வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஃப்ரூட் சாலட் – 57 – அஸ்னா – குண்டூஸ் – ரமலான் வாழ்த்துகள்


இந்த வார செய்தி:

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அஸ்னா எனும் பெண் பற்றிய செய்தி தான் இந்த வார செய்தி.  கேரளாவின் கண்ணூர் மாவட்டம். பதிமூன்று வருடங்கள் பின்னோக்கிச் செல்வோம். ஐந்து வயது பெண் குழந்தையான அஸ்னா தனது வீட்டு வாசலில் அம்மா சாந்தி மற்றும் சகோதரன் ஆனந்த் உடன் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, எங்கிருந்தோ வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து மூவருக்கும் பலத்த அடி. அஸ்னாவின் வலது காலில் அதிக அடிபட, முட்டிக்குக் கீழே வெட்டி எடுக்கப்பட வேண்டிய சூழல்......

காலை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத அஸ்னா இத்தனை வருடங்களும் செயற்கைக் கால்கள் பொருத்திக்கொண்டு பள்ளிக்குச் சென்று படித்திருக்கிறார்.  வளர வளர, செயற்கைக் கால்களும் மாற்றி அமைக்க வேண்டியிருக்க, இதுவரை 13 முறை செயற்கைக் கால் மாற்றியிருக்கிறார் அஸ்னா.  ஒவ்வொரு முறை மாற்றும் போதும் அது பொருந்தும் வரை வெட்டப்பட்ட கால்களில் இருந்து ரத்தம் வந்து தொல்லை தருமாம். கால் சரியாக பொருந்த கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஆகுமாம். 

எத்தனை வலி இருந்தாலும் பள்ளி செல்லாது இருந்ததில்லையாம் அஸ்னா. ஒவ்வொரு முறை கால் மாற்றும் போதும் ஆகும் செலவுகளை டீக்கடை நடத்திதான் அவரது  தந்தை சமாளித்து வந்திருக்கிறார்.  இத்தனை நாள் தன்னம்பிக்கையுடன் படித்து வந்த அஸ்னா இப்போது மருத்துவக் கல்லூரியில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.  சிறு வயதிலிருந்தே, அதுவும் தனது காலை இழந்த பிறகு, நிச்சயம் தான் மருத்துவராக வேண்டும் என்ற நினைவுடனேயே இருந்ததாகச் சொல்லும் அஸ்னா, படிப்பு முடித்த பின் அரசினர் மருத்துவமனையில் சேர்ந்து சேவை செய்ய விரும்புவதாகச் சொல்கிறார். 

தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை இருந்து விட்டால் ஊனம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அஸ்னாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்போமே.......  அவருக்கு உங்கள் சார்பாக ஒரு பூங்கொத்து.....




இந்த வார முகப்புத்தக இற்றை:

அலுவலகத்தில் வேலை செய்யும் சக அலுவலர் ஒருவர் ஸ்டாக் மார்க்கெட்டில் புகுந்து விளையாடுவார். அதுவும் டே ட்ரேடிங். பல சமயங்களில் பணத்தை இழந்து இருக்கிறார்.  ஆனாலும் அவருக்கு அதில் இருக்கும் ஆசை விட வில்லை.  இப்போது எல்லாவற்றிலும் இழப்பு. கொஞ்சம் கையை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். முகப்புத்தகத்தில் இந்த நகைச்சுவை படித்தபோது அவரது நினைவு வந்தது. 

STOCK MARKET EFFECT:
Depressed Husband to his fat wife:
"You are my only investment that has doubled.''
(((((( ))))))
 
இதை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்ததும் ஒரு பெண் தான்.....

இந்த வார குறுஞ்செய்தி

COMMUNICATION IS THE LIFELINE OF ANY RELATIONSHIP – WHEN YOU STOP COMMUNICATING, YOU START LOSING YOUR VALUABLE RELATIONSHIPS……

காணொளி: 

இந்த காணொளியை ரசித்தேன் என்று சொல்ல முடியாது. அதனால் தான் வெறும் காணொளி என தலைப்பில் சொல்லி இருக்கிறேன்.  இந்திய மக்கள் தொகையில் 40 மில்லியன் மக்களுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும். அதனால் ஆங்கிலத்தினால் வரும் ஆபத்து பற்றி சொல்லியிருக்கிறது நவ்பாரத் டைம்ஸ் நாளிதழ் வாங்கச் சொல்லும் இந்த விளம்பரம்....... 



ரசித்த பாடல்:

மீண்டும் கோகிலா திரைப்படத்திலிருந்து, கமல்ஹாசன் – ஸ்ரீதேவி நடிக்க, கே.ஜே.யேசுதாஸ் – எஸ்.பி. ஷைலஜா குரல் கொடுக்க இளையராஜா இசையமைக்க “சின்னஞ்சிறு வயதில் பாடல் இதோ உங்களுக்காக.....  காட்சியில் கமல் செய்யும் சேஷ்டைகள்....  நடுவே ஒரு பாட்டி வெற்றிலை-பாக்கு இடிக்கும் இசை :) என பெண்பார்க்கும் படலம் சுவையாக இருக்கும்!..... பார்த்து ரசியுங்களேன்!  




ராஜா காது கழுதை காது:

நேற்று பிர்லா மந்திர் எதிரே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது சுமார் 20 ஆந்திர பெண்மணிகள் தெலுங்கில் காளி பாக் 610 நம்பர் பஸ் தான் போகும்என மாட்லாடியபடி வந்தார்கள். காத்திருந்தபோது சில பெண்கள் ஆட்டோவில் போகலாம் எனச் சொல்லி, அந்த வழி வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தினார்கள். ஆட்டோவினை நிறுத்தி காளி பாக் செல்ல வேண்டும் எனச் சொன்னபோது அவர் முழித்து [காளி பாக் எனும் இடமே தில்லியில் இல்லை!] பின் விழித்து “ஓ போகலாமேஎனச் சொன்னார்.

அந்த பெண்களில் ஒருவர் “ஒரு ஆட்டோவில் எத்தனை பேர் போக முடியும்?எனக் கேட்டார். ஆட்டோவாலா, மூன்று பேர் எனச் சொல்ல, ஆட்டோவின் பின் புற சீட்டைப் பார்த்து “ஒகட்டி, ரெண்டு, மூடு, நாலுகுஎன ஆரம்பித்து எட்டு வரை எண்ணிவிட்டு “ஒரு ஆட்டோவில் எட்டுபேர் போகலாம் எனச் சொன்னபோது அந்த ஆட்டோ ஓட்டுனர் முகத்தில் அப்படி ஒரு கலவரம்.....  டாப் கியர்ல போட்டு ஒரே தூக்கு! நிக்கவே இல்லையே!

பிறகு அவர்களிடம் காளி பாக் என ஒரு இடம் தில்லியில் இல்லை. நீங்கள் எங்கே செல்ல வேண்டும்? எனக் கேட்க, அவர்கள் சொன்னதிலிருந்து தெரிந்தது அவர்கள் செல்ல வேண்டியது கரோல் [B]பாக் மார்க்கெட். எதிர்புறத்திலிருந்து தான் பேருந்து கிடைக்கும் எனச் சொல்லி வழியனுப்பி வைத்தோம்!  

படித்ததில் பிடித்தது!:

இந்த வாரம் படித்ததில் பிடித்தது பகுதியில் ஒரு ஹிந்தி ஹாஸ்ய கவிதை.....  எனது நண்பரின் முகப்புத்தகப் பக்கத்தில் படித்தது.....

मुमताज मरती नहीं

कुंआरे सोचते हैं कि ताजमहल बनाना है
पर मुमताज मिलती नहीं

और शादीशुदा सोचते हैं कि ताजमहल बनाना है
पर मुमताज मरती नहीं ।

ஹிந்தி படிக்கத் தெரியாதவர்களின் வசதிக்காக! இங்கே தமிழில்.....

இறக்காத மும்தாஜ்.....

கல்யாணம் ஆகாத இளைஞன் தாஜ்மஹால் கட்ட நினைக்கிறான்
மும்தாஜ் கிடைக்கவில்லை.....

கல்யாணம் ஆனவன் தாஜ்மஹால் கட்ட நினைக்கிறான்....
மும்தாஜ் இறக்கவில்லை!

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.....









நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு

  2. அப்ப எங்கேஜ்மென்ட ஆனவன் உடனே நிலம் வாங்ககிடுவானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ல..... ரெடி ஆக வேண்டாமா?

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. ரசித்த பாடல் எப்போதுமே எவர் கிரீன் சாங்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      நீக்கு
  4. கடைசி ஜோக் நல்லா இருக்கு!! மருத்துவராக இருக்கும் குட்டி பெண்ணுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  5. ஃப்ரூட் சாலட் அருமை..!

    அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் மனமார்ந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  6. ஹா ஹா... ஸ்டாக் மார்கெட் ஜோக் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

      நீக்கு
  7. தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை இருந்து விட்டால் ஊனம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அஸ்னாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    "You are my only investment that has doubled.'' ஸுப்பர் ஜோக் ;))))) ரஸித்தேன், பலக்கச் சிரித்தேன்.

    அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் மனமார்ந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.....

    பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  8. குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தது விடியோ ஜோக் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தி.

      நீக்கு
  10. அஸ்னாவிற்கு வாழ்த்துகள்.. வழக்கம் போல் அனைத்துப் பகுதிகளும் அருமை வெங்கட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

      நீக்கு
  11. asnaavin sevai manapaanmaikku en vaazhthukkal .
    kashtappadubavarukku mattume sevaiyin arumai theriyum polum .
    saalad suvai.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  12. OMMUNICATION IS THE LIFELINE OF ANY RELATIONSHIP – WHEN YOU STOP COMMUNICATING, YOU START LOSING YOUR VALUABLE RELATIONSHIPS……//

    நூத்துல ஒரு வார்த்தைங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப்.....

      நீக்கு
  13. இவ்வார ஃப்ரூட் சலாட்டும் நன்றாகவே உள்ளது!

    அஸ்னாவின் தன்நம்பிக்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பகிர்வினுக்கு உங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

    த ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  14. அஸ்னாவிற்கு வாழ்த்துக்கள்....

    நகைச்சுவைகள் அருமை...

    ஸ்டாக் மார்க்கெட் தூக்கல்...

    என்றும் விரும்பும் பாடல்...

    இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்...

      நீக்கு
  15. ஹசனாவுக்கு கல்விதான் ஊன்றுகோல் என்பதை அறிந்து இருக்கிறார்.நல்ல நகைசுவை ,நேர்த்தியாக செய்யப்பட்ட ரமலான் வாழ்த்து !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

      நீக்கு
  16. கரோல்பாக் காளிபாக்காயிடிச்சா!நல்ல வேளையா நீங்க உதவினீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  17. அஸ்னாவின் முயற்சி பாராட்டத்தக்கது. ராஜா காது சுவாரஸ்யம். மீண்டும் கோகிலா பாடல் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். இதே படத்தில் வரும் 'ராதா...ராதா.... ...நீ எங்கே' பாடலும் ரொ. பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  18. “சின்னஞ்சிறு வயதில்” பாடல் முறை விடியோவுடன் கேட்டேன்... நான் பார்க்க வேண்டிய வரிசையில் 'மீண்டும் கோகிலா' படத்தை இணைத்து விட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்க ரூபக் ராம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. அஸ்னாவின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  20. இப்பத்தான் உங்க பதிவுகளைச் சேத்துவச்சுப் படிச்சுட்டு வர்றேன். அதனால், ரமதான் வாழ்த்துக்குத் தாமதமான நன்றிகள்!!

    அஸ்னா- சம்பந்தமேயில்லாமல் தண்டிக்கப்பட்டும் விரக்தி அடையாமல், நம்பிக்கையோடு மருத்துவராகியிருக்கிறார். பாடம்.

    //இதை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்ததும் ஒரு பெண் தான்.....//
    அடேயப்பா... பலமான எச்சரிக்கை உணர்வு!! :-)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலமான எச்சரிக்கை உணர்வு....

      எல்லாம் ஒரு பயம் தான்! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....