எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 4, 2013

வெடி வழிபாடு…..


[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 7]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]


தொடர்ந்து மலையேறிக் கொண்டிருக்கிறோம் நாங்கள் – அட உங்களுக்கும் என்னுடன் மலை ஏறி வந்ததில் கொஞ்சமாகக் கால் வலிக்க ஆரம்பித்து இருக்குமே....  அதனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோமா? வழியில் ஒரு இடத்தில் சுடுவெள்ளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயே நின்று நானும் கொஞ்சம் சுடுவெள்ளம் குடித்து விட்டு மலையேற்றத்தினைத் தொடங்குகிறேன். நீங்களும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்களேன்!உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

வழியில் சில இடங்களில் இப்படி சற்றே சூடான நீரில் சீரகம் போட்டு சீரக வெள்ளம் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறார்கள். கஷ்டப்பட்டு மலையேறி வரும் பக்தர்களுக்கு இப்படி நீர் கொடுத்து அவர்கள் தாகத்தினை தீர்த்தாலும் பரந்தாமனின் அருளைப் பெறலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். மலையேற்றத்தினால் ஏற்பட்ட களைப்பு கொஞ்சம் நீங்குவதற்கு இந்த சீரக வெள்ளமும் அங்கே சில நிமிடங்கள் நின்றதால் கிடைத்த ஓய்வும் உதவுகிறது.

வயதானவர்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் மலையேற்றம் சற்றே கடினம் தான். பல பெரியவர்கள் ஒரு கையில் குச்சியைப் பிடித்துக் கொண்டு, மறு கையில் முட்டியைப் பிடித்தபடி தான் ஏறுகிறார்கள். செங்குத்தான பாறை என்பதால் நிறைய பேர் மேல் மூச்சு முட்ட முட்ட, இறைவனின் நாமாக்களைச் சொன்னபடியே தான் மலையேறினார்கள். நானும் நண்பர்கள் இருவரும் விரைவாக மலையேறிக் கொண்டிருந்தோம்.

வழியில் மேலிருந்து கீழே இறங்கி வரும் பக்தர்களின் முகத்தில் சபரிகிரிவாசனை தரிசித்த சந்தோஷமும் அமைதியும் குடி கொண்டிருந்தது.  சபரிகிரிவாசன் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கையோடு இறங்கிக் கொண்டிருந்தார்கள். மேல் நோக்கி செல்லும் பக்தர்களை உற்சாகப்படுத்தவும் அவர்கள் தவறவில்லை. தாங்கள் அனுபவித்த பேரின்பம் மேல் நோக்கிச் செல்லும் பக்தர்களுக்கும் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணம்!

வழியில் ஒரு இடத்தில், மலைப்பகுதியில் ஒரு சிறிய கொட்டகை. அதிலிருந்து ஒலிபெருக்கி மூலம் மலையாளத்தில் ஏதோ பரைந்தார்கள் – ”வெடி வழிபாடு” – பெயரையும் அவர்களுடைய நட்சத்திரத்தினையும் சொல்லி ஒரு வெடி வெடிப்பார்கள் – அது தான் வெடி வழிபாடு. அங்கே மூன்று நான்கு மொழிகளில் வெடி வழிபாடு என எழுதியிருந்தார்கள் – தமிழில் “வெடி வழிபாட்!”பத்து ரூபாய் கொடுத்து பெயரையும் உங்கள் பிறந்த நட்சத்திரத்தினையும் சொன்னால் மைக் மூலம் அறிவிக்க, பின்னால் மலையிலிருந்து ஒரு வெடி சத்தம் கேட்கும்….  எத்தனை பெயர் சொல்கிறோமோ அத்தனை பத்து ரூபாய்! அத்தனை வெடிகள் வெடிப்பார்கள். தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது சபரிமலை முழுவதும்.

இந்த வெடிவழிபாடு நடத்த சபரிமலை தேவஸ்தானம் வருடா வருடம் ஏலம் விடுகிறார்கள். சபரிமலை முழுவதும் ஐந்து இடங்களில் வெடி வழிபாடு நடத்தலாம் என நியமனம் செய்து அதற்கான ஏலத்தினை தேவஸ்தானம் வருடா வருடம் நடத்த அதில் யார் அதிகமான தொகையைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு வெடி வழிபாடுக்கான இடங்களை அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கிறார்கள்.

சென்ற வருடம் ஏலம் எடுத்த தொகை 25 லட்சத்திற்கும் மேல். ஏலம் எடுக்கும் போது அதில் ஒவ்வொரு வெடிக்கும் ஐந்து ரூபாய் மட்டுமே வாங்க வேண்டும் என எழுதியிருந்தாலும் பத்து ரூபாய் வாங்குகிறார்கள் எனவும் அதை தேவஸ்தானமோ அரசோ கண்டு கொள்வதில்லை எனவும் சொல்லிக் கொண்டு வந்தார் நண்பர்.

மலைப்பகுதியில் வெடி வெடிப்பதால் காய்ந்த சருகுகள் பற்றிக்கொண்டு தீவிபத்துகள் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் மிகவும் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  வெடி மருந்தினையும் மலையில் சேமித்து வைப்பதால் அதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரையும் நியமித்து இருக்கிறார்கள்.

சென்ற பதிவில் நாஞ்சில் மனோ பின்னூட்டத்தில் இப்படி கேட்டிருந்தார்….


அந்த காட்டுக்குள்ளே புலி எல்லாம் உண்டுன்னு சின்ன வயசுல சொல்லக் கேட்டு இருக்கேன் உண்மையா ?  


மலைப்பகுதி அதுவும் காட்டுப் பகுதி என்பதால் மிருகங்கள் இருப்பது நிச்சயம் தான். பொதுவாகவே அடர்ந்த காடு என்பதால் மிருகங்கள் நிச்சயம் இருக்கும். ஆனால் சபரிமலை செல்லும் பாதையில் மனித நடமாட்டம் அதிகம் என்பதால் இந்த மிருகங்கள் தற்போதெல்லாம் தென்படுவதில்லை. மேலாக, இப்படி நாள் முழுவதும் இந்த வெடி வழிபாடு மூலம் வெடிகள் வைத்து சத்தம் எழுப்புவதால் மிருகங்கள் வர வாய்ப்பில்லை. அவை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள்ளேயே இருக்கின்றன.

சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் போது கூட அங்கே அதிக அளவில் புலிகள் இருப்பது பற்றி தெரிந்து இருக்கிறது. அடர்த்தியான காட்டுப் பகுதியில் மட்டுமே மிருகங்கள் இருக்கின்றன என்று நண்பர் சொல்லிக் கொண்டு வந்தார். வாகனம் மூலமாக சபரிமலை செல்லும் போது பாதையிலிருந்தே அடர்ந்த காட்டுப்பகுதிகள் கண்ணுக்குப் புலப்படுகின்றன. அங்கே மிருகங்கள் இருக்கின்றன. மனிதர்கள் நடமாட்டம் கண்டு மிருகங்கள் கூட பயப்படுவது இயற்கை தானே!

நடந்து கொண்டே வெடி வழிபாடு பற்றியும் பார்த்தாயிற்று. நடந்தபடியே இருந்ததால் சன்னிதானம் என்று அழைக்கப்படும் சபரிகிரிவாசனின் கோவில் இருக்கும் இடத்திற்கு வந்தது தெரியவில்லை. சன்னிதானம் பகுதியை அடைந்து சபரிமலை வாசனை தரிசித்த அனுபவம் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்! சரியா?

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....

44 comments:

 1. அன்புள்ள வெங்கட்
  தீபாவளி திருநாள் இனிதாக முடிவடைதிருக்கும் என நம்புகிறோம். தங்களுடைய வெடி வழிபாடு பகிர்வு படித்தேன். புதிய அனுபவம் புதிய செய்திகள். நான் பல ஆண்டுகளுக்கு முன் கேரளா சென்று இருந்த போது கொல்லம் என்ற ஊரில் இதைபோல வெடி வழிபாடு பார்த்திருக்கிறேன். பலருக்கு தெரியாது.
  இந்த முறை தங்களது பகிர்வை முதலில் பார்த்து படித்து கருத்தும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
  தொடரடடும் உங்கள் பாணி.

  விஜய் / டில்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   கேரளத்தில் தான் இந்த வெடி வழிபாடு பிரபலம்.....

   Delete
 2. பள்ளியில் படிக்கும் காலத்தில் கதை கதையாக சொல்வார்கள், ஐயப்பனே புலியாக வருவதாகவும் நம்பிக்கை உண்டு போல....!

  கேள்விக்கு பதில் தந்தமைக்கு நன்றி அண்ணே...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 3. சின்ன வயசுல நானும் சபரிமலை போய் இருக்கேன். என் பேரை சொல்லியும் வெடி வழிபாடு நடந்துச்சு. கனவு போல லேசா நினைவிருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 4. நீங்கள் சொல்கிறபடி வெடிவழிபாடு கூட
  மிருகங்களை விரட்டுவதற்காகத்தான்
  உண்டாகியிருக்கவேண்டும்
  பயணப்பதிவு சிறப்பாகத் தொடர்கிறது
  அடுத்து சன்னிதானத்தில் சந்திப்போம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. இதுவரை ஐய்யனைத் திரப்படங்கள் மூலமாகத்தான் தரிசித்திருக்கிறேன். இப்போது உங்களுடன் நடைபயணத்தில் வித விதமான கோணங்களில் காணமுடிகிறது.

  மிக நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 7. vedi vazhipadu pudhiyadhaga kelvipadugiren,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 8. இப்படி நாள் முழுவதும் இந்த வெடி வழிபாடு மூலம் வெடிகள் வைத்து சத்தம் எழுப்புவதால் மிருகங்கள் வர வாய்ப்பில்லை.

  இரட்டிப்பு பலன் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 9. வெடி வழிபாடா !¨இப்படி ஒரு வழிபாடு இருப்பதையே நான்
  இன்று தான் அறிகின்றேன் சகோதரா .கல்லும் முள்ளும்
  காலுக்கு மெத்தை கந்தன் அருளால் தொடரட்டும் தங்கள்
  விந்தையான சிறப்பான பகிர்வுகள் இன்று போல் என்றுமே
  வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 10. நானும் சிறு வயதில் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பயந்தும் உள்ளேன். நேரில் சென்றது இல்லை. தங்கள் பதிவின் மூலம் பலவிஷயங்களை அறிய முடிந்தது. மிக்க நன்றி, வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. வெடி வழிபாடு கேரளத்தின் சில கோவில்களில் உண்டு ..

  திருப்பறையார் ராமர் கோவிலில் இந்த வெடி வழிபாடு பிரசித்தமானது ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 12. வெடி சத்தம் கூட அங்கு ஆனந்தம் தான்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. சீரக வெள்ளம் சாப்பிட்டு விட்டு நானும் கூட வருகிறேன்! இந்த வெடி வழிபாடு திருவனந்தபுரம் ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோவிலிலும் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. வெடிவழிபாடு குறித்த தகவல்கள் புதிது! இதுவரை சபரிமலை சென்றதில்லை! ஒரு முறை சென்று வரும் ஆவல் ஏற்படுத்துகிறது கட்டுரை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 15. ஐந்து மலைக்கு அரசனை
  நேரில் பார்த்துவந்தது போல இருந்தது பதிவு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 16. வெடி வழிபாடு - நான் முதல் முறையாக கேள்விப்படும் தகவல்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 17. வெடி வழிபாடு குறித்த தகவல் புதுமையாக இருந்தது! பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி

   Delete
 18. கேரளத்தில் இந்த வெடி வழிபாட்டு முறை அநேக கோவில்களில்நடக்கிறது. மிருகங்களை விரட்ட ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தி அதன் மூலம் காசும் சம்பாதிக்கிறார்கள். மிருகங்களிடம் இருந்து ஒரு பாதுகாப்புக்கு வெடி வைக்க காசு கேட்டால் கிடைக்காது. ஆனால் அதையே ஒரு வழிபாடாக பாவிக்கச் செய்து மக்களின் gullibility யை உபயோகப் படுத்துகின்ற சாதுர்யம் பாராட்டுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 19. கீழே இறங்கி வரும் பக்தர்களின் முகத்தில் சபரிகிரிவாசனை தரிசித்த சந்தோஷமும் அமைதியும் குடி கொண்டிருந்தது. சபரிகிரிவாசன் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கையோடு இறங்கிக் கொண்டிருந்தார்கள். மேல் நோக்கி செல்லும் பக்தர்களை உற்சாகப்படுத்தவும் அவர்கள் தவறவில்லை. தாங்கள் அனுபவித்த பேரின்பம் மேல் நோக்கிச் செல்லும் பக்தர்களுக்கும் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணம்!//
  உயர்ந்த எண்ணம். ,அருமையாக சொன்னீர்கள்.

  சபரிமலை வாசனை தரிசித்த அனுபவம் பற்றி படிக்க அடுத்த பதிவுக்கு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 20. ஆமாம் அண்ணா.
  வெடி வழிபாட்டில் உண்மையான வெடி அல்ல... மின்சாரம் மூலமாக வெடிச்சத்தம் வரச் செய்வதாகச் சொல்வார்கள். நாங்களும் வெடி வழிபாடு செய்திருக்கிறோம்.

  பதினெட்டுப்படி முன் எங்களையும் பரவசமாக நிற்க வைத்துவிட்டீர்கள். அதில் ஏறி தரிசித்த அந்த நாட்களை மறக்கமுடியாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.....

   Delete
 21. வெடிவழிபாடு இப்பொழுதுதான் அறிகின்றேன். பயணத்தில் தொடர்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. இப்பொழுதுதான் இந்த சபரியை நோக்கி ( 7 ) பதிவை படிக்க நேரம் கிடைத்தது. வெடி வழிபாடு. சுவையான தகவல் . அடுத்த பதிவிற்குச் செல்லுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....