சென்ற
சனிக்கிழமை மாலையில் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகள் ஒரு நாட்டிய நாடகத்திற்கு
ஏற்பாடு செய்திருந்தார்கள். இது பற்றி
தெரிந்தவுடன், நாட்டிய நாடகத்தினைக் காண நானும் நண்பர் பத்மநாபனும் தில்லி தமிழ்
சங்க வளாகத்திற்குச் சென்றோம். விழா 06.30
மணிக்கு என்பதால் சற்று முன்னரே சென்று நூலகத்தில் சில புத்தகங்களை எடுத்துக்
கொண்டு அரங்கத்திற்குச் சென்றோம்.
வழக்கமான
பொன்னாடை போர்த்துதல், பேச்சுகள் எல்லாம் முடிந்து நாட்டிய நாடகம் துவங்க 07.15
மணிக்கு மேல் ஆகிவிட்டது. எனினும் காத்திருந்ததன் பலன் கிடைத்தது! தமிழக அரசின்
கலைமாமணி விருது பெற்ற திரு ஜாகீர் உசேன் மதுரா கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொண்ட
கதையையும், மதுரை கள்ளழகர் கதையையும் மிக அற்புதமாக தனது நாட்டியத்தின் மூலம்
கண்முன்னே நிறுத்தினார்.
கள்ளழகர்
கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் இங்கே சொல்லப்போவதில்லை. கண்ணன் குழந்தையாக இருந்தபோது கண்ணனுக்குப்
புல்லாங்குழல் வாசிக்கத் தெரியாதாம். ராதை
தான் அவருக்குப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொடுத்தாராம். கண்ணனின்
வேய்ங்குழலில் வருவது நாதம் அல்ல, ராதையின் மூச்சுக் காற்று என்று சொன்ன திரு
உசேன், இந்த நிகழ்வினை மிக அற்புதமாக தனது நாட்டியத்தின் மூலம் ரசிகர்களுக்கு
காண்பித்தார்.
பிறகு
அவரது குழுவினருடன் சேர்ந்து விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் கண்முன்னே
கொணர்ந்தார். தசாவதாரத்தில் நரசிம்ம
அவதாரம் எப்படி காண்பிக்கப் போகின்றனர் என்ற ஆர்வம் ஆரம்பம் முதலே இருந்தது.
பொதுவாக
நரசிம்ம அவதாரம் பற்றிச் சொல்லும் போது “அடேய் பிரகலாதா!
எங்கேயடா இருக்கிறான் உன் விஷ்ணு? ” என்று இரண்யன் கேட்க, இரண்யன், ”தந்தையே! அவன் தூணிலும்
இருக்கிறான், துரும்பிலும்
இருக்கிறான். ஏன்...எங்கும் வியாபித்திருக்கிறான். ஒவ்வொரு துகளிலும் அவன்
உட்கார்ந்திருக்கிறான்”
என்றான் பிரகலாதன். இதைக்கேட்ட விஷ்ணு ”இந்தப் பொடியன், நாம் எங்கிருக்கிறோம்
என கையைக் காட்டுவானோ! அங்கிருந்து உடனே வெளிப்பட்டாக வேண்டுமே!” என எல்லாப் பொருள்களிலும் நிறைந்து காத்துக் கிடந்தான்” என்று
சொல்வார்கள்.
இந்தக்
காட்சியை எப்படி நடனத்தில் விளக்கப் போகிறார் என்ற ஆவல் எனக்குள்! கீழே ஒரு ரோஜா
பூ கிடக்க, அதிலிருந்து ஒரு இதழினை எடுத்து ”இதில் இருக்கிறாரா உன் விஷ்ணு? என்பதாக அபிநயம் பிடிக்க, அதில்
இருப்பதாய் பிரகலாதன் சொல்வது போல இன்னொரு நடனக் கலைஞர் சொல்கிறார். அடுத்ததாய் தூண் போல மூன்று நடனக் கலைஞர்கள்
நிற்க, அதிலிருந்து நரசிம்மனாய் மாறி ஒரு நடனக் கலைஞர் வெளிவருகிறார். அப்பப்பா,
நரசிம்மனின் கோபத்தினையும், இரண்யனின் வதத்தினையும் மிக அருமையாக காட்சிப்
படுத்திக் காண்பித்தார்கள்.
சிறப்பாக
இருந்த இந்த நாட்டிய நாடகத்தினை நடத்தியவர் மேலே சொன்னபடி கலைமாமணி திரு ஜாகீர்
உசேன் அவர்கள். திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களிடம் நாட்டியம் பயின்ற இவர்
நாட்டியம் பற்றிய கோட்பாடுகளை கலாக்ஷேத்திராவின் திருமதி கிருஷ்ணவேணி லக்ஷ்மணன்
அவர்களிடம் கற்றுக் கொண்டவர்.
வேத,
ஆகமங்களை படித்த இவர் பல்வேறு திறமைகளைக் கொண்டவர் – தனது நாட்டியங்களுக்கான
உடைகளை வடிவமைப்பது முதல் பல வேலைகளைத் தெரிந்தவர். திறமைசாலியான இவரது உழைப்பில் மிகச் சிறப்பான
நாட்டிய நாடகம் பார்த்த உணர்வுடன் திரும்ப முடிந்தது. இவரது குழுவில் இருந்த
ஆண்/பெண் நடனக் கலைஞர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக ஆடினார்கள்.
இப்பகிர்வில்
வெளியிட்டு இருக்கும் படங்கள் இந்நிகழ்வின் போது எடுத்தவை. சுமாராக வந்திருக்கிறது என நினைக்கிறேன்!
நான்
ரசித்த இந்நிகழ்ச்சியினை புகைப்படங்கள் வாயிலாகவும், இப்பகிர்வின் மூலமும் இங்கே வெளியிட்டேன்..... நீங்களும் ரசித்திருப்பீர்கள்
என நம்புகிறேன்.
மீண்டும்
வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்,
புது
தில்லி.
நண்பரே படங்களும் அருமை பதிவும் அருமை.பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குபடங்களும் பகிர்வும் சிறப்பாக நிகழ்ச்சியை கண்முன் கொணர்ந்தன..
பதிலளிநீக்குபாராட்டுக்கள்..!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குகாட்சியை நடனத்தில் விளக்கிய விதத்தை அருமையாக படங்கள் மூலம் விளக்கியது அருமை... நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅருமையான நாடகக்காட்சிகளை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள். படங்களும் அசத்தல்... ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஉங்கள் பதிவும் படங்களும் சொல்ல வார்த்தையே இல்லை....
பதிலளிநீக்குஜாகீர் உசேன் நடனத்தில் ஆச்சரியத்தை உண்டாக்கினார் என்றீர்கள்.
எனக்கோ உங்கள் படங்கள் - போட்டோக்கள் - வியப்பில் ஆழ்த்திவிட்டது.
அத்தனை தெளிவாக அந்தக் கலைஞரின் அரிய நாட்டிய நிகழ்வினை
நாமும் உணர்ந்து ரசிக்கும் வண்னம் உங்கள் படங்களும் பதிவும் மிக அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
த ம.5
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.....
நீக்குசுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குடெல்லி தமிழ் சங்கத்திற்கே வந்து பார்த்தது போன்ற பிரமையை உண்டாக்கி விட்டது உங்கள் படங்கள் மற்றும் விளக்கங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குpadhivai padithadhum nattiyathai neril parpadhu pondra unarvai yerpadithiyadhu.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குஅற்புதமான நடன நிகழ்வை காட்சி படுத்திய வரிகள் . நல்ல பகிர்வுங்க. படங்களும் அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா...
நீக்குஅன்பு நண்பரே
பதிலளிநீக்குவணக்கம். தாங்கள் சென்னையில் இருந்து வந்த பின் சந்திக்கவில்லை.
இந்த ப்ரோக்ராம் பற்றி எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் வந்திருப்பேன். தங்களின் பதிவு இந்த டான்ஸ் ப்ரோக்ராமை நேரில் பார்த்தது போல் இருந்தது. அருமையான பதிவு. வாழ்க வளர்க உங்கள் தொண்டு.
அன்புடன்
ராம விஜயராகவன்
எனக்கே மாலை தான் தெரிந்தது. உடனே சென்றுவிட்டேன்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
அற்புதமான பதிவு
பதிலளிநீக்குஒவ்வொரு அபிநயத்தையும்
எப்படி இத்தனைச் சிறப்பாக படமெடுத்தீர்கள்
என ஆச்சரியமாய் இருந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 7
பதிலளிநீக்குதமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குபடங்கள் சுமாரா....?
பதிலளிநீக்குஅற்புதமாக இருக்கின்றன.
பகிர்.. நானும் நடனத்தை நேரில் பார்த்ததைப் போல உணர்த்தியது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.....
நீக்குயதாஸ்தானத்துக்கு வந்தாய் விட்டதா.? படங்கள் எல்லாமே சூப்பர் சார். பொதுவாக ஆண்கள் பரத நாட்டியம் ஆடுபவர்களுக்கு பெண்மை சாயல் வந்து விடுமோ.?
பதிலளிநீக்குஇருக்கலாம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா....
படங்களும் பகிர்வும் அருமை அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்....
நீக்கு
பதிலளிநீக்குஜாகீர் உசேனின் தசாவதார நாட்டிய நிகழ்ச்சி சமய நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. நாட்டிய நாடகத்தை இஞ்ச் இஞ்சாக ரசித்து இருப்பது நீங்கள் எடுத்த போட்டோக்களில் தெரிகிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குரசித்து அதைப் படங்கள் வாயிலாக ரசிக்கத் தந்தமைக்கு நன்றி வெங்கட்/
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை சொக்கன் ஐயா....
நீக்குமிகவும் அற்புதமான நடனங்களின் தகவல் மற்றும் புகைப்பட பகிர்வு, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விவரணன் நீலவண்ணன்....
நீக்குWonderful to learn and read. Good effort. Keep it up Venkat.
பதிலளிநீக்குRamakrishnan
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமகிருஷ்ணன் சார்......
நீக்கு