகிவிட்டதே என்ற எண்ணம் மனதிற்குத் தோன்றவில்லை. ஆனாலும் வயிறு சும்மா இருக்குமோ? சத்தமாக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டது. என் வயிற்றின் குரல் நண்பர்களுக்கும் கேட்டிருக்க வேண்டும்! அல்லது அவரது வயிற்றின் குரலா! “சாரே ஊணுக் கழிக்காம்!எனச் சொல்லி அறையிலிருந்து கீழே அழைத்து வந்தார்.தேவஸ்தானமே ஒரு உணவகத்தினை நடத்துகிறது. அங்கேயே சாப்பிடலாம் என முடிவானது. 100 மீட்டர் தொலைவிலேயே அமைந்து இருந்ததால் ரொம்பவும் நடக்க வேண்டிய அவசியமில்லை. உள்ளே நுழைந்து என்ன கிடைக்கும் எனக் கேட்டால், “தோசா உண்டு, பின்னே சப்பாத்தி, பின்னே கட்டஞ்சாய், கட்டங்காப்பி!என அவர் சொல்லவே நானும் ஒரு நண்பரும் தோசை சொல்ல, மற்றொருவர் சப்பாத்தி சொன்னார்! கூடவே கட்டங்காப்பி! தோசையுடன் இது என்ன கட்டங்காப்பி காம்பினேஷன் புரியவில்லை!

தோசை வந்தது. கூடவே சாம்பார் எனும் பெயரிலும், சட்னி என்ற பெயரிலும் தண்ணீர் வந்தது! அதைப் பார்த்து கண்ணீர் வந்தது! தோசையோ காய்ந்து போய் இருந்தது! சேட்டா தோசை சூடா இல்லையா!என வாய் வரை வந்த கேள்வியை அடக்கிக் கொண்டேன். மொத்தமாக தோசையை செய்து வைத்து விடுவார்கள் போல! அதனால் தான் அது காய்ந்து போய் இருக்கிறது! பிறகு தான் கட்டங்காப்பியின் சூட்சுமம் புரிந்தது. தோசை ஒரு கடி, கட்டங்காப்பி ஒரு வாய் குடி! அப்படியே உள்ளே போனது. நண்பரின் நண்பர் “கட்டங்காப்பி இன்னும் வேணோ?என்று கேட்டபோது அழுவதா சிரிப்பதா புரியவில்லை!இப்படியாக இரவு உணவினை முடித்துக் கொண்டு, கொஞ்சம் காலார நடந்து தேவஸ்தானம் நடத்தும் பிரஸாதக் கடையில் அரவணைப்பாயசம் வாங்கிக் கொண்டு போகலாம் என அங்கே சென்றோம். மொத்தமாக மூன்று பேருக்கும் சேர்த்து ஏழு டப்பாக்கள் எனக் கணக்கு செய்து அவரிடம் காசு கொடுத்து, டப்பாக்களை எடுத்துக் கொண்டு வந்தோம். அறைக்கு வந்தால் அதில் எட்டு டப்பாக்கள் இருந்தன! காசு வாங்கியதோ ஏழு டப்பாக்கு மட்டுமே! சபரிகிரி வாசனே ஒரு டப்பா அதிகமாகக் கொடுத்துவிட்டார் என நண்பர் சொன்னாலும் மனது கேட்கவில்லை.  காலையில் உண்டியில் காசு போட்டு விட நினைத்துக் கொண்டேன்.

திருவனந்தபுரத்திலிருந்து பயணித்த பாதையையும், பம்பைக் குளியலையும், கண்ணாரக் கண்டுகளித்த சபரிகிரி வாசனின் தரிசனத்தினையும் நினைத்தபடியே, அதைப் பற்றி கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  கூடவே கொஞ்சம் தில்லி கதைகளைப் பற்றியும்.  பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாதே....  மணி பார்த்தால் 11.30....  விடியற்காலையில் எழுந்து மீண்டும் ஒரு முறை தரிசிக்க எண்ணம்.....  அதனால் இப்போது தூங்குவது தான் நல்லது என விளக்கினை அணைத்து உறக்கத்தினை தழுவினோம்.

நடந்த அலுப்பில் கொஞ்சம் கால் கடுக்கிறது. சுகமான உறக்கம் வந்தது. தூக்கத்தினைத் தொடரும் போது இந்தப் பகிர்வினைத் தொடர்வது கடினம் தானே.....  அதனால் நான் தூங்கி எழ்ந்து வரும் வரை நீங்களும் ஒரு தூக்கம் போடுங்க மக்களே! அட அதுக்குள்ளவே குறட்டை சத்தம் கேட்குதே!.......

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. தோசையுடன் இது என்ன கட்டங்காப்பி காம்பினேஷன் புரியவில்லை!

  சாப்பிடும்போதுதான் புரிந்தது ...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. காலையில் பதிவைப் போட்டு விட்டு தூங்கச் சொல்றீங்களே ,ஒண்ணும் அவசரமில்லை ,நல்லாத் தூங்கி எழுந்த பிறகு பதில் சொல்லுங்க ...அதுக்குள்ளே கட்டங் காப்பியை குடிச்சுக்கிறோம் !
  த.ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 3. தோசையுடன் கட்டங்காப்பி சுகம் தான்...! தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. அது என்னவோ கேரளத்தின் முக்கு மூலை பயணித்திருக்கின்றேன். எங்கு போனாலும் கடைகளில் கட்டாஞ்சாயா மட்டுமே தேறும். தேறும் என்றால் புட்டும் - கடலையும், அப்பமும், தோசையும் - சாம்பாரும், தோரனும் எதை உள்ளே தள்ள வேண்டினாலும் சாயாவின் உபயம் வேண்டும். அவ்வளவு கொடுமையாக இருக்கும் அங்கு சாப்பாடு.. ஆனால் உழைக்கும் மக்கள் அவற்றையும் சகித்துக் கொண்டு உண்டு விட்டு போவார்கள், அதிகாலையோ, நள்ளிரவோ வயிற்றைக் காயப் போட முடியுமா?!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை மகிழ்ச்சி அளித்தது விவரணன் நீலவண்ணன்.....

   தொடர்ந்து சந்திப்போம்.....

   Delete
 5. கட்டஞ்சாயா, கட்டங்காப்பி இல்லைன்னா நம்ம மக்களுக்கு பொழுதே விடியாது :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 6. Dosai padathil parpadharku thuni madhiri azhaga irukku.

  ReplyDelete
  Replies
  1. காய்ந்த தோசையை படம் எடுக்கவில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 7. அதனால் நான் தூங்கி எழ்ந்து வரும் வரை நீங்களும் ஒரு தூக்கம் போடுங்க மக்களே!
  >>
  ராஜி தூங்கு மூஞ்சின்னு புரிஞ்சுக்கிட்டு காலைலயே தூங்கச் சொல்லுற நல்ல அண்ணன் நீங்கதான்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல அண்ணன்! நன்றி சகோ... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 8. கட்டாங்காப்பி ருசி அடடா! செம. எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ஒரு பார்சல் வாங்கி வந்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. சூடு ஆறிடும்னு வாங்கல! அடுத்த பயணத்தின் போது ஃப்ளாஸ்க் எடுத்துட்டு போயிடுவோம்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 9. சட்னி என்ற பெயரிலும் தண்ணீர் வந்தது! அதைப் பார்த்து கண்ணீர் வந்தது!//

  தேவஸ்தானம் நடத்தும் ஹோட்டலை இப்பிடியா கிண்டல் பண்ணுவது ? ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடியல....

  ReplyDelete
  Replies
  1. தேவஸ்தானம் நடத்தினாலும் சாப்பிடறது மக்கள் தானே மனோ! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 10. நானும் தோசை துணி மாதிரி இருக்கிறதே என்று படிக்க ஆரம்பித்தால் நீங்களோ தோசை காய்ந்து இருந்தது என்கிறீர்கள்.
  அது என்ன கட்டங்காபி ?

  ReplyDelete
  Replies
  1. பால் கலக்காத காபி - தண்ணீரில் காபி பொடியைப் போட்டு கொதிக்க வைத்து அதிலே கொஞ்சம் சக்கரை சேர்த்தால் கட்டங்காபி! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 11. தோசையுடன் கட்டங்காப்பி....நல்ல காம்பினேஷன் தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 12. //அது காய்ந்து போய் இருக்கிறது! பிறகு தான் கட்டங்காப்பியின் சூட்சுமம் புரிந்தது. தோசை ஒரு கடி, கட்டங்காப்பி ஒரு வாய் குடி!//

  ;)))))

  மிகவும் பாவம் .... அதைக்கஷ்டப்பட்டு சாப்பிட்ட நீங்கள் ;(((((

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. “சாரே ஊணுக் கழிக்காம்!”
  “தோசா உண்டு, பின்னே சப்பாத்தி, பின்னே கட்டஞ்சாய், கட்டங்காப்பி!”
  “கட்டங்காப்பி இன்னும் வேணோ?”

  பதிவைப் படித்து முடித்ததும் நானும் கொஞ்சம் சம்சாரித்துப் பார்த்தேன். நன்றி!  ReplyDelete
  Replies
  1. ”ஓ... நீங்களும் சம்சாரிச்சோ! வளர நன்னாயி!”

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 14. கேரளாவில் குருவாயூர் மட்டும் போயிருக்கேன். அங்கேருந்து கிட்டக்க இருந்த ஒரு பகவதி அம்மன் கோயில். அந்தப் பயணத்திலேயே போதும், போதும்னு ஆயாச்சு! :)))) எங்கே போனாலும் கட்டங்காபி, கட்ட சாயும்தான்! குடிக்கோ!ம்பாங்க. கையெடுத்துக் கும்பிட்டுட்டு வந்துடுவேன். அதோடு டீக்கடையில் கூட நான் வெஜ்ஜும் சேர்ந்தே இருக்கு! :( அசைவம் சாப்பிடாதவங்களுக்குனு தனியா ஒரு ஹோட்டலைக் கண்டு பிடிக்கிறதே கஷ்டம் போல!

  ReplyDelete
  Replies
  1. சைவ ஹோட்டல் - பெரிய பூதக்கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டியிருக்கிறது! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 15. தொடர, என்னமோ எரர்னு சொல்லுது, பின்னூட்டம் போயிருக்கானு தெரியலை. :)

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டம் வந்தாச்சு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 16. என்னுடைய பழைய நினைவுகளை மீட்டெடுத்தது இந்தப்பதிவு.... என்னுடைய அனுபவங்களையும் எழுதலாம் என்றிருக்கிறேன்... த.ம.8

  ReplyDelete
  Replies
  1. எழுதுங்க ஸ்.பை......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 17. உணவு விஷயத்தில் கேரளா
  நம் தமிழர்களுக்கு அவ்வளவாக
  ஏற்புடையதாக இருப்பதில்லை
  அதுவும் மலையில் என்றால்
  சொல்ல வேண்டியதில்லை
  காபி ஊறுகாயாய் பயன்பட்டதை ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 18. Replies
  1. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 19. பல கேரள மக்களுக்கு ஃபில்டரில் டிகாக்‌ஷன் இறக்கி காப்பி தயாரிப்பது என்பது தெரியாத ஒன்று. அங்கு பெரும்பாலும் காப்பி காய்ச்சுவதுதான் வழக்கம். காப்பியை விட சாய் தேவலாம். ஒரு கடி உண்ண ஒரு வாய் குடிக்க என்பதும் வழக்கம். பொதுவாக புனே டம்ளர் அளவில்தான் காப்பி குடிப்பார்கள் சுவாரசியமான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா..

   Delete
 20. தொடர்கிறேன் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 21. Replies
  1. தங்களது வருகைக்கும் கருதுப் பகிர்வுக்கும், +1 வாக்கிற்கும் மிக்க நன்றி நம்பள்கி!

   Delete
 22. வித்யாசமாக தோசையை சாப்பிட நேர்ந்ததை விவரித்த விதம் இரசித்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....