சென்ற
புதன் அன்று கேட்பாரற்று –
குறும்படம் என்ற பகிர்வில் முதியோர் இல்லத்தில் நடக்கும்
ஒரு படத்தினைப் பார்த்தோம். இந்த வாரம் வேறு ஒரு குறும்படம்.... என்ன குறும்படம், என்ன மொழி என்றெல்லாம்
உங்களுக்கு கேள்வி எழலாம்! அதற்கு முன்னரே சொல்லி விடுகிறேன்.
இந்த
வார குறும்படம் தமிழ் மொழி படம் அல்ல. இந்த குறும்படம் மலையாளத்தில். ஆனாலும்
சுலபமாக புரியும் படிதான் இருக்கும்.
அதனால் பயப்பட வேண்டியதில்லை. குறும்படம் எனும்போது பேசப்படும் வசனங்கள் மிகக்
குறைவே. படம் பற்றிய சிறு குறிப்பு இதோ.
இரண்டு
நண்பர்கள் ஒரு பழைய இரண்டு சக்கர வாகனத்தில் கேரளத்தின் மரங்கள் நிறைந்த காட்டு
வழியாக வந்து கொண்டிருக்கிறார்கள். பின்பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபரை முக்கிய
சாலைக்கு வந்து பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விடுகிறார். அங்கே கண் தெரியாத ஒரு
பெரியவர் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆள் நடமாட்டம் புரிந்தவுடன்,
உட்கார்ந்திருந்த பெரியவர் தட்டுத் தடுமாறி எழுந்து வந்து அந்த இளைஞரிடம் ஒரு
தேநீர் குடிக்க காசு கேட்கிறார்.
அந்தப்
பெரியவரிடம் “ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை இருக்குமா? இல்லை ஆஸ்திரேலியா டாலர்
தந்தால் மாற்றிக் கொள்கிறாரா?” என்றெல்லாம் கேட்டு அவரைக் கிண்டல் செய்து
சிரிக்கிறார்கள் இரு நண்பர்களும். இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர் இவரை விட்டுச்
சென்ற பின் என்ன நடக்கிறது, லிஃப்ட் கேட்ட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது,
அவருக்கு லிஃப்ட் கிடைத்ததா, இல்லையா என்பதைக்
குறும்படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள்
ரசனைக்கு இதோ அந்த குறும்படம்....
எளியோரைக்
கண்டு எள்ளி நகையாடல் கூடாது என்பதை இங்கே அழகாய்ச் சொல்லி இருக்கிறார் இந்த
குறும்படத்தினை எடுத்த இயக்குனர் பாலு. அந்த இயக்குனருக்கும், அவரது சகாக்களுக்கும்
வாழ்த்துகளும் பூங்கொத்தும்!
மீண்டும்
வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.
அப்புறம் வந்துதான் பார்க்க வேண்டும்!
பதிலளிநீக்குமாலையில் பாருங்க.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்
வெங்கட் ஜி, நல்லதொரு படிப்பினையைச் சொல்லும் மிக அருமையான காணொளி. சூப்பர் !இதே கான்ஸெப்டில் நான் ஒரு சிறுகதை எழுதி வைத்துள்ளேன். ஆனால் அதை நான் இன்னும் வெளியிடவில்லை.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள்.
ஓ சிறுகதை எழுதி வைத்திருக்கீங்களா... விரைவில் வெளியிடுங்கள்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
குறும்படம் ..பாடம் ..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி....
பதிலளிநீக்குவலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
பதிலளிநீக்குமெலியார்மேல் செல்லும் இடத்து.
காணொளிக்கு நன்றி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநிலைமை கொஞ்ச நாளில் சீராகி விடும்... அதுவரை யாருக்கும் சிரமம் தராது நாமே உழைத்து, நிலைமையை சமாளித்து விடலாமே...!
பதிலளிநீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2013/11/Noble.html
தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅருமையான குறும்படம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குஅடடா கதையை சொல்லாமல் எஸ் ஆகிடீங்களே.. இருந்தாலும் கண்டிப்பா பார்க்குறேன்.. இப்போ மாசக்கடைசி இணையம் முக்கும்.. அப்புறமா வந்து பாக்குறேன்
பதிலளிநீக்குஅடடா... சரி முடியும்போது பாருங்க சீனு....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....
முற்பகல் செய்யின்
பதிலளிநீக்குபிற்பகல் விளையும் என்பதை அருமையாக சொன்ன கதை.
நன்றி நாகராஜ் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....
நீக்குஅருமையான படம்
பதிலளிநீக்குத.ம.5
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குKurumbadam nalladhoru padam tharum padam.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குVENKATTU NALLA RASANAI UNGALUKKU.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Mohamed
நீக்குஆமாம் உண்மையில் மொழி ஒரு தடையாய் இருக்கவில்லை. பகிர்விற்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குஅந்த பிச்சைக்காரனின் சிரிப்பில் உலகத்தின் ஒட்டு மொத்த தத்துவமும் அடங்கப்பெற்றிருக்கிறது...
பதிலளிநீக்குஅவன் சிரிப்பு வெற்றுச் சிரிப்பல்ல ஆன்மீக தத்துவம் அடங்கிய சிரிப்பு உலகத்தில் எல்லோருமே சில கணங்களில் பிச்சைக்காரனாகிறான் ..பிச்சைக்காரன் கோடிஸ்வரன் ஆகிறான் எவனுக்கும் எதுவும் நிரந்தரமல்ல ஏதோ பாடல் வரிகள் ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தமில்லையம்மா இங்கு ஓட்டைக் கூறை வீட்டுக்காரன் சொந்தமெல்லாம் சும்மா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேங்கையின் மைந்தன்......
நீக்கு