சனி, 23 நவம்பர், 2013

தலை நோக்குப் பார்வைசாலைக்காட்சிகள் – பகுதி 6

Bloody Indian - சாலைக் காட்சிகள்பகுதி 5 - இங்கே
வெங்கலக் கடைக்குள் யானை- சாலைக் காட்சிகள்பகுதி 4 - இங்கே
அலட்சியம்சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே
கிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே
இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே


படம்: கூகிள்.....
 
தில்லியில் அதுவும் புது தில்லி பகுதியில் நிறையவே பூங்காக்கள் உண்டு. எனது வீட்டின் அருகிலேயே ஒரு பெரிய பூங்கா – தல்கடோரா விளையாட்டு அரங்கினை அடுத்த தல்கடோரா பூங்காவும் அதில் ஒன்று. காலை நேரங்களில் அங்கே நடக்க எனக்குப் பிடிக்கும் – ஆனால் இருக்கும் வேலைகளில் [என்ன பெரிசா வெட்டி முறிக்கற வேலை? – சமையலும் இந்த வலைப்பூவும் இருக்கவே இருக்கே!] தினமும் பூங்கா சென்று நடக்க இயலவில்லை. இப்போது குளிர்காலம் வேறு! கேட்கவா வேணும் சோம்பேறித்தனத்திற்கு!

சில சமயங்களில் அங்கே நடைப்பயணம் செல்வதுண்டு! அப்படி சமீபத்தில் ஒரு நாள் சென்றபோது பார்த்த ஒரு நிகழ்வு தான் இன்றைய சாலைக் காட்சிகள் பதிவில்!


படம்: கூகிள்..... 
 
மெதுவாக இயற்கையையும், குளிரையும் ரசித்தபடி நடந்து கொண்டிருந்தேன். அங்கே என்னைப் போலவே பலரும் நடை பழகிக் கொண்டிருந்தார்கள் – விதவிதமான உடைகள் – அலங்காரங்கள் – கையைக் காலையை வேகமாக இயக்கியபடி சிலர் நடக்க, ஒரு சிலர் காதில் EAR PHONE சொருகியபடி கையில் பெரிய அலைபேசியை வைத்துக் கொண்டு பாட்டு கேட்டபடியே, சிலர் அந்த அதிகாலையிலும் எவருடனோ பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்.

எனக்கு முன்னே ஒரு இளம் ஜோடி – என்னை விட மெதுவாக கையைப் பற்றியபடியே Sweet Nothings பேசியபடி – நடந்து கொண்டிருந்தார்கள்.  நான் அவர்களைத் தாண்டிச் சென்று ஒரு ரவுண்ட் முடித்து அடுத்த முறை பார்க்கும்போது அவர்கள் அருகே ஒரு சிறிய கும்பல்.
என்னடா எனப் பார்த்தால் – அங்கே ஒருவரிடம் அந்த இளம்பெண் சண்டை பிடித்தபடி இருந்தார்! என்ன விஷயம் எனப் பார்த்தபோது - அந்த இளைஞரின் தலையைப் பார்த்தபடியே சிரித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஒருவர்.  அந்த இளைஞருக்கு தலை முடி இல்லை – சற்றே இள வழுக்கை போல!

கல்யாணம் பண்ணிக்கொண்ட நானே அவரைப் பார்த்து சிரித்ததில்லை, நீ எப்படி அவர் தலையைப் பார்த்து சிரித்தாய், உனக்கு மட்டும் என்ன தலைமுடி என்ன ஆறடியா இருக்கிறது? உனக்கும் தான் சொட்டைஎன கண்டபடி திட்ட, திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆளை அப்போது தான் பார்த்தேன் – அட நமக்குத் தெரிந்த மனிதர் தான்! அவருக்கு வேலையே இது தான்!

எங்கே அவரைப் பார்த்தாலும் அவர் முதலில் பார்ப்பது நம் தலையைத் தான்! அடுத்தவர் தலையில் முடி இருந்தால் இவர் முகத்தில் சோகம் ததும்பும்! அப்படி வழுக்கையாக இருந்துவிட்டால் இவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல அப்படி ஒரு பிரகாசம்! அவரது வழுக்கையை விட பெரிய வழுக்கையாக இருந்தால் பத்தாயிரம் வாட்ஸ் பல்பு அவர் முகத்தில்!

கூடவே வழுக்கையை மறைக்க ஏதாவது வழி இருக்கிறதா? என்ன எண்ணை தடவறீங்க! ஏதாவது டாக்டரைப் பார்த்தீர்களா? என எப்போதும் தலை முடி, தலை வழுக்கை பற்றிய பேச்சு தான் பேசுவார்! இந்த தலைப்பில் 20 மணி நேரம் தொடர்ந்து உரையாற்றச் சொன்னால் கூட அவரால் முடியுமோ என நான் அவ்வப்போது நினைப்பதுண்டு!

அவர் ஏதோ ஒரு பாபுஜி [சமீபத்தில் சிறைக்குச் சென்ற ஆசாராம் பாபு தானோ எனக்கு ஒரு சின்ன சந்தேகம்! அவர் வைத்திருக்கும் பேனாவில் அவரது புகைப்படம் இருக்கிறதை கவனித்திருக்கிறேன்!] தரும் எண்ணையை இரவில் தலையில் நன்கு ஆவி பறக்கத் தேய்த்துக் கொண்டு அடுத்த நாள் காலை வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டும் – அப்போது நிச்சயம் தலையில் முடி வளரும் – சொட்டை மறையும் என அவ்வப்போது பிரசங்கம் செய்வார்! 

ஹெல்மெட் முழுதாக அணிந்து கொண்டால் தான் தலைமுடி கொட்டி விடுகிறது என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை – அதனால் இருசக்கர வாகனத்தினை ஓட்டும்போது தலையில் ஹெல்மெட்டினை தொற்ற வைத்துக் கொண்டு தான் செல்வார் – அதற்கான முழுப் பயனை நிச்சயம் தராத வகையில் தான் அவர் ஹெல்மெட் அணிவார் – சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு மட்டுமே அணிகிறேன் – இங்கே ஹெல்மெட் அணிந்துதான் ஓட்ட வேண்டும் – இல்லையெனில் 100 ரூபாய்க்கு மேல் அபதாரம்! – என்று சொல்வார்.

இப்படித்தான் அவரது தலை நோக்குப் பார்வையால் இப்போதும் மாட்டிக் கொண்டு விட்டார் போல! ஒரு வழியாக தனது தலை நோக்குப் பார்வை பற்றிச் சொல்லி எண்ணை வேணுமான்னு கேட்க தான் அவரைப் பார்த்தேன் எனச் சமாளிக்க, அந்த பெண்மணி, ‘ஒழுங்கு மரியாதையா இரு! முதல்ல உன் தலையில முடி வளரட்டும்! அப்பறம் அடுத்தவங்க தலையைப் பாரு!என ஒரு எச்சரிக்கை கொடுத்து நகர்ந்தார் – கூட்டமும் தான்!

நல்ல வேளை தப்பித்தேன் – தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்! இது இரண்டாவது முறை என்றார்.  முதல் முறை என்ன ஆச்சு?ஆர்வக் கோளாறில் நான் கேட்க, இப்படித்தான் ஒரு நாள் காலையில் இறைச்சி வாங்க கடைக்கு போனபோது அந்த இறைச்சி விற்பவர் கையில் இருந்த பெரிய கத்தியைக் கூட பார்க்காது அவர் வழுக்கைத் தலையைப் பார்த்து, “சீக்கிரமே என்னை மாதிரி வழுக்கை ஆயிடுவீங்க போல இருக்கு!எனச் சொல்ல, அவர் கையிலிருந்த கத்தியை ஓங்கியபடி, “வந்தமா, கறியை வாங்கினமான்னு இருக்கணும்! புரியுதா?எனக் கேட்க மனுஷன் கப்-சிப்! ஆனாராம்!

வேண்டாமையா உமக்கு இந்த தலை நோக்குப் பார்வை என அவரை எச்சரித்தபடி நான் வீடு நோக்கி நடந்தேன் – 100 அடி நடந்த பின் திரும்பிப் பார்த்தால் அவர் அடுத்த வழுக்கை மண்டையைப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தார்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி....
 

44 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. சத்தமா சொல்லாதீங்க கணேஷ்.... மேலே சொன்ன ஆளு பக்கத்து ஊர்க்காரர் [ஆந்திரா] தான்... சென்னைக்கு வந்தாலும் வந்துடுவார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 2. ”தலை நோக்குப் பார்வை” --திருந்தவே மாட்டாரோ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு வேளை அந்தப் பார்க் பெண் இவரை ரெண்டு தட்டு தட்டியிருந்தால் திருந்திருக்கலாம்! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 3. ஹா ஹா ஹா... விழுந்து விழுந்து சிரித்தேன்... தலை நோக்குப் பார்வை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்து சரவணன்.... விழும்போது தலையில அடி பட்டுட போகுது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை....

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 5. எண்ணையை இரவில் தலையில் நன்கு ஆவி பறக்கத் தேய்த்துக் கொண்டு அடுத்த நாள் காலை வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டும் – அப்போது நிச்சயம் தலையில் முடி வளரும் – அப்படியா? இது அனுபவமா? அல்லது ஆலோசனையா? எனக்கும் சொல்லுங்கள் நன்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளரும் என்று அவர் சொல்கிறார் கண்ணதாசன் - ஆனால் எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை..... அப்படி உண்மையெனில் அவருக்கும் தலை முடி வளர்ந்திருக்கவேண்டுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. Thalai nokku parvai tholai nokku parvayaga irundirundhal avarukku indha prachanaigal vandirukkadhu.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. அதே தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 13. சகோ!.. பாவம்ங்க அவர்...:)

  இங்கே வெளிநாட்டில் ஆசிய மக்களுக்கு விரைவில் முடிகொட்டுகிறது.
  குளிரென அதிக சூடான நீரில் தலை கழுவுதலும்,
  அவர்கள் பார்க்கும் வேலைகளினாலும் என்று சொல்கின்றனர்.

  உங்கள் பதிவு நல்ல நகைச்சுவை!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி

   நீக்கு
 14. l தலைப்பு அருமை! தலைநோக்கு பார்வை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 15. தலை நோக்கலாம் சிரிக்கலாமா. ஹூம்.. எத்தனை விதமான மனிதர்கள்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 16. ஹா ஹா ஹா ஹா அண்ணே...இது ஒரு கேரக்டர் மனிதர், விட்டுறாதீங்க நிறைய பதிவு எழுதலாம் அவரை வைத்து....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே அப்படிப் பட்ட மனிதர் தான்.... வேறு சில நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்! பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   நீக்கு
 17. நல்ல காட்சி தான். காணக் கிடைக்காத காட்சி, இந்த மட்டும் கல்யாணம் ஆச்சே, பலருக்கும் இதனால் கல்யாணம் ஆவதில்லை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 18. தலை நோக்கி நோக்கி எப்பவாவது தலைப்புச் செய்தி ஆகி விடப் போகிறார் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 19. தலை நோக்குப் பார்வை... சூப்பர் அண்ணா.... ரசிக்க வைத்தது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 20. சொட்டைத்தலைவர்களுக்கு உள்ள சுகமும் (இயற்கை கொடுத்த ஏர்கண்டிஷன்! no need of hair condition), வழுக்கைத் தலைவர்களுக்கு உள்ள வசதியும் அனுபவித்துப் பார்த்தால் தெரியும். சுகத்தையும் வசதியையும் புரிந்து கொள்ளாத மனிதராக இருக்கிறாரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 21. ஆகா.. ஒருவிளம்பரம் வரும் தெரியுமா.. ஒரு பெண் பஸ்ஸில் புத்தகம்படித்தபடி முடி கையோடு வந்ததும் விளம்பரபோர்ட் மற்றும் சகபயணியின் மொட்டைத்தலைப் பார்த்து பதறுவாள். அப்படி பார்க்கும் இடமெல்லாம் பெண்களின் முடியற்ற உச்சந்தலையப்பார்த்து எனக்கு பகீரென்று இருந்தது. இப்பத்தான் ஒரு ட்ரீட்மெண்ட் போய் கொஞ்சம் சரிசெய்திருக்கேன். ஆண்களுக்கு வந்தாலாவது அது ஒரு அழகென்று போய்க்கிட்டே இருக்கலாம்.. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....