எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, August 8, 2013

பயணக் கட்டுரைகள் அவசியமா – ஒரு கருத்துக் கணிப்பு

அன்பின் நண்பர்களே..... 

எனது வலைப்பூவில் பயணம் பற்றிய பதிவுகள் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே. நேற்று வெளியிட்ட ரத்த பூமி தொடரின் பத்தாவது பதிவு “பயணம்என்ற தலைப்பில் நான் எழுதிய 101-ஆவது பதிவு.  நான் வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்க்கும்போது அட இத்தனை பதிவுகள் பயணம் பற்றி எழுதி இருக்கிறேனா என எனக்கே ஆச்சரியம்.

சந்தர்பங்கள் அமையும் போது சில இடங்களுக்குச் சென்று வந்து அங்கே கிடைத்த அனுபவங்களை, பார்த்த இடங்களைப் பற்றி எழுதுவது எனக்கான ஒரு டைரிக்குறிப்பாகவும், அங்கே செல்ல இருக்கும் மற்றவர்களுக்கு உதவியாகவும் இருக்கும் என்ற நினைப்பில் தான் தொடர்ந்து பயணக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். 

பயணக் கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு முன்னோடி துளசி டீச்சர். அவர்களது வலைத்தளத்தில் இருக்கும் பயணம் பற்றிய கட்டுரைகள் எத்தனை எத்தனை. இன்னும் தளராது எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.  101 பதிவுகள் எழுதிய நிலையிலேயே எனக்கு மலைப்பு...... 

இந்த வலைப்பூவில் நான் எழுதிய பயணம் பற்றிய தொடர்கள்......

பெஜவாடா விஜயவாடா பயணம் – 7
மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – 27 பதிவுகள்
ஜபல்பூர் – பாந்தவ்கர் – 12
காசி – அலஹாபாத் – 16
மஹா கும்பமேளா – 8
ரத்த பூமி – 10
பொது – 21

பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் இடங்களையும், மனிதர்களையும் சந்தித்து புதிய அனுபவங்களைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சி, அந்த பயணம் பற்றிய விவரங்களை உங்களுடன் பகிர்ந்து வருவதில் கிடைக்கும் ஆனந்தம், பார்த்த இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல், என இவை தான் தொடர்ந்து பயணப் பகிர்வுகள் எழுதுவதன் நோக்கம்.

சரி இந்த பதிவிற்கான விஷயத்துக்கு வருகிறேன்.... [அப்பாடா இப்பவாவது விஷயத்துக்கு வந்தியே!] ரத்த பூமியான குருக்ஷேத்திரத்திற்கு சென்று வந்த பிறகு சில பயணங்கள் சென்று வந்தேன். அது பற்றி எழுதுவதற்கு முன்னர், பதிவுலக நண்பர்களான உங்களிடம் ஒரு வேண்டுகோள்.  இந்த பயணக் கட்டுரைகளால் உங்களுக்கு ஏதும் பயனுண்டா? இது அவசியம் தானா? இல்லை ஏண்டா இப்படி எழுதி எங்க காதுல புகை வர வைக்கறே என்று நினைக்கிறீர்களா? என்பதை நீங்கள் சொன்னால், அதன் பின் எழுதுவது பற்றி முடிவெடுக்கலாம் என நினைத்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

உங்களுக்கு வசதியாக ஒரு கருத்துக்கணிப்பு வாக்கு பதிவு செய்யும் விட்ஜெட்டும் சேர்த்திருக்கிறேன்.  உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்....   

பயணக் கட்டுரைகள் அவசியமா?
நாளைய பதிவில் மீண்டும் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.52 comments:

 1. தொடருங்கள் என்று வாக்களித்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. எனக்கு உங்கள் பதிவுகளில் மிகவும் பிடித்தது ப்ருட் சாலட்தான் அதற்கு அடுத்தபடியாகத்தான் மற்றது எல்லாம். பயணபதிவுகள் அவசியம் எழுதுங்கள் பல இடங்களுக்கு போகவிரும்புபவர்களுக்கு அது மிக உதவியாக இருக்கும் அதுவும் அந்த இடங்களுக்கான விபரங்களை தமிழில் படிப்பது மிகவும் சந்தோஷம் தரும் அதனால் நீங்கள் பயணக்கட்டுரையை எழுதலாம் எனக்கு சிறு வயதில் மிகவும் பிடித்தது இதயம் பேசுகிறது இதழ் ஆசிரியர் மணியன் எழுதுவதுதான். அதை அவர் தரும் விதம் மிகவும் அருமையாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 3. அவசியம் தொடரவும் என்று வாக்களித்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 4. எழுதங்க, நண்பரே.. எங்களுக்கெல்லாம் உதவும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 5. “பயணம்” என்ற தலைப்பில் நான் எழுதிய 101-ஆவது பதிவு. //

  இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. உங்கள் பயணத்தை நிறுத்தாமல் தொடருங்கள்.மிகவும் நல்ல யாத்திரை வழிகாட்டியாக இருக்கிறது.

  எனக்கு உங்கள் தளத்தில் இருக்கும் நம் தேசியக் கொடியினை எப்படி சேர்த்தீர்கள் என்று சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன். நிறைய தளத்தில் பார்க்கிறேன். இன்று முழுக்க முயன்றும் எனக்கு பட்டொளி வீசி பறக்க மறுக்கிறது.
  முடிந்தால், நேரம் இருக்கும் போது rajisivam51@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பினாலும் ஒகே.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!....

   தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். உங்கள் பக்கத்தினையும் வந்து பார்த்தேன். செய்து விட்டீர்கள் என்று தெரிந்து கொண்டேன்...

   Delete
 7. நிச்சயம் அவசியத் தேவை
  அதுவும் தங்களைப்போல பயணத்தில்
  குறையாத ஆர்வமும் மிகச் சரியாக
  புகைப்படங்களுடம் நேர்த்தியாகச் சொல்லிச் செல்லும்
  திறன்பெற்றோர் பயணக்கட்டுரை எழுதுவது
  புதிய இடத்தை மிகச் சரியாக அறியவும்
  அங்கு செல்ல இருப்போருக்கு ஒரு நல்ல
  வழிகாட்டியாகவும் இருக்கும்
  நான் இந்த இரத்த பூமித் தொடரை மட்டும்
  ஆரம்பத்தில் படிக்கத் தவறியதால்
  இடையில் படிக்க இஸ்டம் இல்லை
  இவ்வாரம் முழுத்தொடரையும் படித்துவிடுவேன்
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!...

   தொடர்ந்த ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 8. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. பயணப்பகிர்வுகள் நிச்சயம் தேவையே. முன்னாடியே சென்று வந்த ஒருவரின் அனுபவங்கள் அடுத்தாப்ல போறவங்களுக்கு நிச்சயம் பிரயோசனப்படும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 10. பயணக் கட்டுரை எல்லா நேரங்களிலும்,எல்லா இடங்களையும் ரசிக்க வைப்பதில்லை... சில இடங்கள் புதிதாக கேள்விப்படாததாக இருக்கும்போது கண்டிப்பாக படிக்க வைக்கும்...ஆனால் அந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமிருப்பவர்களுக்கு சமயங்களில் வழிகாட்டியாகவும் இருக்கும். எனவே தொடருங்கள் உங்கள் பதிவை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 11. ரத்த பூமியை மட்டும் தொடர முடியவில்லை... சில பயண கட்டுரைகளை இடையில் இருந்த நான் வாசிக்கத் தொடங்கினால் புரிய மாட்டேன்கிறது.. ஆனால் நான் வடஇந்திய பயணிப்பதாய் இருந்தால் உங்கள் வலையை தான் நிச்சயம் ரெபர் செய்வேன்... இன்று முழுமையாக பயன்படாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அதன் பயன் நிச்சயம் முழுமையடையும்... அதனால் நிறுத்தி விடாதீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 12. ”பதிவுலகின் பயணத்தொடர் மணியன்” என்று ஏற்கனவே உங்களை அழைக்க ஆரம்பித்தாகி விட்டது.

  (அவசியம் தொடரவும் - என்று வாக்களிச்சாச்சு! கூடவே எங்க காதுல புகை வர வைக்கறீங்க என்பதும் உண்மைதான்!)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 13. பயணங்கள் என்றும் ஓய்வது இல்லை. தொடர்வதோ தொடராமல் இருப்பதோ உங்கள் இஷ்டம். படிப்பதோ படிக்காமல் விடுவதோ, பயன் பெறுவதோ பயன் பெறாமல் போவதோ, வாசகர்கள் இஷ்டம்.

  ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் இஷ்டம் இருக்கும். அது அவரவர்கள் விருப்பம். அதை மாற்றுவதோ மாற்ற முயற்சிப்பதோ கூடாது.

  அதுபோல உங்கள் விருப்பமான, பயணம் செய்வது, பலரை சந்திப்பது, பல இடங்களைப்பார்ப்பது, புகைப்படம் எடுப்பது, அந்தப்பயணத்தை உடனே ஓர் பதிவாகத் தருவது என்பதை நாங்களும் கருத்துச் சொல்லி மாற்ற முயற்சிப்பதும் கூடாது, என்பது என் அபிப்ராயம்.

  அவரவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் மாறுபாட்டுக்குரிய MOOD + சூழ்நிலைப்படி, எல்லா OPTIONS களுக்குமே, கருத்துக்கணிப்பில், TICK அடிக்கணும் போல ஓர் எழுச்சி ஏற்படலாம் எனவும் எனக்குத் தோன்றுகிறது.

  101 வது பயணக்கட்டுரைக்கு பாராட்டுகள், ஜி.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. சகோ... இப்படி ஏன் கேட்கின்றீர்கள்...
  நான் தொடர்ந்து வாசிக்க முடியாமல் போனது வருத்தமே.
  கால நேரம் மற்றும் எனக்கு ஆழ்ந்து ஊன்றி ரசித்துப் படிக்கும் ஆவல். ஆனால்... ஏனோ எனக்கு நேரகாலம் அமையவில்லை. வருத்தமே...:(.

  ஆயினும் கால தாமதமானாலும் வந்து படித்து கருத்திடுவேன்.

  நிறுத்தவேண்டாம்.. தொடருங்கள் சகோ!
  அவ்வப்போது வந்து படித்துக் கருத்திட முயல்கிறேன்.

  வாழ்த்துக்கள்!

  த ம. 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 15. என்னை மாதிரி எங்கும் போக முடியாதவர்களுக்கெல்லாம் உங்கள் கட்டுரைதான் ஒரு சாளரம்!தொடர வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 16. armchair travelers என்ற வகையில் வரும் மக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் வாசிப்பை பயணக் கட்டுரைகள்/கதைகள் எழுதுபவர்கள் மூலம் கிடைக்கிறதே!

  பயணம்..... உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும். ஆதலினால் பயணம் செய்வீர்.

  சர்வேயில் முதல் கருத்துக்கு எஸ்ஸுன்னு க்ளிக்கியாச்சு.

  என்னைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 17. வெங்கட் நாகராஜ் சார் 101வது பயணப் பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  நான் பள்ளியில் படிக்கும் போது திரு பரணீதரன் எழுதிய ஒரு பயணப் புத்தகத்தை பல முறை படித்திருக்கிறேன்.

  திரு பிலோ இருதயநாத் அவர்களின் பயணக் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்.

  அது மட்டுமல்ல சார். பயணமே போகாதவர்கள் கூட பயணக் கட்டுரைகள் படிக்கும் போது பயணம் செய்த திருப்தி கிடைக்கும்.

  நான் கூட ஒன்றிரண்டு பயணக் கட்டுரைகள் (சொல்ல வெட்கமாக இருக்கிறது) எழுதி இருக்கிறேன். எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் எழுத்துக்கள் வழிகாட்டி.

  கண்டிப்பாக பயணக்கட்டுரைகளைத் தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

   Delete
 18. தொடரச் சொல்லியாச்சு. போகாத இடங்களுக்குப் போய்ப்பார்க்க முடியா இடங்களைக் குறித்துத் தெரிஞ்சு வைச்சுக்கலாமே. தொடருங்கள். நானும் சில பயணக்கட்டுரைகள் எழுதி இருக்கேன். துளசி உலகம் சுற்றிய வாலிபி. ஆனால் நான் நம்ம நாட்டுக்குள்ளேயே சென்ற சில இடங்கள் குறித்த பயணக்கட்டுரைகள் எழுதி இருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 19. பயணக்கட்டுரையை தொடருங்கள் சகோ! அடுத்தவங்க அங்க செல்லும்போது பயன்படுமே!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கர கட்டி.

   Delete
 21. கண்டிப்பாக தொடர வேண்டும். வட இந்தியாவைப்பற்றி எழுதுபவர்கள் மிகவும் குறைவே. தென் இந்தியாவைப்ற்றி எழுதுபவர்கள்தான் அதிகம். பயணக்கட்டுரை படிப்பதிலும், பல ஊருக்கு போவதிலும் கண்டிப்பாக ஆனந்தம் கிடைக்கிறது. தொடருங்கள் உங்கள் பயணக்கட்டுரைகளை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகை ரவி.

   Delete
 22. தொடர சொல்லி ஓட்டு போட்டுட்டேன் சகோ.

  சில இடங்கள் எங்க இருக்குன்னே நமக்கு தெரியாது. சில இடங்களின் சிறப்பும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்காது. அதனால பயணப்பதிவுகள் எழுதறது தம்பட்டம் அடிச்சுக்க இல்லை. நம் அனுபவம் பலருக்கும் உதவியாய் இருக்கும் என்பதாலதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 23. சந்தர்பங்கள் அமையும் போது சில இடங்களுக்குச் சென்று வந்து அங்கே கிடைத்த அனுபவங்களை, பார்த்த இடங்களைப் பற்றி எழுதுவது எனக்கான ஒரு டைரிக்குறிப்பாகவும், அங்கே செல்ல இருக்கும் மற்றவர்களுக்கு உதவியாகவும் இருக்கும் என்ற நினைப்பில் தான் தொடர்ந்து பயணக் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.//

  நீங்கள் சொல்வது உண்மை மற்றவர்களுக்கு பயன்படும்.
  தொடருங்கள் என்று வாக்களித்து விட்டேன்.
  101வது பயண பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 24. தொடர அளித்தேன் வாக்கு:)! /டைரிக்குறிப்பாகவும், அங்கே செல்ல இருக்கும் மற்றவர்களுக்கு உதவியாகவும்/ மிகச் சரி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி ராமல்க்ஷ்மி.

   Delete
 25. வாழ்த்துகள்.

  உங்கள் பயணத்தினூடாக பல புதிய இடங்களையும் சுற்றிப்பார்த்து மகிழ்கின்றோம்.

  என்வாக்கு அவசியம் தொடரவும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....