எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 18, 2013

இலை[கள்]......

என்னங்க, இலைகள் தலைப்பு பார்த்தவுடனே, இங்கே தலைவாழை இலைபோட்டு ஏதும் உணவு பற்றிய பதிவுகள் எழுதிட்டேனோன்னு நினைச்சீங்களா.... 

சமையல் பற்றிய சில பதிவுகளும் ஆரம்பகாலத்தில் எழுதியிருக்கேன். ஆனா இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை ஆச்சே....  புகைப்படங்கள் தானே ஞாயிற்றுக் கிழமைகளில் நான் வழக்கமாக பகிர்வது.

தமிழில் புகைப்படக்கலை வலைப்பூ, இந்த மாத போட்டிக்கு தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இலை[கள்]..... இலைகளைப் பற்றி அவர்கள் சொன்னது இங்கே.....

ஆல்பர்ட் காமஸ் என்பவர் இப்படிச் சொல்கிறார் "ஒவ்வொரு இலையும் பூவாக இருக்கும்போது இலையுதிர் காலம் என்பது இரண்டாவது வசந்த காலம்". இலைய பூவோட ரேஞ்சுக்கு சம்மந்தப்படுத்துகிறார். பூ மட்டுந்தானா அழகு? இலையுந்தான்! இந்த மாதம் இலைகள அழகாக் காட்ட வேண்டியது உங்க பொறுப்பு. 

அதனால நானும் களத்தில் குதித்து சில படங்களை எடுத்தேன். இந்த ஞாயிறில் நான் எடுத்த சில இலைகளின் படங்கள் உங்கள் ரசனைக்கு.

படம் 1: துளிரும் இலையும்.....


படம் 2: க்ரோட்டன்ஸ் இலை.....
 


படம் 3: மணி ப்ளாண்ட் இலை.....

படம் 4: இது என்ன இலையோ..... விசிறி வாழையின் ஜூனியர்?

படம் 5: மீண்டும் மணி... மணி.....

படம் 6: செம்பருத்தி இலையும் இலையின் மேல் தத்தித் தாவும் பூச்சியும்.

படம் 7: இதுவும் ஒரு வித க்ரோட்டன்ஸ்.....
 படம் 8: ரோஜா மலரே ராஜகுமாரி.....  இலைகள்!
 படம் 9: பச்சையில் மட்டுமா இருக்கவேண்டும் - வேறு வண்ணத்திலும்......
 
படம் 10: எலுமிச்சை இலை..... வாசனை வந்துச்சா?
 
படம் 11: மஞ்சள் செடியின் இலை.....
  படம் 12: இப்படியும் ஒரு இலை!

படம் 13: நானும் ஒரு கொடிவகையைச் சேர்ந்தவள் தான்!
    
என்னுடைய படங்களை நான் அனுப்பவில்லை....  போட்டியில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.... 

அடுத்த ஞாயிறன்று வேறு சில படங்களோடு உங்களனைவரையும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கம்.

58 comments:

 1. அனைத்தும் அழகு... முக்கியமாக விசிறி இலை எலுமிச்சை இலை, க்ரோட்டன்ஸ் மிகவும் அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. நிச்சயம் இலையும் அழகுதான்
  அதைத் தனியாகப் பார்க்கையில்தான் புரியும்
  அருமையான புகைப்படங்கள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. நீங்க போட்டிக்கு உங்க புகைப்படங்களை அனுப்பலாம். நேர்த்தி தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 5. இலைகளின் புகைப்பங்கள் அருமை. பகிர்வுக்கு ந்ன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. வெற்றிலையும், எருக்கிலையும் அழகு/ அம்பத்தூரில் இருந்திருந்தா வீட்டுத் தோட்டத்து விதவிதமான இலைகளைப் படம் எடுத்திருக்கலாம். :))) இங்கே தென்னங்கீற்றை எடுக்க முடியுமானு பார்க்கணும். :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 7. கலைகளை ரசித்திடப் பழகு!
  இலைகளிலும் இருக்குதே அழகு!

  மிகமிக துல்லியமாக அருமையாக இருக்கிறது உங்கள் நிழற்படங்கள்!
  போட்டிக்கு அனுப்பி வாகை சூட இப்பவே வாழ்த்துகிறேன்!

  டாஷ்போர்டில் உங்கள் பதிவு காண்பிக்கவில்லை.
  தற்சமயம் வந்ததால் கண்ணுற்றேன்.

  வாழ்த்துக்கள் சகோ!

  த ம.5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 8. தெளிவான புகைப்படங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 9. இலைகள் வண்ண வண்ணமாக கண்களுக்கு விருந்து! ஏன் போட்டிக்கு அனுப்பவில்லை? மிகத் தெளிவாக இருக்கின்றனவே படங்கள் எல்லாம்?

  ReplyDelete
  Replies
  1. போட்டியில் எந்த படத்தினை வெளியிடுவது எனத் தயக்கம்..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 10. இலையில் அழகிலை என யார் சொன்னது? கேட்கின்றன படங்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. 13-ஆவது படத்தைப் போட்டிக்கு அனுப்பலாமே..

  ReplyDelete
  Replies
  1. ....லாம்.... லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 12. இலைகளின் படங்கள் அருமை,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 13. தலை வாழை இலைப் போட்டாதான் விருந்தா ?இலைகளும் கண்ணுக்குத் தருதே விருந்து !
  அதுவும் அந்த கடைசி இலையின் சின்ன ஓட்டையில் விழுந்து நான் காணாமலே போய்விட்டேன் !

  ReplyDelete
  Replies
  1. காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிட்டுடுவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 14. எல்லா படங்களுமே அழகோ அழகு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 15. போட்டிக்குத் தகுதியான படங்கள். அனுப்பியிருக்கலாம். அந்த விசிறி இலை- பனை/ஈச்சமர வகையைச் சார்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 17. அழகோ அழகு..கண்டேன் இரசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

   Delete
 18. அட முடிந்துவிட்டதா என்கிற ஏக்கத்தை உண்டுபண்ணிய காட்சிகள்.. இன்னும் நிறைய இதுபோன்ற புகைப்படங்கள் வேண்டும். அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.

   Delete

 19. சில வருடங்களுக்கு முன் வரை காமிராவில் ஃபில்ம் போட்டுப் படம் எடுப்பதில் ஆர்வமிருந்தது. ஒரு முறை ஒரு சுட்டிப் பையனை படம் எடுத்தேன். அவன் உடனே ஓடி வந்து படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டான். எனக்குத் தெரியவில்லை. அவன் ரேஞ்சே டிஜிடல் காமிரா என்று. அதன் பிறகு படம் எடுப்பதே குறைந்து விட்டது. நீங்கள் வெளியிட்டிருக்கும் படங்கள் அருமை. ஒரு பெரிய செம்பருத்தி இலையில் பெயிண்டிங் ஒன்று வரைந்திருந்தேன். அதை நண்பர் ஒருவருக்குப் பரிசாய்க் கொடுத்து விட்டேன். இந்தப் படங்கள் எதை எதையோ எழுத வைத்து விட்டன. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. சார்.

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 21. தனியாக இலையை எடுத்துக் காட்டும் போது அதன் வண்ணமே தனி.
  மிக அருமை.
  அழகு. இனிய வாழ்த்து
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 22. படங்கள் மிக அருமை. ஒவ்வொரு பதிவிலும் தங்களின் புகைப் படங்கள் மனதைக் கவர்கின்றன.வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா...

   Delete
 23. படங்கள் எல்லாமே மிக அழகு. வெங்கட்.... உங்கள் பதிவுகள் 'எங்கள்' சைட் பாரில் சரியாக அப்டேட் ஆகவில்லை. கொஞ்சம் என்னவென்று பார்க்கவும்! :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   RSS feed-ல் ஏதோ பிரச்சனை. பார்க்கிறேன்....

   Delete
 24. படங்களெல்லாம் அருமையாக வந்துள்ளது. பூவரசு,சவண்டை,கொடுக்காப்புளி, மருதாணி,அத்திவகைகள்,கலியாண முருங்கை என பலவிதமரங்களின் இலைகள், மநதில் வந்து போயின. முன்னாடி போட்டிக்கு படங்களை அனுப்புங்கள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

   Delete
 25. வெங்கட், உங்கள் பதிவை என் டேஸ் போர்ட் காட்டவில்லை .
  படங்கள் எல்லாம் அழகு. நானும் நிறைய இலைகளை படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 26. அழகு காட்டும் வண்ண இலைகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 27. இலைகள் காட்டும் கலைகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 28. எல்லாம் மிக அழகாய்... போட்டிக்கு அனுப்பாதது ஏன் ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்...

   Delete
 29. அத்தனையும் அருமை. விசிறி இலை மிக அழகு. எலுமிச்சை வாசம் எழுகிறது:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....