இந்த வார செய்தி:
மிட்டி
கூல்! ”பெயரே
வித்தியாசமா இருக்கே”ன்னு யோசிக்கறீங்களா?
ஹிந்தியில் மிட்டி என்றால் மண்.
கூல் – ஆங்கில வார்த்தை தான்! நம்ம ஊர் பானைகள், மண்பாண்டங்கள் போலவே
மண்பாண்டங்கள் செய்யும் ஒரு நபர் தான் திரு மன்ஷுக் லால் ராகவ்ஜி [B]பாய் ப்ரஜாபதி [ஒரே ஆளு தான்! கொஞ்சம் நீளமான பேர்தான்!]. குஜராத்
மாநிலத்தினைச் சேர்ந்தவர் மன்ஷூக்!
சாதாரணமாக
பானைகளும் மண்பாண்டங்களும் செய்வதோடு தனது வாழ்க்கையினை முடித்துக் கொள்ளாது
எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும் இவர் பிறந்தது 1965-ஆம்
வருடம். களி மண் கொண்டு பலவிதமான பாத்திரங்களும் Non-Stick வகை பாத்திரங்களும் தானாகவே தயாரித்து விற்று வரும் இவரது வாழ்க்கைப் பயணத்தின்
தொடக்கம் கொஞ்சம் கடுமையாகத் தான் இருந்தது.
பத்தாவது
வரை படித்த இவர், தனது குடும்பத்தின் ஏழ்மை கண்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.
அங்கே நடந்த ஒரு சிறு விபத்தில் கண்ணில் கொஞ்சம் அடிபட, எட்டு மாதத்திற்கு வேலை
இல்லாது இருந்தவர் ஒரு தேநீர் கடை ஆரம்பித்தார்.
அது மனதுக்குப் பிடிக்காது போகவே, அதே சமயம் ”Jagdamba Potteries” எனும் நிறுவனத்தில் 300 ரூபாய் சம்பளத்தில் 1985-ஆம் வருடம்
சேர்ந்து பல விதமான மண் பாத்திரங்கள் தயாரிப்பதையும் கற்றுக் கொண்டார்.
நாள் ஒன்றுக்கு
குயவர்களின் சக்கரத்தில் 100 பானை/பாத்திரங்களுக்கு மேல் தயாரிக்க முடியாது
இருப்பது கண்டு, ஏதாவது செய்ய வேண்டும் என ஆரம்பித்தது இவரது தேடல். வீட்டின்
கூரைகளுக்கான ஓடுகள் கைகளால் அழுத்தி தயாரிக்கும் இயந்திரம் மூலம் நிறைய தயாரிக்க
முடிகிறதைப் பார்த்த மன்ஷுக் இதே முறையால் பாத்திரங்கள், மண் தவா [தோசைக்கல்!]
தயாரிக்க முடிவு செய்தார்.
பார்த்துக்
கொண்டிருந்த வேலையை விட்டு, 30000 ரூபாய் கடனில் ஆரம்பித்தது தான் இவரது
தொழிற்சாலை.
ஓடுகள்
தயாரிக்கும் இயந்திரத்தில் சில மாறுதல்கள் செய்து நாள் ஒன்றுக்கு 700 தவாக்கள் வரை
தயாரிக்க ஆரம்பித்த இவர் கடனில் மூழ்கினாலும், தனது குடும்பத்தினருடைய தொடர்ந்த
ஆதரவினையும் பெற்று தனது முயற்சியில் வெற்றி பெற்றார். குளிர்ந்த தண்ணீர் வைத்துக்கொள்ள
விதம்விதமான மண் பாத்திரங்கள் [Water Cooler
with a tap!] தயாரித்து
அதற்கான Patent உரிமைகளையும் பெற்றார்.
இப்படி
முன்னேற்றம் கண்டு கொண்டிருந்தவர் வாழ்வில் மட்டுமல்ல குஜராத்தின் பலருடைய
வாழ்விலும் மாற்றத்தினை ஏற்படுத்தியது 2001-ஆம் ஆண்டு அங்கே வந்த நிலநடுக்கம். நிலநடுக்கத்திற்குப்
பிறகு “சந்தேஷ்” எனும் குஜராத்தி நாளிதழ் இவரது மண்ணாலான Water filter படம் போட்டு “The broken
fridge of the poor” என்ற
விளம்பரம் வெளியிட்டது. அதைப் பார்த்தபிறகு தான் மன்ஷுக் அவர்களுக்கு மண்ணால் ஆன
ஃப்ரிட்ஜ் தயாரிக்கும் ஆசை வந்தது. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு மண்ணால் ஆன ஃப்ரிட்ஜ்
தயாரித்து அதை விற்பனை செய்வதில் வெற்றி கண்டார். அதற்கு மின்சாரம் தேவையில்லை
என்பது கூடுதல் வசதி!
பழங்கள்
காய்கறிகள், பால் போன்ற அனைத்தையும் கெடாமல் வைத்திருக்க உதவும் இந்த மிட்டி கூல்
ஃப்ரிட்ஜில் தண்ணீரும் சேமித்து வைத்துக்கொள்ள வசதி உண்டு. அதையே ஒரு குழாய் மூலம்
பிடித்துப் பயன்படுத்தும் வசதி இதை பிரபலமாக உலா வரச் செய்திருக்கிறது.
இந்த வெற்றிப்
பயணம் இவரோடு மட்டும் நிற்கவில்லை. இன்னும் பல இளைஞர்களுக்கு இவரது தொழிற்சாலையில்
வேலை தந்து அவர்களையும் முன்னேற்றும் நல்ல எண்ணம் கொண்ட இவர் தனது வாழ்வில்
மேன்மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்!
சென்ற வாரம் இவரைப் பற்றி Times Now தொலைக்காட்சியில் Grass Root
Soldiers எனும் நிகழ்வில்
பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.
இந்த வார
முகப்புத்தக இற்றை:
எல்லா பெண்களும்
அவரவர் கணவன் கண்ணிற்கு ராணியாக தெரிவதில்லை.
ஆனால் எல்லா பெண்களும் அவரவர் அப்பாவிற்கு இளவரசி தான்!
இந்த வார குறுஞ்செய்தி:
பெரும்பாலான
மனிதர்கள் தங்களுடைய ஒரு ரூபாய் நாணயம் தொலைந்து போனால் கவலைப் படுவதில்லை.... அதே
நேரம் அவர்களது அலைபேசியில் இருக்கும் எஞ்சிய தொகையில் ஒரு பைசா குறைந்தாலும்
ரொம்பவே கவலைப் படுகிறார்கள்... என்ன உலகமடா இது!
ரசித்த படம்:
மொத்த
குடும்பமும் ஒரே இடத்தில்தான் இருப்போம்! கொஞ்சம் கூர்ந்து கவனிங்க!
ரசித்த பாடல்:
இள நெஞ்சே வா நீ இங்கே
வா..... எனும் பாடல். கே.ஜே. யேசுதாஸ்
அவர்களின் குரலில் இனிமையான பாடல்.... நான் ரசித்த அந்த பாடல் இதோ உங்கள்
ரசனைக்கு.....
ரசித்த விளம்பரம்:
பேருந்தில்
செல்லும் பெண்களை உரசுவதில் இன்பம் காணும் இடிமன்னர்களைப் பார்த்து “ஏன் தான்
இப்படி இருக்காங்களோன்னு” கோபப்பட்டதுண்டா! அவர்களை வழிக்குக் கொண்டு வர ஒரு
காணொளி..... இந்த விளம்பரத்தினைப் பாருங்களேன்!
படித்ததில் பிடித்தது!:
”பெரிய பெரிய அவமானங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு, தாங்கள் போகிற போக்கிலேயே
போய்க் கொண்டிருப்பவர்களைப் பெரிய யோகிகள் என்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது ரயில்வே
கம்பெனிகளைப் போன்றவைகளை பெரிய யோகிகள் ஸ்தாபனம் என்று சொல்லி விடலாம். ரயில்
வண்டிகள் வேகமாகப் போகவில்லை என்பதற்காக எத்தனையோ விகடத் துணுக்குகள் கேலிப் பேச்சுகள்
சொல்லிப் பார்த்தாகிவிட்டது. ஆனாலும் எல்லாவற்றிற்கும் அவை பூ என்று ஊதிவிட்டுப்
போனபடியே தான் போய்க் கொண்டிருக்கின்றன!”
-
இப்போது படித்துக்
கொண்டிருக்கும் ஒரு புத்தகத்திலிருந்து! என்ன புத்தகம் என ஆவலுடன் கேட்கும்
நண்பர்களுக்கு விரைவில் அப் புத்தகம் பற்றி எழுதுகிறேன்! அப்ப தெரியும்! எழுதியது எழுத்தாளர்
தேவன் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்! :)
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த
வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வெங்கட்.
புது தில்லி.
மிட்டி கூல் தகவல் புதிது மற்றும் இளைஞர்களுக்கு தூண்டுகோளாய் இருக்கவும் செய்யும் கட்டுரை..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி!
நீக்குமிட்டி கூல் -வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குதிரு மன்ஷுக் லால் ராகவ்ஜி அவர்களின் மிட்டி கூல் தகவல் புதிது...
பதிலளிநீக்குஎன்றும் ரசிக்கும் பாடல்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇந்த பதிவில் வந்த தகவல்கள் அனைத்தும் அருமை. வார வாரம் மிக அழகாக தொகுத்து வழங்கும் உங்கள் முயற்சி என்னை வியக்க வைக்கிறது. ஒவ்வொருத்துவருக்கும் ஒரு ஸ்டைல் உங்களின் இந்த முறை என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது. நான் இது போல பதிவு இடலாம் என்று யோசித்து இறுதியில் கைவிட்டேன் காரணம் உங்களைப் போல அழகாக தொகுத்து என்னால் தரமுடியாது என்பதால்தான். பாரட்டுக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய Mail Bag நன்றாகத்தான் இருந்தது மதுரைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.....
ருசியான சாலட்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குநன்கு ரசித்தேன். மண் பிரிட்ஜ் புதுமையான தகவல்கள். அனைத்தும் சிறப்பாக இருந்தது. இள நெஞ்சே வா... ஆஹா. பிடித்த பாடல்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.
நீக்குமிட்டி கூல் - மிக அருமை..தகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குஉங்கள் இந்தப் பழக்கலவை அருமை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்...
நீக்குபல தகவல்களையும் உள்ளடக்கிய சிறப்பான பகிர்வுக்கு என் நன்றி கலந்த
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரா .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குஅனைத்துமே மிட்டி கூல் போல மிக அருமையாக ஜில்லுன்னு இருக்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குMannalana firdge chennail kidaikkuma ?
பதிலளிநீக்குசென்னையில் கிடைப்பதாகத் தெரியவில்லை...... அவர்களுக்கு ஒரு இணையதள முகவரி இருக்கிறது. WWW.MITTICOOL.IN. இதில் தகவல்கள் கிடைக்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி....
மண்பாண்டக்காரர் வாழ்க! பதிவே மிட்டி கூல் போலதான்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....
நீக்குஅருமையான சாலட்.
பதிலளிநீக்குமுக்கியமாக கரண்ட் இல்லாத ப்ரிஜ்...!!
மிட்டி கூல்லைத் தயாரித்தவரைக் கண்டுபிடித்தவரை வாழ்த்துவோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குஎங்கள் வீட்டு இளவரசி நலம். உங்கள் வீட்டு இளவரசி நலமா!
பதிலளிநீக்குராணியும் நலம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....
பாராட்டுக்குரியவர் மன்ஷூக். பாண்டங்களின் வடிவமைப்பும் அசத்தல். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு. ரசித்த படத்தை நானும் ரசித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.....
நீக்குமன்ஷுக் போன்ற சாதனையாளர்கள் பெருக வேண்டும்!
பதிலளிநீக்குஅது தான் எனது ஆசையும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா....
மிட்டி கூல் ஃப்ரிட்ஜ் செய்திப் பகிர்வுக்கு நன்றி. அதன் விலை பற்றியும் வாழ்நாள் பற்றியும் சொல்லாதது குறை. ஆங்கிலத்தில் VALUE ANALYSIS என்று சொல்வார்கள் அதை பின் பற்றி செய்த வழிமுறையாயிருக்கிறது எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து வாங்குபவனுக்குத் திருப்தி தரச் செய்வதே முக்கியம்
பதிலளிநீக்குவிலை பற்றிய விவரங்கள் நான் பார்த்த நிகழ்ச்சியில் சொல்லவில்லை ஐயா.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.....
மண் ஷூக் அவர்களுக்கு பாராட்டுக்கள். ரசித்த படத்தை நாங்களும் ரசித்தோம். அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குமண்ணில் ஃபிரிட்ஜ் , அதுவும் கரெண்ட் இல்லாமல் , பெரிய வரப்பிரசாதம் தான்.
பதிலளிநீக்குகாணொளியை மிகவும் ரசித்தேன்.
புலிக் குடும்பம் சந்தோஷமாக இருப்பது சந்தோஷமே!
பகிர்விற்கு நன்றி வெங்கட்ஜி .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குமிட்டி கூல் பற்றிய அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குஅறியாத ஒன்றைப் பற்றி தெரிந்து கொண்டோம்...
பகிர்வுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்...
நீக்குமிட்டி கூல் நபருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு>>>
ராணி, இளவரசி தத்ஸ் சூப்பர்,
>>
செல்போன்ல பைசா போனால் கதறும் ஆட்களில் எனக்குதான் முதலிடம்
>>
பிடித்த பாடலில் லொக்கேஷன் செமயா இருக்கும், என் ஃபேவரிட் பாடல்ல இதுவும் ஒண்ணு.
>>
அட, இப்படியும் இடி மன்னர்களை எதிர் கொள்ளலாமா!?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.....
நீக்குThanks Venkat-ji for sharing the clay fridge info, I would have been added this if I would have read it. Excellent !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்குமார்.
நீக்கு