எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 10, 2013

கண்ணைக் கவர்ந்த சிற்பங்கள் – 2சில மாதங்கள் முன்னர் “கண்ணைக் கவர்ந்த சிற்பங்கள்” எனும் தலைப்பில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருக்கும் சில சிற்பங்களைப் படம் எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அது உங்களுக்கு நினைவிருக்கலாம்! அடடே மறந்துட்டீங்களா? மறுக்கா ஒரு தடவை பார்த்துடுங்களேன்!

108 திவ்யதேசங்களில் முதன்மையானது, மிகவும் பழமையான திருக்கோவில், பல சிற்பங்கள் உள்ளடக்கியது எனும்போது நான் எடுத்த படங்களில் பகிர்ந்து கொண்ட சிற்பங்கள் மிகச் சிலவே.  சென்ற திங்களன்று மீண்டும் ஒரு முறை கோவிலுக்குச் செல்லும் போது வேறு சில சிற்பங்களைப் படம் பிடித்தேன். அவற்றில் சிலவற்றை உங்களுடன் இந்த ஞாயிறில் பகிர்ந்து கொள்கிறேன்.


சாதாரணமாக திருவரங்கத்தில் பெரிய திருவடி என அழைக்கப்படும் கருடனின் தோள்களில் விஷ்ணு பகவானை தூக்கியபடி இருக்கும் சிற்பங்களைப் பார்க்க முடியும்.  சில தூண்களில் சின்னத் திருவடியான ஹனுமானின் தோள்களில் விஷ்ணுவை தாங்கியபடி இருக்கும் சிற்பங்களும் உண்டு.  அவற்றில் ஒன்று இங்கே….


மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்து அமிர்தத்தினை பெற்றார்கள் என படித்திருக்கிறோம். அந்தக் காட்சியை சிற்பமாக வடித்திருக்கிறார்கள் இங்கே!


துந்துபி போன்ற வாத்தியத்தினை வாசிக்கும் பெண்ணின் சிலை இங்கே!


வாலியை மறைந்திருந்து ராமர் கொன்றுவிட்டார் என்பதை நாம் ராமாயணத்தில் படித்திருக்கிறோம்.  அந்த காட்சியை இங்கே வடித்திருக்கிறார் ஒரு சிற்பி.  வாலியும் சுக்ரீவனும் போர் புரிந்து கொண்டிருக்க, பின்னால் இருந்து ராமர் வாலியை அம்பெய்தி கொல்லும் காட்சி.  அதற்கு இலக்குவன் சாட்சி!


ஹோலி பண்டிகை வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை மற்றவர் மீது அடித்தும் விளையாடுவார்கள். தற்போது தமிழகத்தில் கூட விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.  அக்காலத்திலேயே இக்காட்சியை சிற்பமாக வடித்து இருக்கிறார்களே! அது இங்கே!


நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவினை சம்ஹாரம் செய்த காட்சி இங்கே சிற்பமாக!


கஜேந்திர மோட்சம் – தன்னை பூஜிக்க தாமரைப் பூவினை கொய்து வரச் சென்ற யானையை முதலை பிடித்துக்கொள்ள, தனது சக்ராயுதத்தினை ஏவி, யானையை முதலையின் பிடியில் இருந்து காப்பாற்றி மோட்சம் அளித்த காட்சி இதோ இங்கே சிற்பமாக!


சஞ்சீவி மலையைத் தாங்கியபடி வரும் ஹனுமந்தலு!


ராமரும் சீதையும்…..  பொதுவாகவே ராமர் சீதை படம்/சிற்பம் தனியாகப் பார்த்ததில்லை – கூடவே இலக்குவனும், ஹனுமனும் இருப்பார்கள். இங்கே தனியாக!

என்ன நண்பர்களே இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்தீர்களா?  அடுத்த ஞாயிறில் வேறு சில படங்களைப் பார்க்கலாம்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.32 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அருமையான படங்கள் ஐயா. நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 3. கற்சிலைகள் 3d படம் போல் அருமை !
  த.ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. படங்களுடன் உங்கள் பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

   Delete
 5. அக்காலத்திலேயே இக்காட்சியை சிற்பமாக வடித்து இருக்கிறார்களே!
  >>
  அது ஹோலி பண்டிகை இல்லைண்ணா! இந்திரன் விழா. இந்திரன் விழாவில் வண்ணப்பொடிகள் கலந்த நீரை அடுத்தவர்மேல் ஊற்றி மகிழ்ந்ததாக கதைகளில் படிச்சிருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 6. அனுமார் பெருமாளை தோள்களில் தூக்கிக்கொண்டு இருப்பது படம் பார்த்தேன். கருடன் பெரிய திருவடி என்று கேட்டிருந்தாலும் அனுமன் சிறிய திருவடி என வர்ணிக்கப்படுவதை நான் இப்பொழுதுதான் கேட்கிறேன்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 7. அனைத்துமே அழகு என்றாலும் அந்த அமுதம் கடையும் சிற்பம் வெகு அழகாக இருக்கிறது. பதிவாக்கி ரசிக்க வைத்ததற்கு அன்பு நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 8. ஹனுமந்தலு சூப்பர்! எந்த இடத்தில் இருக்கார்? சேஷராயர் மண்டபமா?

  ReplyDelete
  Replies
  1. அதே அதே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 9. பார்த்தேன். ரஸித்தேன். எல்லாமே அருமை. பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. அருமையான சிற்பங்கள்! ஹோலிப்பண்டிகை இல்லாவிட்டாலும் உரியடித்திருவிழாவில் நம்மூரில் மஞ்சள் தண்ணீர் கரைத்து ஆண்களை துரத்துவர் பெண்கள்! சங்க இலக்கியங்களிலும் இது உண்டு என்று நினைக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 11. அழகான சிற்பங்கள்! பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 12. அத்தனையும் அழகு.. குறிப்பா முதல் படம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 13. படங்கள் அழகு
  பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 14. ஸ்ரீராமரோடு நிற்பது இலக்குவன் போலத் தெரிகிறதெ வெங்கட். பின்னால் வில் இருக்கிறது. சீதையானல்ல் கையில் தாமரையும் இருக்கும். அஞ்சலிஹஸ்தராக நிற்பது இலக்குவனின் லட்சியம் இல்லையா.
  மற்றச் சிற்பங்களைச் சிதைக்காமல் விட்ட நல்லவர்களுக்கு மிக நன்றி.

  அனைத்தும் அற்புதம். இன்னும் எடுத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுடன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   இலக்குவனாகவும் இருக்கலாம் என நீங்கள் சொன்ன பிறகு புரிகிறது!

   Delete
 15. நேரில் பார்ப்பதை போல் அருமையாக படங்கள் வந்திருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.....

   Delete
 16. பல்வேறு கதைகளை எடுத்துக் கூறும் அழகிய சிற்பங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....