சனி, 31 ஆகஸ்ட், 2013

இரண்டாவது பதிவர் சந்திப்பு – இன்னும் சில மணித்துளிகளில்….


சென்னையில் இரண்டாவது பதிவர் சந்திப்பு இன்னும் சில மணித்துளிகளில். பல நண்பர்களின் முயற்சியில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடக்கவிருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் வர இருக்கிறேன். இன்று இரவு திருச்சியிலிருந்து கிளம்பி நாளை காலை சென்னை வந்து சேருகிறேன்.

விழாவின் போது மோகன் குமார், சேட்டைக்காரன் போன்றவர்களின் புத்தககங்களும் வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல புத்தகங்கள் அவர்கள் வெளியிட எனது வாழ்த்துகள்.

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் பதிவர் சந்திப்பிற்கு வர இயலாத பதிவுலக நண்பர்களுக்காக, வலையகத்தின் உதவியோடு நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எனது வலைப்பூவிலும் கீழுள்ள காணொளியில், நாளை காலை 09.00 மணிக்கு PLAY பட்டனை அழுத்தினால் விழாவினை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
 
வாருங்கள் நண்பர்களே……  விழாவில் சந்திப்போம். இதோ COUNT DOWN…..


சந்திப்பிற்கு வர இருக்கும் அனைத்து வலையுலக நட்புகளையும் நேரில் சந்திக்க ஆவலுடன்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.டிஸ்கி: இன்று காலை வெளியிட்ட எனது மற்றொரு பதிவு - உறியடி உத்ஸவமும் ஸ்ரீ ஜெயந்தியும்

28 கருத்துகள்:

 1. எனது வலைப்பூவிலும் கீழுள்ள காணொளியில், நாளை காலை 09.00 மணிக்கு PLAY பட்டனை அழுத்தினால் விழாவினை நேரடியாக கண்டுகளிக்கலாம்.


  ஆஹா.. மிக்க நன்றி.. விழாவின் வெற்றிக்கு நல்வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   நீக்கு
 2. வருக வருக ! உங்கள் அனைவரையும் காண காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாளை சந்திப்போம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   நீக்கு
 3. வெற்றியுட்ன் சென்று வெற்றியுடன் திரும்ப நல்வாழ்த்துகள்.

  துணைவியாரும் பதிவராக அமைந்துள்ளதில் எவ்ளோ செளகர்யம் பாருங்கோ. உடனே இருவரும் சேர்ந்து தடையேதும் இல்லாமல் டக்குனு புறப்பட முடிகிறது.

  //எனது வலைப்பூவிலும் கீழுள்ள காணொளியில், நாளை காலை 09.00 மணிக்கு PLAY பட்டனை அழுத்தினால் விழாவினை நேரடியாக கண்டுகளிக்கலாம்.//

  ஆஹா.. மிக்க நன்றி.. விழாவின் வெற்றிக்கு நல்வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 4. வணக்கம் நண்பரே! விழா சிறக்க வாழ்த்துகள்! கண்டு களிப்பேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 5. வெங்கட், குடும்பத்துடன் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி.கலந்துகொள்ளும்
  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் நேரடி ஒலிப்பரப்பை காண்கிறோம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 6. விழாவை கண்டு களிக்க வழி செய்தமைக்கு நன்றி அண்ணா...
  விழா சிறக்க வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 7. விழா அமோகமாக நடக்க வாழ்த்துகள்.உங்களையும் ஆதியையும் மற்ற பதிவர்களையும்
  சந்திக்க முடியவில்லை என்பதே என் வருத்தம். நேரம் கிடைத்தால் வீட்டிற்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா..... உங்களை சந்திக்க ஆவலுடன் இருந்தேன். பரவாயில்லை. அடுத்த முறை சென்னை வரும்போது வந்து சந்திக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 8. பதிவர் விழா சிறக்கட்டும். சென்னை வரும் மூன்று பதிவர்களுக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைச் சந்திக்க முடியவில்லை. “எங்களில்” ஒருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதங்கி.

   நீக்கு
 11. அடடா... நீங்களும் கலந்துக்கிறீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் என் பயணத்தை முன்தேதிக்கு மாத்தியிருப்பேன். 2ஆம் தேதி காலை திருக்குறளில் ஊருக்குப் புறப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... நீங்கள் 2-ஆம் தேதி கிளம்பறீங்களா? நான் 6 இரவு திருக்குறளில் தில்லி திரும்புகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   நீக்கு
 12. விழா சிறப்புடன் நடைபெற மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

   நீக்கு
 14. உங்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வமாய் உள்ளேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   புகைப்படம் எடுத்துக் கொண்டீர்களா? :)

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....