சமீபத்தில்
நடந்து முடிந்த கார்த்திகை தீபம் பற்றி பலரும் பதிவுகள் எழுதி முடித்துவிட,
இப்போது என் முறை.... ஆனால் இது
கார்த்திகை பற்றிய தகவல்கள் இல்லை. தில்லியில் இருக்கும் ஸ்வாமி மலை மந்திர் –
ஆங்கிலத்தில் MALAI MANDIR – என எழுதியிருப்பதை மலாய் மந்திர் என படிக்கும் ஹிந்திக்காரர்கள்
ஒவ்வொருவரிடமும் மலாய் அல்ல மலை எனச் சொல்ல ஆசை இருந்தாலும் சொல்லாத நான் – இந்த கார்த்திகை
தீபத்தின் அன்று அங்கே சென்றிருந்தேன்.
அங்கே சென்ற பிறகு தான் கார்த்திகை தீபக் கொண்டாட்டங்கள்
இங்கே விமரிசையாகக் கொண்டாடுவது தெரிந்தது. பல முறை இந்தக் கோவிலுக்குச்
சென்றிருந்தாலும் கூட்டம் இல்லாத நேரங்களில் சென்று வந்திருப்பதால் இது தெரியாது. ஒரு
பதிவர் சந்திப்பு கூட இங்கே நடத்தியிருக்கிறோம் – ”ஸ்வாமி ஓம்கார்” எனும் பதிவர் தில்லி வந்திருந்தபோது அவரை மலை மந்திரில் தான் நான்கைந்து
தில்லி பதிவர்கள் சேர்ந்து சந்தித்தோம்.....
சொக்கப்பனை எரித்து கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது. ”சொக்கப்பனை என்பது என்ன?” என்பது பற்றிய
தகவல் தெரியாதவர்களுக்காக அதன் தாத்பர்யம் இதோ.
சொக்கப்பனை :திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை ஏற்றுவது வழக்கம். சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பன தான் திரிந்து போய் பேச்சு வழக்கில் சொக்கப்பனை என ஆனதும் என்றும் சொல்வார்கள்.திரிபுரஸம்ஹாரத்தினையும், அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா- விஷ்ணு ஆகியோருக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக நம்பப்படுகின்றது.சொக்கப்பனை - பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.நன்றி: http://natarajadeekshidhar.blogspot.in/2010/11/21.html
தில்லி மலை மந்திரில் எடுத்த சில படங்கள் இன்றைய
ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக இதோ உங்கள் பார்வைக்கு......
மலை மீது இருக்கும் முருகன் கோவிலின் பின் பகுதியில்
ஒரு பாதை உண்டு. அங்கே கிட்டத்தட்ட பத்து வருடங்களாக, ஒவ்வொரு வருடமும் “ஓம்” என தமிழில் எழுதி அதில் அகல் விளக்குகள் வைத்து அலங்காரம் செய்து
வருகிறார்கள் ஒரு தம்பதி.... கொஞ்சம்
விசேஷமான தம்பதி – மனைவி தில்லியிலேயே பிறந்த தமிழர். கணவர் ஒரு சர்தார்ஜி. காதலித்து மணம் புரிந்தவர்கள். தொடரட்டும்
அவர்களது வழிபாடு!
தயாராக இருக்கும் “சொக்கப்பனை......”
சில இடங்களில் பற்ற வைக்க, புகைய ஆரம்பிக்கும்
சொக்கப்பனை!
சொக்கப்பனை முழுவதும் தீ விழுங்க, எரியும் தீ காட்டும்
உருவங்கள்....
இராட்சத்தனமாய் வாயைத் திறந்து கொண்டு பார்ப்பது போல
தோன்றுகிறது இந்தப் புகைப்படத்தினைப் பார்த்தால்!
அக்னி ஒரு ஆட்டம் ஆடி முடித்து சாந்தமடையும்போது எடுத்த
படம்.....
ஸ்வாமி மலை மந்திரில் கார்த்திகை தீபத்திற்கு சொக்கப்பனை
எரித்ததை நீங்களும் பார்த்த உணர்வு வந்திருந்தால் மகிழ்ச்சி.
மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும்
வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
nice pictures appa
பதிலளிநீக்குby roshni
Thanks Roshni Chellam.... :)
நீக்குநீங்க மட்டும் டெல்லியில் பதிவர் சந்திப்பு நடத்தினால் எப்படி ? எங்களையும் அழைக்கலாமே அங்கேயும் சந்திப்பு நடத்தலாமே?
பதிலளிநீக்குஅக்னியின் ஆர்ப்பாட்டமும் அடக்கமும் பதிவிட்ட தங்களுக்குப் பாராட்டுக்கள்.
நீங்க வாங்க, ஒரு பதிவர் சந்திப்பு நடத்திடுவோம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
கார்த்திகை தீப வழிபாடு பற்றி மிக அருமையான விளக்கம் அதிலும் சொக்கப்பனை பற்றிய விளக்கம் நன்று சொக்கப்பனை எரியும் வடிவம் காட்டும் புகைப்படமும் அருமை.. வாழ்த்துக்கள் ..ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குபடங்கள்லாம் அழ்கு. வடநாட்டுலயும் கார்த்திகை பண்டிகை இருப்பது புது தகவல். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குஇருப்பது வடநாட்டிலாக இருந்தாலும், பல தமிழர் கோவில்கள் உண்டு..... ஸ்வாமி மலை மந்திர் என்பது தில்லியில் பல வருடங்களாக இருக்கும் தமிழர்களின் கோவில்.
டில்லியில் கூட சொக்கப்பனை உண்டா? நல்ல தகவல்
பதிலளிநீக்கு. நன்றி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகாதேவன் ஐயா....
நீக்குஏற்கனவே தொடரும் நல்லதொரு தள அறிமுகம் அனைவுக்கும் உதவும்... நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஸ்வாமி மலை மந்திரில் கார்த்திகை தீபத்திற்கு சொக்கப்பனை எரித்ததை பார்த்த உணர்வு தந்த படங்களுக்கும் பகிர்வுகளுக்கும் பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குபடங்களும் அதற்கான விளக்கமும் அருமைங்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா...
நீக்குபடங்களுடம் தகவல்களுடன் பகிர்வும் அருமை. நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபடங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள் ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குExcellent. This reminds me the days when I was In Delhi during my initial appointment and was staying near Malai Mandhir Sector 8 which I used 2 go to have the dharsan of Swami Murugan. Thank u again for the narration of Sokkappanai. enjoyed as if iam in Malai Mandhir again.
பதிலளிநீக்குThanks for reading the post and commenting on it Chithappa....
நீக்குsuper photos...
பதிலளிநீக்குgood one.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குடெல்லியில் ஒரு சில வருடங்கள் குடித்தனம் செய்ய நேரிட்டாலும், மலைய மந்திருக்குப் பலமுறை சென்றாலும் கார்த்திகை தீபத்தன்று சென்றதில்லை. உங்கள் பதிவைப் பார்த்தும், படித்தும் அந்தக் குறை தீர்ந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குசூடான சொக்கப் பனை படக் காட்சிகள். மழை குளிருக்கு நல்ல கதகதப்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்கு