எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 14, 2013

குழந்தைகள் தினமும் பரிசும்!
இன்றைய தினம் – 14 நவம்பர் – இரண்டு முக்கியமான தினங்களாகக் கொண்டாடப்படுவது நீங்கள் அறிந்ததே. ஒன்று குழந்தைகள் தினம் மற்றொன்று உலக நீரழிவு நோய் நாள்.  நீரழிவு நோய் வராமல் இருக்க எல்லாம் வல்லவனைப் பிரார்த்தனை செய்வதோடு மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு அதனை எதிர்க்கவும் பாடுபடுவோம். நோய் பற்றி பேசி இங்கே பயமுறுத்தப் போவதில்லை. மற்ற தினமான குழந்தைகள் தினம் பற்றி கொஞ்சம் பார்க்கலாமே! எதற்காகக் கொண்டாடுகிறோம், எப்போது ஆரம்பித்தது என்றெல்லாம் சொல்வதை விட, இங்கே சில குழந்தைகளின் கைவண்ணத்தினையும், அவர்களது திறமைகளையும் கொண்டாட ஆசை.  கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.....

குழந்தைகள் தினம்  

வருடம் தவறாமல்
குழந்தைகள் தினம்
கொண்டாடுபவர்களே!
இனிமேல் தினங்களை
விட்டு விட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?”

குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சில பள்ளிகளில் ஓவியப் போட்டிகள் வைப்பதுண்டு. ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு சமயம் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி வைத்தார்களாம். தலைப்பு – சுற்றுச் சூழல் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும். அப்படி வைத்த போட்டிக்கு வந்திருந்த சில ஓவியங்களை இணையத்தில் காண முடிந்தது. அவற்றில் ஒன்றிரண்டு இங்கே உங்கள் பார்வைக்கு.....தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு மிதிவண்டிகளில் செல்லும் இந்த பூனைகளைப் பாருங்களேன் – என்ன ஒரு அற்புதமான விஷயத்தினைச் சொல்லி விட்டார் இந்த ஓவியத்தினை வரைந்த குழந்தை!இந்த காற்றாலைகள் தான் எத்தனை அழகு – இயற்கையாக கிடைக்கும் காற்றினை வைத்து மின்சாரம் தயாரிப்பதை அற்புதமாக ஓவியமாக்கியிருக்கிறார் இக்குழந்தை. 

குழந்தைகள் தினமான இன்று வயதில் பெரியவர்களாகி விட்ட நாம் எல்லோரும் “குழந்தைத் தொழிலாளிகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் பொருட்களை வாங்க மாட்டோம்!என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம். 

அனைத்து குழந்தைகளுக்கும் எனது மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

போகிற போக்கில் ஒரு சந்தோஷமான விஷயமும் சொல்லிவிடுகிறேன் – இது எங்கள் வீட்டு குழந்தை பற்றியது . எனது மகள் ரோஷ்ணி இந்த ஆண்டு குழந்தைகள் தினம் முன்னிட்டு அவளது பள்ளியில் வைத்த ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு அவளது வகுப்பில் முதல் பரிசினைப் பெற்றிருக்கிறார்.  அவள் வரைந்த ஓவியத்தினை பள்ளியிலேயே வைத்துக் கொண்டார்களாம்! ஆனால் இந்த ஓவியப் போட்டிக்காக அவள் வரைந்து பழகிய ஒரு ஓவியத்தின் புகைப்படம் இங்கே!என்ன நண்பர்களே, பதிவினை ரசித்தீர்களா?

மீண்டும் நாளைய பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 comments:

 1. தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை கொண்டாட கற்க வேண்டும் ..!

  பரிசுபெற்ற ரோஷ்ணிக்கு அன்பான வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதை வரிகள் அருமை.

  //குழந்தைகளை கொண்டாட கற்க வேண்டும் ..!//

  ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு தன் வகுப்பில் முதல் பரிசு பெற்ற தங்கள் குழந்தை செல்வி ரோஷ்ணிக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள், ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. நான் இன்னும் குழந்தையாகத் தான் இருக்கிறேன்.
  நானும் ரோஷ்ணிக்குக் குழந்தைகள் தின வாழ்த்தைச் சொல்லாமா...?

  இல்லையென்றாலும் ரோஷ்ணியைப் பாராட்டுகிறேன்.

  பதிவு அருமையாக உள்ளது நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. மனதளவில் நாம் எல்லோருமே பல சமயங்களில் குழந்தைகளாகத் தானே இருக்கிறோம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 4. ரோஷ்ணிக்கு என் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் சொல்லிவிடுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 5. ரோஷ்ணிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் எனது வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 6. arymaiyaana pakiru anne...!

  roshni avarkalukku enathu vaazhthai sollidunga anne..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 7. அண்ணா பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
  கவிதை அருமை.
  பரிசு பெற்ற ரோஷிணிக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்....

   Delete
 8. குழந்தைகளை கொண்டாடுவோம் - குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 9. ரோஷ்ணிக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 10. குழந்தைகள் தினத்தையிட்டு குழந்தைத் தொழிலாளிகள் செய்யும்
  உபகரணங்களை இனியும் வாங்காதிருப்போம் இதுவே குழந்தைகளைப்
  போற்றும் மனதிற்கு உகந்த செயல் .அருமையான நற் கருத்துக்களுடன்
  மலர்ந்த சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி ஓவியப் போட்டியில் வெற்றி
  பெற்ற ரோசினிக் குட்டிக்கும் சக குழந்தைச் செல்வங்களுக்கும் என்
  இனிய வாழ்த்துக்கள் இங்கே உரித்தாகட்டும் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.....

   Delete
 11. கவிதை சிறப்பு! தகவல்கள் அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 12. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்/ஆசிகள். குழந்தையை ஓவியத் திறமை வெளிப்படும்படி ஊக்கம் கொடுத்து வாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 13. அன்பு நண்பரே
  அருமையான பகிர்வு. உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் மகளுக்கு நல்லாசிகள் மிக பல.
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 14. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 15. ரோஷ்ணிக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....