”என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் தான் ஆதித்த கரிகாலன். சுந்தர சோழனின் மூத்த மகன். என்ன…. விழிக்கிறீர்கள்? பாண்டியன் தலையைக் கொய்த மாவீரன் என்பார்கள் என்னை. இன்னுமா புரியவில்லை? அதாவது உங்கள் ராஜராஜ சோழனின் அண்ணன்! இன்னுமா தெரியவில்லை? எப்படி சொன்னால் உங்களுக்கு விளங்கும்? இப்போதாவது தெரிகிறதா பார்ப்போம்? நான் தான் குந்தவையின் அண்ணன். அப்பாடி! ஒரு வழியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?என்ன செய்வது? பெண்கள் பெயரைச் சொல்லி அன்னாருடைய தந்தை, சகோதரன், கணவன், மகன் என்று கூறினால் தானே தமிழர்கள் இனம் புரிந்து கொள்கின்றனர். காரணம் தமிழர்களின் வாழ்வே பெண்களைச் சுற்றித்தானே அமைந்திருக்கிறது. கண்ணகிக்கு அடுத்த படியாக, ஔவை பாட்டிக்கு பின்பாக, என் தங்கை தானே அதிகம் அறிமுகமானவள்.”
குந்தவை – இவளைத்
தெரியாதவர்கள் தான் யார்? அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” படித்தவர்கள் யாருமே
குந்தவையை மறக்க முடியாது. குந்தவை, வந்தியத்தேவன்,
வானவன் மாதேவி, பராந்தக சோழன், பழுவேட்டரையர், அநிருத்த பிரம்மராயர், ராஜராஜ சோழன்
என பொன்னியின் செல்வன் கதையில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் மீண்டும் ஒரு புத்தகத்தில்
காண உங்களுக்கு ஆசை நிச்சயம் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு
புத்தகத்தினைப் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். ஆதித்த கரிகாலன் ஒரு மாபெரும்
வீரன். பாண்டியன் தலையைக் கொய்து சோழ ராஜ்ஜியத்தை விரிவு படுத்திய ஒரு மாவீரனின் மரணத்தில்
பெரிய சந்தேகம். கடம்பூர் மாளிகைக்கு விருந்துக்குச் சென்ற போது அங்கே இந்த மாவீரன்
கொலை செய்யப்படுகிறார். ஆனால் இந்த மாவீரனைக் கொன்றது யார் என்பது பற்றி யாருமே பெரியதாக
எழுதி விடவில்லை – கல்கி உட்பட.
இதோ ஆதித்த கரிகாலனே
அது பற்றி சொல்கிறார் கேளுங்கள்…..
“”ஐயா! அம்மணிகாள்! நான் கடம்பூர் மாளிகையில் கொலை செய்யப்பட்டதாகக் கூறி என்னைப் பற்றிய உண்மைகளை அவர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். என்னைக் கொலை செய்தது இன்னார் என்று ஆயிரம் வருடங்கள் மேலாகியும், இன்னும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இந்த உலகத்தின் மீதே நம்பிக்கை இழந்து, மனபாரம் தாங்காமல், நிம்மதியின்றி உழன்று கொண்டிருக்கின்றேன். மனம் இன்னும் அமைதி அடையவில்லை.”
“எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கடந்த 1000 வருடங்களுக்கு மேலாக நீதி கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்! சரித்திரப் பேராசிரியர்கள் பலர் என்னை மிகவும் கேவலமான முறையில் ஏமாற்றி விட்டனர். என் நெஞ்சம் குமுறுகிறது. அருண்மொழியின் வீரத்தினை இமயமளவுக்கு எழுதி, எனது வீரத்தை எள்ளளவாக்கி, எனக்கு நியாயம் கிடைக்காமல் செய்து விட்டனர்.
நான் மிகவும் எதிர்பார்த்த அமரர் கல்கியும் என் மரணத்தை மேலோடு குறிப்பிட்டுவிட்டு, அந்தக் கொலைப்பழியை பாண்டியநாட்டு ஆபத்துதவிகள் மீது போட்டு விட்டார். பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுக்கு என்னைவிட அருண்மொழியைக் கொல்வது தானே எளிது! அவன் பாண்டிய நாட்டை ஆதரித்த ஈழத்தில் அல்லவா வெகு காலம் தங்கியிருந்தான். அப்படியெனில் என்னை உண்மையில் கொன்றது யார்?”
ஆதித்த கரிகாலனின்
கொலையில் பல வித சந்தேகங்கள். சரித்திரப் பேராசிரியர்கள் தங்கள் எண்ணப்படி எழுதி பல
உண்மைகளைத் திரித்து விட்டதாக ஆதித்த கரிகாலன் சொல்கிறார்.
”உண்மையை கண்டுபிடிக்க அமரர் கல்கியும் பிரயத்தனப் படவில்லை! நமக்கு எதற்கு வம்பு!” என்று பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் மீது பழிபோட்டுவிட்டு, நந்தினி, ஆழ்வார்க்கடியான் என்று தனது கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி, தனது பொன்னியின் செல்வனை மிக அழகாக எழுதிவிட்டார்.”
“நம்பிக்கையை நான் அனேகமாக இழந்துவிட்ட நிலையில், ஒரு பத்திரிக்கையாளரான இந்த நாவலாசிரியர் என் “தோலா வழக்கை” [முடிவு பெறாத] முடித்து வைக்க முற்பட்டிருப்பதை எண்னி மகிழ்கிறேன்!”
ஆதித்த கரிகாலன்
மரணத்தில் இருக்கும் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டுபிடிக்க திரு காலச்சக்கரம்
நரசிம்மா எடுத்த முயற்சிகள் தான் இங்கே “சங்கதாரா” என்ற பெயரில் புத்தகமாக வெளி வந்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் படித்த போது ஆதித்த கரிகாலன்
ஏன் கொலை செய்யப்பட்டான் என்ற குழப்பம் இருந்தது மனதில். அந்த சந்தேகங்களைப் போக்க உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு
– இப்புத்தகத்தில்.
நன்றி: பாலகணேஷ்....
ஆரம்பித்த முதல்
பக்கத்திலிருந்தே விறுவிறுப்புடன் செல்கிறது சங்கதாரா கதை. தகுந்த ஆதாரங்களுடன் கொலையாளி
யார் என ஆசிரியர் இப்புத்தகத்தில் விவரிக்கும் போது நிச்சயம் உண்மை உங்களுக்குச் சுடும்!
இப்படி கூட நடக்க முடியுமா என.
ஆதித்த கரிகாலனை
யார் கொன்றது என்ற கேள்வி இப்போது உங்கள் மனதிலும் நிச்சயம் எழுந்து பெரிய மேடை போட்டு
அமர்ந்து கொண்டிருக்கும். இந்த கேள்விக்கு விடை வேண்டுமெனில் ”காலச்சக்கரம்” நரசிம்மா
அவர்களின் மூன்றாவது புத்தகமான “சங்கதாரா” படிக்க வேண்டும்.
இப்புத்தகம் வானதி
பதிப்பகத்தினர் மிக அழகாக வெளியிட்டு இருக்கிறார்கள். விலை ரூபாய் 150/-. கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை – 600017.
மீண்டும் வேறொரு
வாசிப்பு அனுபவத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை……
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…….
ஆசிரியர் எழுதிய
வேறு இரண்டு புத்தகங்கள் பற்றிய எனது பதிவுகள்
ஆதித்தகரிகாலன் கொலைக் கேசை அன்றே துப்பறியும் சாம்புவிடம் ஒப்படைத்து இருந்தால் துப்பு துலங்கி இருக்குமே !
பதிலளிநீக்குத.ம 3
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குத.ம. 2 தானே! :)
நூல் அறிமுகம் + விமர்சனம் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குதமிழர்களின் வாழ்வே பெண்களைச் சுற்றித்தானே அமைந்திருக்கிறது.//ஆம் அவளின்றி வாழ்வேது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.
நீக்குநல்லதொரு நூல் விமர்சனம்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குவிறுவிறுப்பான புத்தகத்துக்கு
பதிலளிநீக்குசுறுசுறுப்பான விமர்சனம் ....பாராட்டுக்கள்..1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குசிறிய புத்தகமாக இருந்தாலும் முழு பொன்னியின் செல்வன் அளவு எனக்கு ஆர்வத்தை உண்டு செய்த புத்தகம். உங்களால் தான் புத்தக அறிமுகம் கிடைத்தது நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.....
நீக்குஆமாம் நீங்க படிச்சுட்டீங்களே.... உங்கள் புத்தகம் ஒன்று இன்னும் என்னிடம் இருக்கிறது. அடுத்த மாத தில்லிகை சந்திப்பின் போது தருகிறேன்.... :)
நீங்கள் எழுதி இருக்கும் விதமே ஆவலைத் தூண்டுகிறது. புதினம் என்னும் வார்த்தைக்கு நல்ல அர்த்தமாக இந்தப் புத்தகம் இருக்கும் என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குமனம் லயித்து படித்த புத்தகம் நண்பரே...
பதிலளிநீக்குபுத்தகம் பற்றிய உங்கள் விளக்கம் அருமை...
அறிமுகத்திற்கு நன்றிகள் பல..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.
நீக்குarumaiyana pathivu
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வசந்தமுல்லை.
நீக்குதங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.
நல்லதொரு நூல் அறிமுகம். பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குஅரசியல் படுகொலைக்கு இப்பதான் தீர்வு கிடைக்கலைன்னு பார்த்தா அந்த காலத்துலயும் அப்படிதான் போல!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குputhhaga arimugam arumai.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குபுத்தகம் படித்து விட்டேனே... ஏற்கெனவே பகிர்ந்தும் ஆச்சு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆதித்த கரிகாலன், பாண்டியன் தலை கொய்தவன் மாவீரன் என்று சொல்வது என்னவோ மாதிரி இருக்கிறது, பொன்னியின் செல்வன் படித்த நினைவு கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவுக்கு கொண்டு வருவதோடு நின்று விடுகிறது. சரித்திரக் கதைகளில் உண்மை 10% என்றால் கற்பனை 90%சுவையாக எழுதி படிக்க வைப்பதில் ஆசிரியரின் சாமர்த்தியம் கற்பனையை உண்மை போல் காட்டும். உங்கள் புத்தக விமரிசனம் படிக்கத் தூண்டுகிறது. காலச்சக்கரம் நரசிம்மா பற்றி சில குறிப்புகள் கொடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்குஆசிரியர் எழுதிய வேறு இரண்டு புத்தகங்கள் பற்றி முன்பே என் பக்கத்தில் எழுதி இருக்கிறேன். அதில் ஆசிரியர் பற்றிய குறிப்பினையும் கொடுத்திருக்கிறேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நல்ல விமர்சனம்.
பதிலளிநீக்குநன்றி நாகராஜ் ஜி.
(ஆமாம்.... கொலையாளியை இனிமேல் என்ன செய்ய முடியும்...?)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.....
நீக்குவித்தியாசமான முறையில் புத்தகப்பகிர்வு! உடனே வாங்கி படிக்கத் தூண்டுகிறது! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
நீக்குஉங்களின் புத்தக விமர்சனம் அந்த புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது... அதுதானே ஒரு நல்ல விமர்சகருக்கு வேண்டும்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குபால கணேஷ் அவர்களின் சிபாரிசில்,அவர் புத்தகம் இரவல், தர முன்பே படித்து ரசித்து விட்டேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குதிரு.பாலகணேஷ் அவரின் வலைத்தளத்தில் அறிமுகபடுத்திய போதே, புத்தகத்தை வாங்கிப்படித்து விட்டேன். முதன் முறை அவ்வளவாக மனசைக் கவரவில்லை. மறுபடியும் நிதானமாக ஒரு முறை படிக்க வேண்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!
நீக்குகண்டுபிடிக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்ட வழக்கை ஒரு துப்பறிவாளர் ஆராய்ந்து தக்க சான்றுகளுடன் உண்மையை விளக்குவது போல... விரிவான ஆராய்ச்சிக்குப் பின் நண்பர் காலச்சக்கரம் நரசிம்மா இப்புதினத்தை ஒரு துப்பறியும் கதைக்குரிய விறுவிறுப்பான எழுத்து நடையில் வழங்கியிருக்கிறார். நானறிந்த அனைவருக்கும் இதை சிபாரிசு செய்வது வழக்கம். இங்கே உங்களின் அழகான அறிமுகத்தைக் காண்கையில் மனதில் மகிழ்ச்சி! நன்றி நண்பா!
பதிலளிநீக்குநீங்க அறிமுகம் செய்ததால் தானே நானும் படித்தேன் கணேஷ். ரொம்ப நாளாகவே எழுத நினைத்திருந்த பதிவு இது. லேட்டா வந்தாலும் பரவாயில்லைன்னு எழுதி விட்டேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.
sooper பதிவு; தமிழ் மனம் பிளஸ் +1
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் தமிழ் மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி நம்பள்கி.
நீக்குபால கணேஷ் அவர்கள் முலம் கிடைத்த
பதிலளிநீக்குபுருஷா மிருகக் கதையைப் படித்தே
நரசிம்மா அவர்களின் தீவீர ரசிகனாகிவிட்டேன்
அடுத்த இரண்டு நாவல்களையும் அவசியம்
வாங்க்கிப் படித்துவிடுவேன்
அருமையான விமர்சனத்திற்கு மனமார்ந்த நன்றி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!.
நீக்குநரசிம்மா இதுவரை எழுதிய நான்கு புத்தகங்களையும் படித்து விட்டேன். மூன்று புத்தகங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் இங்கே எழுதி விட்டேன். இன்னும் ஒன்றும் எழுத நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்!
tha.ma 11
பதிலளிநீக்குதமிழ் மணம் பதினொன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குபடிக்கணும்னு நினைச்சுட்டிருக்கிற புத்தகங்களில் இதுவும் ஒண்ணு. பார்ப்போம்.
பதிலளிநீக்குமுடியும்போது படிங்க கீதாம்மா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.