எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 7, 2013

சில ஓவியங்கள்….


தீபாவளிக்கு இப்பல்லாம் ரெடிமேட் உடைகள் தானே வாங்குகிறோம். அப்படி சட்டை வாங்கும்போது அதை மடித்து வைக்கும் கடைக்காரர்கள் உள்ளே ஒரு தடியான அட்டையை வைத்து மடிப்பார்கள். சட்டையை போட்டுக்கொள்ள அதைப் பிரிக்கும்போது அந்த அட்டையை பொதுவாய் எடுத்து குப்பையில் போட்டுவிடுவார்கள்.  எங்க வீட்டுல அதைக்கூட எடுத்து வைத்து விடுவது உண்டு! எதுக்காவது பயன்படும்னு அம்மணி சொல்வாங்க!

என் மகள் கையில் அந்த அட்டை கிடைக்க அதிலிருந்து செவ்வகமாக ஒரு அட்டையை வெட்டி, மீதி இருக்கும் அட்டையில் இன்னும் சில வடிவங்களில் வெட்டி அதில் கலர் பென்சில் கொண்டு வரைந்து எதையாவது செய்து கொண்டிருப்பாள்.  அப்படி அவள் தயாரித்த இரண்டு ஓவியங்கள் இங்கே கொடுத்துள்ளேன்! மூன்றாவது ஒரு பென்சில் ஓவியம்!

முதல் ஓவியம்….வான மண்டலத்தில் பறந்து கொண்டிருக்கும் மூன்று ஹாட் ஏர் பலூன்கள்.  ”அதில் யாரும்மா உட்கார்ந்து இருக்காங்க!”ன்னு கேட்டா, ”ஒரு பலூன்ல ஒருத்தர் தாம்பா உட்காரணும் – ஒண்ணுல நீ, இன்னொண்ணுல அம்மா, கடைசி பலூன்ல நான்!” பலூன்களும், கீழே இருக்கும் கூடைகளும் தனித்தனியே வெட்டி வரையப்பட்டவை. பிறகு அதை பெரிய செவ்வகத்தில் ஒட்டியிருக்கிறார்!

இரண்டாவது ஓவியம்…..


ஒரு மலை. மலையை முட்டியபடிச் செல்லும் மேகங்கள்.  மலை மீது ஒரு வீடு. பக்கத்தில் சூரியன். அது சரி கீழே உடைகள் தொங்குகிறதே? இரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகள் கீழே ஒரு நூல் கட்டி அதில் துணி காயப் போட்டிருக்கு! :)

மூன்றாவது – பென்சில் ஓவியம்


போகோ சானலில் வரும் பீம் மற்றும் நண்பர்கள் இப்போதைய எல்லாக் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தவர்கள். இங்கே லட்டு உண்ணும் பீமின் படத்தினை வரைந்திருக்கிறார் பென்சிலால்!

என்ன நண்பர்களே ஓவியங்களை ரசித்தீர்களா!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..

50 comments:

 1. ரோஷினியின் கைவண்ணம் கண்டு
  மிக மகிழ்ந்தேன்
  யதார்த்தச் சிந்தனையுன் கூடிய
  கற்பனை மனம் கவர்ந்தது
  ( அந்தத் துணிக் காயப்போடுவது )
  குழந்தைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!. ரோஷ்ணியிடம் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன்....

   Delete
 2. அடேடே.... பாராட்டுகளைச் சொல்லுங்க உங்க பொண்ணு கிட்ட! அருமையா வரைஞ்சிருக்காங்களே... நல்ல கற்பனைத் திறன் இருக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   ரோஷ்ணியிடம் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன்....

   Delete
 3. ஸ்ரீரங்கம் வீட்டுக்கு வந்திருப்ப உங்களில் பாதி என்கிட்ட ரோஷிணியின் கைவண்ணங்கள் சிலவற்றைக் காண்பிச்சாங்க. அப்பவே ரசிச்சு, பிரமிச்சு வாழ்த்தும் சொன்னேன். அசத்தலாப் பண்ணியிருக்குது குழந்தை! உங்க என்கரேஜ்மெண்ட்ல இன்னும் சூப்பராப் பண்ணுவா வரும் நாட்கள்ல! மனம் நிறைந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலகணேஷ்.!.

   இன்னும் சில ஓவியங்கள் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

   ரோஷ்ணியிடம் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன்....

   Delete
 4. என்ன ஒரு கற்பனை. ரோஷ்ணி குட்டி.
  அழகான கட் அவுட்கள். அதீதமான ஓவியங்கள். அதற்கு மேல சோட்டா பீம் வேற வந்திருக்கிறார்!!
  தாய் எவ்வழி மகளும் அவ்வழி. அம்மாவின் குணநலன்கள் அனைத்தையும் அமையப் பெற்றிருக்கிறார் குட்டிப் பெண்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ”அம்மாவின் குணநலன்கள் அனைத்தையும் அமையப் பெற்றிருக்கிறார்!”

   அதானே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. கண்டிப்பாக மிக ரசித்தோம் !
  ரோஷ்ணிக்கு என் அன்பான பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 7. எல்லாப் படமும் அருமை அதிலும் 3வது படம் மிக அருமை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 8. செல்லம் வரைந்தது செல்லமாக இருக்கிறது வாழ்த்துகளை சொல்லுங்க அண்ணே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 9. எனது வாழ்த்துகளை சொல்லுங்க மகளுக்கு...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 10. அத்தனையும் அசத்தலாயிருக்கு. குட்டிம்மாவுக்கு வாழ்த்துகளைச்சொல்லுங்க..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 11. நீங்கள் காமெராவில் கலைக் கண்ணோட்டத்தோடு எடுக்கும் படங்களை போன்றே உங்கள் மகளின் படங்களும் அருமை !
  தந்தை குலத்தின் சார்பாக உங்களுக்கு சப்போர்ட் பண்ண நான் இருக்கேன் கவலையை விடுங்க !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 12. தங்களின் அன்பு மகள் செல்வி ரோஷ்ணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.

  குழந்தையின் கைவேலைகளும் ஓவியங்களும் நல்லா இருக்கு. மேலும் மேலும் இவற்றில் சிறப்படைய ஊக்குவிக்கவும், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். தந்தையும் தாயும் எழுத்தாளர்கள் ப்ளஸ் புகைப்படக்காரர்கள். கேட்க வேண்டுமா, குட்டி பதினாறு அடி பாயும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 14. நானும் புதிய ரெடிமேடு சட்டையுடன் கூடிய அட்டையை வீணாக்கவே மாட்டேன். எனக்கு அது மிக மிக உபயோகமான பொருளாகும். ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 15. Very Nice Drawings. Convey my wishes to her

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிடா!

   Delete
 16. குழந்தையின் இந்த சிந்தனா சக்தியைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் இவளொரு
  சிறந்த ஓவியங்களை வரையக் கூடியவள் என்பதையே உணர்த்துகின்றது .
  வாழ்த்துக்கள் .தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை அவளுக்கு வழங்குங்கள் .
  இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது நான் எனது கடந்த காலத்திற்கே
  சென்றுவிட்டேன் .சிலைகள் செய்வதும் ,சித்திரங்கள் வரைவதுமே எனது
  உயிர்மூச்சாகத் திகழ்ந்தது அது ஒரு காலம் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 17. கடைசி இரண்டு படங்களும் சூப்பர். அதுலயும் ஐஸ் குச்சில துணி காய வச்சிருக்கா பாருங்க. செம மூளை மேடமுக்கு!! ரோஷிணிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 18. அழகான ஓவியங்கள்.
  உங்களின் மகளுக்கு என் வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 19. ரோஷ்ணிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அருமையாக கற்பனை திறனுடன் வரைந்து இருக்கிறாள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 20. அழகான ஓவியங்கள். விளக்கங்கள். மகளுக்கு நல்வாழ்த்துகள்:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 21. உங்களுக்குப் போட்டிபோட உங்க மகளே வந்துட்டாங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 22. Roshini in kaivannam romba azhaga irundhadhu. vidhai ondru poda surai vondra mulaikkum . melum vizhuppuram thatha vin gene avalukku irukku.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 23. ஓவியங்கள் ஒன்றொன்றும் அருமை. நல்ல கற்பனை திறன். பல வித பொருட்களை உபயோகப்படுத்தி ஓவியம் வரைய நல்ல visualising ability இருக்கவேண்டும். அது ரோஷனியிடம் நிறைய இருக்கிறது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்துஜி!

   Delete
 24. ரோஷிணிக்கு என் பாராட்டுக்கள். well done

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகாதேவன் ஜி!

   Delete
 25. wow...

  anne en vaazhthai kuzhanthaikku sollidungal...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி. நிச்சயம் உங்கள் வாழ்த்துகளை மகளிடம் சொல்கிறேன்...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....