என்னடா தீபாவளியே
முடிந்து விட்டது, இப்ப நவராத்திரி கொண்டாட்டம் பற்றி இங்கே பிரஸ்தாபம் எதற்கு? :)
பொதுவாகவே நவராத்திரி
சமயத்தில் வங்காளிகள் துர்க்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கொல்கத்தாவில்
மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து ஒன்பது நாட்களும் கோலாகலமாக கொண்டாடும் வங்காளிகள்,
பெரும்பான்மையாக இருக்கும் இடங்களிலும் இப்படிக் கொண்டாட்டங்கள் உண்டு. தில்லியிலும்
பல இடங்களில் துர்க்கா பூஜை பந்தல்கள் போட்டு காளி சிலைகள் வைத்து பூஜைகள், விழாக்கள்
என குதூகலமாக இருக்கும்.
எனது வங்காளி நண்பர்
ஒருவர் எல்லா வருடமும் அவர்களது வீடு இருக்கும் பகுதியில் நடத்தும் துர்க்கா பூஜைக்கு
எனக்கு அழைப்பு விடுப்பார். ஆனாலும் இதுவரை போனதில்லை. இம்முறை சற்று கோபத்துடனே சொன்னார்
– “இம்முறை வந்தே ஆகவேண்டும். இல்லையெனில் நான் உன்னுடன் கட்டி [காய்]!” என. அதனால் இம்முறை அவர்களது துர்க்கா பூஜையில் கலந்து
கொண்டு “ரொசகுல்லாவும், சந்தேஷும்” சாப்பிட்டு வந்தேன்! கூடவே சில புகைப்படங்களும்
எடுத்தேன்.
அந்த புகைப்படங்கள்
இந்த ஞாயிறில் உங்களுக்காக!
அஷ்ட புஜங்களுடன் காளி......
பந்தலில் காட்சி தரும் தெய்வங்கள்....
அட நம்ம முருகப் பெருமான்! மயில் வாகனம் வைத்து தான் கண்டு பிடிக்க முடிந்தது! கொஞ்சம் பூசினால் போல வயிறு! புஷ்டியான முருகன்!
லக்ஷ்மி...
ஆனைமுகத்தான்! கூடவே வாகனமும்....
வங்காள வாத்திய கலைஞர்.....
குழந்தைகள் ஓவியப் போட்டிக்காக வரைந்த ஓவியம் - 1
குழந்தைகள் ஓவியப் போட்டிக்காக வரைந்த ஓவியம் - 2
சுற்றிச் சுற்றி வாத்தியம் வாசிக்கும் வாத்தியக் கலைஞர்கள்....
பக்தியோடு நிற்கும் வங்காளப் பெண்கள்....
கலைஞனின் முகத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும்....
காவலரின் முகத்தில் எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டுமே என்ற கவலை.....
மேளங்களில் இணைத்திருக்கும் குஞ்சலங்கள்! மேளத்தினை வாசித்தபடியே பார்வையாளர்களின் தலையில் குஞ்சலத்தினால் தட்டுவார்கள்..... ஆசீர்வாதம்!
காளி மந்திர் - அலங்காரம்.....
என்ன நண்பர்களே
புகைப்படங்களை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த ஞாயிறில் வேறு சில புகைப்படங்கள் பார்க்கலாம்!
மீண்டும் சந்திக்கும்
வரை…..
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..
சூப்பர் படங்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
நீக்குரசிக்கவைத்த காட்சிகள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குபடங்கள் பார்த்து ரொசகுல்லாவும் சந்தேஷும் சாப்பிட்ட திருப்தி !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குதமிழ்க் கடவுள் எப்போ வங்காள முருகன் ஆனார் ?
பதிலளிநீக்குத.ம
வட இந்தியாவிலும் முருகன் உண்டு.... ஆனால் பெயர் கார்த்திக்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
அற்புதமான படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.
நீக்குபடங்கள் எல்லாம் நல்லாருக்கு சார் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.
நீக்குநாங்களும் கலந்து கொண்டாற் போல் ஓர் உணர்வினை
பதிலளிநீக்குஏற்படுத்தியது பதிவும் படங்களும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.
நீக்குஅஷ்டபுஜங்கக் காளி படம் அற்புதம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் பதிவும் ரஸிக்க வைத்தன. மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குநண்பர் கோபப்பட்டதால் எங்களுக்கும் காணக் கிடைத்தன இக்காட்சிகள்:)! படங்கள் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபடங்கள் எல்லாம் நல்லாருக்கு...!!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமுருகன் என்று நீங்கள் சொல்வதால் தெரிகிறது.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் எல்லாமே அருமையாயிருக்கிறது.
தீபாவளி வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குVenkat
பதிலளிநீக்குSuperb. Good photos and comments. Keep it up. Enjoy stay at Srirangam.
Vijay
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
நீக்குசிலகாலம் கல்கத்தாவில் உள்ள ஹல்தியாவில் இருக்கையில்
பதிலளிநீக்குதுர்கா பூஜையை நேரில் கண்டிருக்கிறேன் நண்பரே..
அந்த பூஜா பந்தல் அவ்வளவு அழகாக இருக்கும்...
திரும்ப நினைவுக்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகள் பல..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.
நீக்குபொதுவாகவே வங்காளிகள் கலை நயம் மிக்கவர்கள். நானும் பல துர்க்கா பூஜைகளில் கலந்து கொண்டிருக்கிறேன். வங்காளிகள் சுவாரசியமானவர்கள். அவர்களை எளிதில் எடை போட முடியாது. பொதுவாக பொறுமை குறைந்தவர்கள் , சற்று முன் கோபிகள். அவர்களது கடுகு எண்ணையில் செய்த தின்பண்டங்களை உண்டு பார்த்திருக்கிறீர்களா.?
பதிலளிநீக்குதில்லியிலும் சமையல் கடுகு எண்ணையில் தான்..... அதனால் சாப்பிட்டதுண்டு......
நீக்குபேசும் போதும் கொஞ்சம் சவுண்டாகவே பேசுவார்கள்......
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
அருமையான படங்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குநாங்களும் கலந்து கொண்டாற் போல் ஓர் உணர்வினை
பதிலளிநீக்குஏற்படுத்தியது பதிவும் படங்களும்.
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
தீபாவளி வாழ்த்துக்கள்.
.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 10
பதிலளிநீக்குதமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குடாண்டியா ஆட்டம் மும்பையில் செம விமரிசையாக இருக்கும்....அந்த வரைபடங்கள் சூப்பர் அண்ணே....!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
நீக்குஅருமை! இரசகுல்லா! அனைத்தும்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....
நீக்குவித்தியாசமாய் இருந்தது.. உங்களுக்கும் வித்தியாசமான அனுபவமாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
நீக்குபடங்கள் அருமை, லக்ஷ்மியின் வாகனம் என்ன என்று கவனித்தீர்களா? இல்லையென்றால் அடுத்த வருடம் சென்று பாருங்கள் அல்லது உங்கள் வங்காள் நண்பரைக் கேளுங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் சுப்ரமணியன் ஜி!
நீக்குஅங்கெயெல்லாம் சாமி சிலைகளைப் படம் எடுக்க விடுகிறார்களா...?
பதிலளிநீக்குலஷ்மியின் முகம் அழகாக இருக்கிறது.
ஆனால் லஷ்மிக்கு இப்படி ஒரு வாகனம் இருக்கும் என்பதை நானும்
அறிந்ததில்லை.
ஆனால் படங்கள் அனைத்தும் அருமை.
நவராத்திரி சமயத்தில் பந்தல்கள் போட்டு அங்கே இந்த சிலைகளை வைத்துவிடுவார்கள். நவராத்திரி முடிந்தபின் இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து விடுவார்கள் - பிள்ளையார் சதுர்த்திக்குப் பிறகு பிள்ளையார் சிலைகளை கரைப்பது போல!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
முருகன் மீசையோட இருக்கார் நார்த் ல .. நம்ம ஊருல முருகன் மீசையில்லாம இருக்கார். என்ன ஒரு முரண்.
பதிலளிநீக்குநல்ல டவுட்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.
படங்கள் தகவல்கள் எல்லாம் அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குவிழா காட்சிகள் எமக்கும் காணக்கிடைத்தன. நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஅருமையான படங்கள்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்கு