எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, November 2, 2013

அஞ்சீர் ரோல்ஸ்....ஒரு படத்தில் விவேக் தனது காதலி வீட்டிற்குச் செல்லும்போது மேலிருந்து அந்த பெண் “ஆவாஸ் அஞ்சிங், ஆவாஸ் அஞ்சிங்என கதறுவாளே அது போல தில்லியிலிருந்து நான் ஏதோ கதறுகிறேன் என நினைக்க வேண்டாம் நண்பர்களே....  இன்று தீபாவளி....  [ஏதோ பெரிசா புதுசா விஷயம் சொல்ல வந்துட்டாரு! எங்களுக்குத் தெரியாதா?]

எல்லா வருஷமும் தான் தீபாவளி பலகாரமா அதிரசம், லட்டு, மைசூர் பாகுன்னு அலுத்துப் போன விஷயங்களையே சாப்பிடறது?ன்னு மனசுக்குள்ள உங்களுக்கு தோணுமே! அதனால தான் இந்த தீபாவளி திருநாளில் தீபாவளி வாழ்த்துகளோட, உங்களுக்கு வட இந்திய இனிப்பு வகைகளா இங்கே தரப்போறேன்!

சரி “ஸ்வீட் எடு.... கொண்டாடு....அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி உங்க எல்லோருக்கும் எங்களது மனமார்ந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள். பட்டாசு வெடிக்காம, டி.வீல சிறப்பு தீபாவளி திரைப்படமா 34-வது தடவையா ஏதாவது சினிமா பார்க்காம, சமர்த்தா வீட்டுல இருக்கறவங்க எல்லாம் சந்தோஷமா பேசி, மூக்கு முட்ட சாப்பிட்டு, பொழுதை நல்லா போக்குங்க! ஓகே!வாழ்த்தியாச்சு.... அடுத்து என்ன....  இனிப்பு விநியோகம் தான்.....  கீழே விதம் விதமாய் இனிப்புகள் கூடவே அதன் பெயர்களையும் கொடுத்து இருக்கேன் [என்ன ஏதுன்னு முழிக்கக் கூடாதே!] யாருக்கு எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோங்க! அள்ள அள்ளக் குறையாது இருந்துட்டே இருக்கும் அட்சய பாத்திரம் இது! ஓகே...  அதனால நிதானமா எடுத்து சாப்பிடுங்க!


காஜு பர்ஃபிகாஜு கத்லி...


காஜு பிஸ்தா ரோல்...


காஜு - பிஸ்தா பர்ஃபி


கேசரியா பேடா.....மாவா பேடா......

சரி அது என்னமோ தலைப்பில் ஒண்ணும் புரியாம ஒண்ணு எழுதி இருக்கே அது என்ன? அது வேற ஒண்ணும் இல்லீங்க முந்திரிப் பருப்பு அத்தியும் சேர்த்த ரோல்....  தீபாவளி சமயத்தில் இங்கே மிகவும் பிரபலம்.....  இதோ அதுவும் உங்களுக்காக.....  

அஞ்சீர் ரோல்ஸ்.....

எப்படி செய்யணும்னு கேக்கறீங்களா? அது தனிப்பதிவா வேணும்னா எழுதறேன் – அடுத்த தீபாவளிக்குள்ள!

மீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.....

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....


நட்புடன்

வெங்கட், ஆதி வெங்கட் மற்றும் ரோஷ்ணி வெங்கட்.
திருவரங்கம்.

44 comments:

 1. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. உளங்கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
  மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி....

   Delete
 4. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. அஞ்சீர் ரோல்ஸ் என்ற உங்கள் தலைப்பைப் பார்த்து ஆச்சர்யம், எனக்கும் 'ஆவாஸ் அஞ்சி' தான் நினைவுக்கு வந்தது. வந்து படிக்க ஆரம்பித்தால் நீங்களும் அதிலேயே தொடங்குகிறீர்கள்!!

  தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அட நீங்களும் அதையே யோசிச்சீங்களா? :)

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. இனியா வாழ்த்துக்கள்.

  சாரி. சாரி.. ஹி ...ஹி ...

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

   Delete
 7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
  மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்....

   Delete
 8. அள்ள அள்ளக் குறையாத ஸ்வீட்ஸ்கள் எல்லாவற்றையும் கண்ணால் ருசித்தேன். அருமை. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   Delete
 9. காஜு காதலி... ஸாரி, காஜு கத்லி எனக்கு ரொம்பப் பிடிச்சது. நிறைய எடுத்துக்கிட்டேன். உங்களுக்கும் ஆதி மேடம் மற்றும் ரோஷ்ணி, அப்பா, அம்மா அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. மார்ஜியானா ரொம்பவே நினைவில் வந்துட்டு இருக்கா போல! :)

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 10. நாட்டில் பெருகிவிட்ட சர்க்கரை குறைபாடு உடையவர்களின் சார்பாக கேட்கிறேன் ...
  மூங்க் தால் காரம் உடனே வழங்கவும் !
  த.ம 6

  ReplyDelete
  Replies
  1. மூங்க் தால் தானே.... போட்டுருவோம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 11. எல்லாத்துலயும் ரெண்டு ரெண்டு எடுத்து வச்சிக்கிட்டேன். பலகாரத்துக்கு நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 12. தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
  வேதா.இலங்காதிலகம்.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!

   Delete
 13. இனிப்பு திகட்டிப் போச்சி! எனக்கல்ல! மற்றவர்களுக்கு! நான் உண்ணகூடாதே!

  ReplyDelete
  Replies
  1. அடடா.... நீங்கள் உண்ணக் கூடாதா......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 14. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 15. இந்த வருஷம் எங்கள் வீட்டில் காஜு பர்ஃபி யும் காஜு கத்லியும்தான் ( ஹிஹி வாங்கியது) வீட்டில் செய்த இனிப்பு குலாப் ஜாமூன். இந்த வருஷம் தீபாவளி திருவரங்கத்திலா( மாமியார் வீடு.?) தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.....

   எனது வீடு தான் திருவரங்கத்தில்! :)

   Delete
 16. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! அனைத்து ஸ்விட்டும் கண்ணை மட்டுமல்ல மனதையும் நிறைத்தன! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 17. எல்லாமே சாப்பிட்டிருக்கேன். :)))) இங்கேயும் சாப்பிட்டேன். :))) என்ன இருந்தாலும் ஸ்வீட்டில் வட இந்தியாவை அதிலும், ராஜஸ்தான், குஜராத்தை அடிச்சுக்க முடியாது. :))))

  ReplyDelete
  Replies
  1. உண்மை. ஸ்வீட்ல அவங்களை அடிச்சுக்க ஆளில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 18. தீபாவளி விருந்தில் மகிழ்ந்தோம்:)! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 19. தீபாவளிக்கு திருவரங்கம் வந்து விட்டீர்களா?
  மகிழ்ச்சியான தீபாவளி திருநாள் தான் குடுமபத்தினர்களுக்கு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete

 20. தமிழ்மணம் 9

  இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கவிஞர் ஐயா.....

   Delete
 21. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். (belated)

  Vijay / New Delhi

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 22. inippu vakaikal padangal...
  mmm...
  aasaiyai thathuvittathu anne...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....