எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, December 5, 2013

கோலங்கள்...[தலைநகரிலிருந்து பகுதி 23]

கோலங்கள் சீரியல் ஒரு தடவை முடிஞ்சு இரண்டாம் தடவை போடறப்போ, இது என்ன புதுசா கோலங்கள் பத்தி ஒரு பதிவு – இல்லை அதுல நடிக்கற[?] தேவையா நீ பற்றிய பதிவு? அப்படின்னு நினைக்காதீங்க! இது நிஜமான கோலங்கள்......


கோலம்-1

முன்பெல்லாம் நமது ஊரில் பெண்கள் அதிகாலையில் எழுந்திருந்து வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து பெரிய கோலமாக போடுவது வழக்கம். அதுவும் மார்கழி மாதம் வந்து விட்டால் போதும் – தெரு முழுக்க விதவிதமாக கோலங்கள் போட்டு அசத்துவார்கள். மார்கழி மாத அதிகாலை பனியில் தலையில் துணியைக் கட்டிக்கொண்டு தெருவை அடைத்து கோலம் போட்டு யார் வீட்டு கோலம் மிக நன்றாக வந்திருக்கிறது என்று பார்த்து தெரிந்து கொள்வதில் பெண்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.


கோலம்-2
 
விதம் விதமாய் நேர் புள்ளி, குறுக்கு புள்ளி, சந்து புள்ளி, என எத்தனை எத்தனை கணக்குகள்! சிலருக்கு, புள்ளி வைத்து கோலம் போட வேண்டிய அவசியமில்லாது கைகள் அப்படியே தரையில் நாட்டியமாடும்.  நாட்டியமாடும் கைகளில் கோலமாவு – நடனம் முடிந்து பார்த்தால் ஒரு அற்புதமான கோலம் போட்டு முடித்திருப்பார்கள்.


கோலம்-3

ஒரு சிலர் ஒற்றை இழைக்கு பதில் இரண்டு இரண்டு இழைகளாக ஒரே சமயத்தில் போடுவதைப் பார்த்து மற்ற பெண்களுக்கு பொறாமையாக இருக்கும். திருவரங்கத்தில் பெருமாள் வீதி உலா வரும்போது, செய்தி தெரிந்த உடனே சிறுமிகள் கூட கிடுகிடுவென தண்ணீர் தெளித்து, சில நிமிடங்களில் அழகிய கோலங்களைப் போட்டுவிடுவார்கள்.  அதைப் பார்க்கும்போது திறந்த வாய் மூடாது, பல உல்லாசப் பயணிகளுக்கு!


கோலம்-4

வெறும் வெள்ளை வண்ண கோலமாவில் கோலம் போட்டுக் கொண்டிருந்தது மாற்றம் கொண்டு கலர் கலர் கோலப்பொடிகளால் கோலங்களுக்குள் இருக்கும் இடைவெளிகளை நிரப்பி அழகான ரங்கோலிகள் போட ஆரம்பித்தார்கள்.


கோலம்-5

நெய்வேலியில் இருந்தவரை தெருத்தெருவாக கோலம் பார்ப்பதெற்கென்றே சென்றதுண்டு! [அட யார்ப்பா அது, கோலம் பார்க்கவா போனே, கோலம் போடற பொண்ணுங்களைப் பார்க்க தானே போனேன்னு சொல்றது! அப்படியெல்லாம் தப்பான வேலையெல்லாம் பண்ணதில்லை!] கோலங்களை ரசித்தது மட்டுமன்றி, வீட்டில் அம்மா/சகோதரிகள் இல்லாத சமயத்தில் வாசல் தெளித்து கோலம் கூட போட்டு இருக்கிறேன்.  எனக்குத் தெரிந்த ஒரே கோலம்! இது தான்!

தனித்தனி வீடுகள் கட்டுவது குறைந்து அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்த பிறகு இருக்கும் நான்கடி வராந்தாவில் நான்கு வீட்டு வாசப்படிகள்! இதில் எங்கே தெருவடைத்து கோலம் போடுவது. வீட்டிற்கு முன் ஒரு நெளிக் கோலமோ, அல்லது ஐந்து புள்ளி ஐந்து வரிசை கோலமோ [மேலே நான் போட்டிருப்பது போல!] போட்டு வேலையை முடித்து விடுகிறார்கள்.


கோலம்-6

அதுவும் முடியாத சிலர், தினம் தினம் வெளியே ஒரே கோலம் தானே போட முடியுது என, இதற்கெனவே கடைகளில் விற்கும் ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டி வைத்து விடுகிறார்கள்! அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையமுடியும்! உடனே இதான் வாய்ப்பு என என்னுடைய வலைப்பூவினை தொடர்ந்து படிக்கும் சகோதரிகள் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்! இங்கே நான் பெண்களைக் குறை சொல்லவில்லை – சித்திரம் வரைய அவர்களிடம் நிறைய திறமை இருக்கிறது ஆனால் சுவர் தான் இல்லை! :)


கோலம்-7

நமது ஊரிலேயே இந்நிலை என்றால், தலைநகர் தில்லியில் கோலம் போடுவது பற்றி கேட்கவா வேண்டும்?  இங்கே கோலம் போடுவதற்கு வாய்ப்பே இல்லை!


 கோலம்-8

சரி! எதுக்குடா! என்னிக்கு இல்லா திருநாளா இன்னிக்கு கோலம் பத்தி இத்தனை பிரதாபம்! என்ற கேள்வி உங்களுக்குள் வந்து பெரியதாக இருக்கை போட்டு அமர்ந்திருக்கும்...... இல்லையா? சரி இல்லைன்னாலும் பரவாயில்லை, நானே சொல்லிடறேன்.


கோலம்-9
 
சில மாதங்கள் முன் தலைநகரில் திருப்பதி [தலைநகரிலிருந்து பகுதி-21] எனும் பதிவில் வீட்டின் அருகில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் கட்டியிருக்கும் கோவில் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கோவிலில் தினம் தினம் கோலம் போடுவதற்கு வாய்ப்பு கிடைக்க, இங்கே இருக்கும் தமிழ்ப் பெண்களுக்கு கொண்டாட்டம் தான்....  நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி பெரிது பெரிதாய் கோலம் போடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவார்களா?  தினம் தினம் கோலம் போட்டு அசத்துகிறார்கள்.  அதில் சில கோலங்களை இப்பகிர்வில் உங்கள் பார்வைக்கு அளித்திருக்கிறேன்.....
கோலம்-10

விதம் விதமாக கோலம் போட்டு அசத்திக் கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பூங்கொத்தும்....  தொடரட்டும் அவர்களது பணி. கோலங்கள் போட்டது மட்டுமன்றி, அவற்றினை படம் எடுத்து என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

என்ன நண்பர்களே, பதிவினை/கோலங்களை ரசித்தீர்களா? உங்களுக்குப் பிடித்த கோலங்களை வரிசைப்படுத்துங்களேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 comments:

 1. அனைத்தும் அழகு... (உங்களின் கோலமும்)

  சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள் பல...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. அருமை.கோலங்கள் நமது பாரம்பரியம் கூட

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
  2. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. ஹும் ...இப்பவெல்லாம் ஏதாவது விசேச தினங்களில் மட்டுமே கோலங்களைப் பார்க்க முடிகிறது !
  த.ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. அழகான அற்புதமான கோலங்கள்
  கோலங்களைக் கூட வாசலில் பார்க்காமல்
  வரும் காலங்களில் இப்படிப் பதிவுகளில்
  பார்க்க நேர்ந்துவிடுமோ என பயமாகவும் இருக்கிறது
  மார்கழியை கோலப் பதிவு மூலம்
  வரவேற்றதை ரசித்தேன்
  படங்களுடன் பதிவு அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி....

   Delete
 5. அழகான கோலங்கள். பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 6. அழகான கோலத்தை உங்கள் கேமிராவில் பதிந்து கொண்டு அந்த கோலங்கள் போட்ட தேவதைகளை உங்கள் மனதில் பதித்து கொண்டு எங்களிடம் இருந்து மறைத்த உங்களுக்கு எனது கண்டணங்கள் ஹும்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 7. ஆழகான கோலப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  இல்லத்திற்கு அருகில் உள்ள கோவிலில் வியாழகிழமைகளில் பசும் சாண்மிட்டு மெழுகி கோலம் போட அழைப்பார்கள்.. போய் போடுவோம் .. இப்போது கிரானைட் போட்டுவிட்டார்கள்..!

  பேரூர் கோவிலில் குழுவினருடன் இணைந்து மிகப்பெரிய் நாகம் கோலம் போட்டிருந்தோம் ..

  அடுத்த நாள் போய் பார்த்தால் கயிறு கட்டி கோலம் முழுவதும் தடுத்து பம்பின் தலையில் நுழைந்து வாலில் வெளியே வந்தால் நாக் தோஷம் நீங்கும் என்று காசு வாங்கிக்கொண்டு அனுமதித்தார்கள்.. .. நிண்ட வரிசை காத்திருந்தது பார்த்து திகைத்து நின்றோம் ..!

  நாம் கோலம் போட யா ரோ பயன்படுத்தி சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. காலத்தின் கோலம் ...!!
  காலம் செய்த கோலம் ..!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத நாட்களில் நானும் கோலம் போட்டுருக்கேன் கிராமத்தில ... ரெம்ப Simple ஒரு எட்ட நேராவும் இன்னொரு எட்ட கிடைமட்டமாவும் போட்டா கோலம் Ready :) .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.

   Delete
 10. ஆமாம், இங்கே குடியிருப்பு வளாகத்துக்கு வந்தப்புறமாக் கோலமே சரியாப் போடமுடியலையேனு எனக்கு வருத்தம் தான்! :( வேறே வழியில்லை.

  எல்லாக் கோலங்களும் சூப்பர். வலைச்சரத்தில் நான் கடைசியா எழுதின போஸ்டில் கோலங்கள் உதயன் பத்தியும் எழுதி இருப்பேன். அந்தத் தளம் இப்போத் திறக்கலை. ஒவ்வொரு வருஷமும் கோலப் போட்டியும் நடத்துகிறார். ஒரு மார்கழி மாசம் கோலங்கள் தளத்தின் பதிவுக்கு ஒவ்வொரு நாளும் அந்த நாளைக்குரிய திருப்பாவையின் கருத்துக்கு ஏற்றாற்போல் கோலம் போடச் சொல்லி திருப்பாவையின் கருத்துக்களையும் பகிர்ந்தேன். அதற்கேற்றாற்போல் கோலம் போட்டிருந்தார். இந்த வருஷமும் கேட்டிருக்கார். இன்னும் கான்செப்ட் யோசிக்கவே இல்லை. ஒண்ணும் தோணலை! :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 11. அழகான கோலங்கள்...

  நல்ல பதிவு அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வெற்றிவேல்.

   Delete
 12. ஓ , கோவிலில் போடப்பட்ட கோலங்களா இவை !
  அனைத்தும் உயிரோவியங்கள். ரொம்ப நேர்த்தி + அழகு.
  நானும் கடந்த மார்கழிகளில் சிறிய சுவற்றில்
  வரைந்த கோலங்களைப் பகிர்கிறேன்
  விரைவில். முன்பெல்லாம் இதைப் போன்ற கோலங்களைப் பார்த்தால்
  நோட்டில் வரைந்து வைத்துக் கொள்வோம். இப்போது அது புக்மார்க்கில் .
  பகிர்விற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 13. கோலங்களில் கை வண்ணம் தெரிகிறது. பெரிய தாம்பாளத்தில்நீருக்கடியில் கோலம் பார்த்திருக்கிறேன். கோலங்கள் என்னும் போது சிவகுமாரன் எழுதிய “நீளம் தாண்டப் பழகோணம்”என்னும் கவிதை நினைவுக்கு வருகிறது அதிகாலையில் தெரு முழுதும் கோலங்கள் போடப் பட்டு அவற்றை மிதிக்காமல் போக நீளம் தாண்டிப் பழகோணம் என்று அழகான கவிதை எழுதி இருந்தார். ( சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகி இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்...

   Delete
 14. Anaiththu kolangalume miga miga arumai. Idhil yeppadi yedhavadhoru kolam patri kurippiduvadhu. Kolam yenakku migavum pidiththa subject. Thanks.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி....

   Delete
 15. அனைத்துக் கோலங்களும் அழகு! உங்களின் திருத்தமான கோலமும் கூட!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!..

   Delete
 16. கடைசில நிலைமை இப்டி ஆகிப் போச்சே என்ன சார் வீட்ல கோலம் போட சொல்லிடாங்களா :-))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு....

   Delete
 17. நீங்கள் கோலம் போடும் கோலத்தை மனக்கண்ணில் எண்ணிப் பார்க்கிறேன். இக்காலம் அக்காலம் ஆகுமா!

  (கோலம் போடும் பெண்களைப் பார்க்க ஆண்கள் காலைச் சுற்றுலா செல்வது போல், கோலம் போடும் உங்களைப் பார்க்க இளம்பெண்கள் கூட்டம் வந்ததுண்டா!)

  ReplyDelete
  Replies
  1. கேள்விக்கு பதில் உங்களைச் சந்திக்கும் போது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி..

   Delete
 18. கோலங்களும் அழகு! அதை அழகாக படம் எடுத்த பகிர்ந்த கோணமும் அழகு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 20. கோலங்களின் பதிவு எனக்கும் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. நானும் போட்டிருக்கிறேன் கோலங்கள்! புள்ளி வைத்து புதுப் புது டிசைன் உருவாக்கியதும் உண்டு! அதை யாரும் கோலம் என்று ஒத்துக் கொண்டார்களில்லை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 21. ஆஹா...
  மார்கழி மாதம் வந்திருச்சா...
  அழகான கோலங்கள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 22. ஆமாம்.... நீங்கள் போட்டுள்ளது கோலமா....?

  சந்திரி சாக்குல மந்திரிக்குக் கல்யாணம் நடத்தின மாதிரியில்ல இருக்குது...

  ReplyDelete
  Replies
  1. அப்பாடி, நீங்களாவது உண்மையைச் சொன்னீங்களே! :)

   நமக்கு ஒண்ணுமே தெரியாதுங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 23. மார்கழிக்கு முன்னோட்டம்!! அந்த ஜமக்காளக் கோலம் ஆச்சர்யம். இப்படியொரு உத்தியை இப்போதுதான் பார்ப்பதால்.

  உங்க கோலம் குபுக் என சிரிப்பை வரவழைத்தாலும், அம்மா சொல்லுக்கு மதிப்பளித்து வீட்டில் யாருமில்லாத நாளில் வாசல் தெளித்து கோலமிட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

  எல்லாமே வெகு அழகு. வரிசைப் படுத்த மனம் வரவில்லை.

  பாரம்பர்யம் மங்கினாலும் அப்போதைக்கப்போது இப்படி தூண்டுதலுக்கும் ஏதேனும் ஒரு வழி விடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்....

   உண்மை தான் மற்ற கோலங்களைப் பார்த்த கண்ணோடு என் கோலத்தினையும் பார்த்தால் நிச்சயம் சிரிப்பு தான் வரும்!

   Delete
 24. மார்கழி வரப்போவதை சொல்லிவிட்டீர்கள், அழகழகான கோலங்கள் மூலம். திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்களும் அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் இருக்கிறோம். ஆனாலும் நீண்ட காரிடார் இருப்பதால், எல்லோருக்குமே கோலம் போட இடம் இருக்கிறது. தினமும் புது கோலம் தான் எங்கள் வீட்டில். என் மாட்டுப்பெண் வெகு அழகாகப் போடுவாள். கடந்த இரண்டு வருடங்களாக அவளது கைவண்ணம்தான் எங்கள் வீட்டின் முன். இந்தக் கோலங்களையும் அவளிடம் காண்பிக்கிறேன். பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   தினம் தினம் இங்கே கோலம் போடுகிறார்கள். இப்போதெல்லாம் அதை புகைப்படம் எடுத்துக் கொடுக்கச் சொல்லவே, நானும் செல்கிறேன்! அப்படியே பெருமாளையும் பார்த்த மாதிரியாச்சு!

   தினம் எடுக்கும் கோலங்கள் படங்களை அவர்களது முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள் - கோலம் போடுபவர்கள்!

   Delete
 25. "//சித்திரம் வரைய அவர்களிடம் நிறைய திறமை இருக்கிறது ஆனால் சுவர் தான் இல்லை! :)//". இப்படி கோலக்கலையே மறைந்து கொண்டிருக்கும் இந்நாளில் உங்களுடைய பதிவு மீண்டும் நம் சகோதரிகளுக்கு அவர்களுடைய பழைய நாட்களை நினைவு படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வளவு கோலங்களும் பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 26. Venkatji you have comprehensively covered the kolams with nice anecdotes.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....