எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 11, 2013

சன்னிதானம் – சபரியைக் கண்டேன்.....
[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 8]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 7]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

நடந்து கொண்டே வெடி வழிபாடு பற்றியும் பார்த்தாயிற்று. நடந்தபடியே இருந்ததால் சன்னிதானம் என்று அழைக்கப்படும் சபரிகிரிவாசனின் கோவில் இருக்கும் இடத்திற்கு வந்தது தெரியவில்லை. சன்னிதானம் பகுதியை அடைந்து சபரிமலை வாசனை தரிசித்த அனுபவம் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்! சரியா?

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.
பல விஷயங்களை கவனித்தபடியே வந்ததாலோ என்னவோ, மலைமீது ஏறி சன்னிதானம் வந்து விட்டதை கவனிக்கவேயில்லை. இரவு எட்டு மணி ஆகிவிட்டாலும், மின்சார விளக்குகள் மூலம் எங்கும் வெளிச்சம் பரவியிருந்தது. எனது நண்பரின் நண்பர் தேவஸ்தான அலுவலகத்தில் முக்கியமான பதவியில் இருந்தமையால் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

பொதுவாக இறைவனை சந்திப்பதற்கு எந்த வித சிபாரிசும் தேவையில்லை என்ற எண்ணம் எனக்குண்டு. ஆனாலும் முன்னரே நண்பர் இதற்கான ஏற்பாடுகள் செய்துவிட்டதால் நான் ஏதும் சொல்லாது அவருடன் சன்னிதானத்தினை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். நண்பர் அலைபேசி மூலம் அவரது நண்பரை அழைக்க அவரே தனது அறையிலிருந்து எங்களை அழைத்துச் செல்ல கீழே வந்துவிட்டார்.

முந்தைய பகுதி ஒன்றில் சொல்லியிருந்தபடி, இருமுடி கட்டிக்கொண்டிருக்கும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டு படிகள் வழியே சபரிவாசனை தரிசிக்க செல்ல முடியும். அப்படி இருமுடி கட்டிக்கொள்ளாத பக்தர்கள் பதினெட்டு படிகள் வழியாக செல்ல முடியாது. வேறு வழியாகத் தான் செல்ல வேண்டும். நாங்கள் இருமுடி கட்டிக்கொள்ளாததால் பதினெட்டு படிகள் வழியே செல்ல முடியாது.
பதினெட்டாம் படி என அழைக்கப்படும் இந்த புனிதமான படிகளுக்கு முக்கியத்துவம் நிறைய உண்டு. சாதாரணமாக 18 என்பது ஒரு எண்தானே என நினைத்தாலும், அப்படி இல்லை என்று அதற்கு விளக்கம் தருகிறார்கள்.  பதினெட்டு படிகளில் முதல் ஐந்து படிகள் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்த்ரியங்களைக் குறிக்கின்றன. அடுத்த எட்டு படிகள் தத்வம், காமம், க்ரோதம், மோகம், லோபம், மதம், மத்ஸ்ரய, அஹம்ஹார எனும் எட்டு ராகத்தினையும், அதற்கடுத்த மூன்று படிகள் மூன்று வித குணங்களான, சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களையும் கடைசி இரண்டு படிகள் வித்யா மற்றும் அவித்யா ஆகியவற்றையும் குறிப்பதாகக் கொள்கிறார்கள். இந்த பதினெட்டு விஷயங்களையும் கடந்தால் தன்னை உணர முடியும் என்பதையே இந்த பதினெட்டு படிகள் குறிக்கின்றன.

இந்த பதினெட்டு படிகள் 18 விதமான புராணங்களைக் குறிப்பதாகவும், சபரிகிரிவாசன் 18 விதமான ஆயுதங்களைக் கொண்டு தீமைகளை அழித்தார் எனவும் சொல்வதுண்டு. 

பக்கத்திலேயே சில படிகள் வழியாகவும் சன்னிதானத்திற்கும் அதன் அலுவலகத்திற்கும் செல்ல முடியும்ஆனால் எல்லோரையும் அதன் வழியே அனுமதிப்பதில்லை. அங்கே காவலாளிகள் இருப்பார்கள். அவர்கள் அந்த அலுவலரோடு எங்களையும் உள்ளே அனுமதித்தார். அவருடைய அலுவலகத்திற்குச் சென்று தேநீர்ம அருந்தி பத்து நிமிடம் ஓய்வு எடுத்தபின் சபரியைத் தரிசிக்க தயாரானோம்.

சன்னிதானத்தில் காவல் பணியில் இருக்கும் ஒரு அலுவலர் எங்களுடன் வர நேரே சபரியை தரிசிக்கச் சென்றோம். தில்லியில் உள்ல அய்யப்பன் கோவிலிலும் மற்ற சில ஊர்களிலும் சபரிவாசனை தரிசித்திருந்தாலும் முதன் முறையாக சபரிகிரிவாசனை சபரிகிரியிலேயே தரிசிக்க போகும் போது ஒரு வித எதிர்பார்ப்பும், அதீதமான விருப்பமும் மனதுக்குள் இருக்க, அவனை நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். வழியில் இருக்கும் மக்கள் பேசுவதோ, நண்பர் பேசுவதோ எதுவும் எனக்குக் கேட்கவில்லை.
சபரிகிரி வாசனின் கோவிலில் அவனை முழு அலங்காரத்தில் கண்ணாரக்  கண்டு கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் அங்கேயே நின்று தரிசிக்க முடிந்தது அருகிலேயே நின்று தரிசித்துக் கொண்டிருக்க, கோவிலில் பூஜை செய்பவர் எங்கள் மூவருக்கும் தனித்தனியாக ஒரு இலையில் சபரிகிரிவாசனின் மேனியை அலங்கரித்த சந்தனமும், பூக்களையும் வைத்துக் கொடுத்தார். பக்தி பரவசத்துடனே சபரியை தரிசித்த பின் அங்கிருந்து எங்களை அழைத்து சென்றார் அலுவலர். கோவிலில் இருக்கும் அனைத்து சன்னதிகளுக்கும் அழைத்துச் சென்று எங்களுக்கு தரிசனம் செய்து வைத்தார்.

மனதுக்குள் பூரண நிம்மதியுடன் அலுவலகத்திற்குத் திரும்பி வந்து அந்த அலுவலருக்கும், நண்பரின் நண்பருக்கும் நன்றியைத் தெரிவித்த பின் இரவு அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்த அறைக்குச் சென்றோம். அங்கே எங்களது ஜோல்னா பையையும், காமிராவினையும் வைத்துவிட்டு இரவு உணவு உண்ண கீழே சென்றோம். அங்கே என்ன சாப்பிட்டோம், என்ன கிடைத்தது என்பதை அடுத்த பதிவில் சொல்றேனே! :)


மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

22 comments:

 1. திவ்ய தரிசனம் கிடைத்தது படிக்க
  நாங்களும் தரிசித்த திருப்தி
  படங்களுடன் பதிவு மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. எதையும் சுவையாக சொல்கிறீர்! நன்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 4. யாமும் அறிந்தோம் மகிழ்ந்தோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 5. //எங்கள் மூவருக்கும் தனித்தனியாக ஒரு இலையில் சபரிகிரிவாசனின் மேனியை அலங்கரித்த சந்தனமும், பூக்களையும் வைத்துக் கொடுத்தார். பக்தி பரவசத்துடனே சபரியை தரிசித்த பின் அங்கிருந்து எங்களை அழைத்து சென்றார் அலுவலர். கோவிலில் இருக்கும் அனைத்து சன்னதிகளுக்கும் அழைத்துச் சென்று எங்களுக்கு தரிசனம் செய்து வைத்தார்.//

  சந்தோஷம். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. என்ன அதிருஷ்டம் வெங்கட். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. சபரிவாசனின் ஒளி வீசும் திவ்ய தர்சனம் கிடைக்கப்பெற்று பேரானந்தம் அடைந்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 8. உங்கள் பதிவின் வழியாக நாங்களும் சபரிகிரி வாசனை தரிசித்தோம். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 9. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

  ReplyDelete
 10. எண் பதினெட்டும் சபரிமலையும் குறித்து நன்றாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 11. அவனை நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். வழியில் இருக்கும் மக்கள் பேசுவதோ, நண்பர் பேசுவதோ எதுவும் எனக்குக் கேட்கவில்லை.// அருமை! 18 படி விளக்கம் விரிவாய் புதிதாய் இருந்தது! நன்றீ நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....