தலைப்பு பார்த்து
ஓடோடி வந்தீங்களா? ஆமாங்க 28 ரூபாய்க்கும்
29 ரூபாய்க்கும் புகைப்படக் கருவி கிடைச்சதுங்க! இப்ப இல்லை.... ஐம்பது அல்லது 60 வருடங்களுக்கு முன்னர்
கிடைச்சதுங்க!
சில மாதங்களுக்கு முன்னர் விளம்பரங்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும், மூக்குத்தூள் - தொடரும் அன்றைய
விளம்பரங்கள்.... எனும் தலைப்பிலும் வெளியிட்ட சில விளம்பரங்களின் தொடர்ச்சியாக இந்த பகுதியில் 1957-ஆம் ஆண்டின் கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த சில விளம்பரங்கள் இன்றைய பொக்கிஷப் பகிர்வாக.....
காமெரா விளம்பரங்கள் –
மூன்று...
குழந்தைகள்
சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் – இரண்டு.....
இரு சக்கர வாகனம்
பற்றிய விளம்பரம் – ஒன்று.....
என்ன
நண்பர்களே.... அந்தக் கால விளம்பரங்களை
ரசித்தீர்களா? விரும்பினால் இன்னும்
தொடர்கிறேன்......
நாளை சில அற்புதமான
ஓவியங்களோடு சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
ரஸித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஇப்போது அந்த கால விளம்பரங்களைப்பார்க்க
பதிலளிநீக்குசுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது
தொடர்ந்து தந்தால் மகிழ்வோம்
வாழ்த்துக்களுடன்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குநான் 1971 ல் பந்த்நகர் (இன்றைய உத்தர்கண்ட்) விவசாயப் பல்கலைக் கழகத்தில் ஒரு பயிற்சிக்காகப் போயிருந்த போது அங்கிருந்து நேபாள் பார்டருக்கு சென்றோம். அங்கு இருந்த ஒரு கிராமத்தில் ஜபபான் கேமரா 40 ரூபாய்க்கு வாங்கி வந்தேன். பார்டரில் கஸ்டம்ஸ் செக்யூரிடி அதைப் பிடுங்கிக்கொண்டான். (அவன் நாசமாகப் போக) இன்னைக்கு சாபம் விட்டு என்ன புண்ணியம். அண்ணைக்கு கேமரா போனது போனதுதான். இரண்டு வருடத்துக்கு முன் 10000 ரூபாய் கொடுத்து சோனி டிஜிடல் கேமரா வாங்கினேன்.
பதிலளிநீக்குஅடடா..... பார்டரில் கஸ்டம்ஸ் செக்யூரிடி பிடுங்கிக் கொண்டானா.... கஸ்ட காலம்!
நீக்குதங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
த.ம. 3 ம் வாக்கு. காசா, பணமா? ஓசிதானே. வாக்குப் போட என்ன கஷ்டம்?
பதிலளிநீக்கு//காசா, பணமா? ஓசிதானே. வாக்குப் போட என்ன கஷ்டம்?//
நீக்குஅதானே.... :)
தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்றன புகைப்படங்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஹிஹி.... த.ம. 5ம் வாக்கு என்னோடது!
பதிலளிநீக்குஹி.ஹி.... உங்க ஓட்டு நாலாவது தான் போல! ஒரு வேளை போலி வாக்காயிடுச்சோ! :)
நீக்குஇப்ப தமிழ்மணம் 4/4 ந்னு தான் காமிக்கிது!
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அந்தக் கால விளம்பரங்கள் வியப்பைத் தருகின்றன ஐயா. அன்று 28 ரூபாய்க்கு வாங்கியதை இன்று வாங்க ரு,10,000 கொடுக்க வேண்டியிருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.....
நீக்குஅந்த காமெராவுக்கும் இப்போதைய காமெராவுக்கும் நிறைய வித்தியாசங்கள்.....
இது எப்படி சாத்தியம் என்ற யோசனையுடன் வந்தால் 25 வருடத்திற்கு பின்னால் உள்ளது.
பதிலளிநீக்கு25 வருடம் அல்ல ஸ்ரீனிவாசன்.... சுமார் ஐம்பது வருடங்கள் பின்னால்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.
அந்தக் கால விளம்பரங்கள் பார்க்கும் போது நாமும் பின்னோக்கி சென்று விற்கிறோம் என்பதே உண்மை. நன்றி .
பதிலளிநீக்குஓவியங்களுக்காக காத்திருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குஅந்தக் கால விளம்பரங்களை ரசிக்கவைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குரசித்தேன் வெங்கட். 1957யில் ஒரு கிராம் தங்கம் 9 ரூபாய். 28 ரூபாயில் கிட்டத்தட்ட 3 கிராம் வாங்கலாம். இன்றும் அதே போல் தான். தங்களிடமுள்ள பிற பழைய தகவல்களையும் பகிருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.
நீக்குஅவ்வப்போது வெளியிடுகிறேன்.
அட?? ஆமாம், விருச்சிகராசிக்குச் சொல்லி இருப்பது அப்படியே சரியா இருக்கே! 25 ரூக்குக் காமிரானதுமே 40களில் வந்ததா இருக்குமோனு சந்தேகத்தோடத் தான் வந்தேன். ஹிஹிஹி, எங்க வீட்டிலே கூட அப்படி ஒண்ணு இருக்குனு நினைக்கிறேன். தேடிப் பார்த்துப் படம் எடுத்துப் போடணும். சின்னச் சின்னதா ஸ்டாம்ப் சைசுக்கு நெகட்டிவ்கள் இருக்கும். எங்கே வைச்சேன்னு நினைவில்லை. :))))
பதிலளிநீக்குஹை... உங்க வீட்டுல இருக்கா.... தேடிப் பார்த்து ஒரு படம் எடுத்து போடுங்க! விளம்பரத்தில் பார்த்ததை நேரிலும் பார்க்க ஆசை!....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
அட? இந்தப் பதிவுக்கு வந்திருக்கேனே! அதிலும் விருச்சிகராசிக்குச் சொல்லி இருப்பது அப்படியே சரியா இருக்கே! :)))))
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குநாங்கள் விரும்பி தொடர்கிறோம் அதனால் நீங்கள் உங்கள் பொக்கிஷங்களை எங்களிடம் பகிரலாம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஅவ்வப்போது வெளியிடுகிறேன்.....
எப்படித்தான் காப்பாத்தி வச்சிருக்கீங்களோ!
பதிலளிநீக்குகாப்பாற்றி வைத்திருப்பது ஒரு நூலகம். அதிலிருந்து நான் காப்பாற்றி வைத்திருக்கிறேன் என் கணினியில்.!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
ஆஹா..அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.
நீக்குபொக்கிசப் பதிவுகள் பார்த்து சுவைத்தேன்.
பதிலளிநீக்குவியப்புத் தான்!..பழை விளம்பரங்கள்.!
வேதா. இலங்காதிலகம்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!
நீக்குரசிக்கும் படி உள்ளது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வெற்றிவேல்.
நீக்குஅட?? ஆமாம், விருச்சிகராசிக்குச் சொல்லி இருப்பது அப்படியே சரியா இருக்கே! //கீதா நீங்களும் விருச்சிகமா?
பதிலளிநீக்குஅந்தக்கால விளம்பரங்கள் பகிர்வு மிக அருமை. தொடருங்கள் தொட்ர்கிறோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்கு29 ரூபாய் என்பது அப்போது பெரிய தொகைதானே?அப்போதைய வாழ்க்கஇயை ஞாபகப்படுத்திய எழுத்து/
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.
நீக்குஅப்போது சிலருக்கு மாத வருமானமே இதை விட குறைவு! :)
Dear kittu,
பதிலளிநீக்குNanum Viruchiga Raasidan. Andakala vilambarangalil padithu rasithen.
தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குரசித்தோம்.... தொடருங்கள்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குசுவாரஸ்யமான விளம்பரங்கள்.
பதிலளிநீக்கு28 ரூபாய் கேமராவை எவரேனும் பத்திரப்படுத்தி வந்திருப்பார்களானால் இன்று பல ஆயிரம் கொடுத்து அதை வாங்க, பல பேர் இருக்கிறார்கள்:)!
அதை வாங்க, பல பேர் இருக்கிறார்கள்......
நீக்குநூற்றுக்கு நூறு உண்மை.....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நிச்சயமாக பொக்கிஷங்கள்தான் இவையெல்லாம்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்....
நீக்குInteresting. I used to take pictures in such a camera once. Continue....
பதிலளிநீக்குஉங்களிடம் இப்படி ஒரு காமெரா இருந்தது என்று தெரிந்து மகிழ்ச்சி.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
எங்க தாய் மாமன் ஒருத்தர் கிட்டயும் இந்த மாதிரி ஒரு பாக்ஸ் டைப் கேமரா இருந்தது. அத யாரையும் தொட விடமாட்டார். வாரத்துல ஒருநாள் ஞாயித்துக் கிழமைகள்ல மட்டும் பெட்டியிலருந்து வெளியில எடுத்து சுத்தம் செய்வார். அந்த கேமராவுக்கு ஃபில்ம் வாங்கணும்னாலும் எடுத்ததுக்கப்புறம் டெவலப் பண்ண்ணும்னாலும் அப்போ மவுண்ட்ரோடுலருந்த (இப்பவும் அந்த ஸ்டுடியோ அதே இடத்துல இருக்குங்கறதுதான் ஆச்சர்யம்!) ஜீகே வேல்ஸ் ஸ்டுடியோவுக்குத்தா போகணும். அங்க போய் வர்றதே ஒரு பிக்னிக் மாதிரி இருக்கும். இந்த விளம்பரங்கள பாத்ததும் எனக்கு பழைய நினைவுகள்.....
பதிலளிநீக்குவிளம்பரங்கள் உங்களது நினைவுகளையும் தூண்டிவிட்டது.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!
பழைய விளம்பரங்கள் பரவசம் அளித்தன! தொடரட்டும் உங்கள் பொக்கிஷங்கள்! நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குபழைய கால விளம்பரங்களில் தமிழ் கூட (வாஹனம்!) வித்தியாசமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎன் மாமாவிடமும் இந்த மாதிரி ஒரு காமிரா இருந்தது. பலருக்கு மலரும் நினைவுகளை தூண்டிவிட்ட பதிவு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
நீக்குபொம்மைக்கமரா என நினைத்து உள்ளே வந்தேன் :) பொக்கிச விளம்பரங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பொக்கிஷ பதிவு. அந்த நாள் விளம்பரங்கள் மிகவும் நன்றாக உள்ளது.
நான் எனது அம்மா வீட்டிலிருந்தவரை இந்த மாதிரி விளம்பரங்கள் நிறைந்த பழைய கல்கி, விகடன் தீபாவளி மலர்கள், புத்தகங்களை பார்த்திருக்கிறேன். அம்மா படித்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். இப்போது அதுவெல்லாம் எங்கே போச்சோ.! இதையெல்லாம் திரட்டி வைக்க இந்த காமிராகூட அப்போது எங்களிடம் இல்லை. ஹா ஹா ஹா. இருந்தாலும் படம் எடுக்க தோன்றியிருக்கவும் வாய்ப்பில்லை. தாங்களும், இதை பத்திரப்படுத்தி படமெடுத்து, விளம்பரங்களை தொகுத்து தந்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.
காமிரா விலை இப்போது சுலபமாக தெரியும். ஆனால் அப்போதெல்லாம் இதுவே பெரிய தொகை. இந்த தொகை தந்து இதை வாங்குபவர்களை பணக்காரராக அருகில் உள்ள வீட்டவர்கள் பார்ப்பார்கள்.
ஊட்டசக்தி விளம்பரமும், மற்றயவைகளும் ரசிக்க வைக்கிறது.அக்காலத்துக்கு அழைத்துச் சென்ற பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
இப்படியான பழைய புத்தகங்களை அவ்வப்போது நூலகத்திலிருந்து எடுத்து படிப்பதுண்டு. நிறைய விஷயங்களைத் தரும் வாசிப்பு அவை.
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.