எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 25, 2013

சபரி மலை பெயர்க்காரணம்[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 10]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 9]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 8]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 7]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

நடந்த அலுப்பில் கொஞ்சம் கால் கடுக்கிறது. சுகமான உறக்கம் வந்தது. தூக்கத்தினைத் தொடரும் போது இந்தப் பகிர்வினைத் தொடர்வது கடினம் தானே.....  அதனால் நான் தூங்கி எழ்ந்து வரும் வரை நீங்களும் ஒரு தூக்கம் போடுங்க மக்களே! அட அதுக்குள்ளவே குறட்டை சத்தம் கேட்குதே!.......

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

 படம்: நன்றி கூகிள்.

நல்ல உறக்கத்திற்குப் பிறகு அதிகாலை 04.00 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஐயனை மீண்டும் ஒரு முறை தரிசிக்க தயாரானோம். காலையில் சிலருக்கு எழுந்தவுடன் காபியோ, தேநீரோ இல்லாது முடியாது! எனக்கும் நண்பருக்கும் அந்தப் பிரச்சனைகள் இல்லை என்பதால் உடனே தயார் ஆக, கூட வந்திருந்த நண்பர் காலையில் அறையிலிருந்து வெளியேறி, கட்டஞ்சாய் குடித்து வந்து தயாராக கொஞ்சம் நேரம் ஆனது.

ஐந்தே காலுக்கு அறையிலிருந்து மூவருமாக கொண்டு சென்ற பைகளோடு கிளம்பி, சன்னிதானம் நோக்கிச் சென்றோம். முதல் நாள் சன்னிதானம் செல்லும் போது நண்பரின் உதவியோடு ஐயனைத் தரிசித்தோம்.  இன்று நாங்களாகவே பார்க்க நினைத்திருந்தது நடந்தது. மகர ஜோதி சமயத்தில் மாதம் முழுவதும் நடை திறந்திருக்கும். மற்ற மாதங்களில் மாதப் பிறப்பு முதல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.

நாங்கள் சென்ற மாதத்தில் நடை திறந்திருக்கும் கடைசி நாள் அது. அதனால் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருமுடி கட்டாது வரும் பக்தர்கள் செல்லும் வழியில் சென்று சபரிமலை வாசனின் சன்னிதானம் அருகே வந்தோம். அந்த அதிகாலையிலும் மக்கள் இருந்தார்கள்.  சபரிகிரிவாசனுக்கு நெய்யபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. திவ்யமான அந்தக் காட்சியைக் கண்டு ரசித்தோம்.  சில நிமிடங்கள் வரை அங்கிருந்து தரிசித்தபடியே இருந்தோம்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் தொடங்க திரை மூடப்பட, நாங்களும் அங்கிருந்து நகர்ந்தோம்.  சபரிகிரிவாசன் நமக்கு சின்முத்திரையோடு தவக்கோலத்தில் காட்சி தந்து சொல்வது இது தான்!

"மனிதா! நீ என்னை நாடி இத்தனை மேடுகளை கடந்து வந்தாயே! இதனால், நான் மகிழ மாட்டேன். என் மடங்கிய மூன்று விரல்கள் உன்னிடமுள்ள ஆணவம், கன்மம், மாயை (உலக வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆகியவை. என் ஆட்காட்டி விரலே ஜீவாத்மாகிய நீ. என் கட்டை விரலே பரமாத்மாவாகிய நான். ஆம்... மானிடனே! இந்த மூன்று குணங்களையும், நீ விட்டு விட்டாயானால், என்னை நிஜமாகவே அடையலாம்''.

இப்படி சபரிகிரி வாசன் நமக்குச் சொல்லும் அந்த அற்புத காட்சியை இரண்டாம் முறை தரிசித்து வெளியே வந்த போது மனதில் துல்லியமானதோர் அமைதி குடி கொண்டிருந்தது நிஜம். மீண்டும் எப்போது தரிசிப்போம் என்ற எண்ணமும், அவன் சொல்லும் தத்துவமும் நமக்குப் புரிந்து கடைபிடிக்க வேண்டுமே என்ற எண்ணமும் மனதிற்குள் வந்தது. அந்த ஆழ்ந்த எண்ணத்தோடு ஐயனின் சன்னிதானத்திலிருந்து நகர்ந்தோம்.

சபரிமலை சபரிமலை எனப் பெயர் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன் – ஆனால் இம்மலைக்கு சபரிமலை என்ற பெயர் ஏன் வந்தது என்ற எண்ணம் மனதிற்குள் வர அதையும் கேட்டேன் பல முறை சபரிமலை சென்றிருக்கும் நண்பர் ஒருவரிடம்.  அவர் சொன்ன சபரிமலைக் கதை இங்கே.....

 மகிஷி வதம். படம்: நன்றி கூகிள்.

பந்தள தேசத்து இளவரசராக இருந்த ஐயப்பன் அவரது தாய்க்கு வந்த தலைவலியைத் தீர்க்க புலிப்பால் தேவை என மந்திரி கூற அதனால் அடர்ந்த காட்டுக்குள் சென்ற போது அங்கே மகிஷி வதம் நடந்தது. மகிஷியால் துன்பம் அடைந்திருந்த தேவர்கள் மகிழ்ச்சியுற்று, புலிப்பால் கொண்டு வர ஐயன் வந்திருப்பதை அறிந்து தேவர்களின் தலைவன் புலியாக மாற தேவர்கள் அனைவரும் புலிகளாக மாறி கூட்டமாக ஐயப்பனுடன் பந்தள நாட்டிற்கு வந்தார்கள்.

 படம்: நன்றி கூகிள்.

புலியாக மாறிய இந்திரன் மீது மணிகண்டன் [ஐயப்பன்] அமர்ந்து பந்தளம் நோக்கிச் செல்லும் வழியில் மலைப் பிரதேசத்தில் தான் பெற்ற ஒரு சாபத்தினால் கிழவி ரூபம் அடைந்த “சபரிஎனும் பெண் தவம் செய்து கொண்டிருந்தாள்.  கடும்புலியின் மீது வந்து கொண்டிருந்த ஐயப்பனை சபரி உபசரிக்க, அவளது கதையை உணர்ந்த ஐயப்பன் அவளது சாபம் தீர்த்து அவளுக்கு தேவலோகம் செல்ல வரம் அளித்தார்.

தன் சாபம் எந்த மலையில் நிவர்த்தியாயிற்றோ, அந்த மலை தன் பெயரால் “சபரிமலைஎன்ற பெயரால் வழங்கப்பட வேண்டும் என்றும், சபரிமலையை வந்தடையும் மானிடர்கள் பிறவி எனும் சாபத்திலிருந்து நீங்க வேண்டும் என்றும் பிரார்த்தி பதினெட்டு பிரதட்ஷணை நமஸ்காரங்கள் செய்ய, அன்றிலிருந்தே இம்மலை சபரிமலை என வழங்கப்படுகிறதாம்.

சபரி மலை பெயர்க் காரணத்தினைப் பார்த்தோம். அப்படியே சபரியை மீண்டும் தரிசித்தோம். ஐயனை தரிசனம் செய்த பிறகு அங்கே இருக்கும் மற்ற சன்னதிகளையும் மீண்டுமொரு முறை தரிசித்தோம்.  என்ன சன்னதிகள், அங்கே என்ன விசேஷம் என்பதையெல்லாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 comments:

 1. அனுபங்களை சொல்லிச் செல்லும் விதம் மிக அருமையாக இருக்கிறது.. பாராட்டுக்கள் tha.ma 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 2. சின்முத்திரை விளக்கம் அருமை... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. Madangiya moondru viral thaththuvam arumai.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 5. சபரிமலை பெயர்க் காரணம் தெரிந்து கொண்டேன். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். பதிவில் நீங்கள் எடுத்த படங்கள் எதுவும் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சன்னிதானம் பகுதியில் இருக்கும் வரை நான் எந்தப் புகைப்படமும் எடுக்கவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete


 6. சபரிமலை பெயர் வந்த விதம், சின் முத்திரை விளக்கம் என்று விவரங்களை அள்ளித் தந்த கட்டுரை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்...

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா...

   Delete
 8. 1990 வரை எட்டு ஆண்டுகள் தொடர்ந்து சென்ற நினைவுகள் வெளியில் கொண்டு வந்தது உங்கள் தொடர்
  தம6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா...

   Delete
 9. சின் முத்திரை விளக்கத்தோடு சபரிமலை தரிசனமும் கதையும் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்....

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 11. பெயர் காரணம் அறிய முடிந்தது. அருமையான கட்டுரைக்கு நன்றி, ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. இதுவரை அறியாத பெயர்க்காரணம்
  அறிந்து மகிழ்ந்தோம்
  உடன் பயணிக்கும் உணர்வைக் கொள்ளும்படியாக
  சிறப்பாகச் சொல்லிப்போவது அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 13. Replies
  1. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. சின் முத்திரை விளக்கம் அவசியமானது அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்....

   Delete
 15. ஐயப்பன் மலை என்று வைக்காமல் ஏன் சபரி மலை என்று
  வைத்தார்கள் என நானும் குழம்பியதுண்டு.
  இப்பொழுது தான் உங்களால் சபரிமலை பெயர்காரணம் அறிந்தேன்.
  நன்றி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 16. சின் முத்திரை விளக்கத்தோடும் சபரி பெயர்க்காரணத்தோடும் கூடிய பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 17. பெயர் காணம் அறிந்தேன் ! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா...

   Delete
 18. தொடருங்கள் ஐய்யப்பன் தருசனம் பற்றிய பார்வையை ! சாமியே சரணம் ஐய்யப்பா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....