எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 21, 2013

புது மழை
புத்தம் புதியமழை வந்ததேய டா – அந்தப்
     போகியரு ளாலமுதம் சிந்துதேய டா
சித்தங் குளிர்ந்துதண லாறுதேய டா – இந்தச்
     சீவனிலே இன்பவெள்ளம் ஏறுதேய டா

நித்தம் வராதமழை வந்ததேய டா – ஒளிர்
     நித்திலமும் ரத்தினமும் சிந்துதேய டா
கைத்தலம் விரிந்ததைக் கவர்ந்திடத்தான் – செழுங்
     காவியுடன் தாமரையும் முந்துதேய டா

புத்தம் புதியமணம் வீசுயேத டா – இந்தப்
     பூமியும் சந்தனத்தைப் பூசுமோஅ டா
எத்தனையோ மாமலர்கள் கண்டோமேய டா – அவை
     அத்தனைக்கும் இந்தமணம் இல்லையேய டா

பச்சைப் பயிர்கள்தலை தூக்குதேய டா – கண்ணைப்
     பார்க்கத் திறந்துவிண்ணை நோக்குதேய டா
இச்சைத ணியநீரைக் கொள்ளுதேய டா – நகை
     இன்பமும் மலர்முகத்தில் துள்ளுதேய டா

குயில்கள் குரலெடுத்துக் கூவுதேய டா – சிறு
     குஞ்சுகளுங் கூடுவிட்டுத் தாவுதேய டா
மயில்கள் குதித்துநட மாடுதேய டா – புள்ளி
     மானினங்கள் துள்ளிவிளை யாடுதேய டா

சின்னஞ் சிறுகுருவி பாடுதேய டா – இங்குச்
     சேற்றுத் தவளைதாளம் போடுதேய டா
வண்ணச் சிறகடித்து வண்டுகளெல்லாம் – பல
     வண்ணவண்ண மாகஇசை மீட்டுதேய டா

பாலைவனம் போல்வறண்ட பண்ணையிலெல்லாம்-இன்று
     பாலுடனே தேன்கலந்து பாயுதேய டா
வேலையெலாங் கட்டிவைத்துக் கூடுவோமே டா – மன
     வேகமெழ ஆடிப்பள்ளுப் பாடுவோமே டா.

என்ன ஆச்சு! இத்தனை நாள் நல்லாத்தானே இருந்தப்பா நீ! இப்ப கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டயே!என அதிர்ச்சியுடனும் கேள்வியுடனும் படித்திட்ட நண்பர்களுக்கு......

பயப்படாதீங்க! கவிதை நமக்கு எழுத வராது....  ரசிக்க மட்டும்தான் தெரியும்.  அவ்வப்போது நான் ரசித்த கவிதைகளை ஃப்ரூட் சாலட் பகிர்வுகளில் வெளியிட்டதுண்டு.  அது போல ரசித்த ஒரு கவிதை இது.  ஆனால் ஃப்ரூட் சாலட் பகுதியில் வெளிவராது இங்கே தனிப் பகிர்வாக வந்ததன் காரணம் இது ஒரு பொக்கிஷப் பகிர்வு!  ஆமாங்க இந்த கவிதை இப்போது எழுதப் பட்டதல்ல!

“பொக்கிஷம்என்ற அடைமொழியோடு அவ்வப்போது சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் – அப்படி கடைசியாக வெளியிட்ட பதிவு – ”28 ரூபாய்க்கு காமெரா அதற்குப் பிறகு வெளியிடுவதில் சில சிக்கல்கள்! அப்படியே விட்டுப் போய்விட்டது. இன்றைக்கு மீண்டும் அந்த வரிசையில் ஒரு பொக்கிஷப் பகிர்வு.

மேலே தந்திருக்கும் கவிதை எழுதப்பட்ட ஆண்டு – 1940! அதாவது இன்றைக்கு சற்றேறக் குறைய 73 ஆண்டுகள் முன்னர்! எழுதியவர் திரு சுரபி. வெளி வந்தது – ஆனந்த விகடன் தீபாவளி மலர், 1940!

மழை பொழிந்த இன்பத்தில் வடித்த கவிதை போல! நான் ரசித்த இந்த பொக்கிஷ கவிதையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  பொக்கிஷம் வரிசையில் இன்னும் சில பகிர்வுகள் வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்! நேரமும் சரியாக அமைந்தால்!

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

  

32 comments:

 1. சிற்றிலக்கியத்தில் வரும் “பள்ளு“ப் பாடலோ!

  அருமை அருமை.
  இராகத்துடன் பாடலாம்.
  பகிர்ந்தமைக்கு நன்றி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.....

   Delete
 2. பொக்கிஷப்பகிர்வு அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. பொக்கிஷம் மீண்டும் தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.....

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. ஆஹா! புத்தம் புதுமழையில் நனைந்தாற்ப் போல் புத்துணர்வு. வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 6. மழைக்காலத்திற்கேற்ற மனம் மயக்கும் பாடல்
  ஒன்று தெள்ளுத் தமிழில் படித்தேனடா
  இன்பம் பொங்கிப் பெருகுதேயடா !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.....

   Delete
 7. மாதம் மும்மாரி பெய்ததடா - சுரபி
  சொன்னதெல்லாம் அன்று நடந்ததடா
  இனி ஆண்டு மும்மாரிதான் பெய்யுமோடா
  வெள்ளமும் அழிவும்தான் ஆகுமோடா
  சிக்னல் டவர் பல வந்ததடா
  குயில்கள், குருவிகள் வண்டுகள்
  எல்லாம் காணுமேயடா
  காட்டு மிருகங்கள் இரை தேடி
  நாட்டுக்குள் வருகுதேயாடா -இனி
  என்ன நடக்கும் என்றே தெரியலையேடா
  எழுபத்து மூன்று ஆண்டு கழித்து இந்த
  பொக்கிஷம் எங்கே கிடைத்ததடா
  தேடித் தந்ததற்கு என் நன்றியடா

  ReplyDelete
  Replies
  1. இந்த புத்தகம் இங்கே உள்ள நூலகத்தில் கிடைத்தது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகாதேவன் ஐயா....

   Delete
 8. நித்தம் வராதமழை வந்ததேய டா – ஒளிர்
  நித்திலமும் ரத்தினமும் சிந்துதேய டா

  பொக்கிஷ மழை..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. பொக்கிஷப்பகிர்வு ஆழமாக மனதில் அமர்ந்தது. பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.....

   Delete
 10. இந்தக்கவிதை நிச்சயமாகப் பொக்கிஷம்தான்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.....

   Delete
 11. சிறப்பான வார்த்தை ஜாலத்தைக் காட்டிய அருமையான
  பொக்கிஷம் !! பகிர்வுக்கு நன்றி சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.....

   Delete
 12. மழை வந்தாலே ஒரு மகிழ்ச்சி ...பாராட் டுக்கள் உங்கள் மகிழ்வில் நானும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமதி...

   Delete
 13. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் வெங்கட், படிக்கப் படிக்க என் புருவங்கள் உயர்ந்தது. பேஷ் பேஷ் இத்தனை எளிமையாக சந்தத்துடன் வெங்கட் கவிதை எழுதுகிறாரே என்று. கடைசியில் போட்டு உடைத்து விட்டீர்களே. பள்ளுப் பாடலை நினைவு படுத்திற்று. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அடடா.... ஏமாந்துட்டீங்களா! என்னால் இப்படி எல்லாம் எழுத முடியாது என்பது சர்வ நிச்சயம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.....

   Delete
 14. புத்தம் புதுமழையில் நனைந்தாற்ப் போல் புத்துணர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா....

   Delete
 16. பொக்கிச மழை. அருமையாக பொழிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....