தமிழ் வலையுலக
நண்பர்களுக்கு,
வணக்கம். நலமா?
தில்லியிலிருந்து
உங்கள் வெங்கட் எழுதும் மடல்......
வலைப்பூக்கள் மூலம் சந்தித்து வரும் வலைப்பதிவர்கள் அவ்வப்போது நேரிலும்
சந்தித்து தங்களது கருத்துகளை பரிமாறிக்கொள்வது உற்சாகமான ஒரு விஷயம். தில்லியில் உள்ள பதிவர் நண்பர்கள் கூட சில
சமயங்களில் சந்தித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். வெளியூரிலிருந்து
பதிவர்கள் தில்லி வரும்போது தகவல் தெரிந்தால் அவர்களையும் நேரில்
சந்தித்திருக்கிறோம். உதாரணத்திற்கு
ஸ்வாமி ஓம்கார், புதுகைத் தென்றல், துளசி கோபால், கோமதி அரசு, Dr. பழனி கந்தசாமி, மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் ஆகியோரை நான் மட்டுமோ [அ] சக தில்லி
பதிவர்களுடனோ சந்தித்து இருக்கின்றேன்.
கடந்த நான்கு
ஆண்டுகளில் எப்போது தமிழகம் வந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு பதிவரையாவது நேரில்
சந்தித்து இருக்கிறேன். அப்படிச் சந்தித்த பதிவர்களின் பட்டியல் நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீளமானது......
திரு ரிஷபன், திரு வை. கோபாலகிருஷ்ணன்,
திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, திரு தமிழ் இளங்கோ, அப்பாதுரை, வீடு திரும்பல்
மோகன்குமார், மன்னையின் மைனர் ஆர்.வி.எஸ்., மின்னல் வரிகள் கணேஷ், திடம் கொண்டு
போராடு சீனு, மதுமதி, புலவர் ஐயா, சேட்டைக்காரன், திருமதி கீதா சாம்பசிவம்,
திருமதி வல்லிசிம்ஹன், திருமதி ராஜி [காணாமல் போன கனவுகள்], திருமதி புவனா
[அப்பாவி தங்கமணி] திருமதி ராஜி [கற்றலும் கேட்டலும்]......... [பட்டியலில் நான்
சந்தித்த யாரும் விடுபட்டிருந்தால் எனது மறதி மட்டுமே காரணம்!]
சென்ற வருட சென்னை
பதிவர் சந்திப்பு நடப்பதற்கு இரண்டு நாள் முன்னர் தான் சென்னையிலிருந்து
தில்லிக்கு கிளம்பினேன். அதனால் கலந்து கொள்ள முடியவில்லை. இப்போது மீண்டும் சென்னையில் பதிவர் சந்திப்பு.
அலுவலகத்தில் இருக்கும் மூட்டை மூட்டையான ஆணிகளைப் பார்த்தால் விடுமுறை கிடைப்பது
கடினம். பார்க்கலாம்.....
இந்த வருடம் பதிவர்
சந்திப்பு [பதிவர் சந்திப்பு பற்றிய விவரங்கள் இங்கே இருக்கின்றன] பற்றி
வெளிவந்திருக்கும் பதிவுகளைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
வருவதாக பதிவு செய்திருக்கும் பதிவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டி விட்டது என
நினைக்கிறேன். இருநூறு பதிவர்கள் வரலாம் என எதிர்பார்ப்பதாக ஒரு பதிவில்
படித்தேன். அந்த 200 பதிவர்களின் பெயரில்
எனது பெயரும் இடம் பெறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்!
சந்திப்பு பற்றி மற்ற பதிவர்கள் எழுதுவதைப் படித்தபோது வரவேண்டுமென்ற ஆவல்
மனதுக்குள் வந்து Chair போட்டு உட்கார்ந்து
கொண்டிருக்கிறது. கூடவே ஒரு கல்யாணமும்
வருகிற 26-ஆம் தேதி சென்னையில்....
அதுவும் மனைவியின் சொந்தக்காரர் வீட்டு திருமணம். போகாது
இருந்தால்........! அதனால் இரண்டையும்
சேர்த்து ஒரு தமிழகம் நோக்கி ஒரு சூறாவளி பயணம் மேற்கொள்ள எண்ணம்!
பதிவர்களின் சந்திப்பில் நான் கலந்து கொள்ள வேண்டுமெனில் விழா நடத்தும்
குழுவினருக்கு ஒரு சில நிபந்தனைகள்......
[கல்யாணம் செய்துகொள்ள மணல் கயிறு படத்தில் எஸ்.வி.சேகர் போடும் எட்டுவித
கட்டளைகள் போல!]
”தமிழகத்தினை காக்க வந்த
விடிவெள்ளியே.....
தலைநகரில் தமிழகத்தின்
பெயரை நிலைநாட்டும் மாணிக்கமே......
தலைநகரே..... தமிழகமே உங்களை வரவேற்கிறது......”
என்று எனது பெயரையும் என்னுடைய படத்தையும் பெரியதாக போட்டு,
மீனம்பாக்கத்திலிருந்து வடபழனி வரைக்கும் Flex Banner எல்லாம் வைக்கக்கூடாது..... ஏன்னா நமக்கு விளம்பரம் பிடிக்காது
கேட்டீங்களா..... கூடவே என் படத்தைப் பார்த்து யாரும் பயந்துடக் கூடாதுன்ற நல்ல
எண்ணமும்!
விழா அரங்கத்தின் வாசலில் ஒரு கும்பலா காத்திருந்து மலர் மாலையெல்லாம் போட்டு,
கையில் பொக்கே கொடுத்து, பொன்னாடை போர்த்தி [இந்த பன்னாடைக்கு பொன்னாடை வேற
கேக்குதோ.....] மரியாதையெல்லாம் செய்யக்கூடாது....
பத்திரிகை நண்பர்கள் எல்லாம் வந்துருக்காங்க, அவங்களுக்கு பேட்டி கொடுங்க,
புகைப்படத்துக்கு போஸ் குடுங்க, ”உங்களுடன் நேர்காணல்” நிகழ்ச்சிக்காக டி.வி. காரங்க
எல்லாம் காத்திருக்காங்க, ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குங்க ப்ளீஸ்.... அப்படின்னு
ரொம்ப தொல்லை தரக்கூடாது......
இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா, நானும் வரதா முடிவு பண்ணியிருக்கேன். செப்டம்பர் 1 ஞாயிறு காலை சென்னை வந்து,
அங்கிருந்து அன்றைய இரவே திருச்சி செல்வதாக இது வரை ப்ளான்! [எல்லா ப்ளானும்
விடுமுறை கிடைத்தால்...... என்பதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்!] பார்க்கலாம்.
நான் மட்டும் வந்துட்டா.... கூடவே
எங்க வீட்டுல இன்னும் இரண்டு பதிவர்கள் இருக்காங்க! “கோவை2தில்லி” எனும் வலைப்பூவில் பதிவுகள் எழுதிவரும் எனது
மனைவியும், ”வெளிச்சக்கீற்றுகள்” எனும் வலைப்பூவில் அவள்
வரைந்தவற்றை வெளியிடும் [அவர் சார்பாக வெளியிடுவது நானாக இருந்தாலும்!] எனது
மகளும் எங்கூடவே வர இருக்காங்க!
ஆகவே நண்பர்களே..... சந்திப்பு நடத்தும்
குழுவினர்களே, சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு நாங்களும் வர்ரோம்ல!... 200-
பேர்களில் எங்களுடைய பேரையும் சேர்த்துக்கோங்க!
சென்னையில் சந்திப்போம் நண்பர்களே.......
நாளைய பதிவில் சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
எஞ்சாய் எஞ்சாய் பண்ணூங்கோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.
நீக்குபதிவர் குடும்பமாக இருக்கும் நீங்களே வராமல் இருந்தால் எப்படி? ச்சும்மா கிளம்பி வந்திடுங்க, ஒரு ஜாலி ட்றிப் அடிச்ச மாதிரி இருக்குமல்ல..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிரஞ்சன் தம்பி.
நீக்குதிருமணத்திலும், வலை மணத்திலும் பங்ககேற்க இருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குDear kittu,
பதிலளிநீக்குChhennai varuvadharku mikka magishchi.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்கு:))))))))))))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குenjoy
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழமைபேசி.
நீக்குவாங்க வாங்க... தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.
நீக்குappadiyaa anne..!
பதிலளிநீக்குmakizhchi!
naan innum mudivukku vara mudiyala...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குபதிவர் சந்திப்பு மிக்க மகிழ்ச்சியுடன் அமைய வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விக்கியுலகம்.
நீக்குவருக வருக நாகராஜ் சார் சந்திப்போம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குதங்கள் வரவு பற்றிய அறிவிப்பு
பதிலளிநீக்குமகிழ்வளிக்கிறது
ஆயினும் இப்படி வரவேற்புக்கு
இத்தனை கண்டிஷன் போட்டு
சென்னை பதியவர்களின் கைகளை
கட்டிப்போட்டிருக்கக் கூடாது
சென்னையில் சந்திப்போம்
வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 4
பதிலளிநீக்குதமிழ்மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கலந்து அசத்துங்க...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
நீக்குதலைநகரில் தமிழகத்தின் பெயரை நிலைநாட்டும் மாணிக்கமே......
பதிலளிநீக்குதலைநகரே....//வருக வருக ...தங்களின் வரவு நல்வரவாகுக
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.....
நீக்குiஇனிய தருணங்கள் ..
பதிலளிநீக்குமகிழ்ச்சியாய் நிறைய வாழ்த்துகள்..!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி....
நீக்கு;))))) தங்களின் இந்தப்பதிவினை ரஸித்தேன். வாழ்த்துகள் ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி....
நீக்குaaha varanumnu asaiya iruku parpom
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்....
நீக்குநீங்கள் சொன்ன நிபந்தனைகளைப் படித்தேன்.
பதிலளிநீக்குசிரித்தேன்.
வாழ்த்துக்கள். .....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி....
நீக்குபதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளப்போகும் மகிழ்ச்சியில் பதிவும் மகிழ்சி ஊஞ்சல் ஆடுகின்றது. வாழ்த்துகள் உங்கள் மூவருக்கும்.
பதிலளிநீக்குநிபந்தனைகள்........ ஹா.........ஹா........
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி....
நீக்குஇப்படியெல்லாம் பதிவு போட்டு வரமுடியலையேங்கற ஏக்கத்துல இருக்கற எங்களையெல்லாம் கெளப்பப்டாது ஆமாம்.. சொல்லிட்டேன் :-))))
பதிலளிநீக்குநிபந்தனைகள் ஜூப்பரு :-))))))))))))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்....
நீக்குகுடும்பமாக கலந்து கொள்ள இருக்கும் உங்களுக்கு என் மகிழ்வான வாழ்த்துக்கள் வெங்கட்.
பதிலளிநீக்குஉங்கள் நிபந்தனைகள் மிக ரசிக்க வைத்தது !! :-)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌசல்யா ராஜ்.....
நீக்குபேனர் எல்லாம் வைக்கமாட்டோம் சார் கண்டிப்பா வந்திடுங்கோ.....குடும்பத்துடன் உங்களையும் சந்திக்கிறோம்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.....
நீக்குநீங்க சொன்னபடியே செய்யப்படும். வாருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....
நீக்குவாங்கண்ணா. வணக்கங்கண்ணா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவக்குமார்....
நீக்குவிடுப்பு விரைந்து கிடைக்க மலை மந்திர் முருகன் அருள் புரியட்டும்!
பதிலளிநீக்குநல்வரவு!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்....
நீக்குவாங்க வாங்க திருச்சி வரீங்க அப்படியே தஞ்சைக்கும் வந்து பெரிய கோவில் பார்த்துட்டு போலம்ல சகோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கரக்கட்டி....
நீக்குஹா ஹா ஹா கோரிக்கைகள் அவ்வளவு தானா இல்ல இன்னும் இருக்கா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.....
நீக்குகுடும்ப சகிதமாக பதிவர் விழாவில் கலந்துகொள்ளப் போகும் சூப்பர் டூப்பர் பதிவு தம்பதிகளுக்கு பதிவுலகமே எழுந்து நின்று வரவேற்பு கொடுக்கக் காத்திருக்கிறது.
பதிலளிநீக்குநானும் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வருக, வருக!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....
நீக்குஇப்படியும் பெயர் பட்டியலில் இடம் பிடிப்பாங்களா... அசத்தல் அசத்தல். வாங்கோ வாங்கோ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....
நீக்குYou are most welcome....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி மனிதன்.....
நீக்குஇதேதான் பாஸ் நானும் சொல்ல நினைத்தேன், நமக்கு இந்த பப்ளிகுட்டிலாம் பிடிக்காது. . . . வரப்போ நம்ம பையன் பிரனாப் முகர்ஜியை கேட்டதா சொல்லுங்க. . .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜா...
நீக்குOhhh. I never knew of this Tamizh Bloggers Community. Going now to check it out. Thanks Venkat! :)
பதிலளிநீக்குIndian Fashion n Travel Blogger! - Bhusha's INDIA TRAVELOGUE
Thanks for the visit and the comments Bhusha...... Yes. There is a blogger meet on the 1st September 2013......
நீக்குFirstly, All the best to attend the gathering.
பதிலளிநீக்கு{.... மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் ஆகியோரை .....}
ஃபிளக்ஸ் பேனர் வெய்க்காதமைக்கு நன்றி.
# மீ ஆல்சோ, நோ விளம்பர லைக்கு..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்......
நீக்குடெல்லியில் நடந்த பதிவர் சந்திப்பை குறிபிட்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குசென்னையில் பதிவர் திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி.
ரோஷ்ணி முக்கியமான குட்டி பதிவர் அல்லவா! ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் நிபந்தனைகள் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....
நீக்குஒரு கட் அவுட்டாச்சும் வைக்க பர்மிஷன் கொடுங்க பிளீஸ்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்.....
நீக்குமகிழ்ச்சியான இத் தருணம் அனைவருக்கும் கிட்டட்டும் !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குஇரசித்தேன் ஊருக்குப் புறப்படும் உற்சாகக் கதையை:)! மகிழ்ச்சி. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற என் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஹலோ மிஸ்டர் வெங்கட்!
பதிலளிநீக்குஒரு பெரிய பதிவரை நீங்க அவமதிச்சுட்டீங்க. என்னை சந்திக்கும் முன்னயே அவங்களை சந்திச்சுட்டீங்க. அவங்க பேர் இந்த லிஸ்ட்ல இல்லியாம். அதனால, அந்தம்மா கோவிச்சுக்கிட்டாங்க. சந்திப்புக்கு வர்றீங்கதானே!! அங்க, உங்க மேல வீச முட்டை, தக்காளியோட அம்மணி வெயிட்டிங்க். நீங்க வெஜ். அதனால, அதெல்லாம் நாங்களே ஆம்லெட் போட்டு சாப்பிடுவோம்.
ஓ.... உங்க மகள் தூயாவைச் சொல்றீங்களா.....
நீக்குஎன் மேல வீச முட்டை, தக்காளியோட காத்திருக்காங்களா.... வீசாமலேயே ஆம்லெட் போட்டு சாப்பிடுங்களேன்! :)
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி.
Welcome. Glad to see you all in the function. My book is also getting released in this function !!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.....
நீக்குஉங்கள் புத்தகம் வெளிவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி.....